மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மனசு பேசுகிறது : போட்டிகளும் நாவலும்

Bharatwriters.com இணையதளத்தில் எனது மூன்றாவது கதை 'வாழ்க்கைச் சக்கரம்' இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. ஒரு வாரம் இந்த இதழ் பார்வைக்கு இருக்கும்... அதாவது ஞாயிறு முதல் வரும் சனி வரை... இந்த ஒரு வாரத்தில் கிடைக்கும் விருப்பக்குறியின் அடிப்படையில் மதிப்பெண்ணும் அதற்கான வெகுமதியும் உண்டு என்பது அவர்களின் விதிமுறை.

வெள்ளி, 27 நவம்பர், 2020

மனசு பேசுகிறது : வரவேற்பைப் பெற்ற மின்னிதழ்கள்

கொரோனா காலத்தில் உதயமான இரண்டு இணைய மின் இதழ்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஒன்று புதிய தலைமுறையில் ஆசிரியராய் இருந்த பெ.கருணாகரன் சாரின் கல்கோனா... மற்றொன்று பாக்யா வார இதழில் பணிபுரியும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாரின் கதிர்'ஸ்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

மனசு பேசுகிறது : எதிரொலி முதல் கறுப்பி வரை

Bharatwriters.com என்னும் தளத்தில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது.  Mini Stories  என்னும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்து கதைகளில் ஐந்தாவது கதையாக வெளியாகியிருக்கிறது. 'எதிரொலி' என்னும் தலைப்பில் இருக்கும் கதையை வாசித்து, மறக்காமல் விருப்பக்குறி இடுங்கள்... வரும் விருப்பக்குறிகளைப் பொறுத்து அந்தக் கதைக்கான சன்மானம் அமையும்...

வெள்ளி, 6 நவம்பர், 2020

மனசு பேசுகிறது: எழுத்தும் பிக்பாஸும்

ப்பல்லாம் இந்தப் பக்கம் வருவதும் நண்பர்களின் பக்கங்களை வாசித்துக் கருத்திடுவதும் குறைந்து விட்டது என்பதே உண்மை... இதை விடுத்து வேறெங்கும் எழுதியும் தள்ளிவிடவில்லை என்பதும் உண்மை. அப்படியிருக்க வேலையின் காரணமாகவும் சுழலும் பிரச்சினைகளின் காரணமாகவும் என்ன எழுத இருக்கிறது என்ற சலிப்பே மிஞ்சி நிற்பதுதான் காரணமேயொழிய வேறொன்றும் இல்லை.

வியாழன், 29 அக்டோபர், 2020

மனசு பேசுகிறது : எழுத்தும் வாசிப்பும்

ந்த வாரத்தில் மகிழ்வைக் கொடுத்த சில நிகழ்வுகள்... அலுவலகத்தில் எப்பவும் பிரச்சினைகள் என்ற போதிலும் எழுத்து கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதே மகிழ்வுதானே.

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பிக்பாஸ் சீசன் - 4 : வீணான விஜயதசமி

சென்ற சனிக்கிழமை கமல் வழக்கம் போல் வந்தோம்... பேசினோம்... தானே சிரித்தோம்... போனோமுன்னு நிகழ்ச்சியைக் கரையேற்றினார். உள்ள இருக்கவனுங்களுக்கும் சரி கமலுக்கும் சரி ரொம்பப் போரடிப்பது போல்தான் பேசினார்கள். மூனு வாரமாச்சு இன்னமும் டேக் ஆப் ஆகாமலேயே கிடக்கேன்னுதான் தோணுச்சு... கொரோனாவுக்கு வீட்டுக்குள்ள முடங்குன மாதிரி பிக்பாஸ்-4 முடங்கிப் போச்சுன்னுதான் தோணுச்சு.

சனி, 24 அக்டோபர், 2020

பிக்பாஸ் சீசன்-4 ஒரு பார்வை

பிக்பாஸ் பற்றி எழுதுங்களேன்... ஏன் எழுதவில்லை என்ற கேள்விகள் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. சென்றமுறை சிலருக்குப் பிடிக்கும் விதமாகத்தான் எழுதியிருப்பேன் போல...😀 இல்லைன்னா கேக்க மாட்டாங்களே. பிக்பாஸ் பாக்குறவங்களை தப்பானவர்கள் என்று சொல்பவர்கள் இத்துடன் வாசிப்பதை நிறுத்திவிடலாம்.

வியாழன், 15 அக்டோபர், 2020

மனசு பேசுகிறது : நிறைவாய்... மன நிறைவாய்...

றுப்பிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தசரதன் சொன்னார்... வரவேற்பு இருக்கு... இல்லை என்பது முக்கியமல்ல... சில நிகழ்வுகளை வைத்துப் பிண்ணப்பட்ட ஒரு கதைதான் அது... அதில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நிகழ்கால மனிதர்களே...

வியாழன், 8 அக்டோபர், 2020

தசரதனின் 'அசோலா'

'சோலா'

சனி, 3 அக்டோபர், 2020

மனசு பேசுகிறது : திமில் விமர்சனக் கூட்டம்

நேற்றைய மாலையைச் சிறப்பாக்கியது அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் ‘கானல்’ காணொளி வழியாக நிகழ்த்தப்பட்ட எழுத்தாளர் தெரிசை சிவாவின் ‘திமில்’ சிறுகதை தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம்.

புதன், 30 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : எழுத்து என்ன கொடுத்தது..?

லக்கல் ட்ரீம்ஸ் தசரதனின் புதிய நாவலான 'அசோலா' நேற்று விற்பனைக்கு வந்தது. அது குறித்துப் பேசும்போது இப்போதைய சூழலில் சிறிய வெளியீட்டு விழாக் கூட வைக்க முடியாது என்பதால் நேரடி விற்பனைக்கு கொண்டு வந்துட்டேன் என்றதுடன் கதையை அதன் போக்கில் எழுதிச் சென்றதால் அது எல்லாருக்கும் பிடிக்குமா..? பிடிக்காதா..? என்பதெல்லாம் தெரியாது எனவேதான் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றார்.

கதையை அதன் போக்கில் எழுதுவேன் என்ற வார்த்தை எனக்குப் பிடித்துப் போனது, ஏனென்றால் நானும் அப்படித்தான் எழுதுவேன். அவருடன் தொடர்ந்து பேச, சிலருக்கு அச்சில் ஏறும் முன்னரே வாசிக்கக் கொடுத்தேன்... அப்போது கலவையான விமர்சனமே வந்தது. சிலர் சில இடங்களில் மாற்றச் சொன்னார்கள்... நான் என் எழுத்தை எப்போதும் பிறருக்காக மாற்றுவதில்லை என்றும் சொன்னார். நானும் அப்படித்தான் யாருக்காகவும் என் எழுத்தை மாற்றுவதில்லை.

இப்படியாகப் பேச்சு நகர்ந்த போது எதிர்சேவை குறித்தான விமர்சனங்கள் பற்றிப் பேசினோம். இதுவரை எனக்கு வந்த... அதாவது முகம் தெரிந்த, முகம் தெரியாத நண்பர்கள் எழுதிய விமர்சனங்கள் எல்லாமே நல்ல கதைகள் என்பதாய்த்தான் இருந்தது. சின்னச் சின்ன விசயங்கள் சிலர் சொல்லியிருந்தார்கள். அடுத்த புத்தகமாக்கல் நிகழ்ந்தால் அதில் அதெல்லாம் சரி பண்ணிக் கொள்ளலாம். கிராமிய வழக்கு என்பதால் ஒற்று, சந்தி எனப் பிழைகள் அதிகமாகத்தான் தெரியும். அதையும் ஒரு எழுத்தாளர் சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் ஏற்றுக் கொண்டேன்.

என் முதுகுக்குப் பின்னே சொல்லப்படும் விமர்சனங்களைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. எழுதும் போது எனக்கு எல்லாமே நல்ல கதைகள்தான்... அது பொதுவெளியில் பகிரப்படாதவரை. மின்னிதழிலோ, இணையப் பக்கங்களிலோ பகிரப்பட்டு விட்டால் அதற்கான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய என் எழுத்தை நீ எப்படிக் குறை சொல்லலாம் என்று மல்லுக்கு நிற்பது கூடாது என்பதில் எப்பவும் உறுதியாய் இருப்பேன். முகத்துக்கு நேரே சொல்லும் நிறை குறைகளை எப்போதும் கேட்டுக் கொள்வதுண்டு. அதைச் செயல்படுத்துகிறோமோ இல்லையோ அவர்கள் சொல்வது அவர்கள் பார்வையில் நியாயமானதுதானே... அதற்கு உரிய மரியாதையை எப்போதும் கொடுக்கத் தவறுவதில்லை. முதுகுக்குப் பின்னே... அதெதுக்குங்க நமக்கு... நம்ம பாதையைப் பார்த்து நடை போடுவோம் எனக் கடந்து விடுவேன்.

சில நாட்களுக்கு முன்  என் கதைகள் உறக்கம் வருவதாய் முதுகுக்குப் பின்னே ஒரு கருத்து சொல்லப்பட்டது... என் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது இன்னைக்கு ரொம்பப் பேரு தூக்கமில்லாமல் டாக்டருக்கும் மாத்திரைக்கும் செலவு பண்ணிக்கிட்டு இருக்காங்க... நம்ம கதை தூக்கம் வருதுன்னா... நல்லதுதானே என்றேன். எனக்கும் என் மகனுக்கும் தூக்கம் ஒன்னுவிட்ட பங்காளியெல்லாம் இல்லை உடன் பங்காளி... எங்க படுத்தாலும் அடுத்த நொடி தூங்கிருவோம். அதனால் கூட தூக்கம் என் கதைகளிலும் இருக்கலாம். இதைத் தசரதனிடம் சொன்னபோது எதிர்சேவையா சொல்லியிருக்கார்... அடப்பாவி எனச் சொல்லிச் சிரித்தார்.

கிராமமும் அதன் நிலப்பரப்பும் அது சுமக்கும் மனிதர்களும் சொல்லும் கதைகள் ஏராளம்... அந்த வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கே அந்தக் கதைகளின் வாசம் புரியும்... திருவிழாவையும் எழவையும் எழுதுவதென்பது எல்லாராலும் முடியாது... அதை அனுபவித்திருந்தால் மட்டுமே எழுத முடியும்... நான் அனுபவித்திருக்கிறேன்... அதை எழுதுகிறேன்... யாரையும் வாசிக்கச் சொல்லி எப்போதும் கட்டாயப் படுத்தியதுமில்லை... படுத்தப் போவதுமில்லை.

சமீபத்தில் ஒரு இணைய இதழுக்காக எழுதியதுதான் பார்வதி டீச்சர் கதை... அவர்கள் அதன் நீளம் காரணமாக வாசிக்க மாட்டார்கள் என நாசூக்காகச் சொல்லி மறுத்த பின்னரே கலக்கல் ட்ரீம்ஸில் பகிரப்பட்டது.. இதுவரை 8000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள். எந்த ஒரு கதையாக இருந்தாலும் வாசிப்பவரை இழுத்துக் கொண்டால் அதன் நீளம் ஒரு பொருட்டேயில்லை என்பதை நிரூபித்திருக்கிறது பார்வதி டீச்சர். உண்மையில் அதற்குக் கிடைத்த வரவேற்பு எனக்கே ஆச்சர்யம்தான்.

கறுப்பி வேறு விதமான களம்... எப்படியான விமர்சனம் வருமோ என்ற எண்ணத்தைச் சமீபத்தில் என்னுடன் பேசிய சில சகோதரிகள் உடைத்திருக்கிறார்கள். வேறு மாதிரியான கதையோ என வாசித்தால் அந்தப் பெண்களின் நிலமை வருத்தமளிக்கிறது என்பதே அவர்களின் கருத்தாய் இருந்தது. எனவே கறுப்பி காமம் நிறைந்த கதைதான் என்றாலும் வலி சுமக்கும் கதையாக பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.

என் எழுத்து எனக்கு என்னத்தைக் கொடுத்தது..? 

நிறைய நல்ல நட்புக்களைக் கொடுத்தது, என் எழுத்துக்கென நல்ல வாசகர்களைக் கொடுத்தது என்பதே உண்மை என்றாலும் அதையும் தாண்டி நீ வாசித்துப் பாரேன் என பகிரும் முன் நண்பர்கள் அனுப்பிய அவர்களின் எழுத்தைச் (சு)வாசிக்கக் கொடுத்தது... நேற்று முத்தாய்ப்பாய் தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் எழுதி முடித்த நாவலை அச்சேறுமுன் வாசிக்கக் கொடுத்தது. 

ஆம் மிகச் சிறப்பான வரலாற்றுத் தகவல்களுடன் எழுதும் தமிழின் முன்னணி எழுத்தாளரின் அடுத்த நாவல் அச்சுக்குப் போகுமுன் எனக்கு வாசிக்க வந்திருக்கிறது. நாங்கள் இருவரும் பார்த்ததில்லை... பேசியதில்லை... அவர் முந்தைய நாவல்களுக்கு நான் எழுதிய விமர்சனங்கள் பிடித்துப் போனதால் முகநூல் அரட்டையிலும் வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலும் மட்டுமே எப்போதாவது உரையாடல்... அவ்வளவே. 

இன்று தன் நாவலைத் திருத்தக் கூடச் செய்யாமல் அப்படியே எனக்கு அனுப்பி வாசித்துச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்... பால்மணம் மாறாத குழந்தையாய் இருக்கும் நாவலை அவர் மீண்டும் செதுக்கும் போது 50 பக்கம் கூடலாம்... அல்லது 50 பக்கம் குறையலாம். ஆனால் அவர் பிரசவித்த குழந்தையை முழுவதுமாக வாசிக்கக் கிடைத்த பேர் எங்கிருந்து எனக்குக் கிட்டியது... எல்லாம் என் எழுத்து பெற்றுத் தந்ததுதானே.

என் எழுத்தில் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்... அது அதன் பாதையில்தான் பயணிக்கும்... அவரைப் போல எழுதலாமே என்பவர்களுக்கு அவரைப் போல எழுத அவர் இருக்கிறாரே பின் நான் எதற்கு...? எனக்குத் தெரிந்ததை எழுதுவதே என் எழுத்து... நான் கிராமத்தான்தான்... திருவிழாவையும் எழவையும் எருமை மாட்டையும்தான் எழுதுவேன்... யாரையும் வாசியுங்கள் எனச் சொல்லி இதுவரை சொன்னதில்லை, நட்புக்களைத் தவிர.. 

விமர்சனங்களை ஏற்க மறுத்ததுமில்லை... உங்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றுதான்... எப்போதும் விமர்சனங்களை முகத்துக்கு முன் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்... அதன் மதிப்பு வீரியமானதாக இருக்கும். முதுகுக்குப் பின்னே அல்ல...

-'பரிவை' சே.குமார்.

சனி, 26 செப்டம்பர், 2020

உனக்கென்ன மேலே சென்றாய்

ஸ்.பி.பி...

இந்த மூன்றெழுத்து நம் தலைமுறையை இசைக்குள் கட்டிப் போட்டது என்றால் மிகையில்லை. பாடல்களுக்குள் பல சங்கதிகளைப் புகுத்தி நம்மை அதற்குள் ஈர்த்த குரலின் முகவரி. இது இன்னும் பல தலைமுறைகளைக் கட்டிப் போடப்போகிற மந்திரம் இந்த எழுத்து.

திங்கள், 21 செப்டம்பர், 2020

கறுப்பி முதல் மனோபாலா வரை கலக்கல்

லக்கல் ட்ரீம்ஸில் வந்து கொண்டிருக்கும் 'கறுப்பி' தொடர்கதை இன்று ஆறாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இதுவரை நல்ல வரவேற்பு இருப்பதாக அதன் உரிமையாளர் சகோதரர் தசரதன் சொன்னார்.

சனி, 19 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : திமிலும் மனோபாலாவும்

பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளின் மாலை வேளையை மனம் மகிழும் நிகழ்வுகளால் அலங்கரிக்கும் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் 'கானல்' காணொளிக் கலந்துரையாடலில் நேற்றைய நிகழ்வாக, சகோதரர் தெரிசை சிவாவின் வம்சி வெளியீடாக வந்திருக்கும் இரண்டாவது சிறுகதை தொகுப்பான 'திமில்' வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் நண்பர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் பதிலளித்தார் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு. மனோபாலா அவர்கள்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : கறுப்பி புவனாவுடன் செல்வம்

லக்கல் ட்ரீம்ஸில் வெளிவந்து கொண்டிருக்கும் 'கறுப்பி' தொடருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சகோதரர் தசரதன் சொன்னார். பார்வதி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகள் எல்லாம் அதிகமானோர் படித்ததாகக் காட்டும் வேளையில் கறுப்பியை வாசித்தவர்கள் அந்தளவுக்கு இல்லையே என்று கேட்டபோதுதான் தசரதன் அப்படிச் சொன்னார். மேலும் அதிகமான வாட்ஸப் பகிர்வும், தினமும் பகிரலாமே என்ற எண்ணப் பகிர்வுகளும் வருவதாய்ச் சொன்னது மகிழ்ச்சியே... கறுப்பி மூன்று பெண்களின் வாழ்க்கை... முடிந்தால் வாசியுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

திங்கள், 7 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : பார்வதி டீச்சரும் கறுப்பியும்

சில கதைகள் மனசுக்கு இதமாய் அமைந்து விடும்... அப்படிதான் அமைந்தது சமீபத்தில் ஒரு மின்னிதழுக்காக எழுதிய 'பார்வதி டீச்சர்'. எப்பவுமே ஏழு பக்கத்துக்கு மேலே போகாதவாறுதான் எனது சிறுகதைகள் இருக்கும். யாவரும் போட்டிக்காக எழுதிய கதை மட்டுமே அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்காக பத்துப் பக்கம் வந்தது. இன்னொரு கதை கொஞ்சம் பெரிதாக எழுத நினைத்து எழுதியதால் பத்துப் பக்கத்தைத் தாண்டியது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

'பயணங்கள் எனும் கற்றல்' - திரு. அ.முத்துக்கிருஷ்ணன்

யணங்கள் எப்போதுமே சுகமானவை... சுவாரஸ்யமானவை... ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். அதுவும் பயணமே தன் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் கானல் காணொளிக் கூட்டத்தில் தனது பயணங்களில் தான் கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் பற்றி கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் சுவையாக, விரிவாகப் பேசி நேற்றைய விடுமுறை தின மாலையை அழகான, சிறப்பான மாலையாக ஆக்கினார்.

சனி, 5 செப்டம்பர், 2020

மனசின் பக்கம் : என் ஆசிரியர்கள்

மக்கு ஒரு சிறு விசயத்தைக் கற்றுக் கொடுப்பவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கற்றுக் கொடுத்ததன் மூலம் அவரும் ஆசிரியரே... அப்படியான ஆசிரியர் பலரை இப்பொழுது வரை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மகன் விஷால் பல நேரங்களில் நல் ஆசிரியனாய்த்தான் இருக்கிறான். அவனின் புரிதல்களும் பேச்சுக்களும் சில நேரங்களில் வியக்க வைக்கும்... பல நேரங்களில் கற்றுக் கொடுக்கும்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

மனசின் பக்கம் : சஹானா டூ புவனா

'அப்பாவி தங்கமணி' என்னும் வலைப்பூவில் எழுதி வந்த சகோதரி திருமதி. கோவிந்த் அவர்கள் 'சஹானா' என்ற பெயரில் இணைய இதழ் ஒன்றை நடத்துகிறார்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

மௌன ஒத்திகைகள் - சிவமணி

விதை என எழுத ஆரம்பித்தால் நீளமாய்த்தான் வளர்ந்து நிற்கும் நமக்கெல்லாம்... ஹைக்கூ என ஆயிரக்கணக்கில் கிறுக்கி வைத்திருந்தாலும் நீள் கவிதைகளே அதிகம் எழுத வருமென்பதால் அந்தப் பாதையில் இருந்து யூடர்ன் எடுத்து சிறுகதைப் பாதையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தாலும் கவிதைகள் மீது எப்போதும் காதல் உண்டு... அவ்வப்போது அது வெளியிலும் வரும்... அதுவும் காதல் கவிதைகள் என்றால் அலாதிப் பிரியம்தான்...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கலக்கலில் 'சலூன்'

லக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் நேற்று 'சலூன்' என்னும் சிறுகதை வெளியாகியிருக்கிறது... தொடர்ந்து ஒரு மாதத்தில் இது மூன்றாவது கதைப் பகிர்வு... எதிர்பாராதது.

நம்மகிட்ட புத்தகம் போட்டவருங்கிற பாசத்தில் தசரதனோ... நம்மாளுதான் எப்படி எழுதினாலும் போட்டிருவாருன்னு நானோ எப்போதும் நினைத்ததில்லை... 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சினிமா விமர்சனம் : குஞ்சன் சக்சேனா - த கார்கில் கேர்ள் (இந்தி / தமிழ்)

'அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வா... சிறகடித்துப் பற...' என்பதை குஞ்சனின் அப்பா அவளிடம் சொல்கிறார்... இதுதான் உத்வேகமான வார்த்தை... இதுதான் அவளைச் சிறகடித்துப் பறக்க வைக்கிறது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

மனசின் பக்கம் : கதைகள்

பிரபலங்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் யாவரும்.காமில் 'பனைமரம்' என்னும் சிறுகதை வெளியானதைத் தொடர்ந்து கலக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் 'நாகர்' வெளியானது. அதைத் தொடர்ந்து வாசகசாலைக்கென கதை எழுத நம்மால் முடியுமா என்ற யோசிப்பில் இருக்கும் போதே 'வசந்தி' அதில் வெளியானது.

சனி, 1 ஆகஸ்ட், 2020

நானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி

ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று நினைப்பேன்... மேலும் பார்க்கும் வேலையிலிருந்து சிந்தனை வேறெங்கும் செல்லாது. சிறு வயது முதலே பாடல் கேட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ படிப்பது, எழுதுவது என்பது என்னோடு ஒட்டிக் கொண்ட பழக்கம். அது இப்பவும் தொடரத்தான் செய்கிறது. இதே பழக்கம் ஸ்ருதியிடம் அதிகம்... விஷாலிடம் இப்போது மெல்ல எட்டிப் பார்க்கிறது.

வெள்ளி, 31 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : கலக்கல் ட்ரீம்ஸில் நாகர்

சில கதைகள் மனசுக்கு நெருக்கமாய் அமைந்து விடும்... அது நாம் எழுதியதாக இருந்தாலும் அல்லது வாசித்ததாக இருந்தாலும்... அப்படித்தான் எனக்கு சமீபத்தில் வாசித்தவற்றில் பல கதைகள் நெருக்கமாய் அமைந்தன. சிலவற்றைப் பற்றி பகிர்ந்தும் இருந்தேன்... அப்படித்தான் எனது பனைமரம் சிறுகதை இன்னும் இன்னுமாய் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. புகழ் என்னும் மமதை எல்லாம் எதிலும் இல்லை என்றாலும் என் எழுத்து குறித்து சிலாகித்த எழுத்துக்களை கதைக்கான இணைப்புடன் பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்வாய்த்தான் இருக்கிறது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : பனைமரம் கொடுத்த பரிசு

யாவரும் தளத்தில் வெளியான 'பனைமரம்' என்னும் சிறுகதை பலரின் வாழ்த்துகளைப் பெற்றுத் தந்திருப்பதில் மகிழ்ச்சியே. 

திங்கள், 27 ஜூலை, 2020

'பாரதி' பற்றி கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

(மிக நீளமான பதிவு... பிரித்துப் பிரித்துப் போட்டால் பதிவின் சுவை கெட்டுவிடும் என்பதால் மொத்தப் பதிவும் இங்கே... பொறுமையாக வாசியுங்கள்.)

'பாரதி'

வெள்ளி, 24 ஜூலை, 2020

புத்தக விமர்சனம் : யுகபாரதியின் 'பின்பாட்டு'

Raju Murugan க்கு Gypsy ஏற்படுத்திருக்கும் ...

புதன், 22 ஜூலை, 2020

யாவரும்.காமில் 'பனைமரம்'

தோ ஒரு விதத்தில் மனச்சோர்வு அதிகமாயிக்கும் வேளையில், வாழ்க்கை மீதான பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வரும் வேளையில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலை முருகா எனக் கந்தனை அழைத்த போதும் மனம் ஏனோ மகிழ்வின்றியே நகர்ந்து கொண்டிருந்தது... கொண்டிருக்கிறது.

சனி, 18 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : கந்த சஷ்டி கவசம்

தமிழ்க்கடவுள் முருகன் || tamil god murugan

துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம் ; நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் 
நிஷ்டையும் கைகூடும், நிமலனருள் கந்தர் 
சஷ்டி கவசம் தனை.

புதன், 15 ஜூலை, 2020

சினிமா விமர்சனம் : சூஃபியும் சுஜாதேயும்

Sufiyum Sujathayum review
சையாலும் காதலாலும் நிறைத்து வைக்கப்பட்ட ஒரு கதை...

திங்கள், 13 ஜூலை, 2020

மனசின்பக்கம் : செம்மொழியும் எம்மொழியும்

னதில்பட்டதை எழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய கதைகளை வாசித்து அது குறித்தெல்லாம் எழுதியாச்சு... 2016-ல் மங்கையர் சிகரத்தில் எழுதிய சிறுகதையான 'நேசம் சுமந்த வானம்பாடி' நேற்று சிறுகதைகள்.காம் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி, மனதில்பட்டதைப் பேசப் போகலாம் வாருங்கள்.

புதன், 8 ஜூலை, 2020

வாசிக்க சில கதைகள்

நேரில் சந்தித்ததில்லை... போனில் பேசிக் கொண்டதில்லை... ஆனாலும் என் பதிவுகளில் கருத்துச் சொல்வார்... அவரின் இழப்பு வலையுலகுக்கு பேரிழப்பு... புலவர் சா. இராமானுசம் ஐயா😭 அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புதன், 1 ஜூலை, 2020

'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்'-குணா கவியழகன்

டந்த வெள்ளியன்று நடந்த, நந்தா அவர்கள் முன்னெடுத்த ஜூம் கலந்துரையாடல் டாக்டர். சென் பாலன் அவர்களின் 'மாயப் பெருநிலம்' என்னும் நூல் குறித்த அறிமுகமும், எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களின் 'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்' என்னும் தலைப்பிலான உரையுமாய் மிகச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது.

ஞாயிறு, 28 ஜூன், 2020

சினிமா : Krishna and his Leela (தெலுங்கு)

மோகன் நடித்த இரட்டை வால் குருவி பார்த்திருப்பீங்கதானே... அது மாதிரி ஒரு படம்தான் இது... அதில் ரெண்டு மனைவி...  இதில் முன்னாள், இந்நாள் காதலிகள்... அவ்வளவே வித்தியாசம்.. இங்கும் அங்கும் பயணித்தல் இரண்டிலும் ஒன்றே... அதுவும் ரெ.வா.குவில் மருத்துவமனையில் மாறிமாறி அலைவானே அதேபோல் இதில் தங்கையின் திருமணத்தில்... இருவருடனும்  ஜோடி போட்டு ஆட வேண்டிய நிலையில் பேச்சு வார்த்தையில்லாத அப்பனால் இரட்சிக்கப்படுகிறான். மொத்தத்தில் மத்தளத்துக்கு அடிவிழுவது இரண்டிலுமே ஒன்றுதான்.

சனி, 27 ஜூன், 2020

சினிமா : கப்பேள (kappela - Malayalam)

லையாளத்தில் கப்பேள என்றால் மேரி மாதாவை மட்டும் வைத்து வழிபடும் ஒரு சிறிய இடம் என்று சொல்கிறார்கள். அப்படியானதொரு மேரி மாதாவின் சிலையொன்று நாயகியின் வீட்டினருகே இருக்கிறது. அதுவே அவள் அடிக்கடி போய் வழிபாடு செய்யுமிடமாகவும் இருக்கிறது.

புதன், 24 ஜூன், 2020

நூல் விமர்சனம் : கறுப்பர் நகரம்

ரப்பாலம் வாசித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவலை வாசித்தேன். மரப்பாலம் உலகப்போரைப் பற்றிப் பேசியது என்றால் கறுப்பர் நகரம் முழுக்க முழுக்க விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது... அதுவும் அதீத காதலோடும் கொஞ்சம் காமத்தோடும் மிகுந்த வலியோடும் பயணிக்கிறது.

ஞாயிறு, 21 ஜூன், 2020

'எதுவும் கடந்து போகும்' - ராஜுமுருகன்

டந்த வெள்ளியன்று அமீரக எழுத்தாளர் மற்றும் வாசிப்பாளர்கள் குழுமத்தின் 'கானல்' காணொளி நிகழ்வாக திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுடன் 'எதுவும் கடந்து போகும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மனசு பேசுகிறது : முத்தான மூன்று கதைகள்

ரு சில சிறுகதைகள் வாசித்த பின்னும் நம் மனசுக்குள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். அப்படியான கதைகளை வாசிப்பது என்பது வரம்.

சனி, 20 ஜூன், 2020

மனசு பேசுகிறது : 'துருவ நட்சத்திரம்'

த்தியமர் குழுமத்தில் இணைந்து நீண்ட நாட்களான போதிலும் எந்த ஒரு பதிவும் பகிர்வதில்லை... வாசிப்பதுடன் சரி... அதுவும் இங்கு எழுதுபவர்களைப் பார்க்கும் போது இதெல்லாம் பெரிய இடம் போல... நாம ஒதுங்கியே இருப்போம்ன்னு கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டு வெளியில் வந்துருவேன்.

வியாழன், 18 ஜூன், 2020

மனசு பேசுகிறது : ஜூம் வழி எதிர்சேவை அறிமுகம்

கோதர் நந்தா அவர்களின் முன்னெடுப்பில் அமீரக பறம்பு வாசகர் வட்டம் மற்றும் கத்தார் கீழடி வாசகர் வட்டம் சார்பாக இன்று நடைபெற்ற காணொளி கலந்துரையாடல் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதன், 17 ஜூன், 2020

சினிமாவும் வாழ்வியலும் - ஆர்.பாண்டியராஜன்

மீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் வட்டம் இன்று மாலை நடத்திய காணொளி நிகழ்வில் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் அவர்களுடன் 'சினிமாவும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

திங்கள், 15 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் : 10

தினம் ஒரு கோவில் என்னும் தலைப்பில் பத்துக் கோவில்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற முகநூல் தொடர் பதிவுக்காக எழுதியவைதான் இவை. அப்படிப் பார்த்தால் இன்றோடு பத்துப் பதிவுகள் முடிந்துவிட்டன. இருப்பினும் எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே இன்னும் நிறையக் கோவில்களைக் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டு. அதை இந்தப் பதிவுகளின் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். அதனால் இத்துடன் இது முடிந்து விடப் போவதில்லை... இன்னும் தொடர்வேன்... அதற்கென சில நாட்கள் இடைவெளி தேவைப்படலாம்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 9

வ்வளவு கோவில்கள்... எத்தனை சிறப்புக்கள்... வாசிக்கும் போதுதான் தெரிகிறது சிவகங்கைச் சீமையில் இத்தனை சிறப்புடைய கோயில்கள் இருப்பது... எல்லாமே வரலாற்றுடன் தொடர்புடைய கோவில்கள்... சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் கோவில்களுக்குள் இத்தனை சிறப்பா என்று யோசித்துக் கொண்டும் வியந்து கொண்டுமிருக்கிறேன்.

சனி, 13 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 8

தினம் ஒரு கோவிலுக்கான தேடல் பத்து நாளில் முடிந்து விடவில்லை. இன்னும் தொடரத்தான் செய்கிறது. ஒன்பது நகரக்கோயில்கள் என்பது எங்க மாவட்டத்தில் சிறப்பு. அதில் பிள்ளையார்பட்டி ஒன்றை மட்டுமே எழுதியிருக்கிறேன். மாத்தூரில் எல்லாம் எத்தனை அற்புதமான சிற்பங்கள்... எல்லாம் எழுதும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்... தொடர முடிகிறதாவென.

வெள்ளி, 12 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 7

தினம் ஒரு கோயில் பதிவென முகநூலுக்கு எழுதும் போது எங்கள் மாவட்டக் கோவில்கள்தான் என்பது தீர்க்கமான முடிவாக இருந்தது. இந்தத் தொடருக்கு அழைத்த நண்பர் சத்யா, திருமயம் கோவிலைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னார் என்றாலும் சிவகங்கை மாவட்டத்தின் அருகில் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் கோவிலாததால் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னேன். நேற்று அந்தக் கோவில் குறித்த வரலாறுகளை வாசிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அந்த மலையைக் கடந்து எத்தனையோ முறை பயணித்திருந்தும் ஒருமுறை கூட கோவிலுக்குச் சென்றதில்லை. இவ்வளவுக்கும் திருமயம் மலை மீது ரெண்டொரு முறை ஏறியிருக்கிறேன். விரைவில் முகநூலில் எழுதுவேன். அதன் பின் இங்கும் பகிர்வேன்.

வியாழன், 11 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 6

கோவில்களின் தேடலில் ஒன்றைக் கண்டு கொள்ள முடிந்தது. அது என்னன்னு முதல் கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். அதாவது ஒரு ஆண் தெய்வத்தின் கோவிலில் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆண் தெய்வத்தின் பெயர் மங்கி, பெண் தெய்வத்தின் பெயர் பிரதானமாகிறது. அப்படியான ஒரு கோவில்தான் இன்று பார்க்கப் போகும் கோவில்.

புதன், 10 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 5

கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் நாம் அடிக்கடி செல்லும் கோவிலாக இருந்தாலும், மக்கள் வழி வழியாகச் சொல்லும் கோவிலின் வரலாறு, சிறப்புக்களைக் கேட்டிருந்தாலும் விரிவான வாசிப்பில்தான் புராணக்கதை, வரலாறு சொல்லும் கதை என எல்லாமும் அறிய முடிந்தது.

செவ்வாய், 9 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 4

கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில் என்ற தேடலில் முதல் பதிவை விட இரண்டாவது பதிவு... அதைவிட மூன்றாவதென ஒவ்வொன்றும் விரிவாகப் போக ஆரம்பிக்கக் காரணம் இன்னும் வேறேனும் செய்திகள் இருக்கா என்ற தேடல்தான் என்பதை உணரமுடிகிறது.

திங்கள், 8 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 3

நேற்றுடன் முகநூலில் பத்துக் கோவில்களைப் பகிர்ந்து முடித்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து தொடர்ந்து அங்கு பகிரும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அங்கு பகிர்ந்தால் இங்கும்தான் தொடரும்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 2

முகநூலில் தொடரும் பத்து நாள் பத்துக் கோவில் தொடரை இன்றுடன் முடிக்க இருந்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து எழுதலாம் என்ற எண்ணம் மனசுக்குள் இருக்கிறது. இது குறித்தான தேடலில்தான் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. பெரும்பாலான கோவில்களுக்கு உண்மையான வரலாறு ஒன்றிருக்க, சாதிக்கொன்றாய் வரலாறுகளும் காணப்படுதல் அபத்தம்... இவர்கள் வரலாறுகளைத் திரித்து எழுதி பிற்காலத்தில் எந்த ஒரு உண்மையான வரலாறும் மக்களுக்குக் கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்பதே உண்மை.

சனி, 6 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 1

நான் முகநூலில் பெரும்பாலும் அதிகம் எழுதுவதில்லை... நிறைய வாசிப்பேன்... வெட்டியாய் பொழுது போக்குவதென்பது அங்கு ரொம்பக் குறைவுதான். எழுதவோ படிக்கவோ செய்யும் போது பெரும்பாலும் இளையராஜா, சமீபத்தில் தேவா இசையில் எஸ்.பி.பி. பாடிய மூன்று மணி நேரத் தொகுப்பு, நாடக நடிகர் முத்துச்சிற்பி, கிராமியப் பாடகர்கள் இளையராஜா, அபிராமியின் பாடல்களுடன் ஐக்கியமாகி விடுவதுண்டு. முகநூல் சில நேரங்களில் நமக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கவும் செய்யும். அப்படித்தான் நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான சத்யா தொடரச் சொன்ன பத்து நாள் பத்துக் கோவில் குறித்த விபரங்களைச் சொல்லும் தினம் ஒரு கோவில் அமைந்தது.

சனி, 30 மே, 2020

தப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை)

ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த காலக்கெடு. ஒருவர் இரண்டு கதைகள் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தார். ஒரு கதை எழுதுவதே கடினம் இதில் இரண்டு எங்கிட்டு எழுத என்று நினைத்து பார்வையாளனாய் நிற்கிறேன் என்றதும் அதெல்லாம் வேண்டாம் நீ எழுது என்றார். வெள்ளி விடுமுறை என்பதாலும் போட்டிக்கான இறுதிநாள் என்பதாலும் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அமர்ந்து எழுதி, தலைப்பைக் கூட பதியாமல் அப்படியே முகநூலில் தூக்கிப் போட்டுவிட்டேன்.

செவ்வாய், 26 மே, 2020

மனசு பேசுகிறது : எழுத ஆரம்பித்திருக்கும் நாவல்

ங்கு பதிவெழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய எழுதணும்ன்னு நினைச்சு இந்தக் கொரோனா காலத்துல வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழலில் எதிலுமே மனம் ஒட்டவில்லை என்பதே உண்மை. எழுத நினைத்த எதுவும் எழுதும் எண்ணமே வரவில்லை என்பதும் உண்மை. உடல் நலமும் இரண்டு வாரங்களுக்கு மேல் சரியில்லாமல்தான் இருந்தது... அது கொரோனாவாலா அல்லது தட்பவெட்ப நிலை மாறுதலாலா என்பதை அறியாமலேயே சரியாகி இருக்கிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமல்ல... அறையில் இருக்கும் ஐவருக்கும் இருந்தது... இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றாலும் எழுத மட்டும் எண்ணம் எழவேயில்லை... 

ஞாயிறு, 10 மே, 2020

எதிர்சேவை: 'எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை' - பால்கரசு சசிகுமார்


புதாபியில் இருக்கும் சகோதரர் பால்கரசு அவர்கள் எதிர்சேவை குறித்து முகநூலில் பகிர்ந்து கொண்ட விமர்சனம்...

னதில் அழுத்திக்கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைக்க எப்போதும் ஒரு நெருங்கிய நட்பு வேண்டும், பரிவை சே. குமார் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பழக்கம் என்றாலும், என் மனச்சுமையைத் தாங்கும் தோள்கள் கொண்ட நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டார்.

திங்கள், 4 மே, 2020

மனசு பேசுகிறது : திருமண நாள்

காலம் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது... பள்ளிச் சிறுவனாய்... கல்லூரி மாணவனாய்... சுற்றித் திரிந்த நாட்களையெல்லாம் கடந்து உனக்கும் ஒரு குடும்பமாகிப் போச்சு... இனி சூதனமாப் பொழச்சுக்க எனக் காலம் சொல்லி பதினேழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

சனி, 2 மே, 2020

சினிமா : விக்ருதி (மலையாளம்)

'சட்டத்துக்கு மன்னிக்கத் தெரியாது... ஆனா நம்ம மனுசங்க... நமக்கு மன்னிக்கத் தெரியும்தானே...'

அம்புட்டுத்தான் விகிர்தி சொல்லும் கதை.

வெள்ளி, 1 மே, 2020

'எதிர்சேவை - மண்வாசம்' - எழுத்தாளர் கோபி சரபோஜி

திர்சேவைக்கு மீண்டும் ஒரு விமர்சனம்... இம்முறை எழுத்தாளர் கோபி சரபோஜி அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. இந்த விமர்சனத்தை எழுதி முடித்து ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பும் எண்ணத்தில் இருந்தவர், எங்கள் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டிக்கு அனுப்பலாமா..? என முகநூல் வழி என்னிடம் கேட்டார். தாராளமாக அனுப்புங்கள்... அது உங்கள் பார்வை... உங்கள் எழுத்து என்னிடம் என்ன கேள்வி என்றேன். இறுதி நாளில் அனுப்பி வைத்து வெற்றியின் எல்லையான இறுதிச் சுற்று வரைக்கும் களத்தில் நின்றார்... அது அவரின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே ஆகும்.

வியாழன், 30 ஏப்ரல், 2020

படித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை

காலத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரிய வீடுகளில் வாழும் அவர்கள் அப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளும் மனிதர்களாகவும் தெரிவதில்லை...

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

‘அப்பாக்களை எப்போது முழுதாய் அறிவோம்?’ - திரு. பார்த்திபராஜா

ல்லூரி விரிவுரையாளர் திரு. பார்த்திபராஜா அவர்களின் கட்டுரை... நீளமான பகிர்வுதான்... முகநூலில் பகிர்ந்து கொண்ட போது தனபாலன் அண்ணன்தான் இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவருக்கு நன்றி.

சனி, 25 ஏப்ரல், 2020

சினிமா விமர்சனம் : தியா (கன்னடம்)

ஒரு பெண்ணுக்கு இரு வேறு சூழலில் இரு வேறு மனநிலையில் ஏற்படும் காதல்கள்தான் கதை... 

வியாழன், 23 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : உலக புத்தக தினம்

ன்று உலக புத்தக தினமாம்... நேற்று பூமி தினமாம்... சமீபமாய்த்தான் இவையெல்லாம் அட்சய திரிதியை போல பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கின்றன. படிக்கும் காலத்தில் எல்லாம் இப்படித் தினங்கள் எல்லாம் இல்லவே இல்லை.

புதன், 22 ஏப்ரல், 2020

சினிமா : க்ரைம் படங்கள்

சில நாட்களாகவே தினம் ஒரு பதிவு என்பதாய் ஆகிவிட்டது... கொஞ்சம் வாசிப்பு... சின்னதாய் ஒரு பதிவு என்பதாய் நாட்கள் நகர்கிறது. ஊருக்குக் காலையும் மதியமும் மட்டுமே பேச முடிகிறது... இரவில் இணையம் இழுக்க மறுப்பதால் அலுவலகம் போய்விட்டு வந்து நீண்ட நேரம் பேசுவது போல் இப்போது முடிவதில்லை...

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : கந்தர்வன் கதைகள் - 1

னது பதிவுகளுக்குக் கருத்துச் சொல்லும் நட்புக்கள் அனைவருக்கும் நன்றி. தங்கள் கருத்துக்கு பதில் இட என் கணிப்பொறி இடமளிப்பதில்லை. அலுவலகம் என்றால் கூட ஒரு சிலருக்கேனும் கருத்திட முடியும்... கொரோனா வீட்டிலிருந்து வேலை என ஆக்கி வைத்திருக்கிறது... அலுவலகத்தில் ஆறு மணிக்கெல்லாம் கடையை மூடி... நடையைக் கட்டலாம். வீட்டில் என்னும் போது ஏழு மணியானாலும் முடிவதில்லை... அப்பத்தான் முக்கியமாய் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்... மேலும் என் கணிப்பொறி ஏனோ கருத்துக்களுக்கான பதிலை விரும்புவதில்லை... எனவே தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

திங்கள், 20 ஏப்ரல், 2020

சினிமா : கெட்டியோளானு எண்ட மலாஹா (மலையாளம்)

கெட்டியோளானு எண்ட மலாஹா (ketiyolaanu Ente Malakha)...

பேரைத் தமிழ்ப்படுத்தியது சரியான்னு தெரியலை... சரி அத விடுங்க... இவன் என்னடா வெறும் மலையாளப் படத்துக்கா எழுதிக்கிட்டு இருக்கானேன்னு கூடத் தோணலாம்... கதைகள் இழுக்கின்றனவே... எப்படிக் கதையாகினும் படத்தை ஒரு ஈடுபாட்டோட பார்க்க முடிவதே இதற்குக் காரணம். 

சனி, 18 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஆடும் தீபம்

டும் தீபம்...

ஒரு பெண்... அதுவும் ஆதரவற்ற பெண்... இந்தச் சமூகத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் எது மாதிரியான பிரச்சினையைச் சந்திக்கப் போகிறாள் என்பது நாம் அறிந்தது... பார்த்ததுதானே... இங்கே எல்லாப் பெண்களுக்கும் ஒரே பிரச்சினைதான்... ஆம் அது காமக் கழுகுகளின் கோரப் பிடிக்குள் சிக்குதல். அதிலிருந்து மீண்டு வெளியேறும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினையே இந்நாவல்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சினிமா : ஹெலன் (மலையாளம்)

'ஆமா உங்க மக பேர் என்ன சார்..?'

'ஹெலன்...' சொல்லும் போதே தந்தையின் முகத்தில் பெருமிதம் பொங்கும்.

ஆம்... படத்தின் பெயரே ஹெலன்தான்.

2019 நவம்பரில் வெளியான படம்.  நேற்றிரவுதான் பார்த்தேன்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : பார்த்த சினிமாக்களும் எழுத்தும்

கொரோனா என்னும் கொடும் நோயின் பிடிக்குள் உலகமே சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலை எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. நம் நாட்டிலும் பொழைக்க வந்த நாட்டிலும் தினந்தோறும் எகிறிப் போய்க் கொண்டிருக்கும் பாதிப்பு / இறப்பு எண்ணிக்கையைப் பார்க்கும் போது வருத்தமும் பயமுமே ஆட்கொள்கிறது.  யாருக்கு வரும்..? எப்போது வரும்..? எப்படி வரும்..? என்பதெல்லாம் தெரியாது... ஆனாலும் வரும். நேற்று காரைக்குடியில் ஒரு நாலு வயதுக் குழந்தைக்கு வந்திருக்கிறது... இந்தச் செய்தியைக் கேட்டபோது அந்தக் குழந்தை மீண்டு(ம்) வர வேண்டும் என்றுதான் பிரார்த்தித்தேன்.

புதன், 15 ஏப்ரல், 2020

பிரமாண்டமும் ஒச்சமும் (சி.சு.செல்லப்பா படைப்புலகம்)

பிரமாண்டமும் ஒச்சமும் (சி.சு.செல்லப்பா படைப்புலகம்)...

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலைப் படித்த போது, அதன் வசீகரத்தில் இருந்து மீண்டு வர வெகு நேரமானது. அவ்வளவு நேர்த்தியாய்க் கதை வாடிவாசலைச் சுற்றியே நகர்த்தப்பட்டிருக்கும்.சி.சு.செல்லப்பாவின் எழுத்தில் வாசித்த ஒரே ஒரு கதையும் அதுதான்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

எதிர்சேவை விமர்சனம் : எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்

குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அண்ணன் எப்போதும் என் மீது பிரியம் கொண்டவர். சென்னைக்குப் போனபோது யாரையும் சந்திக்க முடியாத சூழலிலும் தொடர் போன் அழைப்பின் மூலம் தனது வீட்டுக்கே வர வைத்தவர் இவர். இவரின் திருமண ஒத்திகைக்கு எனது அணிந்துரை வேண்டுமெனச் சொன்ன போது நானெல்லாம் எழுதி என யோசித்தேன். விடவில்லை... நீதான் எழுதுறேன்னு சொல்லி வாங்கினார்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

எதிர்சேவை விமர்சனங்கள் : சுடர்விழி & பாரதி

திர்சேவை... சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. இந்தப் 12 கதைகளுமே நம்மைச் சுற்றியுள்ள யாரேனும் ஒருவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அல்லது நாம் மறந்து போன நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகின்றன.

சனி, 11 ஏப்ரல், 2020

சினிமா : பாரம்

பாரம்...

கிராமங்களில் திட்டும் போது நீ எல்லாம் எதுக்குப் பூமிக்குப் பாரமா இருக்கே... போய்ச் சேர வேண்டியதுதானே என்பார்கள்...  அப்படியான ஒன்றைத்தான் இந்தப்படம் பேசுகிறது... இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பேசியிருக்கலாம்தான்... ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லியிருக்கிறது என்பதில் திருப்தி அடையலாம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஒரு சிறு இசை

ரு சிறு இசை...

வண்ணதாசன் இசைத்திருக்கும் அழகான புல்லாங்குழல் இசைதான் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. கவிஞராய் அவர் எழுதும் கவிதைகள், சின்னச் சின்னச் செய்திகள் என முகநூலில் வாசித்திருக்கிறேன்... ரசிக்க வைக்கும் எழுத்து அது... ஆனால் சிறுகதை வாசித்ததில்லை... இதில் இருக்கும் எழுத்தோ அழுத்தம் கொடுக்கும் எழுத்து... ஆர்ப்பாட்டமில்லாத அன்பைச் சொல்லும் எழுத்து.

புதன், 8 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்

லகெங்கும் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸால் அடுத்து என்னாகுமோ என்ற பயம் மனசுக்குள் எப்போதும் மையம் கொண்டிருக்கிறது... வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் தற்போதைய சூழலில்... ஆனால் கொரோனா சுத்தமாக அழிகிறதோ அல்லது அழிக்கப்படுகிறதோ அல்லது மனித இனம் படும் பாட்டைப் பார்த்து அதுவாகவே தொலைந்து போகிறதோ... எது எப்படியோ இந்தப் பீதியிலிருந்து நாமெல்லாம் இறையருளால் மீண்டு வரும் போது மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... எகிறும் விலைவாசி, வேலை இன்மை, பசி, பஞ்சம், பட்டினி என மிகப்பெரிய சுழலில் மாட்ட வேண்டியிருக்கும்... அப்போதுதான் உண்மையான உயிர்ப் பிரச்சினை மேலோங்கும்... அதை நினைக்கும் போதுதான் இன்னும் மனசுக்குள் வருத்தமும் அழுத்தமும் பயமும் கூடுகிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது: கொரோனாவும் முகநூலும் சினிமாவும்

கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு ...

கொரோனாவின் கோரத்தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் எல்லாருமே பாதுகாப்பாய் இருங்கள். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிருங்கள். அசைவம் சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவேன் எனக் கடைகளில் காத்து நின்று நோயை விலை கொடுத்து வாங்காதீர்கள். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து அவர்கள் கேட்டுக் கொள்வதைப் போல் வீட்டுக்குள் இருங்கள்... உங்கள் உயிர் மட்டுமின்றி வீட்டார்.... அக்கம் பக்கத்தாரின் உயிரும் முக்கியம் என்பதை உணருங்கள்.

சனி, 4 ஏப்ரல், 2020

மனசின் பக்கம் : மதம் மறந்து மனிதம் பேணுங்கள்

தம் பிடித்து ஆடும் மனிதர்களைப் பற்றி எழுதும் எண்ணத்துடன்தான் அமர்ந்தேன். இவர்களைப் பற்றி என்ன எழுதுவது என்ற அயற்சியுடன் எழுதும் மனநிலையும் அற்றுப் போய் அமர்ந்தவன் பஹத் பாசில் நடித்த டிரான்ஸ் படத்தைப் பார்க்கலாமென ஆரம்பித்தால் ஏனோ படத்துடன் ஒட்ட முடியவில்லை... இவ்வளவுக்கு பஹத் என்னும் நடிப்பு ராட்சஸனின் இதில் அடித்து ஆடியிருக்கிறான் என்று எல்லாருமே சிலாகித்து எழுதியிருந்தும் மனநிலை ஒட்டவில்லை என்றால் அது எப்படிப்பட்ட படமாகினும் நம்மை ஈர்க்காது.

சனி, 28 மார்ச், 2020

மனசு பேசுகிறது : எழுதும் மனநிலையா இருக்கிறது..?

ரண்டு நாட்கள் இரவு நேர ஊரடங்கு என்றாலும் பகலிலும் வெளியில் செல்ல மனமில்லை... அறையில்தான்... பழனி ஐயா கொடுத்த வண்ணதாசனின் ஒரு சிறு இசை வாசித்து முடித்தாச்சு, ட்ரைவிங் லைசென்ஸ் என்னும் மலையாளப் படம், ஒரு சிறுகதை,  ஆரம்பித்திருக்கும் புதிய நாவலில் அடுத்த பாகம் என ஏதாவது ஒன்றை எழுதலாம் என்ற எண்ணம் மனதளவிலேயே நிற்கிறது. நிகழ்வுகளின் தீவிரம் இன்னும் கூடுமோ என்ற அச்சமே மனமெல்லாம் நிறைந்து நிற்கிறது.

சனி, 21 மார்ச், 2020

மனசு பேசுகிறது : ஆசான் அல்ல அப்பா


ழனி ஐயா...

இந்தப் பெயர் என்னுடன் இறுதிவரை பயணிக்கும் பெயர்... அவரின் மாணவர்களில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்.

வெள்ளி, 20 மார்ச், 2020

மனசு பேசுகிறது : நிரபராதிகளின் காலம்

டைப்பு 'ஹைநூன்பீபி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது கதையை அங்கு சென்று வாசித்து, தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்... கதையை வாசிக்க...

வியாழன், 19 மார்ச், 2020

சினிமா : ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

 பதிவுக்குள் போகுமுன் COVID-19க்காக சில வரிகள்
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் படுபயங்கரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நாடுகள் வயதானவர்களுக்கு சிகிச்சை இல்லை என்று சொல்லியிருப்பது மிகப்பெரிய கொடுமை... வேதனை... வரும் நாட்களில் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும்.

வெள்ளி, 13 மார்ச், 2020

எதிர்சேவையில் என்னுரை

எந்த ஒரு அணிந்துரையும் இல்லாமல் வந்திருக்கும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதியிருக்கும் என்னுரை உங்கள் பார்வைக்கு.

(அன்பின் ஐயா. முனைவர் மு.பழனி இராகுலதாசன்)

நீங்களும் கதை எழுதலாமே..?’

இந்த வரிகள் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களிடமிருந்து வந்தபோது நானும் முருகனும் எல்லா மாலையும் போல அவருக்கு வலம் இடமாக சைக்கிளை உருட்டியபடி, பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

அவரின் கேள்விக்குப் பின் 'நானெல்லாம் எழுதுறதா..?' என்ற வார்த்தை எப்பவும் போல் சிரிப்போடு வந்தது. 'அதெல்லாம் எழுதலாம்... நீங்க எழுதிக்கிட்டு வாங்க... பார்ப்போம்' என்றார். அதன் பின்னான நாளில் முதல் கதை... அதுவும் கல்லூரியில் படிக்கும் மாணவன் எழுதிய கதை என்னவாய் இருக்கும்... ஆம்... அதேதான்... காதல் கதை... கொடுத்ததும் வாங்கி வைத்துக் கொண்டார். பின்னொருநாளில் 'நல்லாயிருக்கு... இன்னும் எழுதுங்க...' என்றார் தோள் பிடித்து அணைத்துபடி. நல்லாயிருந்ததா என்பது தெரியாது ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைதான் என் எழுத்துக்கான விதையை என்னுள் விதைத்தது.

கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளில் முதல் கதைக்குப் பெயரிட்டு தினபூமி கதை பூமிக்கு அனுப்பச் சொன்னவர் அவரே. அந்தக் கதை வெளியானபின் தொடர்ச்சியாய் கதைகள் அனுப்பி வெளிவர... வெளிவர... எழுத்துப் போதை என்னுள் இறங்கியது... விடுமுறை தினங்களில் கதை எழுதுகிறேன் என உட்கார்ந்து வீட்டில் திட்டு வாங்குவது தொடர்கதையானது.

முதல் கவிதையை எழுதி ஐயாவிடம் கொடுத்ததும் வாசித்து, ஒன்றும் சொல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அதை வெள்ளைத் தாளில் எழுதச் சொல்லி தாமரை இதழுக்கு அனுப்பி வைத்ததுடன் கவிதை வெளியான புத்தகத்துடன் வந்து மகிழ்வாய்ச் சொன்னவரும் அவரே. அந்தக் கவிதைக்காக எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் வாழ்த்தையும் பெற்றேன். போன முறை விடுமுறையில் சென்றபோது நான் எழுதி வைத்திருக்கும் 'வேரும் விழுதுகளும்' என்ற கிராமத்து நாவலை வாசித்தவர் இதை புத்தகமாக்க வேண்டும்... நான் இதைப் பற்றி நிறைய எழுதித்தர வேண்டும் எனவும் சொன்னார். அது புத்தகமாகும் போது ஐயாவின் அணிந்துரையுடன்தான் வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

என் எழுத்து இடைநில்லாப் பேருந்து போலில்லாமல் கல்லூரிக்காலம், திருமணத்துக்குப் பின், அமீரக வாழ்க்கை என இடை நிறுத்தி... இடை நிறுத்தியே பயணித்தது... இப்பவும் பயணித்துக் கொண்டிருக்கிறது... அமீரக வாழ்க்கையில்தான் வலைப்பூ அறிமுகம்... அதில் எழுத ஆரம்பித்த எழுத்துக்களே வாழ்க்கைக் கதைகளை... குறிப்பாக கிராமத்து மனிதர்களின் வாழ்வைப் பேச ஆரம்பித்தது. பல நண்பர்கள் கதையில் சோகமே முடிவாய் வருவதைக் குறித்து என்னுடன் சண்டையிட்டிருக்கிறார்கள்... அழுகாச்சிக் கதை இதெல்லாம் எவன் வாசிப்பான் என்றும் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கைக் கதைகள் எப்பவும் வலி நிறைந்தவையே... அது ஒருபோதும் ஜிகினா பூசி மேடையேறுவதில்லை என்பதைப் அறிந்தவன் நான் என்பதால் அவர்களின் பேச்சுக்களை பேச்சாய் மட்டுமே எடுத்துக் கொண்டேன்... என் எழுத்தில் மாற்றம் நிகழ்த்தாமல்.

குடும்பம்... குழந்தைகள் தூர தேசத்தில் இருக்க... அமீரகத்தில் ஒரு கட்டில் வாழ்க்கையில் சேணம் பூட்டிய குதிரையாய் அலுவலகம், அறை என்று தொடரும் நாட்களில்... வலியை, சோகத்தை, வெறுமையைப் போக்கும் தோழனாய் அமைந்தது இந்த எழுத்து...  வலைப்பூவில் எனது கதைக்கான நண்பர் வட்டம் விரிந்து பரந்ததில் அமீரகத்தில் வந்த பின் எழுதியவைதான் முக்கியக் காரணம்... முகமறியா நட்புக்களை உறவாக் கொடுத்ததும் இந்த எழுத்துத்தான்.

எழுத்து ஒரு வரம்... அது எல்லாருக்கும் கை கூடுவதில்லை என்றும் சொல்பவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வரும். நானெல்லாம் கல்லூரிக்குப் போய், ஒரு உந்துதலின் பேரில்தான் எழுத ஆரம்பித்தேன். எழுத எழுதக் கதைகளுக்கான களமும் எழுத்தின் வீச்சும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது... கல்லூரிக் காலத்தில் எழுதிய கதைகளுக்கும் இப்போது எழுதும் கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என் எழுத்து நடையில். எல்லாராலும் எழுத முடியும்... யாருக்கும் எழுத வராதென்றெல்லாம் சொல்ல முடியாது... எழுத எழுத எழுத்து நடை, களம், காட்சிப் படுத்துதல் என எல்லாமே உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். அதன்பின் அதை யாராலும் பிரிக்க முடியாது... குறிப்பாக நீங்கள் யாருக்காகவும் உங்கள் எழுத்தை மாற்றாத பட்சத்தில் என்பதே நான் நண்பர்களிடம் சொல்வதும் எனக்குள் சொல்லிக் கொள்வதும்... ஒரு போதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை... என் எழுத்து எப்பவும் இப்படித்தான்.

என் கதைகள் நிறையப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்படி பரிசு பெற்ற கதைகள்தான் பெரும்பாலும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.  எல்லாக் கதைகளுமே வாழ்வின் எதார்த்தம் பேசுபவையாகத்தான் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை எதுவுமே அவ்வளவு எளிதாக அமைந்து விடாது... தடைகளைத் தாண்டிப் பயணிப்பது என்பது பல நேரங்களில் முடியாமலேயே போய்விடும் என்பதால் முயற்சி மேற்கொள்வதில் கூட யோசனையே முன் நிற்கும்... பொருளாதாரமும் முக்கியக் காரணியாக இருப்பதால் முயற்சிக்காமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை இன்று வரை. சில மாதங்களுக்கு முன் உன் கதைகளைப் புத்தகமாக்குவோம் என அமீரக வாசிப்பாளர் குழும ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அண்ணன் ஆசீப் மீரான் அவர்கள் எடுத்த முயற்சி சில காரணிகளால் தள்ளிப் போய்விட்டது என்றாலும் முதல் விதை அவர் போட்டதுதான்... அவருக்கு என் முதல் நன்றி.

எந்த ஒரு முயற்சியும் எனக்கு வெற்றியைக் கொடுப்பதில்லை என்ற வெறுப்பின் உச்சத்தில் இருந்தபோது நாம் பயணிப்போமென உற்சாக மூட்டி, அதற்கான முயற்சியில் இறங்கிய தம்பி நெருடாவிற்கும் இந்தப் புத்தகம் வெளிவரப் பேசி, கதைகளை அனுப்பச் சொல்லி எல்லாமுமாய் முன் நின்ற தம்பி கவிஞர் பிரபு கங்காதரன்-க்கும் நன்றி என்று சொல்லித் தள்ளி வைப்பதைவிட இந்த உறவு இறுதி வரை தொடர வேண்டும் என நான் வணங்கும் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்.

நான் எதாவது எழுதி, அதற்கான பரிசுத் தொகையோ புத்தகமோ வீட்டிற்க்கு அனுப்பப்படும் போது உடனே அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் பண்ணி விடுவதுடன்... இவ்வளவு எழுதி வைத்து ஏன் இன்னும் புத்தகம் ஆக்காமல் இருக்கீங்க எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் என் அன்பு மனைவி நித்யாவுக்கும், எங்க அப்பா கதை எழுதியிருக்காங்க என கதை வெளியான புத்தகத்தை கையில் பிடித்தபடி பள்ளிச் சிறுமியாய் வீதியிலிருக்கும் நட்புக்களுக்கு காட்ட ஓடிய என் செல்ல மகள் ஸ்ருதி-க்கும், நானும் கதை எழுதுறேன் என ஏதாவது கிறுக்கி, ஆங்கிலத்தில் கதை எழுதி பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்ற என் செல்ல மகன் விஷால்-க்கும் நன்றி என்பதைவிட அன்பு முத்தங்கள் ஆயிரம் ஆயிரமாய்...

இத் தொகுப்புக்காக என்றில்லாமல் இந்த ஆண்டு புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நான் எனது வலையில் எழுதியதில் 50 கதைகளை பிடிஎப் ஆக்கி நண்பர்கள் சிலரிடம் கொடுத்த போது, அதை என் மீதான அன்பின் பேரில் முழுவதும் வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் தங்களின் முகநூல் பக்கங்களிலும் எழுதிய கவிஞர் பூபகீதன், இராஜாராம்,எழுத்தாளர் நௌஷத்கான், பாலாஜி பாஸ்கரன், சுடர்விழி ஆகியோருக்கும் நன்றி.  

எனது எழுத்தை வலைப்பூவில் பத்தாண்டுகளாக வாசித்துத் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லிவரும் வலை நட்புக்கள் அனைவருக்கும், என் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அகல்,  முத்துக்கமலம்,  காற்றுவெளி,  தேன்சிட்டு, மின்கைத்தடி மற்றும் என் கதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும், அடிக்கடி கதையைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் அண்ணாவுக்கும், அமீரக எழுத்தாளர் குழும நட்புக்கள் அனைவருக்கும் மற்றும் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி.

எனது முதல் புத்தகத்தைக் கொண்டுவரும் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தாருக்கு நன்றி.

எங்களுக்கு வாழும் முறையைக் கற்றுக் கொடுத்த... இப்பவும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்  இராம. சேதுராமன் - சே.சிவகாமி, கு.லட்சுமணன் - லெ.இராஜகுமாரி ஆகியோரின் ஆசிகளோடும் நான் வணங்கும் தெய்வங்களின் ஆசியோடும் முதல் புத்தகத்தை நண்பர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் முயற்சியில் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்வும் சந்தோஷமும்... 

என் வாழ்க்கையில் என்னால் எதுவும் நிகழ்ந்து விடவில்லை... இப்போதும் எப்போதும்  என் நண்பர்களால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது... அவர்களே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

என் கதைகளை வாசியுங்கள்... கிராமத்து மனிதர்களின் வாழ்வைச் சுவாசித்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைக்கும்... உங்கள் வாழ்த்துக்களும் மனம் நிறைந்த கருத்துக்களுமே என்னை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் என்பதால் உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கியிருக்கிறேன்.

எனது இந்த முதல் புத்தகத்தை எனது பேராசன். முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 மார்ச், 2020

எதிர்சேவை விமர்சனம் 2 : நம்பிக்கை தரும் சம காலச் சிறுகதைகள் - விசாகன்

தேனியில் இருக்கும் திரு. விசாகனுக்குப் புத்தகம் அனுப்பச் சொல்லி சகோதரர் நந்தகுமார் சொன்ன போது நானே அனுப்புகிறேன் எனச் சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அனுப்பி வைத்தார். அதன் பின் அவர்கள் மேடையில் எதிர்சேவை குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பு தட்டிக் கொண்டே போய் இறுதியில் என்னால் செல்ல இயலாமல் வந்துவிட்டேன். அவர்களின் அழைப்புக்குச் செல்ல முடியா உடல்நிலை என்பதைச் சொன்னதும் சரி பரவாயில்லைங்க என்று சொன்னவர் புத்தகத்தை வாசித்து சிறப்பானதொரு விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்திலும் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மேடை பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். இதை எதிர்பார்க்கவில்லைதான்... தொடர்ந்து எழுதணும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கும் மற்றுமொரு விமர்சனம் இது. எதிர்சேவையைக் கிழித்துத் தொங்கப் போடுவார்கள் என்று பார்த்தால் எல்லாமே கட்டிப்பிடிக்கும் விமர்சனமாகத்தான் இருக்கிறது. நன்றி விசாகன் அண்ணா.


நாற்காலியின் பின்னால் ஊக்கால்
என் பெயரை எழுதிவைத்த நினைவு ரம்மியமானது…
--------------------------------------------------------------------------------------
ரானிய சினிமாக்களை ஒத்து சிலபல திரைப்படங்கள் ஒரு அரைமணி நேர சம்பவத்தை நேர்த்தியான, காத்திரமான திரைக்கதை அம்சத்தைத் தாங்கி வருவதை நாம் காண்கிறோம். அதுபோன்ற சாயலாகவே, கூடடைந்துவிட்ட பறவை விடியலில் சிறகு சிலிர்த்து எதன்பொருட்டோ வான்வெளியில் பறந்த ஐந்தாவது நிமிடம் ஏதோவொரு சோலையில் அமர்கிறது. அப்பறவை கழித்த அந்த ஐந்து நிமிடங்களைக் ஐந்துபக்கக் கதையாக்குகிறான் படைப்பாளன், ஒரு சித்தாள் ஒருத்தி மாலையில் வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்ப எடுத்துக்கொள்ளும் பத்துநிமிடத்தைத் தன் கதைக்குள் அடக்குவதைப்போல. பல படைப்பாளர்கள் இதுபோன்ற முயற்சியனை அழகுறக் கையாள்கிறார்கள். அந்தப் பாணியிலேயே தன்னுடைய “எதிர்சேவை” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வாசகர்களுக்காகக் கையளித்திருக்கிறார் பரிவை சே.குமார். பணிநிமித்தம் அபுதாபியில் இருக்கும் குமாரின் இத்தொகுப்பை “கலக்கல் ட்ரீம்ஸ்” பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 12 கதைகளைக்கொண்ட 96 பக்க நூலின் விலை 100.
“ஒருபோதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை, என் எழுத்து எப்பவும் இப்படித்தான்” என்று தன்னுடைய முன்னுரையில் குமார் குறிப்பிடும் நோக்கம், தன் எழுத்தின்பால் வரும் விமர்சனங்களைக் கடந்துசெல்லும் ஒரு பாணியாக இருக்கலாம். எழுத நினைக்கின்றவர்களுக்குத்தான் அவரின் இந்த அறிவுரையே அன்றி, கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கில்லை என்பதையும் அவருடைய கருத்தில் மறைபொருளாக்கியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் குமாரின் கதைகள் வட்டாரமொழியில் பின்னப்பட்டுள்ளன என்றாலும், ஒவ்வொரு கதையிலும் சமுதாயம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சிந்தனையை முன்வைக்கிறார். அடுக்கடுக்காக நிறைய சமகால அரசியல் சம்பவங்களைத் தன்னுடைய கதைசொல்லும் போக்கில் கோர்த்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள “எதிர்சேவை”, “விரிவோடிய வாழ்க்கை”, “அப்பாவின் நாற்காலி” ஆகிய மூன்று கதைகள் குறித்து சுருக்கமான என்னுடைய குறிப்புகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
“எதிர்சேவை”யில், தற்பெருமை பீற்றித்திரியும் தன்னுடைய வெளியூர் மாமாவின் வருகையை வெறுத்து நிற்கும் ஒருவன், மாமாவின் மகளும் அப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, அவ்வாறில்லாது அவர்களுக்கிடையிலான மய்யலும் காதல்வசப்படுதலும், அல்லது உள்ளார்ந்த நட்போ இயல்பாக எவ்வாறு தொற்றிக்கொள்கிறது என்று கதைவழி நமக்குச் சொல்லவந்ததில், ஒரு குடும்பத்திற்குள் உருக்கொள்ளும் பிணக்குகள் மற்றும் இணக்கம், அண்ணன் தங்கை நட்பின் அழுத்தம், பாச உணர்வு என விரித்துவைக்கிறார். வைகையில் ஒரு கைளவு தண்ணீரே வந்தாலும் அல்லது அதுவும் வராவிட்டாலும், கள்ளழகர் தன்னுடைய பக்தர்களுக்காக அந்த ஆற்றில் இறங்காமல் போகமாட்டார் என்பதைப்போல, நம்முடைய பாரம்பரியத தொன்மங்களைத் தாங்கி நிற்கின்ற குடும்பங்கள் எத்தனை பிணக்குகளுக்குள் சிக்குண்டு நின்றாலும் உறவுகள் ஏதேனும் ஒருவழியில் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கின்றன என்பதை உணர்த்துகிறார் கதாசிரியர்.
“விரிவோடிய வாழ்க்கை” ஒரு பிரச்சாரத் தொணியில் இருந்தாலும், நம் முன்னோர்கள் போற்றிவந்த வேளாண்மையின் தற்போதைய நிலை மாற வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற கதையாக இருக்கிறது. ஒரு திரைக்கலைஞனான நானா படேகர் “விவசாயிகளே தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்காதீர், என்னிடம் வாருங்கள், நான் வழிகாட்டுகிறேன்” என்று சொல்ல முன்வரும்போது, மக்களால் தேர்ந்தெடுத்த ஒரு அரசிற்கு அந்த மனம் வரவில்லையே என்று ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்தக்கதை இருக்கிறது, விரிவோடிய வாழ்க்கை என்ற தலைப்பே ஒரு மிகப் பெரிய நாவலை உள்ளடக்கியதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது.
“அப்பாவின் நாற்காலி” தன்னுடைய மிடுக்கான தோற்றம் கொண்டுள்ள அப்பா தன்னுடைய தச்சு ஆசாரி நண்பனிடம் தனக்கான கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையிலான வடிவத்துடன் நாற்காலி செய்துதரச் சொல்லி ஊர் நாட்டாமைத் தீர்ப்புச் சொல்ல அதைப் பயன்படுத்துகிறார். பல குடும்பங்களில் அப்பா என்ற பாத்திரத்தின் இதுபோன்ற மிடுக்கான தோரணையும், கடுமையான அச்சத்தைத் தரும் உருவ அமைப்பும் பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடாது தடுத்துவிடுகின்றன என்பது கண்கூடு. ஆனால் பாச உணர்வை யார் அல்லது எது தடுத்துவிட முடியும்? அப்பா இறந்துவிட்டாலும் அந்த நாற்காலியில் அப்பா அமர்ந்தே இருப்பதுபோலத்தான் வீட்டின் அமைப்பு தெரிகிறது. ஆண்டுகள் கடந்து அந்நாற்காலி பரண்மேல் ஒதுக்கப்பட்டாலும் அப்பாவின் நினைவுகள் எப்போதும் மகன்களை விட்டுவிலகுவதில்லை. அந்தப்பெருவலியைப் பேரன்கள் உணர்துகொள்ள நியாயமுமில்லை.
இலக்கியத்துறையில் கதைசொல்லும் கதைஞர்களின் தேவையும் வரவும் ஒருசேர எழுச்சியடைந்துவரும் தமிழச்சூழலில், பரிசை.சே.குமாரின் வரவு சிறப்பானது. தன்னளவில் புதிய வடிவங்களையும், கருத்துச் செறிவையும், நவீன நடையையும் தாங்கிவருகின்ற சமகாலச் சிறுகதைகள் பல நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், எழுத்து கைகூடியபின்னர் வாசிப்பை அறவே நிறுத்திக்கொள்ளும் பல தோழர்களைப் பார்க்க முடிவதைப்போல அவ்வாறானவர்களின் எழுத்துப் பயணம் சட்டென நின்றுவிடுவதையும் பார்க்கிறோம். அதுபோல தன்னுடைய எழுத்தும் சுருங்கிச் சிறுத்துவிடாமல் பரந்துபட்ட வாசிப்பின் பின்னணியில் தன்னுடைய எழுத்தாற்றலை மென்மேலும் வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகிற்கும், மக்களுக்குமான கதைகளைப் படைத்திட வேண்டுமென்று குமாரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
-விசாகன், தேனி.

நன்றி. திரு.விசாகன்.
-'பரிவை' சே.குமார்.

மலையாள சினிமாக்களம் (அகல் கட்டுரை - ஜனவரி : 2020)

Image result for மலையாள சினிமா வினீத் ஸ்ரீனிவாசன்

சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஒரு தனிப் பிரியம். அது ஏன்னு எல்லாம் தெரியாது... படம் பார்ப்பதும்... பாட்டுக் கேட்பதும் எப்பவுமே பிடிக்கும் ஒன்று. தூறல் நின்னு போச்சு படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளியில் அடிபட்டு கை உடைந்த போது ‘படம் பார்த்துட்டு அதுல வர்ற சண்டைக்காட்சி மாதிரி செஞ்சு பார்த்திருப்பாக... விழுந்து கையை ஒடச்சிக்கிட்டு வந்திருக்காக’ என வலியும் வேதனையும் சுமந்து நிற்கும் போது அம்மா கொடுத்த அடி எப்போதும் மறக்க முடியாத ஒன்று. சில படங்கள் பார்த்த பின்னணி இன்னும் இனிமையாய் மனசுக்குள்! ம்.... அது ஒரு கனாக்காலம்னு எல்லாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா சினிமா பார்ப்பது என்பது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கு. இப்பவும் அது தொடரும் காலம்தான்!  ​

ஆம் இன்றும் படம் பார்ப்பது தொடர்கிறது என்றாலும் இங்கு நாம் பார்க்க விரும்பும் படங்கள் தியேட்டருக்கு வருவதில்லை. பிரபலங்களின் படங்கள் மட்டுமே வரும். அப்படியே நாம் பார்க்க நினைக்கும் படம் வந்தாலும் கணக்குப் பண்ணி வாழும் வாழ்க்கையில் டிக்கெட் விலைக்கு மூன்று நாள் சாப்பிடலாமே என்றுதான் தோன்றும். ஆம் எது தேவையான செலவோ அதை மட்டுமே செய்து நாட்களை நகர்த்தும் போதே ஏகப்பட்ட நெருக்கடி, தினம் தினம் ஒரு பிரச்சினை. எழும்போதே இன்று என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்புடன்தான் எழச் செய்கிறது அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரம். இதில் எங்கே சினிமாவுக்கான செலவையெல்லாம் யோசிப்பது? டோரண்டுகளும் சில இணைய வெளிகளுமே சினிமாவை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊருக்குப் போனாலும் ஒரு மாத விடுமுறையில் சினிமா என்பது யோசிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்காக எப்போதேனும் செல்வதுண்டு.

தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்த்து நகர்ந்த வாழ்க்கைதான் ஊரில் இருக்கும் வரை! அதுவும் காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் இருந்த போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் கிட்டத்தட்ட வெளியான எல்லாப் படங்களையும் பார்த்து விடுவோம், அது மரண மொக்கை என்றாலும் கூட! காரைக்குடி தேவகோட்டையில் எல்லாத் தியேட்டரிலும் படம் பார்த்திருந்தாலும் சென்னையில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீநிவாசாவும்தான் எங்களை அதனுள்ளே அதிகம் அமர்த்திப் பார்த்திருக்கும். நடந்து போகும் தூரத்தில் எங்கள் அறை என்பதால் நினைத்தவுடன் இரவுக்காட்சிக்குச் சென்று விடுவோம்.

அமீரகம் வந்தபின் தமிழ் தவிர்த்து மற்ற மொழிப்படங்களையும் டோரண்டில் தரவிறக்கம் செய்து நண்பர்கள் பார்க்கும் போது வெட்டித்தனமாய் மாலைகளைக் கடத்த வேண்டிய சூழலில், விளக்கணைக்க பதினோரு மணி என்ற சட்டதிட்டத்துடன் இயங்கும் அறையில், பெரும்பாலும் பனிரெண்டரை, ஒருமணி வரை உறக்கம் வரா உளைச்சலில் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் வார விடுமுறை தினங்களில் பிரியாணி சமைத்துச் சாப்பிட்ட பின் நேரத்தைக் கடத்த என்ன செய்வது? எல்லா மொழிப் படங்களும் பரிட்சயமானது இப்படித்தான்.

சமைத்தல், ஊருக்குப் பேசுதல், எழுதுதல் என்பதெல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீடித்தல் என்பது சாத்தியமில்லை. மகிழ்வான பேச்சுக்குப் பின்னே பணம் என்னும் வார்த்தை வந்தால் நம் இயலாமை எதிர்த்து நிற்கும். மகிழ்வாய் ஆரம்பித்த பேச்சும் இறுதியில் சண்டையில்தான் முடியும் என்பதால் இடைவெளி விட்ட பேச்சே கொஞ்சமேனும் மனசுக்கு மருந்தாக இருக்கக் கூடும் என்பதாலும், எவ்வளவு நேரம்தான் எழுத முடியும்? எழுத்துக்குப் போரடித்துப் போகாதா என்ற நினைப்பாலும் சில நிமிடம் பேச்சும் கொஞ்ச நேர எழுத்துமே சாத்தியமாகிப் போன சூழலில், நேரங்கடத்தி என்பது பெரும்பாலும் கணிப்பொறியில் பார்க்கும் படங்களே! சில நேரங்களில் குறிப்பாக விடுமுறை தினத்தில் அறையில் ப்ரொஜெக்டர் மூலமாக படம் போடுவார்கள். எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள் ஆனால் இறுதிவரை பார்ப்பது நானும் என் நண்பருமாகத்தான் இருக்கும். மற்ற பக்கமெல்லாம் மழை நேரத்து தவளைபோல குறட்டைச் சப்தங்கள் வர ஆரம்பித்துவிடும்.

நான் பார்த்த முதல் மலையாளப்படம் 'அன்னையும் ரசூலும்' - பஹத்பாசிலும் ஆண்ட்ரியாவும் நடித்தது. அருமையானதொரு காதல்கதை. ரசித்துப் பார்க்க வைத்தது. ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது மலையாளத்தில் அவருக்கு முதல்படம். இந்தப் படம் பார்த்தபின் என் கணிப்பொறித் திரையில் நீண்டநாள் அன்னா இருந்தார். அந்தப்படம் கொடுத்த ஈர்ப்பின் காரணமாக மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிறையப் படங்களைப் பார்த்தேன். மலையாளப் படத்தின் மீது தீராக்காதல் வந்தது.

டோரண்டில் புதிய மலையாளப்படம் என்றால் அது எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இப்போதெல்லாம் டிரைலரையோ அல்லது விமர்சனத்தையோ பார்ப்பது உண்டு அப்போது உடனே தரவிறக்கம்தான். எத்தனை படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்... குறிப்பாக எல்லாமே நல்ல கதைகளுடன்... என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, சார்லி, பிரேமம், மகேஷிண்டே பிரதிகாரம், உஸ்தாத் ஹோட்டல், தொண்டிமுதலும் த்ரிஷாக்சியமும், த்ரிஷயம், டேக் ஆப் இப்படி நிறையப் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதாலேயே எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

நாம் இன்னமும் மாஸ் நாயகர்களுக்காக கதை என்று ஒன்று வேண்டும் என்பதையே மறந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாலு சண்டையும் அஞ்சு பாட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. பற்றாக்குறைக்கு சூரி, விவேக், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு போன்றோரின் வறட்சியான நகைச்சுவைகளுமே தமிழ்ச் சினிமாவை எழ விடாமல் அழுத்திப் பிடித்து வைத்திருக்கின்றன.

வடிவேலு என்னும் கலைஞன் இல்லாதது தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூட சொல்லலாம் என்றாலும் தொழில் மீது காட்ட வேண்டிய பக்தியை அரசியல்வாதிக்காக காட்டியதால் தானாகத் தொலைந்து போன நகைச்சுவையாளன்தானே அவர். நுணலும் தன் வாயல் கெடும் என்ற பழமொழிக்குப் பாந்தமாய்ப் பொருந்திப் போனவர். இவரால் மட்டும் தமிழ்ச்சினிமா தழைத்து விடாது என்றாலும் சவக்குழிக்குப் போகாமலாவது இருந்திருக்குமோ என்ற ஆதங்கமே கொடுக்கிறது அவரின் சமீபத்திய கமலஹாசன் விழா மேடைப் பேச்சு.

சமீபத்திய தமிழ் படங்கள் இளம் இயக்குநர்களின் கையில் சிக்கி, சாதி என்னும் தரித்திரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அடக்கி வச்சே...’, ‘அடிமைப் படுத்தினே...’, ‘எழுந்து வருவோமுடா...’ என நீலம், பச்சை, சிவப்புன்னு சாதிக்கொரு கலர் கொடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சாதீயத் தீயை நன்றே வளர்க்கிறார்கள். இவர்களின் பாதையில் பயணிப்பதாலேயே தன் சாதிப்பெயரை பைக்கில் எழுதிப் பறக்கிறது இளைஞர் கூட்டம். நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டிய சினிமா சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பலர் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆதாயத்துக்காக! இது எப்போது மாறும் என்பது கேள்விக்குறியே...

நம்மவர்களுக்கு நேர் மாறாய் இருக்கிறார்கள் மலையாள இளம் இயக்குநர்கள்... சின்னதாய் ஒரு கதை... அதை வைத்துக் கொண்டு திரையில் மாயாஜாலம் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக் கதைகளாய் நம்முன்னே நின்று நம்மை வசமிழக்க வைக்கின்றன. அவர்கள் சாதிக்குள்ளோ மதத்துக்குள்ளோ மறந்து நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் பயணிக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள்... அதிகாரத்தைச் சாடுகிறார்கள். அன்பை விதைத்து அநீதியைக் கொல்கிறார்கள். சாதியையோ மதத்தையோ சுமக்கவேயில்லை. சக மனிதனின் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள். நம் முன்னே அதைச் சுவையுடன் படைக்கிறார்கள்.

தமிழ்ச்சினிமா இன்றைய நிலையில் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒரு சிலர் மட்டுமே அதைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புதிதாய் புதிய கதையுடன் வரும் இயக்குநர்கள் முதல் படத்தை முக்கனியின் சுவையுடன் எடுத்து, தியேட்டர் கிடைக்காமல் படும் அவதியில், தனது நல்ல படம் ஓடாமல் முடங்கிப் போன வருத்தத்தில் அடுத்த படத்தை தமிழ்ச்சினிமாவின் மசாலா பார்முலாவிலோ அல்லது சாதீயப் பார்முலாவிலோ எடுக்க ஆரம்பித்துக் காணாமல் போய்விடுகிறார்கள். மலையாளத்தில் முதல் படம் கொடுத்த பெரும் தாக்கத்துக்கு இணையாக, அதையும் விட இன்னும் சிறப்பாக இரண்டாவது படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் பயணிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள்.

இங்கே நாம் மாஸ் நடிகர்களுக்காக கதை எழுதுகிறோம். ஆனால் மலையாளிகளோ தங்கள் கதைக்கான நடிகர்களைத்தான் தேடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்திய படங்கள் எல்லாம் மகா வெற்றியைக் குவித்திருக்கின்றன.  சிறிய படங்களுக்கு இங்கே சரியான விளம்பரம் கிடைப்பதில்லை... ஆனால் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள்தான் பெரிய இலக்கை நோக்கி நகர்கின்றன.

வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு நாயகனுக்கு உரிய உடலமைப்பு கொண்டவரல்ல என்றாலும் மிகச் சிறப்பாக, அற்புதமாக நடிப்பவர். நல்ல பாடகர், இயக்குநர். அவர் நடித்தால்தான் சரியாக இருக்குமென வந்த படங்கள் பல. சமீபத்தில் அவரின் 'மனோகரம்' சினிமாவைப் பார்த்தேன். அப்படியான கதாபாத்திரத்தில் நம்மவர்கள் நடிக்க யோசிப்பார்கள். ஆட்டோகிராப்பில் பலர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும்தான் சேரன் நடிகனானார். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் சிலர் நடிக்க மறுத்ததால்தான் அவரும் நடிகனானார்.

மனோகரத்தில் ராசி என்பது என்னவென்றே அறியாத, எதைச் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் ஒரு பெயிண்டரின் கதாபாத்திரம் வினீத்துக்கு.! மனுசன் அடித்து ஆடியிருப்பார். அந்த உருவத்தை தமிழ்ச் சினிமா என்றால் ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ஆனாலும் நாமும் இப்போது மாறித்தானே இருக்கிறோம். சரவணா ஸ்டோர் ஜாம்பவான் அண்ணாச்சியை எல்லாம் நாயகனாக்கி கொடியும் கட்டவுட்டும் வைக்கும் நாளுக்கு காத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? வினீத் எழுதி இயக்கிய 'தட்டத்தீன் மராயத்து' பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள், அழகானதொரு காதல்கதை.

இவரைப் போல்தான் பஹத்பாசிலும்! நடிப்பு அரக்கன். எவனாவது ஒரு இளம் நாயகன் வழுக்கைத் தலையுடன் படங்களில் நடிப்பானா? இவர் நடித்தார். எதார்த்த நடிப்பென்றால் பஹத் எனத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டார். ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தைப் பார்க்கும் போது ‘யார்டா இவன்?’ எனத் தோன்றியது. அடுத்தடுத்த படங்களில் இவரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பஹத்தின் ஒவ்வொரு படத்தையும் தேடித்தேடிப் பார்க்க வைத்தது அவரின் அலட்டலில்லாத, ஆத்மார்த்தமான நடிப்பு. இதுவரை அவரின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு. தமிழில் வந்ததைத் தவிர.

இதே வரிசையில் ஷௌபின் ஷாகிர் பற்றிச் சொல்லியே ஆகணும்... இவரின் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைப் பார்க்கும் முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகனாய்த்தான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்... சத்தியமாக சந்தானத்தைப் போல் இவர் இல்லை. இந்தப்படம் பார்த்தபோது இவரின் நடிப்பு வியக்க வைத்தது. அதன் பின் பார்த்த படங்களில் எல்லாம் ஷௌபின் என் மனம் கவர்ந்த நாயகராய் மாறிப் போனார்... அவர் இருந்தால் அந்தப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்றாகிப் போனது. கும்பளங்கி நைட்ஸில் மகிழ்ந்து கடந்த போது அம்புலியில் மனுசன் அடித்து ஆடியிருப்பார். அப்படி ஒரு நடிப்பை அந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது. அம்புலி இவரின் வாழ்நாள் சாதனைப்படம் என்றும் சொல்லலாம்.

இப்படியே துல்கர் சல்மான், நிவின் பாலி, சோனு நிகம், ப்ரித்விராஜ், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், ஜெயசூர்யா, குஞ்சக்கோ போபன் என ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டே செல்லலாம். மலையாள சினிமா என்று சொல்லிவிட்டு நாயகர்களின் பின்னே செல்வது முறையல்லவே! மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் வரிசை நாயகர்களுக்குப் பிறகு மலையாளத்துக்கு கிடைத்திருக்கும் இளைஞர் பட்டாளம் மிகச் சிறப்பாக நடிக்கிறது. இவர்களின் தொடர் வெற்றிக்குப் பின்னே நல்ல கதைகள் இருக்கின்றன. அதைக் கொடுப்பவர்கள் புதிதாய் பதியமிடும் இளம் இயக்குநர்களே. மலையாளச் சினிமா உயரத்தை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து நாட்களாகிவிட்டது. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மலையாள சினிமாவில் ஒவ்வொரு படமும் புதிதான கதைக்களத்துடன்... எதார்த்தமாக எடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தக் கதையாடலே அந்தப் படங்களின் வெற்றிக்கு வித்திடுகின்றன. மேலே சொன்னது போல் நாயகனுக்காக கதை என்பதைவிட கதைக்காகத்தான் நாயகன் என்பதில் மிகத் தெளிவாக, உறுதியுடன் இருக்கிறார்கள்... நாயகனுக்காக கதையில் எந்தச் சமரசமும் செய்வதுமில்லை... செய்ய விரும்புவதுமில்லை. அவர்களின் படங்களைக் களங்களே நிர்ணயம் செய்கிறது. காட்சிப்படுத்துதலில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்.

தமிழ்ச்சினிமா, நான் சின்ன வயதில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இன்னும் நகர்கிறது. சில நல்ல படங்கள் எப்போதேனும் தலைகாட்டுவதுடன் சரி... மாஸ் நாயகர்களின் படங்களுடன் வெளிவந்து மறுநாளே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. மிக மிக அவசரம், மேற்குத் தொடர்ச்சி மலை, தொரட்டி, ஒத்தைச் செருப்பு போன்ற படங்களையெல்லாம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? அசுரன் கூட மாஸ் ஹீரோ என்பதால்தான் இமாலய வெற்றி பெற்றது என்பதே வெளிப்படையான உண்மை.

நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா மாஸ் என்னும் கோட்டைக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கதையா..? அப்படின்னா..?’ என்ன என்று கேட்க வைத்துவிட்டது. நாங்கள் எடுப்பதுதான் கதை... நாலு சண்டை, ஐந்து பாட்டு... கொஞ்சம் பஞ்ச் வசனங்கள் இருந்தால் போதும் கட் அவுட் வைக்கவும் அதுக்குப் பால் ஊத்தவும் அப்படியே தங்களுக்கு வாக்கரிசி போட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு என்பதை உணர்ந்தபின் கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதுவும் குறிப்பாக புதிய இயக்குநர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல சாதிகளைச் சுமந்து படமெடுப்பதுதான் கேவலத்தின் உச்சம். அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவும் ‘நான் இவன்டா’ எனச் சாதி சொல்லித் திரியவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது... பின் எப்படி நல்ல கதைகளுக்கு இங்கே மதிப்பிருக்கும்..?

மலையாளக் கரையோரம் இப்படியான சாதீய இயக்குநர்கள் ஒதுங்கவில்லை என்பதே ஆறுதல். நல்ல சிறுகதைகளை வாசிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு சமீபத்திய மலையாள புதிய இயக்குநர்களின் படங்களில் கிடைக்கிறது என்பதே உண்மை.

சல்லிக்கட்டு, தண்ணீர் மத்தன் தினங்கள், அம்புலி, உயரே, ஜூன், கும்பளங்கி நைட்ஸ், இஸ்க், வைரஸ் எனச் சமீபத்தில் பார்த்து... ரசித்த படங்கள் எல்லாம் மனசுக்குள் இன்னும் தித்திப்பாய்...

முடிந்தால் இந்தப் படங்களைப் பாருங்கள்... மனநிறைவான சிறுகதையை காட்சிப்படுத்திப் பார்த்த அனுபவம் கிடைக்கும்... நிச்சயமாய் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். கத்தியும் ரத்தமும் சாதியும் மதமும் இல்லாத ஒரு வாழ்வை ரசிக்க முடியும்.

மலையாளத் திரையில் மண் வாசமும் மனதின் வாசமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் காலமிது. இந்த வாசம் இன்னும் இன்னுமாய்த் தொடரட்டும். 

 - பரிவை சே. குமார்

திங்கள், 9 மார்ச், 2020

சிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)

எப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு முன் கட்டுரை ஒன்றும் அனுப்பியிருந்தேன். ஒரு கதையையும் கட்டுரையையும் ஜனவரி-2020 அகல் மின்னிதழில் வெளியிட்டிருந்தார். ஊரில் இருந்ததால் அது குறித்துப் பகிர முடியவில்லை. இதோ 'சாமியாடி'யை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க. அப்படியே அகலிலும் உங்க கருத்தைச் சொன்னா நல்லாயிருக்கும். நன்றி.

அகலில் வாசிக்க, கருத்துச் சொல்ல : சாமியாடி

---------------------------------
ரோட்டோரத்தில் இருந்த சிறிய கீற்றுக் கொட்டகை டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான் ரவி, அதிலிருந்து இறங்காமலேயே 'இங்க சாமியாடி வீடு எங்கப்பு இருக்கு?' எனக் கேட்டபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் பின்னாலிருந்த சாமியய்யா.

"எந்தச் சாமியாடிப்பு? மேலக்காட்டாரா... இல்ல வடக்கிவூட்டானா?" கடைக்கு முன் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து தினத்தந்தியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை சத்தமாகக் கேட்டார்.

“இங்க ரெண்டு சாமியாடியா இருக்காவ?" சாமியய்யா ஆச்சர்யமாகக் கேட்டார்.

"ஆமா... நிறையச் சாமியாடிக இருக்கானுக... நண்டு சிண்டெல்லாம் சாமி ஆடுதுவ... ஆனா சாமியாடின்னு பேரெடுத்தவுக அவக ரெண்டு பேருதான்"

"ம்.... இந்த பாதரக்குடியில பொண்ணக் கொடுத்துருக்காருல்ல... பெரியகருப்பத்தேவர்..."

"ஓ.... செரி... செரி... அட நம்ம மேலக்காட்டார்... அதானே... இப்ப ஆரு வடக்கிவூட்டானப் பாக்க வர்றா..."

"வீடு...?"

"நேர போங்கப்பு... கம்மாய்க்கர தாண்டி மேக்கால ஒரு பாத திரும்பும்... அதுல போனீங்கன்னா சோத்தாங்கைப் பக்கமா பச்சக் கேட்டுப் போட்ட தோட்டமிருக்கும்... கேட்டுல கூட குஞ்சரம்மாள் தோட்டம்ன்னு எழுதியிருக்கும் அதுக்குள்ளதான் வீடு... தேவரு இப்பத் தோட்டத்துலயே இருக்காவ"

"சரிங்கய்யா"

"அப்பு காபி சாப்புட்டுப் போறது... நம்ம கடயில சுத்தமான பசும்பாலுங்க." டீ ஆத்தியபடி கேட்டான் கடைக்கார சுப்பு.

"இப்ப காபி வேணாந்தம்பி வரும் போது குடிக்கிறோம்"

"செரிங்கய்யா.... நீங்க வரும்போது ஐசு வந்துரும்... வெயிலுக்குச் சும்மா சில்லுன்னு நன்னாரி வேர் போட்ட தண்ணியில சர்பத்துப் போட்டுத்தாரேன்... அப்புடி ஒரு சர்பத்த வேற எங்கயும் குடிச்சிருக்க மாட்டீங்க" சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியைக் கிளப்பினான் ரவி.

வண்டி கம்மாக்கரையைத் தாண்டி மேற்குப் பக்கமாக போன சரளை ரோட்டில் திரும்பி குஞ்சரம்மாள் தோட்டம் என எழுதியிருந்த பச்சைக் கேட்டின் முன் நின்றது. இருவரும் வண்டியில் இருந்து இறங்கி வேட்டியை அவிழ்த்து நல்லாக் கட்டிக் கொண்டார்கள். ரவி சற்று தள்ளிப் போயி ஒரு காரஞ்செடிக்குப் பின்னே அமர்ந்து ஒண்ணுக்கு இருந்தான்.

"அங்கயிருந்து அடக்கிக்கிட்டு வந்தியாக்கும்... கடக்கிட்ட நிக்கிம் போது போயிருக்கலாமுல்ல, வீடு வாச இருக்க இடத்துல பொண்ணு புள்ளங்க வரும் போகும்..." கடுகடுத்தார் சாமியய்யா.

அவரை முறைத்துவிட்டு "இப்ப இங்கிட்டு யாரு வந்தா... சும்மா எப்பப் பாத்தாலும் நய்யி நய்யின்னு" முணங்கிய ரவி கேட்டை நோக்கிப் போனான்.

"தோட்டந் தொரவா இருக்காவ... நாயி கெடக்கும்... பார்த்துத் தொற"

"ம்..." என்றபடி சின்னக் கேட்டைத் திறந்து காலை வைத்தான்.

"வவ்... வவ்...." என மூன்று நாய்கள் பாய்ந்தோடி வர, "ஏய் மணி...." எனக் கத்தியவாறு வாழைகளுக்கு இடையே வேப்பங்குச்சியால் பல் விளக்கியபடி வந்தார் உயரமான பெரியகருப்பத்தேவர்.

அவரின் குரலுக்கு மூன்றும் முறுவலித்தபடி நின்று, அருகே இருந்த தென்னையை ஒட்டி தண்ணி ஓடும் வாய்க்கால் கரையில் படுத்துக் கொண்டன. உள்ளே வந்த இருவரையும் பார்த்து வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு "யாருப்பு நீங்க..? என்ன வெசயம்?" என்றார்.

"மேக்காட்டூர்ல இருந்து வாரோம்... உங்களக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கோம்... சிறுவாச்சூர் மணிதான் சொல்லிவிட்டாப்புல"

"அடடே மணி சொல்லி வாரீங்களா? நேத்து கூட பேசும்போது சொன்னான், வருவாங்க... பாத்துக் கொடுங்கன்னு... வாங்க... வாங்க" என உள்ளே அழைத்துச் சென்று வாசலில் போட்டிருந்த நீளக் கொட்டகையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமரச் சொல்லி, "ஏய் தங்கம் தண்ணி கொண்டாந்து கொடாத்தா' ன்னு சொல்லிட்டு, "'சித்த இருங்க ரெண்டு தண்ணியள்ளி உடம்புல ஊத்திக்கிட்டு வந்துடுறேன்" என மோட்டார் அறைப்பக்கமாப் போனவர், "ஏத்தா வந்திருக்கவுகளுக்கு காபி கொடுங்க... ரொம்பத் தூரத்துலயிருந்து வந்திருக்காவ... கருக்கல்ல கெளம்பியிருப்பாவ... சாப்புட்டாகளா இல்லயான்னு கூடத் தெரியல... கேட்டுச் சாப்பிட எதாச்சும் கொடுங்க... வீட்டுக்குள்ளயே அட காக்காம" எனக் கத்தினார்.

அவர்கள் காபி மட்டும் குடித்திருந்தார்கள்... சாப்பிட மறுத்து விட்டார்கள்... ரவி பொறுமை இழந்து உக்காந்திருந்தான். பசி பொறுக்காதவன் அவன்... காபி குடித்தும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து நடுவில் நிலாவைப் போல பொட்டு வைத்து, சட்டையில்லாத கரிய உடம்பின் மேல் ஒரு குத்தாலம் துண்டு போட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிரே வந்தமர்ந்தார்.

"சீக்கிரம் வந்தீக, இல்லேன்னா நாங்கிளம்பி வெளிய போயிருப்பேன், சீனமங்கலம் பெரியய்யா வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருந்தேன். வண்டி அனுப்புறேன்னு சொன்னாக... இப்ப வந்துரும்.. ம்... சொல்லுங்க... என்ன பெரச்சன" என்றார்.

"பொட்டப்புள்ள... கல்யாணம் வச்சிருக்கேன்... இப்ப பேய்க் கோளாறாட்டம் ஒரு மாரிக்கி உடம்பத் திருகிக்கிட்டு முழிக்கிது... எம்புட்டோ வயித்தியம் பாத்தும் சரிவரல... குறி, கோடாங்கின்னு எல்லாம் பாத்துட்டோம்... எல்லாத்தயும் பொயிட்டு வான்னு சொல்லுது. தங்கச்சி மவனுக்குத்தான் கட்டுறோமுன்னாலும் அவங்க மனசுல தப்பாத் தோனிறக்கூடாதுல்ல... நாளக்கி வாழப்போற எடத்துலயும் இப்படி இருந்தா... அதோட வாழ்க்க போயிருமே... மணிக்கிட்ட விபரம் சொன்னப்போ அதுதான் உங்களச் சொன்னுச்சு... நீங்கதான் எப்படியாச்சும் புள்ளக்கி குணமாக்கி விடோணும்... உங்கள நம்பித்தான் இம்புட்டுத்தூரம் வந்திருக்கோம்... புள்ளய கூட்டியாரச் சொன்னா.... நாள போக நாளான்னக்கி செவ்வாக்கெழம அப்ப கூட்டியாரோம்.... இல்லே நீங்க வர்றதுன்னா... என்ன வாங்கணும்ன்னு சொல்லிட்டிங்கன்னா வாங்கி வச்சிருவேன்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சாமியய்யா.

"ம்... எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டிட்டீக... ம்.... செரி... புள்ளக்கி என்ன வயசாவுது?"

"இந்த அப்பிய வந்தா இருவது முடியுது..."

"ம்... கலியாணத்துல புள்ளக்கி சம்மதம்தானே?"

"அதுக்குப் பிடிச்சதாலதானே தங்கச்சி மவனுக்கு கொடுக்கிறேன்..."

"ம்... எத்தன நாளாயிருக்கு?"

"நெருக்கி ஒரு மாசமா அப்புடித்தானிருக்கு"

"ம்... குறி, கோடாரியெல்லாம் கேக்கலயாக்கும்"

"ஆமா"

"தீட்டுப் போறதுல சமீபமா பெரச்சின எதுவுமிருக்கா?"

"ம்... தீட்டு நிக்காமப் போவுது"

"அதுலதானே அவுக வாசம் செய்வாக விடமாட்டாக... விட்டுப் போகணுமின்னா சொத்தெழுதிக் கொடுன்னு கேப்பாக"

"நீங்கதான் எப்படியாச்சும்..."

"ம்... கருப்பனுக்கிட்ட வந்துட்டியல்ல கவலய விடுங்க... இனி அவன் பாத்துப்பான்... உங்க புள்ளக்கி ஒண்ணும் ஆவாது"

"ம்... புள்ளய பாக்கச் சகிக்கல..." கண்கலங்கினார் சாமியய்யா.

"கலங்காதிய... கருப்பனுக்கு முன்னால கலங்கி நிக்கலாமா.... ம்ம்ம்.... ஆத்தா அந்த விபூதித் தட்ட இங்க கொடு" கத்தினார்.

விபூதித்தட்டு வந்ததும் அதிலிருந்த சூடத்தை தட்டின் நடுவே பத்த வைத்துத் தன் முன்னே வைத்து "படியிறங்கி வாடா பதினெட்டாம் படிக்கருப்பா... பாதை மறிச்சி வாடா பாண்டி முனியா... எங்குரல் கேக்கலையோ ஏழுருக் கருப்பா... மாத்தில் ஆடி வாடா மாரநாட்டுக் கருப்பா... பரியேறி வாடா பரியமயக் கருப்பா..." அப்படின்னு சத்தமாகச் சொல்லியபடி கண் மூடி ஊரில் இருக்கும் கருப்பர்களையெல்லாம் அழைக்க ஆரம்பித்தார்.

அவர் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.... தலையைத் தலையை ஆட்டினார்....

திடீரெனச் சத்தமாக "அப்பா... தவிச்சி நிக்காதேப்பா... எங்கிட்ட வந்துட்டயில்ல... கவலயெதுக்கு... அல்பாயுசுல மாண்ட கன்னி ஒருத்தி புடிச்சிருக்கா... கல்யாணக் கனவோட போனவ கனவ நெற வேத்த உம்புள்ள உடம்புல ஏறியிருக்கா... எறங்க மறுப்பா... அவளுக்குத் துணையா நாலஞ்சி சேந்திருக்கு... முனியும் எடப்படுறான்... ஒண்ணுமில்ல உம்மவளுக்கு... நாம் பாத்துக்கிறேன்... போ" என்றவர் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

விபூதித் தட்டில் அதுவரை எரிந்த சூடம் அணைந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் சொம்புத் தண்ணீரோடு ஓடி வந்து அவர் முன் நீட்டினார். தண்ணியை வாங்கிக் கொஞ்சம் குடித்து விட்டு எழுந்து முகங்கழுவினார். துண்டால் துடைத்தபடி மீண்டும் அவர்களுக்கு முன்னே அமர்ந்தார்.

"நான் இங்க பெரும்பாலும் சாமி அழக்கிறதில்ல, அழச்சா அன்னக்கி முழுவதும் உடம்பு வலியிருக்கும். வேற வேல பாக்க முடியாது, செவ்வா வெள்ளி மட்டுந்தான் பாக்குறது, மணி சொல்லி வந்திருக்கீக, அதான் அழச்சேன், கல்யாணம் நிச்சயமாயி நின்னு போனதால மாண்ட ஒருத்தியும் மரணத்தைத் தானே தேடிக்கிட்ட சிலதுகளும் சேந்து புடிச்சிருக்குக, முனியும் எடப்பட்டிருக்கான், பயமில்ல, நாஞ் சொல்றத வாங்கிக்கிட்டு வெள்ளிக்கெழம புள்ளயக் கூட்டியாங்க, பார்த்து முடிச்சி விட்டுடலாம், கவலப்படாதீக, எல்லாஞ் செரியாகும், கருப்பன மீறுன காரியம் என்ன இருக்குங்கிறேன்" என்றார்.

"ம்... கருப்பன்தான் சரியாக்கணும்... எம்புட்டுச் செலவானாலும் பரவாயில்ல... புள்ளயச் சரியாக்கி விட்டுறணும்"

"கவலயே வேணாம்... வெள்ளிக்கெழம உங்க மகளா வருவா பாருங்க" என்றார்.

"ஆத்தா அந்த பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு வா" எனச் சத்தமாய் சொல்லி, கொண்டு வந்து கொடுத்த பேப்பரில் எழுதி நீட்டினார். எழுந்து வாங்கிய சாமியய்யா, "இப்ப எம்புட்டுன்னு சொன்னீங்கன்னா" என இழுத்தார்.

"அதான் வெள்ளிக்கிழம வருவீங்கள்ல அப்ப வாங்கிக்கிறேன் போயிட்டு வாங்க"

"மொத மொதல்ல பாத்துட்டு சும்மா போவக்கூடாது"

"அப்புடியா... செரி... உங்க மனசுக்குத் தோணுனத கருப்பனோட விபூதித் தட்டுல வச்சிச்ட்டுப் போங்க." என்றார்.

இருநூற்றி ஒரு ரூபாயை வைத்து விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கேட்டைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த மூன்று நாய்களும்... குரைக்கவில்லை. வாசலுக்கு வந்தவுடன் ரவி அந்தச் சிட்டையை வாங்கிப் பார்த்தான்.  

"என்ன இம்புட்டு எழுதியிருக்காரு... இதெல்லாமே வேணுமா? இதுவரக்கிம் செலவழிச்சதை மொத்தமா இவருக்கிட்ட கொடுக்கணும் போல" என்றான்.

"சரியாக்கணுமின்னா சும்மாயில்ல... பெரியகருப்பத்தேவர் பெரிய ஆளு... மணி அப்பவே சொன்னாப்புல... வெளியிலயிருந்து வந்து கூட்டிப் போயிருவாகளாம். அவுகல்லாம் கணக்குப் பாக்காமக் கொடுப்பாகளாம் அதான் தோட்டந்தொறவுன்னு வசதியாயிருக்காரு. செவ்வாவெள்ளி கூட இங்கேயிருக்கேன்னு சொன்னாத்தான் இருப்பாராம். வண்டியெடு... புள்ளக்கிச் சரியானப் போதும்... இதுவரக்கிம் எம்புட்டோ செலவழிச்சிட்டோம்... இதயுஞ்செய்வோம்... இவரு சரியாக்குவாருன்னு எனக்கு நம்பிக்கயிருக்கு" என்றார்.

ரவி வண்டியை எடுத்தான். தேவரைக் கூட்டிப்போக சீனமங்கலத்துக் கார் வந்து நின்றது.

"என்னப்பு ஆளிருந்தாரா?" பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு.

"ம்... இருந்தாரு"

"உங்க நல்ல நேரம் இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி, முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு முடியும்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு, டீயா, காபியா?"

"டீக்காபி வேணாம்... சர்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க... பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க"

"என்ன சுப்பு பெரியகருப்பத்தேவர் பொயிட்டாரா?" என்றபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை, கழுத்தில் பாசி மாலைகள், காவி வேஷ்டி, சட்டையில்லாத கரிய உடம்பு.

"இப்பத்தான் வண்டி போயிருக்கு இன்னக்கி எங்கயோ சாமி அவருக்கு அள்ளிக் கொடுக்குது ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம் காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றே, அப்புறம் கருப்பன் எப்படி வருவான்"

"எனக்குள்ள வரவேண்டான்னுதான் சரக்கடிக்கிறேன் சுருக்குன்னு ஒரு டீப்போடு" என்றபடி சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்தான் சுந்தரம்.

"பெரியவரே நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு. குடிச்சே சாமியை விரட்டுறாரு ஆனா அது போவாம இவரையே சுத்துது உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்"

"அதெல்லாம் வேணாம்பா பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே, சர்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா" கோபமானார் சாமியய்யா.

"என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே விடுங்க இந்தா சூப்பராச் சர்பத்துப் போட்டுத் தாரேன்"

ரவி டீ வாங்கிக் குடித்தான். சுந்தரமும் டீயுடன் எதிரே உக்கார்ந்து சாமியய்யாவையே பார்த்தான். ஜில்லுன்னு சர்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு.

"க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... ஹக்கஹ்க்கா" சிரித்தான்.

சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார். டீயை வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்த்தான். கண்கள் மேலும் சிவப்பேற, அப்படியே அமர்ந்திருந்தான்.

"மொறக்கிறாருடா., என்னயவே மொறக்கிறாரு எம்பார்வைக்கு ஊரே பயப்படும் இவரு என்னப் பயமுறுத்துறாராம் ஹா..ஹா... கெக்கெக்கே..."

சாமியய்யா தலையைக் குனிந்து கொண்டார்.

"பொட்டப்புள்ள உடம்ப முறுக்கிக்கிட்டுக் கெடக்காளா" அதட்டலாய்க் கேட்டான்.

சாமியய்யா அவனை ஏறிட்டுப் பார்த்தார்... ரவி காலியான டீக்கிளாஸை வைத்துவிட்டு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

"மாண்ட கன்னியோட மத்ததுகளும் சேர, முனியும் முன்ன நிக்கிறானேய்யா" பல்லைக் கடித்தான்.

"புள்ளய கூட்டிப் போறேன்னு நிக்கிறாளேய்யா. விடுவேனா எம்புள்ளய விடுவேனா" பல்லை நறநறவெனக் கடித்தான்.

அவரு சொன்னதையே இந்தத் தண்ணி வண்டியும் சொல்லுது சொல்லிட்டு காசு கொடுன்னு மல்லுக்கு நிக்கும். கொடுத்தா தண்ணியடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து கெடக்கும் என்று நினைத்தவர் சுப்புவிடம் காசு கொடுத்துவிட்டு "ரவி வண்டிய எடு" என்றார்.

"ஏய் உம்புள்ளக்கி ஒண்ணுமில்லப்பா, உன்னோட ஊருக்குப் போற வழியில பொய்யக்கர முனியனுக்கு தேங்காய் ஒடச்சிட்டுப் போ. புள்ள சரியாவா புடிச்சது ஓடிரும் சரியானதும் முனியனுக்கு அந்த புள்ளய வச்சி பொங்க வைக்கச் சொல்லு... போ திரும்பிப் பாக்காதே"

"ரவி வண்டிய எடுன்னேன். குடிச்சிட்டு உளறுறான் அதப்பாத்துக்கிட்டு. நாம தேவரு சொன்னபடி சாமானோடு வெள்ளிக்கெழம வருவோம்"

"சொன்னது புரியல, என்னோட வாக்க நீ மதிக்கலயில்ல? கருப்பன் பொய் சொல்றான்னு நெனக்கிறேயில்ல? போ போற வழியில காட வலமிருந்து எடம் போவும். போ... அப்ப நம்புவே இந்தக் கருப்பன, அப்ப நம்புவேடா இந்தக் கருப்பன" சப்தமாகச் சிரித்தான் சிரித்தான்... சிரித்துக் கொண்டே இருந்தான்.

ரவி வண்டியை எடுத்தான், சாமியய்யா அவனை திட்டிக் கொண்டே வண்டியேறினார்.

"அந்தாளு சொல்ற மாதிரி ஒரு தேங்காய் வாங்கி ஒடச்சிப் பாக்கலாமே, அவராத்தானே சொல்றாரு சரியான நல்லதுதானே"

"போடா தண்ணியப் போட்டுட்டு உளறுறான் அதத் தெய்வ வாக்குன்னு சொல்லிக்கிட்டு"

"எதுக்கு இப்பக் கடுப்பாகுறிக"

"செரி அப்பா ஒண்ணுஞ் சொல்லல பேசாமப் போ"

"போய்க்கிட்டுத்தான் இருக்கோம்"

வண்டி வேகமாய்ப் போனது இருவரும் பேசவில்லை.

"இதுவரக்கிம் தங்கச்சிக்கிப் பாத்தவங்கட்டயெல்லாம் நாமளாத்தான் வெவரஞ் சொன்னோம். அப்புறந்தான் அவங்க இது இப்படி இது அப்புடின்னு சொல்ல ஆரம்பிச்சாக... பணந்தான் செலவாச்சு... பலனில்ல ஏ இப்பப் போயிப் பாத்த சாமியாடிக்கிட்ட கூட நாமதானே வெவரம் சொன்னோம். அவராவா இதுக்குத்தானே வந்திருக்கேன்னு கேட்டாரு? இல்லயில்ல?"

"அவரு கேக்கல ஆனா சரியாச் சொன்னாருல்ல? இந்தக் குடிகாரன் சொன்னததானே அவரும் சொன்னாரு"

"அதேதான்... இவங்க மட்டுமில்ல இதுவர பாத்த எல்லாருமே இதத்தானே சொன்னாக... சாமியாடி பெரியகருப்பத்தேவருக்கிட்ட நாம சொன்னோம். தீர்வு சொன்னாரு. இந்தாளு அவரே இதுதானே உன்னோட பெரச்சினயின்னு சொல்லி அதுக்குத் தீர்வும் சொன்னாரு. நாம எதாச்சும் கேட்டோமா? யோசிங்க. அந்தாளுக் குடிச்சிருக்கதால அவரு சொன்ன சொல்லு சரியில்லன்னு எப்புடி முடிவு பண்ணுவீங்க."

சாமியய்யா யோசிக்க ஆரம்பித்தார். பொட்டக்காட்டில் மொட்டை வெயிலில் வண்டி போய்க் கொண்டிருக்க...

காடை ஒன்று வலமிருந்து இடம் போனது.

-'பரிவை' சே.குமார்.