மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

எதிர்சேவை விமர்சனங்கள் : சுடர்விழி & பாரதி

திர்சேவை... சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. இந்தப் 12 கதைகளுமே நம்மைச் சுற்றியுள்ள யாரேனும் ஒருவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அல்லது நாம் மறந்து போன நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
ஒவ்வொரு கதையிலும் கதை மாந்தர்களையும் அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் இப்புத்தகத்தின் ஆசிரியர் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்த சிறப்பம்சம் தான் கதையோடு சேர்த்து நம்மையும் பயணிக்க வைக்கிறது. 'தீபாவளிக் கனவு', 'ஜீவ நதி' இரண்டுமே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இருவேறு குடும்பங்களில் நடக்கும் கதைகள். அந்த இரு கதையும் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு மனிதர்களின் வலியைச் சொல்லி இருக்கிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 'எதிர்சேவை' என்ற வார்த்தை மிகவும் பரிச்சயமானது, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளில் 'எதிர் சேவை' முக்கியமானது. அந்த நிகழ்வை ஒட்டி ஒரு அழகான காதல் கதையை நமக்கு தந்திருக்கிறார். 'என்னுயிர் நீதானே' - காமம் கலந்த காதல் கதையை அழகாகச் சொல்லி, நான் எல்லா தளங்களிலும் பயணிக்க கூடியவன் என்பதை ஆசிரியர் இக்கதையின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
மனத்தேடல் - தன் முன்னாள் காதலியை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் காதலன், சாத்தியமில்லாத சாத்தியப்படுத்த பட்ட கதை. எப்போதும் இது போன்ற கதைகள் தான் கதாசிரியரின் திறமையை எடுத்துரைக்கும். இக்கதையை ஆசிரியர் எப்படிக் கொண்டு போகிறார் எப்படி முடிக்க போகிறார் என்ற ஆவல் வாசகரின் மனதில் நிச்சயம் தோன்றும். வெள்ளாடும் செம்மறி ஆடும் - வட்டார வழக்கை கதை முழுதும் ஒரு வார்த்தை கூட மாறாமல் சரியாகக் கையாண்டிருக்கிறார். இன்னும் சில வருடங்களில் மனிதர்களின் இந்த யதார்த்த பேச்செல்லாம் மாறிப் போயிருக்கும். உங்களைப் போன்றோர் எழுதும் கதைகளில் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் இதுபோன்ற வட்டாரச் சொற்கள். எவ்வளவுதான் உலகமும் விஞ்ஞானமும் வளர்ந்து விட்டாலும் மனிதர்கள் அனைவரும் அன்பிற்கும் பாசத்திற்கும் அடிமையானவர்கள் தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டவருக்கு இந்தக் கதைகள் அழுகாச்சி கதைகள் இல்லை. ஒவ்வொரு கதையாக இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த வாசகர்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வைக்கிறேன். அட்டைப்படம் அருமை, கள்ளழகர், மீனாட்சி அம்மன் திருக்கோயில் - எதிர்சேவை சிறப்பான தரிசனம். ஆசிரியர் - பரிவை சே.குமார் கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடு பேரன்பும் பெருமகிழ்வும் நன்றி சுடர்விழி.
***
திர் சேவை படிச்சு முடிச்சாச்சு அண்ணன், கொஞ்சம் தாமதம் தான் இருந்தாலும் இப்போ சொல்லிடுறேன், நம்ம வாழ்வில் பேசிக்குற மாதிரி ரொம்ப எளிமையான எழுத்துக்கள்...நல்லா இருந்துச்சு அண்ணன்.
எல்லாமே மகிழ்ச்சியாகவும், சோகமாகவும் இல்லை, நல்ல கலவை...

இன்னும் நிறைய எழுதுங்கள் அண்ணன், எனக்கு இன்னும் விரிவாக சொல்ல தெரியல, ஆனால் உங்கள் உழைப்புக்கு வாழ்த்து தெரிவிக்க ஆசை மனதார...வாழ்த்துக்கள் அண்ணன். 

உங்க குடும்பத்திற்கும், அ
வங்க support இல்லாம இதுலாம் சாத்தியம் இல்லை...
பேரன்பும் பெருமகிழ்வும்
நன்றி பாரதி.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

படித்து மகிழ்ந்து பராட்டி இருக்கிறார்கள். வாழ்த்துகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பாராட்டும் விமர்சனங்கள் வருவது என்பது ம்க மிக மகிழ்வான ஒன்றுதான்.வாழ்த்துகள் குமார்.

கீதா

Yarlpavanan சொன்னது…

தங்கள் நூலுக்கான விமர்சனங்கள் தங்களை மேலும் வளப்படுத்தும் என நம்புகிறேன்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்