மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : கலக்கல் ட்ரீம்ஸில் நாகர்

சில கதைகள் மனசுக்கு நெருக்கமாய் அமைந்து விடும்... அது நாம் எழுதியதாக இருந்தாலும் அல்லது வாசித்ததாக இருந்தாலும்... அப்படித்தான் எனக்கு சமீபத்தில் வாசித்தவற்றில் பல கதைகள் நெருக்கமாய் அமைந்தன. சிலவற்றைப் பற்றி பகிர்ந்தும் இருந்தேன்... அப்படித்தான் எனது பனைமரம் சிறுகதை இன்னும் இன்னுமாய் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. புகழ் என்னும் மமதை எல்லாம் எதிலும் இல்லை என்றாலும் என் எழுத்து குறித்து சிலாகித்த எழுத்துக்களை கதைக்கான இணைப்புடன் பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்வாய்த்தான் இருக்கிறது.

பனைமரம் கதை வெட்டப்பட்டும் பனைமரத்தில் ஆரம்பித்து அது தரையில் உயிரற்று விழுவதற்குள் அதன் வாழ்வியலைப் பேசிச் செல்லும்... எங்க ஊர்ப் பேச்சு வழக்கு அதற்குச் சிறப்பாய் அமைந்து விட்டது. பெரும்பாலான பேச்சு வழக்கில் கூட கதைசொல்லியாய் சட்டென மாறும் எல்லாரும் பேசு வழக்கிற்குள் சென்று விடுவேன். இதைத்தான் நெருடா எனக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்தார். கதை சொல்லியும் அதே பேச்சு வழக்கில் பேசியிருப்பது மகிழ்வென... நெஞ்சக்கரையும் குலசாமியும் வீடும் இணையும் வீராப்பும் இப்படி முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் எழுதப்பட்ட கதைகளே.

புதனன்று சகோதரரும் எழுத்தாளருமான தெரிசை சிவா, தனது முகநூல் பக்கத்தில் பனைமரம் குறித்து பகிர்ந்திருந்த கருத்து, 'சுடுகஞ்சியை பனை ஓலை மட்டையிலிட்டு உறிஞ்சி குடிக்கும்போது நெற்றியிலும் மூக்கிலும் பொட்டித் தெறிக்கும் வியர்வையைப் போல பல பால்ய விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது இந்தப் பனமரக்கதை... அருமை.'
நன்றி - தெரிசை சிவா.

இனி அடுத்தது... நேற்று கலக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் பகிரப்பட்ட கதை குறித்து சகோதரர் தசரதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தது. நாகர் கதை கூட தொலைந்து போன சிறு தெய்வங்கள் குறித்ததுதான். சின்னதாய் ஒரு கதை ஒன்று... கொஞ்சமாய் காமமும் கலந்து வருவதால் சிலர் இப்படி எழுதலாமா என்று கேட்ட கதைதான்... கதை முழுக்க காமமே நிறைந்திருக்க எழுதும் எழுத்துக்கள் எல்லாம் கொண்டாடப்படும் காலம் இது. கிராமத்துக் கதைக்களம் என்றாலும் அங்கு ஊடாடிய சிறுசிறு தீண்டல்களைச் சேர்ப்பதால் கதையின் தரம் குறையாது என்பதற்கு நாகருக்குக் கிடைத்திருக்கும் பாராட்டுக்களே சான்று. இங்கே தசரதன் எழுதியிருந்தது உங்களுக்காக.
ஆடி மாதம் வந்தாவே கொண்டாட்டாம் தான். ஊர் திருவிழா என்பதெல்லாம் தாண்டி வெகுதூரம் இருக்கும் கல்வழிபாட்டுக்கு போவோம்.
காலையில் புது மூங்கில் கூடையில் பூஜைக்கென பொருட்களை பூ, பழம், கற்பூரம், மஞ்சள், குங்குமம் அடுக்கி, பொங்கல் வைக்க அரிசி, வெல்லமெல்லாம் அடுக்கி வைத்து காத்திருப்போம். பம்பை கட்டி, சிலம்பாட்டம் ஆடி 10கிமீ இருக்கும் வழிப்பாட்டு இடத்திற்கு நடந்தே போவோம். வழியெங்கும் சிலம்பாட்டத்தோடு சாட்டை வைத்து மூன்று பேர் குறி சொல்லியாக ஆடி போவோம்.
காலையில் ஆரம்பிக்கும் ஊர்வலம் ஒவ்வொரு வீடாக பம்பை அடித்து, 10கிமீ நடந்து செல்வதற்குள் மாலை 3ஆகி விடும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே என்பதால் பங்காளி வகையறாகளோடு, ஊர் ஜனமும் கூடி நிற்கும். கல் வழிபாடுக்கென தயார் செய்வதிலும், அலங்கரிக்கவும் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகி விடும். கோவில் கிடையாது. கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் இருக்கும் மூன்று கற்கள் தான் சாமி. பக்கத்தில் நாகர் சிலை இருக்கும் அவ்வளவு தான். மெயின் பூஜைக்கு முன்பு சாமியாடிகள் குறி சொல்வார்கள். வருடத்திற்கான மழை குறிப்புகள், புத்திர பாக்கியம் வேண்டுவோரென அரை மணி நேரம் திருவிழா உச்சஸ்தாயில் களை கட்டும். சரியாக பூஜை நேரத்தில் வருடம் தப்பாமல் மழை பெய்யும். எந்த ஊருக்கும் பிழைக்க போன ஜனமும் வருடத்திற்கு ஒருமுறை அங்கே கூடி நிற்கும்.
சென்னைக்கு வந்த புதியதில் திருவிழாவுக்கு ஊருக்கு போக முடியாத காலங்களில் பெரியபாளையம் போய் இருக்கிறேன். மரத்தடியில் சிரசு மட்டுமே இருக்கும் இடத்தில் பூஜை செய்ய மக்கள் வேப்பிலைக்கட்டி வந்திருப்பார்கள். நேரம் காலம் எல்லாம் கிடையாது. விடிய விடிய பூஜை நடக்கும். அப்போது கோவில் எல்லாம் கிடையாது. வெறும் சிரசு மட்டும் தான் இருக்கும். தற்போது கோவில் கட்டி அறநிலையத்துறை கீழ் கோவிலை கொண்டு வந்துவிட்டார்கள். மரபு வழிபாடு முடிந்து பணம் காய்க்கும் இடமாக மாறிவிட்டது பெரியபாளையத்தம்மன் கோவிலும்.
நிறைய வருடங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு மீண்டும் ஊரில் திருவிழா களைகட்டி இருந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறம் மண்ணில் பெரியாண்டவர் செய்து வழிபாடு நடந்தது. இந்த ஆண்டு கொரொனோ பிரச்சனையில் திருவிழா நடக்குமா என்பது தெரியாது.
அதிகாலையில் வாசித்த சிறுகதையில் அனைத்து கிராமிய நினைவுகளையும் கிளறி விட்டு இருக்கிறார் நித்யா குமார்...
கதையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நாகர் கதை ரொம்ப நல்லாருக்கு குமார். வாழ்த்துகள்

துளசிதரன்

கீதா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நாகர் கதை நன்றாக இருக்கிறது குமார். பாராட்டுகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@ துளசிதரன் அண்ணா /கீதா அக்கா...
@ ஜெயக்குமார் ஐயா...
@ ஸ்ரீராம் அண்ணா...
@ தனபாலன் அண்ணா...
@ வெங்கட் நாகராஜ் அண்ணா...

தங்கள் அனைவருக்கும் நன்றி...