மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சினிமா : ஹோம் (மலையாளம்)

 ஹோம்...

சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்கிற மாதிரி என்ன இருக்கு... அரைப்பக்கத்தில் எழுதிடலாமே உன்னுடைய அறுபது வருட வாழ்க்கையை...' என்ற எள்ளல் வார்த்தை தேவைப்படுகிறது.

சனி, 14 ஆகஸ்ட், 2021

எதிர்சேவை - விமர்சனக் கூட்டம்

சில நிகழ்வுகள் நமக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும், அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்றைய மாலையை மகிழ்வான மாலையாக, மறக்க முடியாத மாலையாக மாற்றிய 'எதிர்சேவை' விமர்சனக் கூட்டம்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

மன்றில் தேர்வு : நிர்மலாவின் முடிவு (சிறுகதை)

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் திரு. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் 'மன்றில் சிறுகதைப் பட்டறை' ஒன்றை நடத்துகிறார். அதில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஒரு கரு கொடுக்கப்படும். அதற்கு புதன்கிழமைக்குள் எழுதப்படும் கதைகளில் இருந்து ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறியதாய் ஒரு பரிசுத் தொகையும் அவர்கள் கொண்டு வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பில் அக்கதைக்கு ஒரு இடமும் வழங்கப்படும். கருவுக்கு எழுதுதல் என்பது சற்று கடினமே என்பதால் நான் தொடர்ந்து எழுதுவதில்லை. முதல் முறை எழுதிய போது பரிசுக்குத் தேர்வாகவில்லை என்றாலும் நல்ல கதை என அவர் போன் பண்ணிப் பேசினார். அதன்பின் இடையில் இருமுறை எழுதிப் பார்த்தேன் ஒரு பயிற்சிக்காக.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

மீண்டும் துளிர்த்த நட்பு

ல்லூரி நட்பென்பது அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியதல்ல... அது புரிதலுடன் கூடிய நட்பென்பதால் இப்போது வரை அந்த மூன்றாண்டுகளில் துறைக்குள், துறை தாண்டிய நட்பில் என்னென்ன செய்தோம் என்பதும் யார்யார் நம் நண்பர்களாய் இருந்தார்கள் என்பதும் நியாபகத்தில் உண்டு.