மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 5

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...

***

ன்று அன்னையர் தினமாம், இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாட இது ஒன்றும் மற்ற தினங்களைப் போல இல்லை என்பதால் நாம் தினம் தினம் கொண்டாட வேண்டிய ஆத்மா அது என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு எனக்கும் அம்மாவுக்குமான நினைவுகளில் மறக்க இயலாத நினைவுகளை இங்கு பகிரலாமென நினைக்கிறேன்.

நாங்க கிராமத்து விவசாயக் குடும்பம்தான், அதுவும் அதிக வசதிகளற்ற சாதாரணக் குடும்பம்தான். குடும்ப வறுமையே நன்றாகப் படித்தும் எங்க பெரியக்கா, பெரியண்ணனை எல்லாம் பனிரெண்டாவதுக்குப் பின் படிக்க வைக்க முடியாமல் போனது என்பதே உண்மை என்றாலும் எங்க அண்ணன் பத்தாவது படிக்கும் போது நாங்க சில வருடம் லீசுக்கு எடுத்துப் பார்த்த தோட்டத்துக் காய்கறிகளை சைக்கிளில் கொண்டு போய் விற்றுவிட்டு வந்து பள்ளிக்கு கிளம்பிப் போவார். பனிரெண்டாவதில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் குடும்பச் சூழலால் வேலைக்குப் போனார். அப்படியான குடும்பத்தில் நாங்கள்ல்லாம் படிக்க நினைச்சும் படிக்கலை நீங்களாச்சும் படிக்கணும் என அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் நானும் என் தம்பியும் கல்லூரி வாசலை மிதித்தோம்.
விவசாயம் என்பது மழையை நம்பித்தான் இருக்கும், பயிர்களைப் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும். இந்த வருடம் நல்லா விளையும் என்று நினைத்திருந்தால் சரியாக பால் பிடிக்கும் சமயத்தில் தண்ணீர் இல்லாது, மழை பெய்யாது காய்ந்து போய் சாவி ஆகிவிடும். அந்த வருடம் ரேசன் அரிசிதான் சாப்பாட்டுக்கு என்றாகிப் போகும். அப்பா அப்போது திருச்சிப் பக்கம் வேலை பார்த்தார், வீட்டில் அம்மா மட்டும்தான். எங்கள் படிப்பு பள்ளிக்கூடங்களில் பயணிக்க எங்க அம்மாவே காரணம்.
நான் எட்டாவது முடித்ததும் வேறு பள்ளி போக வேண்டும். தே பிரித்தோவில் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் ஒன்பதாவது சேர முடியும். தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றதும் , எங்க ஊரில் இருந்து குறுக்குப் பாதையில் பயணித்தாலே மூணு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் பள்ளிக்கு அவனைக் கூட்டிப் போய் சேர்த்து விட்டு வாங்க எனச் சில உறவுகளிடம் அம்மா கேட்டும் அவர்கள் வேலை இருக்கு எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்ள, அம்மாவே என்னைக் குறுக்குப் பாதையில் நடந்தே கூட்டிக் கொண்டு போய் சேர்த்து விட்டார்.
அதேபோல்தான் கல்லூரியில் சேரும் போதும் நன்பர்களுடன் போய் விண்ணப்பம் வாங்கிப் போட்டு, இடம் கிடைத்ததும் அம்மாதான் கூட்டிப் போய் சேர்த்துவிட்டார்.
பள்ளியில் படிக்கும் போது வீட்டில் மின்சாரமெல்லாம் கிடையாது. அரிக்கேன் விளக்குதான். அதைச் சுற்றி நாங்க மூணு பேர் - நான், அக்கா, தம்பி - அமர்ந்துதான் படிப்போம். மின்சாரம் வந்தபோது எங்க அக்கா, அப்பாவுடன் திருச்சிக்குப் போய் அங்கு படித்தார், நானும் தம்பியும்தான் வீட்டில்.
வீட்டில் நான் படிக்கலைன்னாலும் அவன் பாஸாயிருவான் என்று நம்பிக்கையோடு சொல்லும் அம்மா, தம்பியைப் புத்தகம் எடு, படி எனச் சொல்லிக் கொண்டே இருப்பார். அதென்ன அவனை மட்டும் படிக்கச் சொல்ல மாட்டேங்கிறே என அவன் மல்லுக்கு நிற்பதும், புத்தகத்துக்கு உள்ளே க்ரைம் நாவலை வைத்து வாசிப்பதும் தனிக்கதை.
எங்க வீட்டில் அம்மாவுடன் அதிகம் இருந்தது நானாகத்தான் இருக்கும். அண்ணனெல்லாம் சின்ன வயதிலேயே வேலைக்குப் போய்ட்டாங்க. தம்பி கூட கல்லூரி முடித்ததுடன் சிங்கப்பூர் பக்கம் போயிட்டான். நான் கணிப்பொறி மையம் வைத்திருந்ததாலும் கல்லூரியில் வேலை பார்த்ததாலும் அம்மாவுடந்தான் இருந்தேன். நானும் அம்மாவும் மட்டும்தான் வீட்டில்.
மேற்படிப்பு படிக்கும் போது எங்க ஊரில் இருந்து தேவகோட்டைக்குச் சைக்கிளில் வந்து, அங்கிருந்து காரைக்குடிக்குப் பேருந்தில் பயணித்து, பெரியார் சிலை அருகில் இறங்கினால் அடுத்த நிமிடமே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் புதுக்கோட்டை என்.என்.எல்லில் ஏறினால்தான் கல்லூரிக்குச் சரியான நேரத்தில் போக முடியும் என்பதால் அதிகாலை எனக்கு முன் எழுந்து காலை, மதியம் என இரண்டு வேலைக்கு சமையல் செய்து கொடுத்து அனுப்புவார்.
ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை, பதினென்றாவது படிக்கும் போது அம்மாவைச் சைக்கிளில் சந்தைக்கு கூட்டிப் போக ஆரம்பித்தவன் கல்லூரி முடிக்கும் வரை வாராவாரம் கூட்டிப்போவேன். அப்போதெல்லாம் அம்மாவுடன் போகும் போது எதிரே வரும் பசங்க, கை காண்பித்துச் செல்ல, நாம் சிலருக்கு வணக்கம் சொல்ல, இதையெல்லாம் கவனிக்கும் அம்மா வீட்டில் வந்து தம்பி இங்க யார்க்கிட்டயும் பேசலைன்னாலும் வெளியில நிறையப் பேரப் பழகித்தான் வச்சிருக்கு, எதிர வர்றவனெல்லாம் கையைத் தூக்கிட்டுத்தான் போறானுங்க. பெரிய ஆளுகளெல்லாம் பார்த்து சிரிச்சித் தலையாட்டுறாக, இதுக்கு கடைசி வரைக்கும் பழகின ஆளுக உதவிருவாங்கன்னு சொல்லும். அப்படித்தான் இப்போது வரை நட்புக்களால் நான் உயர்ந்து கொண்டே இருக்கிறேன்.
அம்மாவோட சந்தைக்குப் போனதால காய் எப்படி வாங்குவது..? எந்தக் கடையில் நல்லாக் கொடுப்பாங்க..? என்ற விபரமெல்லாம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததால் ஒரு கட்டத்தில் அவன் போனாலே நல்லதாப் பாத்து வாங்கிட்டு வந்திருவான் என்று என்னை மட்டும் போய் வாங்கி வரச்சொல்லிவிடுவார். மீன் முதற்கொண்டு வாங்கி வந்துவிடுவேன். அதுதான் இப்போது வரை தொடர்கிறது. இப்ப ஊருக்குப் போனாலும் சந்தைக்குப் போனால் கருவாட்டுக் கடைக்காரர் எல்லாம் 'அண்ணே... எப்பண்ணே வந்தே...?' என அன்போடு விசாரிப்பார்.
எங்கண்ணன் சிரித்துக் கொண்டே 'அம்மா உனக்குத்தான் நிறையப் பண்ணியிருக்கு, அதனால் நீதான் பார்க்கணும்' என அடிக்கடி சொல்வார். தற்போது அப்பா அம்மா இருவரும் நல்ல நடைபொடையா இருந்தாலும் வயதானவர்களுக்கே உரித்தான உடல் நலப் பாதிப்புக்களில் சிக்கி இருக்கும் சூழலில் என் மனைவி மிகச் சிறப்பாகவே பார்த்துக் கொள்கிறார்.
அம்மாவுடன் இன்னும் நிறைய மறக்க முடியாத நினைவுகள் உண்டு.

-பரிவை சே.குமார்.

புதன், 17 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 4

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...

***

தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவில் எப்போதும் மாலை நிகழ்வில் குன்றக்கடி அடிகளார் அவர்கள் பேசுவது வழக்கம். காலை நிகழ்வில் இலக்கியவாதிகள் பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து பேசுவதுண்டு. அப்படி ஒருமுறை பேசுவதற்காக திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது அவர் மதுரையில் வேலையில்லாத ஒரு துறையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் அரசுத் தேர்வு எழுதும் பள்ளிக் குழந்தைகளுக்கு 'நீங்களும் சாதிக்கலாம்' என எழுதி, மேடைகளில் பேசிக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

செவ்வாய், 16 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 3

சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...

னிரெண்டாவது முடிக்கும் வரை எழுத்துப் பக்கம் போனதில்லை என்றாலும் நிறைய வாசிப்பதுண்டு. வாசிப்பு ஒரு போதையாய் இருந்த காலம் அது. நல்ல நாவல்கள் என்றால் விடுமுறை தினத்தில் மாடு மேய்க்கப் போகும் போது புத்தகத்தைக் கையில் கொண்டு போய் வாசிப்பதுண்டு.

ஞாயிறு, 14 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 2

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மயக்க இயலாத நினைவுகள்-2, எத்தனையோ நினைவுகளில் சிலவற்றை மட்டும் அங்கு பகிர்ந்திருக்கிறேன். அதையே இங்கும் பகிர்ந்து வைப்பதால் எப்போது வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்தானே.

சனி, 13 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் -1

ங்கப்பலகைகள் முகநூல் குழுமத்தில் மறக்க இயலாத நினைவுகளைப் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அங்கு எழுதியது இங்கும்.

வெள்ளி, 5 மே, 2023

மனசின் பக்கம் : வைகையில் அழகர் சில நினைவுகள்

ந்தக் கட்டுரையை இங்கு பதியும் நேரத்தில் பச்சைப் பட்டுடுத்தி - இப்போதெல்லாம் பச்சை மட்டும்தான் - கள்ளழகர் வைகையில் எழுந்தருளி, லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தாக் கோஷத்தை மகிழ்வாய் ஏற்று, மனநிறைவுடன் காட்சி கொடுத்திருக்கிறார்.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

சினிமா விமர்சனம் : பிரணய விலாசம் (மலையாளம் - 2023)


பிரணய விலாசம்-
'இது அனுவோட டைரி, வினோத்தோடதும்'

திருவிழா : வாழ்வியலும் வட்டார வழக்கும் - 'மண்ணின் மைந்தர்கள்' அழகுராஜா

'திருவிழா' - நாவல் குறித்துச் சகோதரர் 'மதுரை மண்ணின் மைந்தர்கள்' திரு. அழகுராஜா அவர்கள் எழுதிய விமர்சனப் பதிவு.

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

மனசு பேசுகிறது : சில கதைகள்

2022 கொடுத்த அடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாலும் மனசு என்னவோ இன்னமும் சோர்வாய்த்தான் இருக்கிறது. முன்பெல்லாம் தினமும் ஏதாவது எழுது எனச் சொன்ன மனசு இப்பல்லாம் என்னத்த எழுதி... எதாச்சும் படம் பார்க்கலாம், ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம், இல்லேன்னா கெடந்து தூங்கலாம் என்று சொல்ல ஆரம்பித்து அதையே செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

புத்தக விமர்சனம் : ALT + 2 (சிறுகதைகள்)

 ALT + 2

பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அண்ணனின் சிறுகதைத் தொகுப்பு.

மனசு பேசுகிறது : உலக புத்தக தினம் சில நினைவுகள்

லக புத்தக தினம்-

சின்ன வயது முதல் புத்தக வாசிப்பில் ஈடுபாடு இருக்கத்தான் செய்தது. வீட்டில் அம்மாவுக்காக ராணி வாங்குவார்கள் என்பதால் எங்கள் எல்லாருக்குமே வாசிப்பு என்பது ராணியில் இருந்துதான் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை யார் கடைக்குப் பால் வாங்கப் போனாலும் திரும்பி வரும்போது ராணியோடுதான் வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. சில வேளைகளில் ஏதாவதொரு காரணத்தால் வாங்காமல் வந்துவிட்டாலும் கூட, எப்பவும் வாங்கும் கருணாநிதி அண்ணன் கடையில் ஒரு ராணியை எடுத்து வைத்திருப்பார்கள்.

சனி, 22 ஏப்ரல், 2023

மனசின் பக்கம் : பத்துக் கன்னி தல 'வலி' தீவு

டந்த வியாழன் அன்று ஏதாவது படம் பார்க்கலாமாண்ணே என்று எனது அறைத் தம்பி கேட்டதும் சரின்னு இந்தப்படம், அந்தப்படம் என ஒவ்வொன்றாய் கேட்க, சிம்பு ரசிகரான அவரோ 'பத்து தல' பக்கமாய் நின்றார். சரின்னு படத்தைப் போட்டுப் பத்து நிமிசம் இருக்கும் நமக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பிச்சிருச்சு. ஏசி குளிருக்கும் அதுக்கும் இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிட்டேன்.  அவர் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

புதன், 19 ஏப்ரல், 2023

நிகழ்வுகள் : அமீரகத் தமிழகத்தின் தமிழ்புத்தாண்டு விழா

 'அமீரகத் தமிழகம்' அமைப்பின் தமிழ் புத்தாண்டு விழா-

சென்ற வெள்ளி (14/0/2023) அன்று அபுதாபி ஷாபியாவில் இருக்கும் 'சைனிங் ஸ்டார்' பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுகள் : அதீப் நடத்திய 'ரைஸ்' குழும இப்தார்

நேற்று மாலையை இனிமையான மாலையாக்கியது அதீப் குழுமம் ஏற்பாடு செய்திருந்த 'ரைஸ்' அமைப்பின் இப்தார் நிகழ்வு.

வியாழன், 13 ஏப்ரல், 2023

சினிமா விமர்சனம் : அயோத்தி (தமிழ் - 2023)

யோத்தி-

மனிதமும் மனிதநேயமும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை வலிமையாக வலியுறுத்திச் சொல்லியிருக்கும் படம்.

ஞாயிறு, 26 மார்ச், 2023

புத்தக விமர்சனம் : காற்றின் நிறம் சிவப்பு

 'காற்றின் நிறம் சிவப்பு'

ஒரு தொடரை - நாவல் - பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக 2018-ல் புத்தகமாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

சனி, 25 மார்ச், 2023

புத்தக விமர்சனம் : சுரதா தொகுத்த 'நெஞ்சில் நிறுத்துங்கள்'

விஞர் சுரதா தொகுத்த 'நெஞ்சில் நிறுத்துங்கள்' என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது.

செவ்வாய், 17 ஜனவரி, 2023

பிக்பாஸ் சீசன் - 6 பதிவு -1

வெளியில பொங்கலுக்குச் சல்லிக்கட்டு.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள முட்டைக்காக மல்லுக்கட்டு.

ஒரு பொம்மையில் மைனாவுக்கும் மகேஸ்வரிக்கும் பிடித்த சிறு நெருப்பை, பெரும் தீயாக்க காத்திருந்த மணி சமயம் கிடைத்த போது அதை முட்டையில் மூட்டினான்.

திங்கள், 16 ஜனவரி, 2023

புத்தக விமர்சனம் : சிவமணியின் 'ஆதிராவின் மொழி'

 திராவின் மொழி-

எழுத்தாளர் சிவமணியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
சிவமணிக்குப் பிடித்த இரண்டு முக்கியமான விசயங்களில் ஒன்று எழுத்து, மற்றொன்று இளையராஜா.

செவ்வாய், 10 ஜனவரி, 2023

மனசு பேசுகிறது : சில நேரங்களில் சில மனிதர்கள்

ராஜாராம் எழுதச் சொன்னதை எழுதாமல் விட்டால் நல்லாயிருக்காது... பெரிய்ய்ய்ய பொங்கலுக்குப் போட்டது மாதிரி பாவமன்னிப்புக்கு ஒரு மீம்ஸ் போட்டுருவார். எனவே நடந்தது நடந்தபடி இங்கே...

மனசு பேசுகிறது : அபுதாபி பொங்கல் விழா

புதாபி கலீஃபா பூங்காவில் நேற்றுக் காலையில் இருந்து களைகட்டிய பொங்கல் விழாவுக்கு நாங்கள் - நான், பால்கரசு, ராஜாராம் - போன போது மதியம் மூன்று மணிக்கு மேலிருக்கும்.