மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கலக்கலில் 'சலூன்'

லக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் நேற்று 'சலூன்' என்னும் சிறுகதை வெளியாகியிருக்கிறது... தொடர்ந்து ஒரு மாதத்தில் இது மூன்றாவது கதைப் பகிர்வு... எதிர்பாராதது.

நம்மகிட்ட புத்தகம் போட்டவருங்கிற பாசத்தில் தசரதனோ... நம்மாளுதான் எப்படி எழுதினாலும் போட்டிருவாருன்னு நானோ எப்போதும் நினைத்ததில்லை... 

நட்புக்களின் இணைய தளத்துக்கு என்றாலும் வேறு தளங்களுக்கு என்றாலும் உங்களுக்கு கதை பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கதையை அனுப்பும் போது மறக்காமல் சொல்வதுண்டு. இக்கதையின் முடிவில் கூட எனக்குத் திருப்தியில்லைதான்... ஆனால் தசரதனுக்குப் பிடித்திருந்தது. நேற்று வாசித்த நட்புக்கள் அனுப்பிய செய்திகள் எல்லாம் கதை நல்லாயிருந்தது என்பதாய் அமைந்தது மகிழ்ச்சி.

குறிப்பாக கீதா அக்கா கதை எதார்த்தமாய் இருப்பது இந்த முடிவால்தான் என்றார். நண்பர் சத்யா முடிவு இப்படி இருந்திருக்கலாமென ஒன்றைச் சொன்னார். எனக்கு முடிவை மாற்றியிருக்கலாமெனத் தோன்றினாலும் எல்லாருக்கும் பிடித்த இந்த முடிவு பிடித்திருக்க... அப்படியே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு நானும் வந்துவிட்டேன்.

சில இணையத்தள நட்புக்கள் கதை அனுப்ப முடியுமான்னு கேட்டிருக்காங்க... இருக்கதை அனுப்பலாம் எங்காவது வரட்டுமே எனச் சரியெனச் சொல்லியாகிவிட்டது. எல்லாமே சமீபமாய்த்தான்... 

மேலும் சிறுகதையிலிருந்து தொடருக்கு வாங்கண்ணே என்ற தசரதனின் அழைப்புக்கு இணங்க, விரைவில் ஒரு சிறு நாவலைத் தொடராய் கலக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் பகிர்ந்து பயணிக்க இருக்கிறோம்... 

இணையத்தில் முதல் தொடர்... நம்பிக்கையுடன் வாய்ப்புக் கொடுக்கும் தசரதனுக்கு நன்றி.

saloon

எப்பவும் போல் 'சலூன்' சிறுகதையும் அவரின் நினைவுகளைக் கிளறியதில் அவர் முகநூலில் பகிர்ந்த சில வரிகள்...

நாம் நினைக்கின்ற விசயமோ, பார்க்கின்ற விசயமோ கூகுள்காரனோ, பேஸ்புக்காரனோ தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்பான். இரண்டு நாட்கள் முன்பாக தான் முடிவெட்டுவதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். பத்துக்கு பத்து கடையில் அண்ணனும், தம்பியுமாய் முடி வெட்டுவார்கள்.

எனக்கு முடிவெட்டும் ஆகாவாலி தம்பிக்காரன் கெட்டிக்காரன். ஆனால் யாரிடமும் பைசா வாங்கமாட்டான். அண்ணாகிட்ட கொடுத்துருங்க என்பான். டீ/காபி பழக்கம் கூட இல்லாதவனுக்கு சாயந்திரம் ஆனால் 100/- கொடுத்து விட வேண்டுமென அண்ணன்காரன் புலம்புவான்.

"உன்னை விட தொழில்ல கெட்டிக்காரன் தானே. கொடு. அவனுக்கு என்ன செலவோ?" என்பேன்.

"அட நீங்க வேற சார்.... எதாச்சும் சாப்பிட்டு தொலைச்சாலும் பரவாயில்லை. நெம்பர்ல பணத்தை கட்டி நாசமா போறான் சார்" என்பான்.

அவன் அண்ணன் இல்லாத நேரத்தில் தம்பிக்காரனிடம் வாய் கொடுத்தால், பெரிய கதையாக சொல்லுவான். "இன்னிக்கு இந்த நெம்பர் தான் சார் விழும். அது ஒரு கணக்கு இருக்கு சார். அதுக்கெல்லாம் மூளை வேணும் சார். நான் சொல்லி பணம் கட்ட ஒரு கூட்டமே இருக்கு சார். என்னோடது அவ்ளோ துல்லியமா இருக்கும் சார் ." என்பான்.

"இதுவரைக்கும் நீ எவ்ளோ ஜெயிச்சி இருக்க?" என்று கேட்டால் மட்டும் பதில் இருக்காது.

அன்று அண்ணன்காரன் தான் கடையில் இருந்தான். புலம்புறதை கேட்கும் அளவுக்கு நிதானம் இல்லாததால், பேஸ்புக்கை உருட்டிக் கொண்டே வந்துவிட்டேன். அப்படியாக உருட்டும் போது தான் நந்தன் அண்ணன் முடிவெட்டும் கதையை பதிவு செய்திருந்தார்.

வீட்டிற்கு வரவும், மெயில் வந்ததாக காட்டவும் சரியாக இருந்தது. நித்யா குமார் அண்ணனின் சலூன் கதை ஒன்று வாசிக்க கிடைத்தது. எல்லாமே எதேச்சையாக நடந்தது என்றாலும் நல்லதே_நினை_நல்லதே_நடக்கும் என்பார்களே அது உண்மையோ என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டது.

கதையை வாசிக்க... சலூன்.

நன்றி தசரதன்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு குமார் வாழ்த்துகள் மா. சலூன் கதை எங்கே வந்தது. நான் படிக்கவில்லை.
மன்னிக்கணும்.
நிறைய தளம் போக முடியவில்லை.
களைத்து விடுகிறது கண்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். அங்கே படித்தேன்.