மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

எதிர்சேவையும் வேரும் விழுதுகளும்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'வேரும் விழுதுகளும்' நாவலும் இரண்டாம் பதிப்பாக 'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பும் விற்பனைக்கு இருக்கும் படங்களை சகோதரர் தசரதன் அனுப்பிக் கொடுத்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது.  நம் புத்தகமெல்லாம் ஒரு பதிப்பகத்தின் வரிசையில் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் என்றெல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதைச் சாதகமாக்கியது கலக்கல் ட்ரீம்ஸ்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

'நகர்ந்து செல்லும் அழகிய சித்தரிப்புக்கள்' - பேரா. மு.பழனி இராகுலதாசன்

ர இருக்கும் வேரும் விழுதுகளும் புத்தகத்துக்கு மதிப்பு மிகு எனது பேராசான், என்னை வழி நடத்தும் தந்தை முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்கள் எழுதிய அணிந்துரை.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மனசு பேசுகிறது : வேரும் விழுதுகளும் நாவலாய்...

வேரும் விழுதுகளும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்புவரை அது குறித்தான எந்த விபரமும் தெரியாமல்தான் இருந்தது. தசரதன் அட்டைப்படம் அனுப்பிய பின்புதான் புத்தகம் வெளிவருகிறது என்பது உறுதியானது.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

சட்டைக்காரி

 ந்த எழுத்து என்ன கொடுத்தது..?

என்னடா இது எப்ப எழுதினாலும் இந்த வரியை எழுதுகிறான் என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த வார்த்தைகள் நான் அடிக்கடி கேட்கும், கடந்து வரும் வார்த்தைகள்... இதைத் தாண்டித்தான் என் எழுத்துப் பயணம் போய்க் கொண்டிருக்கிறது.

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மனசின் பக்கம் : கூட்டாஞ்சோறு கொஞ்சம் காரமாய்...

னவரி இருபத்தி ஆறாம் தேதி நாங்கள் தங்கியிருக்கும் தளத்தின் முதலாளி தங்கள் கம்பெனி ஆட்கள் இணைய வசதியை இங்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள் எனச் சொல்லி, நாங்கள் பயன்படுத்திய இணைய வசதியை ரத்து செய்து விட்டான்... இங்கு 'ர்' இல்லை என நினைக்க வேண்டாம்... யாரையும் மரியாதைக் குறைவாக பேச நினைப்பதில்லைதான் என்றாலும் இணையத்தை ரத்து செய்து விட்டு போனில் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு கதையாகச் சொன்ன மலையாளியை, இணையம் இப்ப வராது அடுத்த வாரம்தான் வரும் எனத் தெனாவெட்டாகப் பேசிய அவனின் மனைவியின் குணத்தை வைத்து 'ன்' போதுமானது எனத் தீர்மானிக்கலாம்.