மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 செப்டம்பர், 2019ஷார்ஜா உலக புகைப்பட கண்காட்சி : செந்தில்குமரன்

திர்பாராத சில நிகழ்வுகள் எப்போதும் மறக்க முடியாத நினைவுகளை மனசுக்குள் விதைத்துச் செல்லும். அப்படியான ஒரு நிகழ்வு 'அட வாங்கண்ணே பொயிட்டு வரலாம்' என்ற நெருடாவின் வார்த்தைகளின் மூலம் கிடைத்தது. மகிழ்ச்சி, வேதனை, வலி. பிரமிப்பு, ஆனந்தம், அன்பு, உபசரிப்பு என பல்வேறு உணர்ச்சிக் கலவையின்  அனுபவமாக அது அமைந்தது.

மூளைக்குள் சேமித்து வைத்திருக்கும் நெருக்கடிகளை எல்லாம் விடுமுறை தினத்தில் மூட்டை கட்டிப் போட்டுவிட்டு சுபான் அண்ணனுடன் பயணப்பட்டோம்... யூசுப் அண்ணன் அறைக்கு அருகில் இருக்கும் உணவகத்தில் இரவு உணவுக்கு இடைப்பட்ட சிற்றுணவை முடித்துக் கிளம்பினோம்.

கனவு அண்ணன் தன்னுடைய ஆதிகுடி குறித்தான தேடல் குறித்துப் பேச, ரஹ்மான், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்கள் காருக்குள் இதமாய் ஒலிக்க, ஒவ்வொரு பாடலுக்கும் சுபான் அண்ணன் சின்னச் சின்ன நினைவுகளைச் சொல்ல, நீண்ட பயணத்தின் முடிவில் ஷார்ஜாவைச் சென்றடைந்தோம்

அசோக் அண்ணன் இல்லத்தில் எனக்கும் நெருடாவுக்கும் இட்லி, தேங்காய் சட்னி மற்றும்பொடி காத்திருக்க, அசோக் அண்ணனின் அன்பில் நனைந்து நிறையப் பேசி, நிறைவாய் உண்டு உறங்கும் போது இரவு 2 மணியிருக்கும்.

மறுநாள் காலை எழுந்து குளித்து, புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டு விட்டு கவிமதி அண்ணனின் காரில் கண்காட்சி நடந்த ஷார்ஜா எக்ஸ்போ மையத்துக்குச் சென்றோம்.

வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு மணிக்குத்தான் கண்காட்சி அரங்கம் திறக்கப்படும் என்றதால் உட்கார இடமின்றி நண்பர் செந்திலுக்குப் போன் பண்ண, அவரும் எடுக்கவில்லை... மற்றொரு அரங்கத்தில் மலையாளப் படத்துக்கான ஆள் தேர்வு நடக்க, மலையாளிகள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். அதற்குள் நுழையலாம் என்று கூடத் தோன்றியது.

கண்காட்சி அரங்கும் திறக்கவில்லை... செந்தில்குமரனும் போன் எடுக்கவில்லை... என்ன செய்யலாம்... மீண்டும் வீட்டுக்குப் போகலாமா... அல்லது இங்கே சுற்றி வரலாமா... என்ற யோசனையுடன் கதை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நண்பர் செந்தில் குமரன் அவர்கள் உள்ளே நுழைந்தார்.


இவர் மதுரைக்காரர், தமிழகத்தின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். காட்டு விலங்குகள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் எடுத்தவர். மனிதனுக்கும் புலிக்குமான பல்லாண்டு கால பகைமை வாழ்க்கையை கதைக்களமாக்கி தனது புகைப்படத்தின் மூலம் பதிவு செய்தவர். அதற்காக இந்தியா முழுவதும் பயணப்பட்டவர்... இன்னும் விலங்குகளைத் தேடி பயணப் பட்டுக் கொண்டிருப்பவர்... இப்போது உலகம் முழுமைக்குமான பயணத்துக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்.

ஆசியாவிலிருந்து இந்த உலக புகைப்படக் கண்காட்சிக்கு உதவித்தொகை மூலமாக தேர்வான ஒரே புகைப்படக் கலைஞர். ஷார்ஜா அரசே இவருக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இங்கு அவருக்கு உலகளாவிய பிரபல புகைப்படக் கலைஞர்களின் வகுப்புக்கள், சனிக்கிழமை மற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் தன் அனுபவம் குறித்தான பேச்சு என இந்தப் பயணம் அவருக்கு வாய்த்திருக்கிறது.

இதனிடையே அமீரகத்தின் சிறப்பு மிக்க இடங்களையும் இவரைப் போன்றவர்களுக்குச் சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை... நம்மில் ஒருவருக்கு இப்படியான வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்வதைத் தவிர வேறென்ன செய்ய வேண்டும்... தமிழனாய்... இந்தியனாய்... மனிதனாய் மகிழ்ந்தோம்.

செந்தில் எந்தவித பாசாங்கும் இல்லாத மனிதராக இருந்ததே அவருடன் நீண்ட உரையாடலுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. காடுகளுக்குள் விலங்குகளைப் போட்டோ எடுக்கச் செல்லுதல், அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்... தோடர், நாகர் என ஆதிவாசிகளுடன் பழகியது... அவர்கள் விலங்குகளைப் பழக்கும் முறை... விலங்குகளின் உணவு முறை... தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வாழ்தல் என விரிவாய்ப் பேசினார்.

இத்தனை விளக்கமாய் அதுவும் அமர இடமின்றி, குடிக்கத் தண்ணீரின்றி எங்களுடன் நின்றபடி பேசுதல் என்பது பெரிய விஷயம். அதுவும் ஒரு நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராய் வந்திருக்கும் நிலையில், அவருக்கான நேரம் திட்டமிட்டபடி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நம்முடன் நேரம் செலவிடுதல் என்பது அரிதான விஷயம். அசோக் அண்ணனின் அன்புக்காக எங்களுடனும் அன்பானார்... அவரின் அனுபவங்களை அள்ளிக் கொடுத்தார்.

புலிகள் பெருங்காடுகளில் வாழ விரும்பாது... அதற்கு வறண்ட, சின்னச் சின்ன புதர்கள் இருக்கும் பகுதி போதும்... யானையைப் படமெடுக்கப் போனபோதான அனுபவம், புலிகளைப் போட்டோ எடுத்தது... பீ என்ற ஆவணப்படத்திற்காக கள உழைப்பு... அந்தப் படம் முடிந்த பின் நிகழ்ந்த நிகழ்வுகள், பாதிப்புக்கள் என எல்லா விவரமும் பேசினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஒரு மனிதனின் பல்தரப்பட்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். இடையிடையே அசோக் அண்ணனின் நட்புக்கள் குறித்த பேச்சு... இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற பேச்சு என போரடிக்காமல் இதமாய் நகர்ந்தது நின்றபடியே.

அவருக்குள் எத்தனை விஷயங்கள்... எவ்வளவு விபரங்கள்... எல்லாவற்றையும் எங்களுடன் மகிழ்வாய்ப் பகிர்ந்து கொண்டார். சிறப்பானதொரு சந்திப்பு... நம்ம வீட்டு மனிதரைப் போல் இங்கு பார்த்த பாலைவனத்துக்குள் இருக்கும் மணல் நிறைந்த வீடு, பாலைவனத்தில் காரில் போய் மாட்டிக் கொண்டது என எல்லா விபரங்களையும் விரிவாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் கண்களில் காட்சிகளைப் பார்த்தோம்.

நரிக்குறவர்கள் குலதெய்வ வழிபாட்டில் போது ஏழு பானையை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துப் பொங்கல் வைத்து, எருமை மாட்டைப் பலி கொடுத்து அதன் ரத்தத்தைக் குடிப்பதை எங்கள் ஊருக்கு அருகில் பார்த்திருக்கிறேன். அப்பல்லாம் எம்.ஜி.ஆர் படம் போடுவார்கள். படம் பார்க்கவே அங்கு போவோம்... மதுரை வீரன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் அங்குதான் பார்த்தோம். மறுநாள் பள்ளிக்குச் செல்லும் போது எருமைத் தலைகள் சாமி முன் வைக்கப்பட்டிருக்கும்... எருமையின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருப்பார்கள். 

இப்படியான ஒரு நிகழ்வை களமாக்கி போட்டோ எடுத்திருக்கிறார். சிவகங்கையில் இதே விழா நிகழ்வை தனது கேமராவில் படமாக்கியிருக்கிறார். மாட்டின் மேல் படுத்து உடம்பெல்லாம் ரத்தத்துடன் படமெடுத்ததையும் அதன் பின் ஜெயலலிதா பலிகொடுக்கக் கூடாது எனப் போட்ட சட்டத்தின்படி நரிக்குறவர்களை காவல் நிலையம் அள்ளிச் சென்றதையும் அவர்கள் நீங்க எடுத்த போட்டோவால்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னதையும், இவரும் அவர்களுடனே காவல்நிலையத்தில் இருந்ததையும் சிரிப்புடன் சொன்னார்.

இயக்குநர் ராம் மற்றும் முத்துக்குமரனுடனான தனது உறவைக் குறித்தும் சொன்னார். அவர்களுடன் பதினைந்து நாள் பயணப்பட்ட கதையையும் சொன்னார்.

சுபான்,  ஆசிப், யூசுப், தமிழ்ச்செல்வன் சிவா ஆகிய நான்கு அண்ணன்களும் வந்து சேர, அதே இடத்தில் நின்றபடி மீண்டும்  பேச்சைத் தொடர்ந்தோம்... விரிவாகப் பேசிக் கொண்டிருந்தவரை யூசுப் அண்ணன் ஆதிகுடிக்குள் இழுத்துச் சென்றார். அதன் பின்னான பேச்சுக்கள் பொதுவான பேச்சாய்... அவரின் அனுபவங்களாய் இருந்த நிலையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணித்தது.

புலிகள் குறித்தும் ஒவ்வொரு காட்டிலும் எத்தனை புலிகள் இருக்கு என்றும் ஆதிவாசிகள் வெள்ளையாக இருப்பார்களா இல்லையா..? என்றும் இலங்கை, அங்கிருக்கும் மக்கள், இலங்கையின் பெயர் என நகர்ந்து ஆதாம் ஏவாள் வரை நகர்ந்து, மலையாளிகளே இன்னும் ஆதிவாசிகளாய் இருக்கிறார்கள் அதன் காரணம் என்ன... ஒவ்வொரு காட்டிலும் எத்தனை புலிகள் இருக்கு... ஆதிவாசிகள் குறித்த விவரச் சேகரிப்புக்கு யாருடன் பேச வேண்டும் என வேறொரு களத்தில் பயணப்பட்டது. அவருக்குத் தெரிந்த வரை விபரங்களைச் சொன்னார்.

கொலைகார யானைகளை சில நாட்களிலேயே பழக்கி விடுவார்கள் என்றும் ஒரு புலி காலை மாலையில் ஒரே பாதையில் வாக்கிங் செல்வதைப் போல் செல்வதையும் ஒரு யானையின் தந்தம் 12 அடி நீளம் இருப்பதையும் அந்தப் படத்தை மிகப்பெரியதாய் கண்காட்சியில் வைத்திருப்பதையும் குறித்தும் பேசினார்.

நிறைய விஷயங்களை அசோக் அண்ணன், யூசுப் அண்ணன்  கேட்க, அவர் பதில் சொல்லிக் கொண்டே போனார். நின்றபடி பேசுகிறோமே... நமக்கு வேலை இருக்கே என்றெல்லாம் யோசிக்காமல், நகர நினைக்காமல் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

சுபான் அண்ணா தனது கேமராவுக்குள் எல்லாவற்றையும் பதிந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் மிகச் சிறப்பானதொரு பேச்சு... இப்படியான ஒரு நாள் பேட்டி எடுக்கச் செல்லும் பத்திரிக்கையாளனுக்குக் கூட கிடைக்காது. சிரித்தபடியே பேசிய மனிதருக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்க அங்கு கடைகளும் இல்லை... குடிக்கத் தண்ணீரும் இல்லை...

அருமையானதொரு சந்திப்புக்குப் பின் எல்லாரும் போட்டோ எடுத்துக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தோம்.

பின்னர் செந்தில் குமரன் மாலை நிகழ்வுக்குள் செய்ய வேண்டிய சில பணிகள் இருப்பதால் இரண்டு மணிக்குப் பார்க்கலாம் என்று சொல்லிச் சென்றார். நாங்களும் கவிமதி அண்ணன் அவர்களுடன் கிளம்பினோம். எங்கு சாப்பிடலாம் என்ற யோசனையுடன் செந்தில்குமரனுடன் பேசிய விஷயங்களைக் குறித்து பேசிக் கொண்டு பயணித்தோம். கவிமதி அவர்களின் கருத்துக்கள் மிக விரிவாய்,  எல்லாவற்றையும் மிகத் தெளிவாகவும் பேசினார்.

அவர்களின் நண்பர்களின் (காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்) அறைக்குச் சென்றோம். அருமையான சாப்பாடு... அன்பான உபசரிப்பு... உண்ட மயக்கம் வேறு.... அவர்கள் எல்லாம் அரசியல் கட்சியின் பின்னே இயங்குபவர்கள் என்பதால் காரசாரமான அரசியல் பேச்சு... நமக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம்... அரைத் தூக்கத்தில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்...

இந்த ஊரைப் பொறுத்தவரை பிழைப்புக்காக வந்த இடம் என்பதால் உனக்கு நண்பன் எனக்கும் நண்பனே என்றுதான் நட்பு விரியும். பார்த்த சில நிமிடத்திலேயே எந்தத் தயக்கமும் இன்றி உறவாய்ப் பேச ஆரம்பித்து விடுவார்கள். பல இடங்களில் கிளாஸை எடுத்து உக்காருங்க என அழைக்கவும் செய்வார்கள்... அருமையான மனிதர்களின் அன்பில் நனைந்து நாலு மணிக்கு மேல் மீண்டும் கண்காட்சி அரங்கிற்குச் சென்றோம்.

சொல்ல மறந்துட்டேனே கண்காட்சிக்கான விளம்பரங்களாய் வைத்த படங்களில் செந்தில்குமரன் எடுத்த ஜல்லிக்கட்டு போட்டோ வைக்கப்பட்டிருந்ததையும் அது பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டதையும் எல்லாருமே சொன்னார்கள்... அமீரக வீதியில் ஜல்லிக்கட்டுக் காளை...

கண்கலங்க வைத்த, மகிழச் செய்த கண்காட்சியும் செந்தில் குமரனுடனான உரையாடலும் கவிமதி அண்ணனின் நிறைய விளக்கங்களும் அசோக் அண்ணன் சொல்லிய விஷயங்களும் அடுத்த பதிவாய்...

தொடரும்.
-'பரிவை' சே.குமார்.


பிக்பாஸ் : 'நட்பை விட காதலே பெரிது'-கவின்

நேற்று ஷார்ஜாவில் உலக புகைப்படக் கண்காட்சி இருந்ததாலும் அதில் மதுரையைச் சேர்ந்த போட்டோகிராபர் நண்பர் செந்தில்குமார் அவர்கள் ஆசியாவில் ஒருவராய், இந்தியாவிலிருந்து கலந்து கொண்டிருப்பதால் அவரைக் காணும் பொருட்டும் புகைப்படங்களை ரசிக்கும் பொருட்டும் வியாழன் இரவே ஷார்ஜா போய்விட்டேன். நேற்று நள்ளிரவில் அறைக்குத் திரும்பியதால் பிக்பாஸ் பார்க்கவில்லை... எழுதவில்லை... பார்த்ததுக்கு அப்புறம்தான் பார்க்காமல் இருந்தது நல்லதுன்னு தோணுச்சு... விதி யாரை விட்டது நண்பர்களே...

88,89ம் நாள் நிகழ்வை இப்பத்தான் பார்த்தேன்.... ஆமா இதில் என்னத்தை எழுதுவது...?

Image result for bigg boss day 89 images
(குடும்பமாய் பஞ்சாயத்துப் பண்ணும் கவின் - லாஸ்லியா)

கவின் - லாஸ்லியா காதலைத் தவிர ஒரு மண்ணும் இல்லை...

இறுதிப் போட்டிக்கான டாஸ்க் என்ற போதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டும் யாரும் இவர்களை டார்க்கெட் பண்ணக் கூடாதென்றும் விளையாடுவதற்குப் பெயர் என்ன..?

ஷெரினை எப்படியும் அடிக்கலாம்... லாஸ்லியாவைச் சும்மா லேசாத் தொட்டாலே ஒரு பக்க நோட்டுல இங்க பாரு மச்சான்னு... நாவல் எழுதுவதை கவின் செய்து கொண்டிருப்பதை எதில் சேர்ப்பது...?

கவினுக்கு விட்டுக் கொடுக்கலை நீ என்ன நண்பன் என்பதும் கவினுக்காக மற்றவர்களுடன் மோதுவதுமாய் இருக்கும் லாஸ்லியா... போட்டியை மறந்து வேறு பாதையில் பயணிப்பதைப் பிக்பாஸ் இதுவரை சுட்டிக் காட்டாதது ஏன்...?

லாஸ்லியா தோற்றால் கவின் விளையாட்டில் இருந்து விலகுவதும் கவின் தோற்றால் லாஸ்லியா விளையாட்டில் இருந்து விலகுவதுமாய் நகரும் காதலைப் பார்த்துத் தொலைக்க வேண்டிய கட்டாயம் நமக்கில்லையே...

கவினுக்கு விட்டுக் கொடுக்கலைன்னு சாண்டி கூட மோதும் லாஸ்லியா, அவருக்கு ஆதரவாய் இருக்கும் கவின், கவினை நினைத்து பிக்பாஸிடம் அழும் சாண்டி... இதில் சாண்டியிடமே உண்மையான அன்பு இருக்கிறது... கவினிடம் லாஸ்லியா என்ற பொக்கிஷத்தைக் காக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு மட்டுமே இருக்கிறது.

சேரன் சொல்வதைப் போல இருவரும் இருவருக்கான பாதுகாப்பை எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் பற்றி இருவருக்கும் கவலை இல்லை.

கவினின் திருவிளையாடல்களில் அவனின் முகத்தைப் பார்க்கும் போது நமக்கு கடுப்புத்தான் வருகிறது... நீண்ட நேரம் காட்டும் போது சுகர், பிரஷர் எல்லாம் எகிற ஆரம்பிக்கிறது... நாம நல்லாயிருந்தாத்தான் நம்ம குடும்பத்துக்கு நல்லதுன்னு தோன்றதால பிக்பாஸ் பார்க்காம இருப்பதே நலம்ன்னு தோணுது.

இருவரும் பாய் போட்டு பக்கத்துப் பக்கத்தில் படுத்திருப்பதை பிக்பாஸ் கேமரா பார்க்க வேண்டியதுதான்... நாமளும் பார்க்கணும்ன்னு என்ன கெரகமா... அதுவும் பர்ஸ்ட் நைட் முடிஞ்ச புதுப்பெண்ணு மாதிரி எந்திரிச்சி உக்கார்ந்திருக்கிற கருமத்தையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு.

இவுகளுக்கு ஒரு பிரச்சினையின்னா அவுக வருவாக... அவுகளுக்கு ஒரு பிரச்சினையின்னா இவுக வருவாக... ஆனா இவுக ரெண்டு பேரால எல்லாருக்கும் பிரச்சினையின்னாலும் பிக்பாஸ், கமல், விஜய் டிவி உள்பட யாரும் வரமாட்டாங்க.

கவின் - லாஸ்லியா விஷயத்தில் நான் பேசுவேன்... ஆனால் இருவரும் வெளியில் போய் ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள ஆறு மாதமாவது ஆகணும்ன்னு சேரன் சொன்னார்... ஆனா ஆறு மாசக்கணக்குல லாஸ்லியா அம்மா ஆயிருவார் போல... கண்றாவியெல்லாம் காட்டிக்கிட்டு உங்களின் பிரதிபலிப்புன்னு கமலஹாசன் வேற பில்டப் கொடுப்பாரு... முடியலை.

சேரன் தன்னோட மகளின் காதல் விஷயத்தில் அதிகம் பட்டிருக்கிறார்... லாஸ்லியா விஷயத்தில் ஒதுங்கியிருத்தலே நலம்... அது சாக்கடையின்னு தெரிஞ்சும் குளிக்க நினைக்கிறது பெரிய மனுசனுக்கு அழகல்ல.

ஷெரின் பந்து டாஸ்க்கில் கவினைப் பற்றிப் பேசியது முழுக்க முழுக்கச் சரியானதே என்றாலும் பிக்பாஸோ, கமலோ அதைப் பற்றிப் பேசப்போவதில்லை.

கவின் பேச ஆரம்பித்தாலே எல்லாருக்குமே கடுப்பாகுதுன்னு பிக்பாஸ் எழுதுறவங்க பதிவுல தெரியுது. ஆனா கமலுக்குத் தெரியலை... அவர் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் சொம்படிப்பார்.... அதுவும் ரொம்ப பாதுகாத்துக் கொடுக்கும்படி சொம்படிப்பார்.

சேரன் முதுகுவலியால் துடித்த போது பசங்கதான் உதவியாய் இருந்தார்கள்... தங்கமுட்டை டாஸ்கில் முதுகுவலி காரணமாக விலகியதும், சைக்கிளை முடிந்தவரை ஓட்டியதும் சேரனின் போட்டி மனப்பான்மையை எடுத்துக் காட்டியது.

சாண்டிக்குச் சேரன் ஆறுதலாய் இருப்பது சிறப்பு. கவினுக்காக லாஸ்லியாவிடம் திட்டு வாங்குவது... திரைக்குப் பின்னே அழுவது என சாண்டி பாவமாய் தெரிந்தாலும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாய்த்தான் பார்க்கத் தோன்றுகிறது.

தர்ஷனைப் பொறுத்தவரை கவின்-லாஸ்லியா காதல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. முகன் இருவரின் காதலுக்கு ஆதரவு கொடுக்கிறான். அதனாலேயே போட்டியின் போது கவின் லாஸ்லியாவிடம் பேச, போட்டியை நிறுத்தி வைக்கச் சொல்கிறான்.

சாண்டிக்கு கவின் சுத்தமாக காதலில் விழுந்து கிடப்பது தெரிகிறது... நட்பை விட்டுக் கொடுக்க முடியாத நிலை... அதன் வெளிப்பாடே பிக்பாஸிடம் அழுகை. அவரோ சாண்டியை சிரிக்க வைத்து அனுப்பியது செம.

லாஸ்லியா எல்லா இடத்திலும் கவினை முன்னிறுத்தி, சாண்டி கூட உன்னை முன் நிறுத்தலைன்னு கவின் மனசுக்குள்ள குட்டையை குழப்பி விட்டு தன்னருகில் வைத்துக் கொள்கிறாள்.

கவின் - லாஸ்லியாவை ரொம்ப அழகாகப் பாதுகாக்கிறது விஜய் டிவி... இவர்களை வாழ இந்தவாரம் வெட்டப்பட இருப்பது ஷெரின் என்னும் ஆட்டுக்குட்டி..

ஷெரின் அழகாயிருக்கேன்னு பிக்பாஸ் சொன்னதில் வெற்றிக் கேடயத்தை வாங்கிய சந்தோஷம் ஷெரினுக்கு... வீடெங்கும் குதிக்கிறார்... ஷெரினைப் பார்க்கும் போது மனசுக்குள் பூக்கும் மத்தாப்பூ, லாஸ்லியாவைப் பார்க்கும் போது அணைந்து போய் விடுகிறது.

புருஷன்... புருஷன்... புருஷன்... என்றிருக்க புஷ்பாக்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாம்... அவர் ஜெயிச்சிட்டு வரணும்ன்னு விளக்கேத்தி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்திருக்கலாம்... போட்டிக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு அவருக்கு விட்டுக் கொடுங்கன்னு சொல்றதெல்லாம்... முடியலை... காதல் படுத்தும் பாடு.

எங்கப்பன் குதிச்சான்னா போடான்னு சொல்லிட்டு வந்திருவேன்னு சொல்லிட்டா போல, அவளைப் பாதுகாக்க நாந்தானே இருக்கேன்னு பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கண்ணபிரான் மாதிரி பாதுகாப்பு வளையத்தோடவே பயபுள்ள திரியிறான்.

நீ காதலி ராசா... கல்யாணம் பண்ணிக்க ராசா... இன்னைக்கே கமலுக்கிட்டச் சொல்லி கதவைத் திறந்து விடச் சொல்லி கூட்டிக்கிட்டு ஓடு ராசா... அந்த அழகியை இந்த அழகன் கட்டிக்கிறதுல யாருக்கும் கஷ்டமில்லை... நீங்க பண்ணுற ரவுசைத் தாங்குறதுதான் கஷ்டமாயிருக்கு... அதுவும் நேரத்துக்கு நேரம் டிசைன் டிசைனா முகத்தை மாத்துறே பாரு... அந்தக் கொடுமைதான் தாங்க முடியலை அவின்... ச்சை... கவின்.

என்னமோ போங்க... விரிவா எழுத மனசில்லை... ரெண்டு நாள் நிகழ்வும் கவின்-லாஸ்லியா-சாண்டி-ஷெரின் என இவர்களுக்குள்ளதான் சுத்தியது. கவின் லாஸ்லியாவைச் சுத்துறான்... லாஸ்லியா கவினுக்காக கத்துறாள்... இதுல என்னத்தை எழுதுறது...?

முடியலை... இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியான்னு தோண ஆரம்பிச்சிருச்சு...

கமல் வகையா முட்டுக் கொடுப்பாரேன்னு யோசிக்கும் போதே இன்னைக்கு நிகழ்ச்சி பார்க்கணுமான்னு தோணுது.

அடுத்த பதிவாக நண்பர் செந்தில்குமார் அவர்களுடன் பேசியதைப் பற்றி, உலக புகைப்படக் கண்காட்சியில் பார்த்த வலி நிறைந்த படங்களைப் பற்றி ஒரு நல்லதொரு பதிவெழுதலாம் என இருக்கிறேன்... மாலை எழுதுவேன்... 

இன்றைய பிக்பாஸ் பதிவு திருப்தி அளிக்காதுன்னு நினைக்கிறேன்... அடப் போங்கையா... பிக்பாஸே திருப்தி இல்லை... பதிவு எப்படியிருந்தா என்ன...

முடியல...

முடியல...

இதுக்கு மேல இதுல எழுத முடியல...

பிக்பாஸ் தொடருமா..??
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 19 செப்டம்பர், 2019பிக்பாஸ் : லாஸ்லியாவின் 'காதல் விளையாட்டு'

வா... நா...வரவா வரவா... 
உன்ன தொரத்தி வரவா... 
நீ வெதச்ச வலிய ... 
உனக்கு திருப்பி தரவா...


Image result for bigg boss 87th day images lossliya

87-ம் நாள் காலை...

திருப்பள்ளி எழுச்சிக்குப் போடுற பாட்டாய்யா இது... இப்பல்லாம் பிக்பாஸ் சூழலுக்குத் தகுந்த பாடல்ன்னு சொல்லிட்டு சுரத்தில்லாத பாடலாப் போடுறார்... எவனும் ஆடலை... இவனுக விளையாட்டே ஒழுங்கா விளையாடலை... பின்னே பாட்டுக்கு எப்படி ஆடுவானுங்க... செத்தவன் கையில வெத்தலை பாக்கு வச்ச மாதிரி எந்திரிச்சி வந்தானுங்க...

சாண்டிமான் கதையை இன்னைக்கு பாட்டி கதாபாத்திரத்தை வச்சி, பக்குவமாச் சொல்லிகிட்டு இருந்தார் சாண்டி... அதையும் ரசிச்சி, சிரிச்சி, வாத்தியார் பாடம் நடத்தும் போது படிப்புக்குப் பொறந்தவன் பக்கத்துல உக்காந்து கேட்கிற மாதிரி சேரனும் , முகனும் கேட்டுக்கிட்டு இருந்தாங்க... 

ஒரு கதையில பாட்டி குச்சியால இரயிலை நிறுத்தி, இன்னொரு குச்சியால தண்டவாளத்துல மாட்டிக்கிட்ட யானையை எடுத்து விட்டாளாம். அடுத்த கதையில மாவரைச்சிக்கிட்டுப் போற பய மழையில நனையாம குச்சியால மேகத்தைக் கலைச்சி விட்டாளாம். ஸ்ஸப்ப்பா முடியல... ஊருல மொக்கை போடுற ஆளுங்களைப் பார்த்திருக்கிறேன்... மொக்கையை மட்டுமே தொகுப்பாக்குற பிக்பாஸையும் பார்க்க வேண்டிய நிலமையாகிப் போச்சே...

பிக்பாஸ்க்கு கண்டெண்ட் இல்லை... இதையெல்லாம் போட்டு நேரத்தைப் போக்கணும்... என்ன செய்யிறது... கவின்-லாஸ்லியா மணிக்கணக்குல லவ்வுறதைக் காட்டிப் பொழுதைப் போக்கிக்கிட்டு இருந்தார்... இப்ப அவங்க லவ்வுறதைக் காட்டினா எங்கே மறுபடியும் அப்பனும் ஆத்தாளும் வந்து பிரச்சினை பண்ணுவாங்களோன்னு பயந்துக்கிட்டு அவங்களைத் தனியா விளையாட விட்டுட்டு சேவல்கள் பின்னாலயே திரியிறாரு... சும்மா சொல்லக்கூடாது பிக்பாஸ் செம பாதுகாப்பு கொடுக்குறாரு 'காதல் 'கவிராஜனுக்கு... சாண்டி கதை சொல்லி முடிக்கும் வரை ரெண்டு பேரும் சீன்லயே இல்லை.

இந்தக் கதையையும் சிறந்த திரைக்கதை எழுதி படமெடுத்த சேரன், அர்ப்பணிப்பு உணர்வோட கேட்டுக்கிட்டு இருந்ததெல்லாம்... முடியலை.  இதுல கேள்விகள் வேற... இந்த மனுசன் ஏன் இந்த மாதிரி ஆயிட்டாரு... 

சாண்டி சேரப்பா உங்க காதல்ல குறுக்க வராம நான் பாத்துக்கிறேன்னு கவினுக்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருப்பாரோ..?டவுட்டு # 1.

மறுபடியும் லிவிங்க் ஏரியாவுல உக்கார்ந்து எல்லாருக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்தாச்சு... கவினுக்கு கோல்டன் லெக்குன்னு ஒரு பட்டம் கொடுத்து, கதையில சேர்த்துப்போம்ன்னு சாண்டி சொல்லிக்கிட்டு இருந்தார். அப்போது சாண்டி நீங்க என்ன பட்டம் வேணுமின்னாலும் கொடுங்க.. முதல்ல மைக்கை சரியாப் போடுங்கன்னு பிக்பாஸ் குரல் கொடுக்க, அங்கே கெக்கப்பிக்கே அடங்க வெகு நேரமானது.

முகன் மீண்டும் தான் எழுதிய அந்தக் காதல் பாடலை... பிளாஸ்டிக் நாற்காலியை வைத்துத் தாளம் தட்டிப் பாடினான்... பாட்டு நல்லாயிருக்கு... வள்ளி திருமண நாடகத்தில் நாரதராய் வரும் முத்துச்சிற்பி தன்னுடைய முதலாவது ஆல்பமான சிற்பிக்குள்ள முத்தைப்போலவில் பாடியிருக்கும் 'பொறுபுள்ள பூவழகி'யைப் போல மனதைக் கவர்ந்தது. ஷெரின் ரசித்துக் கைதட்டினார்... சாண்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தார்... சேரனும் ரசித்துத் தலையாட்டினார். கவின்-லாஸை இப்பவும் சீன்லயே காணோம்.

முகனின் இந்தப் பாடல் கவினுக்கானது போலவே தோன்றுகிறது... ஒருவேளை கவின் கூட அடிக்கடி பாடச் சொல்லியிருக்கலாமோ... டவுட்டு # 2

'அய்யா முகன்.... கருத்துக்கேட்பு அறைக்கு வாங்கய்யா' என்று பிக்பாஸ் அழைக்கவும், மலேசியாவுல இருக்க காதலி அன்பே முகன்னு கூப்பிட்ட மாதிரி குதிச்சி.... ஷேபாவைத் தாண்டி ஓடினான் முகன். முதல்நாள் அன்பாக் கூப்பிடுங்கன்னு சொன்னதுக்காக இவ்வளவு அன்பு போல... எல்லாரும் சிரிச்சாங்க... முகன் டாஸ்க் பைலோட வந்தார். 

இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டாஸ்க்கின் தொடர்ச்சியாய் ஒருவர் பின் ஒருவராய் ஓடிக்கொண்டே, முன்னால் ஓடுபவரின் முதுகில் இருக்கும் மூட்டையைக் கிழித்து உள்ளிருக்கும் தெர்மாக்கோல் பந்துகளை கீழே கொட்ட விடவேண்டும். பெரியது...நடுவுலது...சின்னது... என மூன்று வட்டம்.. மணியடித்ததும் ஓடணும்.. மணியை நிறுத்தும் போது யார் இருவரின் பைகள் காலியோ அவங்க வெளியேற்றப்பட்டு, மீண்டும் மணி அடித்ததும் மற்றவர்கள் அடுத்த வளையத்துக்குள் ஓடணும்.

எல்லாருக்கும் நம்பர் கொடுத்தாங்க... கவினும் லாஸ்லியாவும் நம்பரை மாத்திக்கிட்டாங்கன்னு இணையத்தில் பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு... சேரன் முதலில்... லாஸ்லியா இறுதியில்... இடையில் மற்ற ஆட்கள்... இந்த ஓட்டத்தில் சேரன் ஓடுவதென்பது முடியாத விஷயம்.. முதல் ஆளா ஓடி முதல் ஆளா வெளியே போயிட்டார். தர்ஷன் இரண்டாவது... என ஒவ்வொருவராக வெளியேற... வென்றது முகன்... இரண்டாவது கவின்.

சாண்டி விரட்ட லாஸ்லியா கீழே விழுந்தார்... கவினுக்கு அப்படிக் கோபம் வந்தது... விளையாட்டு முடிந்ததும் சுடு தண்ணீரில் காலை வைத்து நீவி விட்டு ரொம்ப நல்லாக் கவனிச்சிக்கிட்டான். இதைப் பார்க்கும் மரியதாஸ் இப்படி மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்னு முடிவு பண்ணியிருக்கலாம்... 

சேரப்பா கூட என்னைக் கேர்ப்பண்ணலைப்பா.... உங்க மாப்பிள்ளைதான் காலைப்புடிச்சி... என் கண்ணுல தண்ணி வந்திருச்சுப்பா... இவரோட நம்ம அம்மா பேசமாட்டேன்னு ஒதுங்கிப் போனாங்களேப்பா... அம்மா ரொம்ப மோசம்... இவரு ரொம்பப் பாசம்ன்னு லாஸ்லியா மனசுக்குள்ளயே அப்பாக்கிட்ட சொல்லியிருக்கும்.

போட்டியின் போது தன்னை இழுத்தது... எந்த இடத்தில் ஓட்டை போடணுமோ அதை விடுத்துப் பெரியதாய் ஓட்டை போட்டதென தர்ஷன் கவினுடன் மோதினான். இருவரும் மச்சான்... மாப்பிள்ளைன்னு பேசிக்கிட்டு இருக்கும் போது 'அவுக சரியாத்தான் செஞ்சாக... அவுக மேல தப்பில்லை... எல்லாரும் அவுகளையே குத்தம் சொல்லாதீக' அப்படின்னு திருமதி கவின், ராதிகாக் கணக்கா உள்ள வர, தர்ஷன் ரொம்பக் கோபமாயிட்டான். 

சேரன் விட்டுட்டு வேலையைப் பாருடான்னு சொன்னார்.... சாண்டிதான் பிரச்சினை பூதகரமாகாமல் தடுத்தார். திருமதி நுழையலைன்னா திருவாளரே மச்ச்ச்ச்சான்னு ஒரு இழுவையைப் போட்டு ஒரு வழியா எங்கெங்கயோ சுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்... ஆனால் அன்புள்ள மன்னவரைத் திட்டுறதை திருமதியால பொறுக்க முடியலையே... 

ஊர்ல எங்க சின்னையா ஒருத்தர் இருந்தார்... அய்யாவும் அப்பத்தாவும் அம்புட்டு நெருக்கம்... விவசாய நேரத்துல ஆடு, மாடு வயல்ல இறங்கிருச்சுன்னு அப்பத்தா தைய்யத் தக்கான்னு வந்தா, பின்னாலயே அய்யாவும் தக்காத் தைய்யான்னு வருவாரு... இதே தண்ணிர் பாய்ச்சுவதில் தகராறுன்னா அய்யா தைய்யத் தக்கான்னு ஆரம்பிக்கும் முன்னே அப்பத்தா தக்காத் தைய்யான்னு களத்தில் நிற்கும். அப்படித்தான் கண்ணாடி கவினும் கண்மணி லாஸ்லியாவும்... 

சாப்பாடு எப்பவும் முட்டைதான் போல... ரொம்பப் புலம்பிக்கிட்டு இருந்தானுங்க... பிக்பாஸ் ஒரு சமையல்காரரை அனுப்பி வச்சா... நிதியைப் பாதுகாத்துக்கலாம்... அதிக சேதாரமிருக்காது... இல்லேன்னா தின்னே தீர்த்துட்டானுங்கன்னு கணக்குக் காமிக்க வேண்டியிருக்கும்.... வனிதாக்காவை வேகமாய் அனுப்பியதில் இருக்கும் சிக்கலை இப்போது உணர்ந்திருப்பார் பிக்பாஸ்... கடைப் பேரெல்லாம் சொல்லி சாப்பாடு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

அப்புறம் ரெண்டாவது டாஸ்க், அவங்கவங்க உருவம் வரைஞ்ச பிளாக்குகளை பின்னால் இருக்கும் நம்பரின் படி அடுக்கி முழு உருவம் கொண்டு வந்து அடுத்தவர் எரியும் பந்தில் இருந்து காப்பாறிக் கொண்டு அடுத்தவர் அடுக்கும் பிளாக்கை பந்தை எரிந்து உடைக்க வேண்டும். 

சேரன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டே வந்தார்... ரெண்டு தடவை எறிந்தார். கவினை யாரும் கண்டுக்கலை... தர்ஷனின் டார்க்கெட் முகன், சாண்டியின் டார்க்கெட் ஷெரின், ஒரு கட்டத்தில் முகன் ஆக்ரோசமாக தர்ஷனை எறிய, நமக்குத்தான் முகன் வேறொரு மனநிலைக்குப் பொயிட்டானோன்னு தோணுச்சு... 

எல்லாரையும் அடித்து உடைக்க, சேரனுக்கு முதல் மதிப்பெண்... இதில் கவினும் சேரனும் போங்காட்டம் ஆடினார்கள் என்றாலும் (யாரையும் எறியவில்லை) கவினைத் தர்ஷன் இறுதியில் உடைத்துவிட்டான்... லாஸ்லியாவுக்குத்தான் வருத்தம்... சேரனை தன் நாதன் முந்த வேண்டும் என்பதில் தீவிர முனைப்பில் இருக்கிறார் அம்மணி.

கொஞ்சம் அதிரடியான டாஸ்க் இரண்டும் முடித்த களைப்பில் எல்லாரும் தூங்க, நடுநிசியில் விளக்குகளை எரியவிட்டார் பிக்பாஸ். யோவ் லைட்டை அமத்துய்யா என்றார் ஷெரின்... கவின் அவனிடத்தில் படுத்திருந்தான்... லாஸ்லியாவின் கால் சரியாயிருக்கும் போல... ஒருக்கால் கால் சரியாகலைன்னு சொல்லியிருந்தா அங்கயே காலுக்குப் பாதுகாப்பா காமாட்டுல படுத்திருந்திருப்பான்... அப்படி நடக்காதது பிக்பாஸ்க்கு நிம்மதி.

தர்ஷனைக் கூப்பிட்டு மூணாவது டாஸ்க்கைக் கொடுத்தார் பிக்பாஸ்... அதாவது கார்டன் பகுதியில் ஆளுக்கொரு தங்க முட்டை வைக்கப்பட்டிருக்கும்... அதை மற்றவர் உடைக்காமல் பாதுகாக்கணும்... யாராவது உடைக்கும் போது பார்க்கலைன்னா உரிமையாளார் அவுட், பார்த்துட்டா உடைப்பவர் அவுட்... ஆஹா... விடியவிடிய உக்கார வச்சிருவானே இந்தப் பிக்பாஸூ... அதுக்குள்ள உச்சா போயிருவோமுன்னு பாத்ரூம்க்குள்ள போக நீ நான்னு அடிச்சிக்கிட்டானுங்க.

எல்லாரும் முட்டையைப் பாதுகாத்துக்கிட்டு விடிய விடியக் கிடந்தானுங்க... சாண்டி ஒருமுறை முட்டையைப் பார்த்துக்கிட்டே பாத்ரூம் கதவைத் திறந்து வச்சி... ராத்திரியில பயத்துல உள்ளே போயி இருக்காம வெளியில நின்னு அடிக்கிற பிள்ளைங்க மாதிரி உச்சாப் போக, ஷெரினுக்குச் செமக் கடுப்பு... சேரன் இப்படிப் பண்ணாதீங்க சாண்டின்னு சொன்னார்.

அப்புறம் முட்டையைத் தூக்கி வெளியில போட்டுடலாம்... கண்ணை ஒருவர் மூட மற்றவர் வந்து உடைக்கலாம் என்றெல்லாம் தர்ஷனும் சாண்டியும் திட்டம் தீட்டினார்கள். சாண்டி ஷெரினுக்குத் தெரியாம முட்டையை உடைக்க முயற்சிக்க, அது உடையாமல் கீழே விழும் போது பார்த்து விட்டார் ஷெரின். 

பிக்பாஸின் இந்த டாஸ்க் விதிப்படிப் பார்த்தால் சாண்டி முட்டையைத் தட்டியதைப் பார்க்காத ஷெரின் அவுட்... ஆனா சேரன் போன்றோர் அவ பார்த்துட்டான்னு நிக்க, சாண்டியை அவுட்டாக்கி விட்டுடலாமான்னு எல்லாரும் யோசிக்க, பிக்பாஸ் ஒண்ணுமே சொல்லலை... எல்லாரும் அடைக்கோழி முட்டையைக் காத்த மாதிரி காத்துக்கிட்டு கிடந்தானுங்க... 

இதுவரை நடந்த சீசன்களில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுக்காக சிநேகன் சாப்பிடாமக் கொள்ளாம நாலுநாள் கிடந்த கார் டாஸ்க்த்தான் சிறந்தது. இதென்ன முட்டையாம்... பாதுகாக்கணுமாம்.... என்ன பிக்பாஸ்... ரொம்பப் போரடிக்க ஆரம்பிச்சிருச்சே... உங்க டாஸ்க்கு... முட்டையைப் பாதுகாக்குறதை விட தன்னோட பெட்டையைப் பாதுகாக்குறதுலயே குறியா இருக்கான் கவின்... அவனுக்காகவே எல்லாரும் ஷெரினை மய்யம் கொள்கிறார்கள்.

தெர்மாக்கோல் பந்து போட்டியில் தனக்கு முன்னே ஓடிய கவினின் மூட்டையை பிடித்தபடியே ஓடினாரே தவிர பிரித்து விடவில்லை லாஸ்லியா...

போட்டிகளில் எல்லாம் கவினுக்கு முட்டுக் கொடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறாரே தவிர தனக்கான விளையாட்டை விளையாடவில்லை லாஸ்லியா...

கவினை யாரேனும் போட்டியில் அடித்தால் அவன் அடிக்கும் முன்னே திருப்பி அடிக்கிறார் லாஸ்லியா...

யாரெல்லாம் கவினுக்கு எதிராய் நகர்கிறார்களோ அவர்கள் எல்லாம் தனக்கும் எதிரி என்பதாய் மாறிவருகிறார் லாஸ்லியா...

சின்னப் பிள்ளைக்கிட்ட நெருப்பு சுடும்ன்னு சொன்னாத்தான் அதை உடனே தொடும்... அது போல்தான் லாஸ்லியாவும்... காதலை விட்டுவிடு என்றதால்தான் அந்தக் காதலின் வேகம் கூடிக் கொண்டிருக்கிறது... இது இன்னும் தீவிரமாகும்... கஜாவை விட வலுப்பெறும்.

ரொம்பக் கவனமாய்ப் பார்த்துக் கொள்வதாய் கவின் காட்டும் உச்சபட்ச நடிப்பை முழுக்க முழுக்க நம்ப ஆரம்பித்ததில் அப்பா, அம்மாவின் அழுகையும் அறிவுரையும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுவிட்டது. அவர்களையும் தூக்கி வீசும் நாள் ரொம்பத் தூரத்தில் இல்லை.

இப்போது இவர்களின் காதல் இன்னும் தீவிரமாய் இருக்கிறது... மக்களிடம் காட்டப்படுவதில்லையே ஒழிய வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே சேரன் ஒதுங்கியிருப்பதாய்த் தெரிகிறது... இந்த வாரம் முழுவதும் சேரன் லாஸ்லியா பக்கம் போகவில்லை... ஷெரினுடன்தான் அதிக நேரம் செலவழிக்கிறார். 

தான் நினைத்ததை சப்டைட்டில் போடுமளவுக்குப் பேசியே சாதித்துக் கொண்டு விட்டான் கவின். லாஸ்லியா பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்... விஜய் டிவியும் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது... சனிக்கிழமை கமலும் இதே வேலையைப் பார்ப்பார்... 

கவினைப் பொறுத்தவரை தன் வெற்றிக்காகவே சுற்றமும் நட்பும் எனக் களம் அமைத்து வருகிறான். தனக்கான வெற்றிக்கே லாஸ்லியா மீது தூசு விழுந்தால் கூட துடிப்பதாய்க் காட்டிக் கொள்கிறான்.

கவினுக்காக தர்ஷனையும் சேரனையும் கூட எதிரிப் பட்டியலில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் லாஸ்லியா...

இருவருமே காதலிக்கத்தான் வந்தோமென்றால் பிக்பாஸ் இரண்டையும் வெளியில் போய்க் காதலியுங்கள் என விரட்டிவிட்டு, வேறு இருவருக்கு வைல்ட் கார்ட்  மூலம் வாய்ப்பளித்திருக்கலாம்.

இருவருமே போட்டிகளை எல்லாம் தியாகம் செய்கிறேன் எனக் கெடுத்து வருகிறார்கள். லாஸ்லியாவைப் பொறுத்தவரை எல்லாப் போட்டிகளிலும் கவின் முன்னால் வர வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். மற்றவரை முன்னிறுத்தி ஆடிய கவினை, லாஸ்லியா முன்னிறுத்துவதுதான் கவினுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இதுவரை வாங்கிய மொத்தப் புள்ளிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார்கள்... சாண்டி 29 புள்ளிகளுடன் முதலிலும்... ஷெரின் 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்க... மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னே...

எல்லாப் போட்டியிலும் தர்ஷன் தானே வெளியாவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ..? டவுட்டு # 3.

சேரனைவிட, தன்னைவிட பின்தங்கியிருக்கும் கலாபக் காதலன் கவினை முன்னுக்குக் கொண்டு வர தியாகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் லாஸ்லியா... இதை பிக்பாஸ் இன்று கண்டிப்பார் போல் தெரிகிறது...

என்னத்தை போடுற புரோமோவுக்கு காட்டுற நிகழ்ச்சிக்கும் எங்க சம்பந்தம் இருக்கு... சூர்யா பட டிரைலர் மாதிரி சூப்பரா இருக்கு... இன்னைக்கு நிகழ்ச்சி செமையா இருக்கும் போலன்னு பார்த்தா சூர்யாவோட படம் மாதிரி விளங்காமப் போயிடுது.

ஷெரின் கக்கூஸ் கவினை என்ன சொன்னுச்சுன்னு தெரியலை... பய மெல்ல ஒதுங்கிட்டான். 'ராதே... என் ராதே... நீதானே...'ன்னு லாஸ்லியா பின்னால சுத்த ஆரம்பிச்சிட்டான்.

காதல் கண்ணை மறைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

காதல் சுகமானதுதான்... சுமையாகாதவரை...

இப்ப நிகழும் நிகழ்வுகளைப் பார்க்கும் மரியதாஸின் மனநிலை எப்படியிருக்கும்..?

கண்ணீர் விட்டு எம்மகளை எனக்குத் தெரியும்ன்னு சொன்ன அந்தத் தாயின் மனநிலை..?

தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துட்டு விளையாடுக்கான்னு சொன்ன அந்த ரெண்டு தங்கைகளின் மனநிலை...?

எனக்கு யாரோட மனநிலை எப்படியிருக்கும்ன்னு தேவையில்லை... கவினோட மனசுல நானிருந்தாப் போதும்ன்னு நினைக்கும் லாஸ்லியாவை என்ன சொல்வது...?

லாஸ்லியா இப்போது விளையாடுவது பிக்பாஸ் விளையாட்டு அல்ல...

பின்னே...

காதல் விளையாட்டு.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 18 செப்டம்பர், 2019பிக்பாஸ் : விளையாண்ட கவின்

எழு வேலைக்காரா இன்றே இன்றே...
இனி செய்யும் வேலை நன்றே...

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே...
வரலாறை மாற்று வென்றே...

வேர்வை தீயே... தேசம் நீயே...

உன் சொல் கேட்டே... வீசும் காற்றே...

ஓயாதே... தேயாதே...  சாயாதே...

ஆராதே... சோராதே... வீழாதே.... போராடு.

Image result for bigg boss 86th day images sherin

ந்தப் பாட்டைத்தான் திருப்பள்ளியெழுச்சியாய் 86 ஆம் நாள் காலையில போட்டானுங்க... எவனும் ஆடணும்ன்னு நினைக்கலை... சேரன் கழுவிக்கிட்டு இருந்தார்... சாண்டியும் தர்ஷனும் மட்டும் ஆட முயற்சி பண்ணினானுங்க... பாட்டு நின்னுருச்சு.

தன்னுடைய உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த ஷெரினிடம் தனது வம்பைத் தொடர்ந்து கொண்டிருந்தான் கவின். நமக்கே கடுப்பாகுது அவன் பண்றது... ஷெரினுக்கு எரிச்சலாக இருக்காதா என்ன... இருந்தாலும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கவின் ஷெரினை எரிச்சலூட்டும் போதெல்லாம் அங்கே யார் இருக்கான்னு பார்த்தா... வேற யார் அவுக லாஸ்லியாதான்... இதற்காகத்தானே இம்புட்டுத் தூரம் பிரயாசைப் படுகிறார் கவின்ராஜா.

ஷெரின் எரிச்சலடைய, லாஸ்லியா ஒவ்வொரு கணத்தையும் ரசித்துக் கொண்டிருக்கிறார்... முகத்தில் அவங்க அம்மா வீட்டில் சுடும் பூரி போல பூரிப்பு... ஆஹா... என்ன சிரிப்பு... கவிராஜனுக்குள்ள அவுத்து விட்ட கன்னுக்குட்டி மாதிரி அம்புட்டு ஆனந்தம்... வெளிய காட்டிக்காம ஷெரினையே எரிச்சலூட்டிக் கொண்டிருந்தான். 

அதை வெளியில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த தர்ஷனின் முகத்தில் கோப ரேகைகள் இருப்பினும் கோபத்தைக் காட்டாது சிரித்துக் கொண்டே, ஷெரினை யாராச்சும் எதாச்சும் பண்ணுனீங்கன்னா... கொலை பண்ணுவேன்னு கத்த, ஷெரினுக்கு ஆச்சர்யம்.... ஆஹா... இந்தச் சத்தம் எங்கயிருந்து வருது... தர்ஷ் நீயா கொடுத்தே... சனம்... சனம்... உன் தரி'சனம்'... எனக்கு நீ தரணும் உன் மனசுல அரியா'சனம்'ன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு சிரிச்சாங்க... வெட்கப் புன்னகை வேற லெவல் போங்க.

அப்புறம் எல்லாரையும் கூப்பிட்டு தின்னுட்டு தின்னுட்டு சும்மாவே உக்காந்திருக்கீங்களேடா... வனிதா இருந்தாலும் வம்படியா வம்பிழுக்கும்... இப்ப அதுவும் இல்லை... நான் என்ன எழவைத்தான் முக்காமணி நேரம் போடுறது... முக்கி முக்கித் தேடி எடுத்தாலும் முப்பது நிமிடம் கடக்குறதே பெரிய விஷயம் போலவேன்னு தன்னோட நிலமையை எடுத்துச் சொல்லி, எப்பா டேய் விளையாடுங்கடான்னு கால்ல விழுந்து கெஞ்சி, பிக்பாஸ் வெற்றியாளரான உங்களோட மனநிலை எப்படியிருக்கும்ன்னு நடிச்சிக் காமிங்கன்னு சொன்னார் தலையைப் பிச்சிக்கிட்டு நிக்கிற பாஸ்.

முகன் ஹே... ஹேயின்னு கத்திட்டு பொறந்து ஊருக்குப் பெருமை... இந்த ஊருக்குப் பெருமை... மக்களுக்குப் பெருமையின்னு என்னவோ ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின மாதிரிச் சொன்னான். கவின் எதையுமே அந்த நேரத்துல உணர்ந்தாத்தான் நல்லாயிருக்கும்... இப்ப எப்படிச் சொல்றது... விளையாடவே மாட்டேன்... ஜெயிச்சா என்ன பண்ணுவேன்னு கேட்டான்னு சொன்னான். தர்ஷன் வேற நாட்டுல இருந்து வந்திருக்கேன்னு சொல்லி என்னமோ சொன்னான். சாண்டி கமலுக்கு பிக்பாஸ்க்கு எல்லாம் நன்றி சொன்னார். லாஸ்லியாவும் எதுக்கோ நன்றி சொன்னார். ஷெரினும் அப்படியே.

சேரன் வந்தார்... நாலாவது இடத்தில் இருந்த தன்னோட போட்டோவை முதல் இடத்தில் வைத்து அப்பத்தானே நான் வெற்றியாளன்னு சொன்னார். இளைஞர்கள் விளையாடும் இடத்தில் உனக்கென்ன வேலையின்னு சொன்னாங்க... என்னோட தனித்துவத்தைக் காட்டிட்டேன்... என்னால முடிஞ்சளவுக்கு விளையாண்டேன்... நிறைய கத்துக்கிட்டேன்... நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன்... நட்பையும் எதிரியையும் பெற்றேன்... எல்லாருக்கும் ஆர்மியெல்லாம் இருக்கு... எனக்குன்னு மக்கள் வோட்டு இருக்கு... அதுபோக மற்றவர்களின் ஆர்மிக்கும் என்னைப் பிடிச்சிருக்கு... இந்த வெற்றி எனக்குக் கிடைக்க காரணமாய் இருந்த மக்களுக்கும் விஜய் டிவிக்கும் நன்றின்னார்.

சேரன் பேசிய போது பேதி போன பெருச்சாளி மாதிரி உக்கார்ந்திருந்தான் கவின். லாஸ்லியாவோட நிலமைதான் சேரனுக்காக சிரிக்கிறதா... இல்ல கவினுக்காக தானும் பேதி போன பொம்பளப் பெருச்சாளியா மாறுறதான்னு... பார்க்கவே பாவமாயிருந்துச்சு... எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேங்கிற மாதிரி எப்படியிருந்த புள்ள... இந்த பய போட்ட பிராக்கெட்டுல பிரேக் இல்லாத வண்டி  பள்ளத்துல விழுந்த மாதிரி ஆயிருச்சு.

மறுக்கா கொஞ்ச நேரம் சமையல் கிமையல் பண்ணுங்கடான்னு விட்டாரு பிக்பாஸ்... சாண்டி சாண்டிமான் கதை சொல்லி எல்லாரையும் சிரிக்க வைச்சிக்கிட்டு இருந்தார். கவின் மற்றும் லாஸ்லியா மிஸ்ஸிங்... சாண்டிக்கிட்ட நல்ல திறமைகள் நிறைய இருக்கு... அடுத்தவரை ஓட்டுவதை மட்டும் விட்டுட்டா மனுசன் மனுசனாக இருப்பார்.

ஷெரினை விரட்டும் கவின்... பாத்ரூம் வரைக்கும் பொயிட்டான்... விட்டா உள்ள போயி உக்காந்து கதை பேசுவான் போல... படுத்திருக்கும் ஷெரினின் முழங்காலைப் பிடித்துக் கொண்டு இருந்தான்... இப்பவும் அங்கே லாஸ்லியா இருந்தார். என்னை ஏன்டா விரட்டுறேன்னு கேட்டதும் எனக்கு யார் இருக்கா... இப்படி விளையாடன்னு சொன்னான். எல்லாமே லாஸ்லியாவுக்கான பதில்களாய்த்தான் இருந்தன.

என்ன ஜென்மமோ இவன்னு தோனினாலும் அவனையும் அவளையும் காப்பாத்திக்கவும், அவளை அவனுடையவளாக ஆக்கிக் கொள்ளவும் மிகவும் சிரத்தையாக கவனமாக விளையாடுகிறான். எல்லாருக்கும் அவன் செய்வது பிடிக்கவில்லை என்பது முகத்தில் தெரிகிறது. சேரனைப் பொறுத்தவரை எதாவது சொல்லப் போனால் லாஸ்லியா காதலைத்தான் கெடுத்தே இவகிட்ட விளையாடுறதையும் ஏன் கெடுக்கிறேன்னு எகிறுவான் என்பதால் ஒதுங்கியிருக்கிறார். மற்றவர்கள் எல்லாரும் பூனைக்கு யார் மணி கட்டுவது என யோசிக்கிறார்கள்... பூனை விரட்டும் எலிதான் கட்ட வேண்டும்... எப்படியும் ஷெரின் கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

எல்லாரையும் மறுபடியும் கூப்பிட்ட பிக்பாஸ், மிகப்பெரிய டாஸ்க்கான 'சாயம் வெளுத்துப் போச்சு' கொடுத்தார். கலர்கலராய் தண்ணீர் நிரப்பப்பட்ட சோதனைக் குழாய்களில் இருப்பதை, எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப, யார் பொருத்தமானவர் என இருவரைத் தேர்ந்தெடுத்து அவரின் முன்னால் இருக்கும் கண்ணாடிக் குடுவையில் ஊற்ற வேண்டும். எல்லாரும் செய்த பின் அடுத்த சீட்டு, அடுத்த சுற்று. இறுதியில் யாருக்கு குறைவாக இருக்கிறாதோ அவரே வெற்றியாளர்.

சேரனை மக்கள் ஆதரவுக்காக நடிக்கிறார் என தர்ஷன் சொன்னது, கவினைச் சொன்னதால் சேரனையும் தர்ஷனையும் லாஸ்லியா சொன்னதென நிறைய நிகழ்ந்தது என்றாலும் பெரும்பாலும் லாஸ்லியா, கவினுக்கே ஊற்றப்பட்டது. இதில் ஷெரின், சேரன், தர்ஷன், முகன், லாஸ்லியா, சாண்டி, கவின் என வெற்றி பெற்றார்கள். முகனும் லாஸ்லியாவும் ஒரே எண்ணிக்கை பெற்றிருந்ததால் கூடிப் பேசி முகன் நாலு, லாஸ்லியா அஞ்சு என மாற்றிக் கொண்டார்கள்.

சேரன் ஷெரினிடம் இனி ரெண்டு வாரம்தான் முடிந்தவரை உன்னோட விளையாட்டை விளையாடு, எது மனதுக்கு சரியின்னு படுதோ அதைச் செய், யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். முடிந்த வரை விளையாடு இல்லைன்னா போயிடலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். இப்ப லாஸ்லியா சேரனிடம் அதிகம் ஒட்டுவதில்லை... இருவரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் கூட இல்லை... ஒருவேளை கவினுடன் ஒதுங்கியிருப்பது போல் நடிப்பதால் சேரனுடன் ஒதுங்கியே இருக்கலாம்.

அப்புறம் சமையல் நடக்க, கவின் தாளம் போட, மற்றவர்கள் ரசிக்க, அருமையாகப் பாடினான் முகன். அவனே எழுதிய பாடல் போல... நல்ல வரிகள்... லாஸ்லியாவைப் பார்த்து கவின் பாடுவதைப் போல... கவின் முகம்தான் தேவாங்கு போல இருந்தது. லாஸ்லியா ரசித்தார்... இன்னும் பாடல் ரிலீஸ் பண்ணவில்லையாம்... எல்லாருமே பாராட்டினார்கள்... ஆமா அந்த வரிகள் எல்லாமே அச்சு அசலா கவின் லாஸ்லியாவைப் பார்த்துப் பாடுவதைப் போல்தான் இருந்தது.

மறுபடியும் கக்கூஸ்க்கு ஷெரினை விரட்டிப் போனான் கவின்...ஷெரின் கொஞ்சம் சூடாகப் பேசவே, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு நேர வந்து சமையல் செய்யப் போவது போல் அடுப்பைப் பற்ற வைத்த லாஸ்லியாவிடம் வந்து சிவாஜியை முன் நிறுத்தினான். என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல்லன்னு என்னமோ பேசினான்... சப்டைட்டில் போட மறந்துட்டார் பிக்பாஸ்... அதென்ன ஷெரின்கிட்ட பேசும் போது மைக் உடையுற அளவுக்கு சப்தம்... லாஸ்லியாக்கிட்ட மைண்ட் வாய்ஸைவிட கம்மியாய்... நடிகன்டா நீ.

மறுபடியும் வாங்கடா டாஸ்க்குக்குன்னு மரக்கடை தராசோட ஒரு பக்கத்தை காலில் மாட்டி பேலன்ஸ் பண்ணி கொடுத்த மரக்கட்டைகளை அதில் அடுக்கி விழாதவாறு நிறுத்தி வைக்க வேண்டும்... ஒவ்வொரு மணி அடித்ததும் ஒரு கட்டையை எடுத்து வைக்க வேண்டும்... யார் கால் வலி பொறுத்து, மரக்கட்டை விழாமல் ஒவ்வொன்றாய் அடுக்கி கடைசி வரை நிற்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.

சேரன் உடனே வெளியேற, அடுத்து தர்ஷன், அவன் பின்னே ஷெரின், சாண்டி வெளியேற, லாஸ்லியா, கவின், முகன் ஐந்து கட்டைகளையும் வைத்து நின்றார்கள். லாஸ்லியா கவின் பொறுமையா விளையாடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். என்னதான் இருந்தாலும் வீட்டுக்காரரை விட்டுக் கொடுக்க முடியுமா..? லாஸ்லியா லாஸ் ஆக... முகனும் கவினும்... கவினுக்கு நிறைய ஆதரவு... இறுதியில் முகன் வெற்றியாளன்.... 27 நிமிடம் நின்றானாம்... கவின் 26 நிமிடங்களுக்கு மேல்... உண்மையில் இந்த 86 நாளில் கவின் முதல் முறை விளையாண்டிருக்கிறான்.

அழுகணும்ன்னாலும் கக்கூஸ்க்கு ஓடுறான்... கால் வலின்னாலும் கக்கூஸ்க்கு ஓடுறான்... அங்க வச்சே காலைச் சரி பண்ணுனாங்க... சேரன் அருமையா விளையாண்டாய் என அணைத்துக் கொண்டார். காலைப் பிடித்து விட்டார்... கவின் நல்லா விளையாண்டான் என எல்லாரிடமும் சொன்னார். அப்பா டேய்... இதெல்லாம் நடிப்புன்னு சொல்லிடாதீங்கடா... உண்மையைச் சொல்றான் அந்த மனுசன்... இன்னைக்கும் அவரு செஞ்சது நடிப்பா... இல்லயான்னு லாஸ்லியா சொல்ற மாதிரி, நடிக்கிறாருன்னு சொல்லிடாதீங்க... திறமையை மதிக்கத் தெரிந்த கலைஞன் அவர்.

அப்புறம் இன்னும் நேரமிருக்கே... உக்காந்து ஏதாவது பேசிக்கிட்டு இருந்துட்டு அப்புறம் சாப்பாடு போடு குருநாதான்னு நிப்பாங்களேன்னு சொல்லிட்டு, ஏய் எல்லாரும் இங்க வா... உங்களுக்குப் பிடிச்ச, பிடிக்காத, வருந்திய, கோபப்பட்ட என என்மேல எதாயிருந்தாலும் சும்மா சொல்லுங்க... கேட்டுக்கிறேன்னு பிக்பாஸ் சொன்னார். எவனும் நம்மளைக் கழுவி ஊத்த மாட்டாங்கன்னு நம்பிக்கை போல. 

படுக்கை அறைக்குள் போய் பேசிய ஷெரின், என்னை ஷெரின்னு சொல்லுடா என் செல்லக்குட்டின்னு சொன்னுச்சு... ரொம்ப நேரம் பிக்பாஸை லவ் பண்ண, அதையா கூப்பிட்டே குருநாதா... அங்கயே பேசிட்டு தூங்கியிருக்குமேன்னு சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

சேரன் பிக்பாஸ் குரலை ரொம்ப நேசிக்கிறேன் என்றார். முகன் பிக்பாஸை பார்க்கலைன்னாலும் அந்த அரட்டலான குரல் பயமுறுத்துது கொஞ்சம் அன்பாக் கூப்பிடுங்கன்னு சொன்னான். சாண்டி என்னை சிஷ்யனா ஏத்துக்கிட்டதுக்கு... அப்பப்ப கலாய்ப்பதற்க்கு கட்டிப் புடிச்சி முத்தம் கொடுக்கணும் என்றார். 

லாஸ்லியா தன்னை லாஸ்லியா என அழகாய் அழைப்பது பிடிச்சிருக்கு... யாரிடமும் சொல்ல முடியாத விஷயத்தை உங்களிடம் சொல்ல முடிகிறது என்றார். கவின் லவ் யூன்னு நாந்தான் அதிகமாச் சொல்லியிருப்பேன் குருநாதான்னு சொன்னான்... பின்னே அபி, சாக்சி, லாஸ்லியா,ஷெரின்.. அப்பப்ப பிக்பாஸ்... அவன் சொல்றது உண்மைதானே... மேலும் வெளிய வந்து கட்டிப்புடிச்சி உனக்கு முத்தம் கொடுப்பேன்னு வேற சொன்னான். சாக்சிக்கு ஊட்டி விட்டது ஞாபகம் இருக்கட்டும் குருநாதா... உதடு பத்ரம்.

தர்ஷன் எப்பப் பேசணும்ன்னு சொன்னாலும் கூப்பிட்டுப் பேசுறீங்க... எங்க மேல பாசமாயிருக்கீங்க... அப்படியே புரோட்டாவும் சிக்கன்கறியும் கொடுத்து விடுங்களேன்னு பிட்டைப் போட்டான். எது எக்கேடு கெட்ட எனக்கென்ன... எனக்கு வேலா வேலைக்கு சட்டிச் சோறும் தனியே கோழியும் வேணும் ரகம் இவன்... தமிழன்டா... திங்கிறதுக்கு கேக்குறதுல இருக்க ஒற்றுமை விளையாட்டில் இல்லை.

எல்லாரும் முடிச்சதும் சரி எல்லாரும் பேசிட்டீங்க... இனி போங்க... போயி சமையல் பண்ணுங்க... சாப்பிடுங்க... அப்புறம் நல்லாத் தூங்குங்க... குட்நைட்டுன்னு சொல்லிட்டு பிக்பாஸ் ஓடிட்டாரு... பின்னே தினமும் தின்னு தீர்த்தா சென்னையில இருக்க எல்லாக் கடையிலயும் வாங்கிக் கொடுத்தாச்சாம்... இனி செங்கல்பட்டுப் பக்கம்தான் போகணுமாம்... தின்னே விஜய் டிவி சொத்தை அழிச்சிருவானுங்க போல...

எங்களுக்கு புரோட்டா, சிக்கன் வேணுன்னு கத்திக்கிட்டு இருந்தானுங்க... முகன் புரோட்டாவோ சாப்பிட்டதில்லைன்னு வேற சொன்னான். மலேசியா முழுவதும் நம்மாளுகதான் கடை வச்சிருக்கானுங்க... வேணும்ன்னா நேர கேளுங்கடா... நேத்து ஒண்ணுதான் தின்னேன்.... எனக்கு புரோட்டாவும் குருமாவும் டேஸ்ட் பாக்கணும்ன்னு புழுகாதீங்கடா... எல்லாரும் கத்த, பிக்பாஸ் கடையை மூடிட்டாரு...

எங்க வனிதாக்கா இருந்தா வாங்காம விட்டிருக்குமா... பிக்பாஸை ஓடஓட விரட்டி வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கும்ல்ல... அக்கா மிஸ்ஸிங்கால புரோட்டாவும் மிஸ்ஸிங் போல...

எப்படியும் அழுதாச்சும் வாங்கித் தின்னிருப்பானுங்க...

இதைப் பார்த்துக்கிட்டே நான் தின்னது...

பாவக்காய் கூட்டு...

டிஸ்கி : நாளை முதல் அதிகமாக ஆணி புடுங்க இருப்பதால் இரவே உக்கார்ந்து எழுதியாச்சு. இனி தினமும் அப்படிதான் எழுதணும். இப்படிப் படிச்சிருந்தா கலெக்டர் ஆகியிருக்கலாம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019பிக்பாஸ் : கவினின் கணக்கு

வின் வெற்றி பெறணும்ன்னு நினைச்சி விளையாடலைன்னு சொல்றவங்களை நினைச்சாச் சிரிப்புத்தான் வருது. ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கவின்..?

இலங்கையில் துன்பப்பட்டு சனமின் காதலனாய், மாதவனாய் தர்ஷன் வந்திருக்கிறான்... அவன் வெல்லட்டும்.

இலங்கையில் குடும்பத்தை விட்டுவிட்டு தமிழகத்தில் குத்துவிளக்கு ஏற்ற லாஸ்லியா வந்திருக்கிறாள்... அவள் வெல்லட்டும்.

மலேசியாவிலிருந்து மக்குப் பயலாய், பலர் மதிக்கும் பயலாய் முகன் வந்திருக்கிறான்... அவன் வெல்லட்டும்.

லாலாவை விட்டுவிட்டு வோலாவுலா மாமியாருக்கு அப்பனாய் மகத்தான மனிதானாய் சாண்டி வந்திருக்கிறார்... அவர் வெல்லட்டும்.

இப்படித்தான் இதுவரை பேசி வருகிறான். இது எப்படியிருக்குன்னா பக்கத்து இலைக்குப் பாயாசம் போடுங்க தம்பின்னு சொல்லிட்டு, அப்படியே நமக்கு ரெண்டு கரண்டி முந்திரி, கிஸ்மிஸோட அள்ளிப் போடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு. 

எங்கய்யா ஒருத்தர் இருக்கார்... அவரோட திருமண, திருவிழா, கோவில் பூஜைகளுக்குச் சென்றால், அவர் அருகில் அமர்ந்தால் நமக்கு அதை வை, இதை வையின்னு சொல்லிக் கூப்பிட்டு தனக்கும் வைத்துப் போகச் சொல்வார். அதுதான் கவின்.

அவனோட விளையாட்டு அபி. சாக்சி, லாஸ்லியா என்பதையெல்லாம் தாண்டியது. உனக்கு நானிருக்கேன் மச்சான் என்பதாய்க் காட்டிக் கொண்டு, மலையிலிருந்து தள்ளி விடும் நம்பியார் ரகம் அவன். 

இதுவரை அவன் போட்ட எந்தத் திட்டமும் வேலை செய்யாமல் போனதில்லை... எந்த ஒரு திட்டத்திலும் அவன் நேரடியாக களமிறங்க மாட்டான். அதுக்குத்தான் லாஸ்லியா, சாண்டி, முகன் மூவரையும் வைத்திருக்கிறான். நாமினேசன் நாட்களில் பெரும்பாலும் பெண்களின் முந்தானையைப் பிடித்தபடியே திரிவான்... இவன் வித்தியாசமான வில்லன்.

நேற்று ஷெரினுடன் அவன் நடத்திய நாடகத்துக்கான காரணங்கள் இரண்டுதான்... அது என்ன என்பதைப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இப்ப பிக்பாஸ் வீட்டுக்குள்ள தூங்குறவனுங்களை எழுப்பலாம்.

Image result for biggboss 85th day images hd

85ஆம் நாள் திருப்பள்ளி எழுச்சியாய் 'நிமிர்ந்து நில்... துணிந்து செல்...' பாட்டைப் போட, எவனுமே எந்தரிக்கவே இல்லை... இன்னும் பதினைந்து நாள்தான் இருக்கு வீரமாய் விவேகமாய் விளையாடுங்கடான்னு சொல்றதுக்கு அறிகுறியாப் பாட்டைப் போட்டா, பயபுள்ளைங்க சனிக்கிழமை இரவு சரக்கடிச்சவனுங்க மாதிரி மட்டையாகிக் கிடக்கானுங்க...

உங்களை வச்சி இந்த பிக்பாஸை நடத்துறதுக்கு பழனிக்கு ரெண்டு தடவை நடந்து போய் மொட்டையும் போட்டுட்டு பஞ்சாமிர்தமும் வாங்கித் தின்னுட்டு வந்திருப்பேன்னு நினைச்ச பிக்பாஸ் இருங்கடி இன்னைக்கு ஆப்படிக்கிறேன்னு மனசுக்குள்ள கறுவிக்கிட்டே பாட்டை நிறுத்தியிருப்பார்ன்னு தான் நினைக்கிறேன்.

அன்னை வனிதா இல்லாத சமையலறை ஜெயலலிதா இல்லாத அதிமுக மாதிரி அதகளப்பட்டுக்கிட்டு இருந்துச்சு... ஆளாளுக்கு ஆட்டம் போட்டானுங்க... எவனுக்கும் எதுவும் தெரியலை... இருந்தாலும் ரெண்டு வருசமா அவுகளை ஏத்துக்கிட்ட மாதிரி இவுகளையும் இன்னும் பதினைஞ்சி நாளைக்கு ஏத்துக்கத்தானே வேணும்... அதுதானே நம்ம தலையெழுத்து.

சாண்டி தோசை ஊற்றி கல்லைச் சுற்றினார்... கருப்பாக ஏதோ இருக்க... ஈஈஈ தோசை என்றார். பின்னர் இது ஈயல்ல வண்டுத் தோசை... எனச் சொன்னார். எப்படியும் எவனும் ஒழுங்காச் சாப்பிடிருக்க மாட்டானுங்க... எதாவது ஹோட்டல்ல இருந்துதான் போயிருக்கும்... நேற்றுச் சொன்னது மாதிரி பிக்பாஸ்க்கு தீனிச் செலவு அதிகம், இம்முறை தீனிக்கான செலவைக் கழிச்சிக்கிட்டே சம்பளம் போட்டாலும் ஆச்சர்யமில்லை.

அப்புறம் நாமினேசன்... எப்பவும் போல அவங்க இவங்களைச் சொன்னாங்க.... இவங்க அவங்களைச் சொன்னாங்க... எல்லாரும் சொன்ன ஒரே காரணம் நாம இங்க எப்படியோ அதே மாதிரி அங்கிட்டு அவங்க பெரிய தலைக்கட்டுங்கிறதுதான். 

சேரன், ஷெரின், கவின், லாஸ்லியான்னு சேரன் ரகசிய அறைக்குச் சென்ற வாரத்தில் இருந்த அதே நால்வர்... இம்முறை சேரன் அல்லது ஷெரின், அப்ப அடுத்த வாரம் ஷெரின் அல்லது சேரன்... ஹி...ஹி... இருவாரங்களில் இருவரும் விரட்டப்படுவார்கள்.

யாரை நாமினேசன் பண்ணினோம்ன்னு அவனவன் சொல்லிக்கிட்டு இருந்தான்... சட்டதிட்டங்கள் எல்லாம் எங்களுக்கு கழட்டிப் போட்ட சட்டை மாதிரியின்னு எல்லாத்தையும் சொல்லிடுறானுங்க... கமல் ஒருமுறை கூப்பிட்டு தனித்தனியா கேமை விளையாடுங்கன்னு சொன்னதை லாஸ்லியால்லாம் அப்பவே கவின்கிட்ட சொல்லிருச்சுன்னு நேற்றும் சொன்னுச்சு... பிக்பாஸ் தண்டிக்க மாட்டார் மாறாக காப்பாற்றுவார். 

எல்லாரையும் உக்கார வைச்சி, இந்த வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளெல்லாம் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே, நீங்கள் விளையாடுவதைப் பொறுத்து உங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றார் பிக்பாஸ். ஆமா பெரிசா என்ன டாஸ்க் கொடுக்கப்போறே... மதியத்துக்கு சாப்பாடு அனுப்புனியா இல்லையா..?  அதைச் சொல்லு முதல்ல... என்பதாய் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

பாட்டுக்கு ஆடலை... நாமினேசன் பண்ணிட்டு உன்னைத்தான் பண்ணுனேன்னு சொல்லிக்கிறானுங்க... இது இறுதிப்போட்டிக்கு நேரடித்தகுதிக்கான வாரம்ன்னு சொன்னதுக்கும் பெரிசா எதுவும் காட்டிக்கலை... இவனுகளுக்கு விளையாடுற எண்ணத்தைவிட, கமல் சார் சொன்ன மாதிரி பிக்னிக் வந்திருக்க நினைப்புத்தான் இருக்கும் போல, முதல் போட்ட நாம கடைசியில முக்காடா போட்டுக்கிட்டுப் போக முடியும்ன்னு நினைச்ச பிக்பாஸ், பாடலுக்கு ஆன கடுப்புடன் எல்லாரையும் லிவிங் ஏரியாவுல உக்கார வச்சி, நாங்க கூட்டியும் கொடுப்போம்... காட்டியும் கொடுப்போம் டாஸ்கை செஞ்சிட்டார்.

ஆம்... குடும்பங்கள் வந்த போது ரகசியமாய் சொல்லிச் சென்ற யாரையும் நம்பாதே, விளையாட்டை விளையாடு, எல்லாரும் உன்னைப் பயன்படுத்திக்கிறாங்க, உறவு முறையெல்லாம் சும்மா என எல்லாத்தையும் போட்டுக் காட்டிட்டார். இப்பவாச்சும் அறிவு வந்து ஆக்ரோசமாக விளையாடுங்கடான்னு சொல்லாமல் சொன்னார். விளையாடுறானுங்களான்னு பார்ப்போம்.

பிக்பாஸ்... தாங்க்யூ பிக்பாஸ்... லவ் யூ பிக்பாஸ்... எனக்கு எடுத்துக் கொடுத்துட்டீங்க பிக்பாஸ்... இனிப் பாருங்க என்னோட செயல்திறனை... அடிச்சி ஆடுவேன் பிக்பாஸ்... அப்படின்னு மனசுக்குள்ளே கத்தியிருப்பான் போல கவின். பிக்பாஸூம் அடிச்சி ஆடுவான்னு மகிழ்ந்திருப்பார் போல. பய லாஸ்லியாவை திரும்பி தன்னோட கட்டுக்குள் கொண்டு வர நடிக்க ஆரம்பிச்சிட்டான்.

கரகாட்டக்காரன் செந்தில் போல (திருவிழாவுல காணமப் போன பிள்ளை மாதிரி) முகத்தை வைத்துக் கொண்டு லாஸ்லியாக்கிட்ட, உங்கம்மா என்னைத்தான் சொல்றாங்க... உன் தங்கச்சி என்னைத்தான் சொல்றா... உங்கப்பா என்னைத்தான் சொல்றாரு... கமல் சார் என்னைத்தான் சொல்றாரு...பிக்பாஸ் என்னைத்தான் சொல்றாரு... நீ கூட கமல் சார்க்கிட்ட என்னைத்தான் சொன்னே... சேரப்பாவும் என்னைத்தான் சொல்றாருன்னு நடிக்க ஆரம்பிச்சிட்டான். முகத்தை டிசைன் டிசைன்னா மாத்துறதுல கில்லாடி போல... நவரசநாயகன் கார்த்திக் தோத்தார் இவனிடம்.

இவன் புலம்பவும் லாஸ்லியாவுக்கு கண் கலங்கிருச்சு... உன்னைச் சொல்லலை... சேரப்பாவோட பாசம் உண்மையா நடிப்பான்னு தெரியலைன்னுதான் நான் அப்பவுல இருந்து இப்ப வரைக்கும் சொல்லுறேன்னு தேத்த ஆரம்பிக்க, ஹிஹி... புள்ள கவுந்திருச்சு... கவினு கண்ணாடியைக் கலட்டிறாதேடான்னு தேவாங்கு முகத்தை தேதே...வாவா...ங்ங்...குகு முகமா மாத்திக்கிட்டான். லாஸ் totally loss.

சேரனின் அன்பை, பாசத்தை பலரும் சொல்லிச் சென்ற பின்னும் இன்னும் அது உண்மையா பொய்யான்னு ஆராய்ச்சி செய்யுற, எதையுமே நான் எனக்குள்ள யோசிச்சித்தான் முடிவெடுப்பேன்னு சொல்ற லாஸ்லியவால் கவினின் நடிப்பை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை... அது 100% உறுதியானது... நம்பகத்தன்மையானது... ராணாடார் முறுக்குக் கம்பியைவிட சிறந்தது, சங்கர் சிமிண்டைவிட தரமானதுன்னு நம்புறதை என்னத்தைச் சொல்றது... உன் விதி எழுதப்பட்டது... அதை மாற்றவா முடியும்..?

போட்டியாளர்களைச் சந்திக்க ரெண்டு பேரை அனுப்புனானுங்க... என்னவோ அத்தை மக்கள் மாமன் மக்கள் பாத்துக்கிற மாதிரி வந்தவனுங்களும் இருக்கவனுங்களும் அளவளாவி மகிழ்ந்தானுங்க... அவனுக பாட்டுப் பாடச் சொன்னானுங்க.... அதுவும் ஸ்கூல் டாஸ்க் மாணவர்களைப் போல, என்ன ரசனையோ தெரியலை.... சாண்டி கதாபாத்திரத்துக்குள் போய்விட்டார்... சேரன் தலைமையாசிரியராயிட்டார்.. நாம பள்ளிக்கூடம் போகாம படத்துக்கு போற பயலா எஸ்கேப் ஆயிட்டோம்.

முதல் போட்டி : பலூன் உடைத்தல்

இரண்டு கணுக்காலிலும் கட்டிய பலூனை மற்றவர் உடைக்காமல் பாதுகாக்க வேண்டும்... அப்படிக் கடைசி வரை பாதுகாப்பவரே வெற்றியாளர்... லாஸ்லியாவைப் பாதுகாக்குறதுன்னா திங்காமத் தூங்காமச் செய்வான். இது விளையாட்டுல்ல... அதெப்படி விளையாட முடியும்...? அதனால முதல் அவுட்... அப்புறம் முகன், லாஸ்லியா, சேரன், ஷெரின்ன்னு வரிசையா அவுட்டு... தர்ஷனும் சாண்டியும் ரொம்ப நேரம் விளையாண்டாங்க... கால் வலியுடனும் விடாமல் விளையாண்டு தர்ஷனே வெற்றி.

இரண்டாம் போட்டி :  கயிறு இழுத்தல்

ஷெரின், தர்ஷன், கவின் இழுக்க சாண்டி, லாஸ்லியா, முகன் வீழ்ந்தார்கள். சேரனை நீ ஒரு ஓரமா நின்னு வீடியோ எடுப்பான்னு சொல்லிட்டானுங்க... அவரும் கர்ம சிரத்தையோட வீடியோ எடுத்தார். இந்த வார விளையாட்டுல சேரனை சேரனை இப்படி ஓரமா நிக்கச் சொல்லிட்டா எப்படி நேரடி இறுதிக்கு அவரும் களத்தில் இருப்பார்ன்னு தெரியலை... சரி விடுங்க... கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் பிக்பாஸ் போடுற கணக்குச் சரியா வரும்.

ஷெரின் முட்டையைக் கலக்கி எதோ ஒண்ணு செஞ்சாங்க... அவங்களுக்கு உதவியாய் லாஸ்லியாவும் உபத்திரவமாய் கவினும்... உனக்கென்னடா பிரச்சினை என்பதை சிரிச்சபடியே ஷெரின் கேட்டாங்க... வரும் நாட்களில் சிரித்தபடி கேட்பாரா என்பது சந்தேகமே.

மூன்றாவது போட்டி : வரிசைப் படுத்துதல்

யார் வெல்லக் கூடிய தகுதி படைத்தவர் என்பதை அவரவர் பார்வையில் வரிசைப்படுத்தி நிற்கச் சொல்ல வேண்டும்... பெரும்பாலும் தர்ஷன் முதலிடம் முகன் இரண்டாமிடம்... சேரனுக்கு நாலவது இடம்... தன் காதலுக்கு எழவைக் கூட்டியவன் என்பதால் கவின் மட்டும் அவருக்கு ஏழாவது கொடுத்தான்... லாஸ்லியா மற்றும் கவினுக்கு ஆறு மற்றும் ஏழு. 

கவினை இறுதியில் நிறுத்திய போதெல்லாம் லாஸ்லியாவின் முகத்தில் இருபது கோடி சூரியன். கவினுக்குச் சேரன் நாலு கொடுத்தார், தர்ஷனுக்கும் முகனுக்கும் கடைசி... அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு இறுதிப் போட்டிக்கான நேரடி வாய்ப்பு வேணுமய்யா என்பதே... இதுவும் ஒரு சரியான சிந்தனையே.... உடல் வலிமை காட்டி வெல்ல முடியாத போது அறிவால் வெல்ல முயற்சிக்கலாம்... தப்பில்லை.

லாஸ்லியா முக அழகுக்கு மாவு பூசி கண்ணுக்கு வெள்ளரி வைத்துப் படுத்துவிட, ஷெரினைக் கலாய்த்துக் கொண்டிருந்தான் கவின்... ஷெரினும் முடிந்தவரை போராடிக் கொண்டிருந்தார்... லாஸ்லியா படுத்தபடி அதை ரசித்துக் கொண்டிருந்தார் என்று தோன்றினாலும் மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்திருப்பார்... கவினை அல்ல பெத்த அப்பனை... தர்ஷன் இருமுறை பார்த்துக் கொண்டே சென்றான்... கவினுக்கு எப்படியும் கச்சேரி இருக்கும்ன்னு தோணுது.

இப்ப வருவோம் ஆரம்பத்தில் சொன்ன கவினின் நாடகத்துக்கு... ஷெரினைச் சீண்ட இரண்டு காரணமே உண்டு.

அதில் முதலாவது, லாஸ்லியாவை விட்டு விலக முடியாது என்பதையும் அவளைக் கைக்குள் வைத்திருந்தால்தான் இன்னும் மூன்று வாரங்களுக்கு பிரச்சினையில்லாம் இருக்கும் என்பதையும், அவ அப்பன் ஆத்தா சொன்னா என்ன... கவின்தான் என் மூச்சுன்னு சொல்ல வைக்கிறேனா இல்லையா பார்ன்னு முடிவு பண்ணிட்டான். அதற்கான ஆரம்பமே இவ்விளையாட்டு. 

எந்தப் பொண்ணுக்குமே தன்னை விட்டுவிட்டு அடுத்தவளுடன் தன் அன்புக்குரியவன் கடலை போடும் போது கோபம் வரத்தான் செய்யும்... இதே வீட்டில் சாக்சியைப் பார்த்தோம்தானே.. அபியைப் பார்த்தோம்தானே... அப்படி ஒரு கோபத்தை லாஸ்லியாவிடமிருந்து வெளிக்கொண்டு வந்து தன் காதலைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து லாவகமான காய் நகர்த்துகிறான்.

இரண்டாவது இப்ப அவன் நாமினேசனில்... லாஸ்லியா ஒதுங்கி நிற்கிறாள்... சேரனுக்குக் கூட வீட்டுக்குள் நிற்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கலாம் என்றாலும் அவரோட நேரடியாக மோத முடியாது. மறைமுக மோதல்தான்... சாண்டி கூட சேரனுடன் ஒட்டுதலாகி விட்டார்... இனி சாண்டி இந்தத் தாக்குதலுக்கு ஒத்துப்பாரான்னு தெரியலை. எனவே தானும் லாஸ்லியாவும் வெளியேற்றத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் ஷெரினைக் கோபத்தின் உச்சிக்கு கொண்டு போய், கவின் ஜாலியாத்தான் விளையாண்டான் ஷெரின்தான் இப்படிப் பண்ணுறாள்ன்னு சக போட்டியாளர்களை வைத்தே சொல்ல வைத்து , மக்கள் ஓட்டில் பின்னுக்குத் தள்ளி, தாங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கு. இது அவனுக்கு நிறையத் தடவை சரியாக வேலை செய்திருக்கிறது. தனக்கு ஓட்டு விழும் என்பதை உணர்ந்தே வைத்திருப்பதால் லாஸ்லியாவை நிறுத்தச் செய்யும் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டு காரணம்  மட்டுமே ஷெரின் சீண்டலில் முக்கியமானதாய்...

இதில் ஷெரின் எப்படியும் புரிந்து அதைத் தவிர்த்து தன் விளையாட்டில் நேர்மையாய் இருக்க வாய்ப்பிருக்கு... ஆனால் லாஸ்லியா, இவனின் நடிப்பெல்லாம் எதற்கானது என்பதை உணரும் நிலையில் இல்லாததால் மீண்டும் வீழ்வார்... மரியதாஸின் பாசத்தை கவினின் நடிப்பு காவு வாங்கும் நாள் விரைவில்.

விளக்கணைத்த பின் இருவரும் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கவிராஜனை இப்படியே இரு... அழகாயிருக்கு... ஜாலியா இருக்குன்னு லாஸ்லியா சொன்னாங்க... கவினின் கணக்கு சரியான பாதையில் நகர ஆரம்பிப்பதில் தேவாங்கு முகம் தேவதர்ஷினி முகமாய் மாறியிருந்தது... அது சில நாட்களுக்குச் ஷெரினிடம் சந்திரமுகி முகத்தைக் காட்டும்.

லாஸ்லியா காதலோடு பேச, கவின் லாஸ்லியாவுக்குச் சொன்னது...

குட் நைட்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 16 செப்டம்பர், 2019பிக்பாஸ் : வெளியேறிய 'வாயாடி' வனிதா

Image result for bigg boss tamil 15th september images hd

ண்டவரின் வருகையில் இந்த வாரம் அவ்வளவு உயிர்ப்பில்லை... 

உப்பில்லை... 

உரைப்பில்லை... 

உறுதியாய் எதுவுமில்லை...

உள்ள இருக்கவனுங்க செய்ய டாஸ்க்கும் இல்லை...

ஐந்தாவது மற்றும் எட்டாவது பொதுத் தேர்வு குறித்துப் பேசினார்... இது எதனால் தேவையில்லை... இதனால் ஏற்படும் பாதக, சாதகங்கள் என்ன... என்பதையெல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்த பின்னர் கமல் போன்றோர் பேசுவதே சாலச் சிறந்ததாக அமையும். எதிர்க்கட்சி நான் என்பதாய் பேசுதல் பல நேரங்களில் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதைச் சரிவரச் சொல்ல முடியாமல் போய்விடும். பொங்குதல் அழகுதான்... ஆனால் பொங்கும் முன்னர் நிறைய யோசிக்க வேண்டும். மேடைக்கான பேச்சு அழகல்ல... நான் பொதுத்தேர்வை ஆதரிப்பவன் இல்லை.

முகனுக்கு வந்த போன்காலில் விளையாட்டை நல்லாத்தான் விளையாடுறே... ஆனா யாராவது அடிச்சிக்கிட்டா அந்தப் பக்கம் போகாமல் வடிவேலு மாதிரி ஒதுங்கிப் போயிடுறியேன்னு கேட்டாங்க... தான் சண்டை நடக்கும் போது அங்கு போய் விலக்கிவிட முடியுமென்றால் போவேன் என்றும் சில நேரங்கள் விலக்கிவிட முடியாததுடன் நாமே சண்டையைத் தூண்டி விடுவது போலவும் அமைந்து விடுவதால் விலகிப் போகிறேன். இனி சண்டையின்னா முத ஆளா அங்க நிற்பேன்னு சொன்னான்.

உடனே கமல் முன்னால் போய் நிற்பது சிறப்பு... பின்னால் போய் நின்னா நமக்கே கூட அடி விழலாம் என்றார். அதன் பின் என்ன செய்யிறதுன்னு தெரியாம விக்கிரமன் ஒரே பாட்டை ஒன்பது தடவை போடுற மாதிரி... கீறல் விழுந்த ரெக்கார்ட் திரும்பத் திரும்பப் பாடுற மாதிரி... கேட்ட கேள்விகளே மீண்டும் எல்லாருக்கும்.

சனிக்கிழமை இவங்க வரலைன்னு வருத்தப்பட்டேன்னு சொன்னதால, சாண்டிக்கு கொழுந்தியாவையும் மாமியாரையும் கூட்டியாந்து கண்ணீர்க்கூட்டு வச்சானுங்க... மாமியார் மாப்பிள்ளையை மாப்பிள்ளைன்னு கூப்பிட்டதில்லையாம்... எஞ்சாமி, எங்கப்பா, தங்கம்ன்னு என்னென்னமோ சொன்னாங்க... அடி ஆத்தி என்னமா உருகுறானுங்க... சாண்டிக்கு விழும் ஓட்டுக்களை இருநூறு சதவிகிதமாக மாற்றும் பகிரங்க முயற்சியில் வெற்றியும் பெற்றார்கள்.

நானும் தான் என் மாமியாரை இத்தனை வருடத்தில் நேருக்கு நேர் அத்தையென்று சொன்னதில்லை... அவரும் மாப்பிள்ளை என்று சொன்னதில்லை.... எங்களுக்குள் மாமியார்/மாப்பிள்ளை, அம்மா/பிள்ளை, அக்கா/தம்பி என எல்லா உறவு இருக்கலாம்... வெளிக்காட்டித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... மரியாதையிலேயே மதிப்புத் தெரியும்.

இவனுங்க என்னடான்னா எங்கப்பாம்மா மாதிரி, என் மகளுக்கு அப்பா மாதிரியின்னு புலம்புறானுங்க... இதெல்லாம் வேற லெவல்... வேகாத அவல்.

ஒருமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் சாண்டி என் மனைவி, மாமியாரெல்லாம் மதிக்கவே மாட்டேன்னு சொன்னதாய் ஞாபகம். இன்று செல்லக்குட்டி... செல்லாக்குட்டியெல்லாம் போடுகிறார்கள். நடிகர்களின் உலகம் கற்பனையிலானதுதானோ..?

அப்பறம் ஷெரினுக்குச் சித்தி, சேரனுக்குத் தங்கை மகள் எனச் சிலரை மேடையேற்றினார்கள். அது போக 'லாலா...லாலா...லாலி'ன்னு வீடியோவாய் சில வாழ்த்துக்கள் தர்ஷனுக்கு... சேரனுக்கு... ஏன் கமலுக்கும் கூட.

ஆம்... அவரின் அண்ணன் சாருஹாசன் பேசினார்... தம்பியின் சினிமா ஆசையும் படிப்பைக் கெடுத்து அப்பா சினிமாவில் நடிக்க வைத்ததையும் தான் அவருக்கு அப்பா மாதிரித்தான் என்பதையும் சொன்னார். கமலும் அதை ஒத்துக் கொண்டார்... அப்பாவின் அம்பது வயதுக்கு மேல் பிறந்தவன் என்பதால் அண்ணன்கள் எல்லாருமே எனக்கு அப்பாக்கள் போலத்தான் என்றார். சந்திரஹாசன் கமலின் நம்பரை 'FB'  எனச் சேமித்து வைத்திருப்பதைப் பார்த்து அப்படின்னா என்னண்ணான்னு கேட்டதுக்கு, அது அப்படித்தான் நீ சும்மா போ என்றவர் FIRST BORN என்று அர்த்தம் என்றாராம்.

யாரெல்லாம் வரும் வாரங்களில் போவாங்கன்னு கேட்டதுக்கு வனிதா, லாஸ், கவின் என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாய்.... கவினெல்லாம் போகும் வாய்ப்பே இல்லைன்னு நாம சொன்னா யார் நம்புறா...

வனிதா ஏன் தலைவர் டாஸ்கில் விட்டுக் கொடுத்தார் என்ற கேள்விக்கு இங்க ஓட்டுப் போடுற முறையே எனக்குப் புரியலை சார்... தலைவியானா இந்த வாரம் காப்பாற்றப்படுவேன்... எப்படியும் மறுவாரமே மறக்காம குத்திருவானுங்க... நீங்களும் கவினு லாஸூ உள்ள, வனிதா வெளியேன்னு சொல்லுவீங்க... அதுக்கு நானே போயிடலாம்ன்னுதான் விட்டுக் கொடுத்தேன் என்றார்.

அதே கேள்வி தர்ஷனுக்கு... லாஸ் விளையாடவே இல்லை... கவினோட கடலை போட்டு மகசூல் பார்க்கவே இருபத்தி நாலு மணி நேரம் பத்தலை... மதிய வெயில்ல கூட பதியம் போட்டுக்கிட்டு இருக்கா... இதையெல்லாம் பார்த்து அவளைத்தான் நாமினேட் பண்ண நினைச்சேன்... ஆனாலும் உள்ளுக்குள்ள 'எல்லாமே எந்தங்கச்சி அவ இல்லாம...' அப்படின்னு பாட்டு ஓட ஆரம்பிச்சிருச்சி... நான் பொயிட்டா அவளைத் தேற்ற சேரப்பாவும் இல்லை அதனால அவளைத தலைவியாக்கிட்டா நாமினேசன்லயும் வரமாட்டா... விளையாடவும் செய்வாள்ன்னு பார்த்தேன். விட்டெல்லாம் கொடுக்க மாட்டேன்... அவளுக்கு ஒரு உந்துதலா இருக்க நினைச்சேன்னு சொன்னான்.

உடனே கமல் அப்ப அபிராமிக்கு விட்டுக்கொடுத்தது எனக் கேட்க, அது அவளை எல்லாரும் ஒதுக்கியதால அவ என்னாலயும் எல்லாம் செய்ய முடியும்ன்னு காட்ட வேண்டுமென விட்டுக் கொடுத்தேன்... அது கூட உந்துதல்தானே ஒழிய விட்டுக் கொடுத்தல் இல்லை என்றான். விட்டுக்கொடுத்தல் என்பது தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என்பதாய்ச் சொன்னான்.

சேரப்பா... சேரப்பான்னு எல்லாரும் சொன்னாலும் சேரனுக்குத் தன் அப்பாவைப் பார்க்க ஆசை... அதை கமலிடமும் சொன்னார். கூடவே தர்ஷனுக்குப் பிறந்தநாள்ன்னும் சொன்னார். அட ஏனய்யா அதை வைத்து இன்னைக்கு நிகழ்ச்சியை நகர்த்தலாம்ன்னு பார்த்தா முந்திரிக்கொட்டை மாதிரி முந்திட்டியேன்னு கமல் சலிக்காமல் சலித்துக் கொண்டார்.

யார் காப்பாற்றப்படுவீர் என்பதற்கு உங்கள் குடும்பங்கள் வந்தபோது ஒலித்த பாடல் ஒலிக்கும் என்றார். முதல் காப்பாற்றல் வேறு யாராய் இருக்கப் போகிறது... ஆமா... கவின்தான்... தெரிஞ்சதுதான் விடுங்கடேன்னு சொல்லும் போதே, கேமரா லாஸ்லியா முகத்தை அருகில் காட்டுச்சு... ஆஹா... எத்தனை சந்தோஷம்... கண்ணெல்லாம் காதல் வழிந்தது... வெளியில அப்பன் இருப்பது தெரியாமலேயே கண்களை விரிக்குது... நிப்பாட்டி வச்சாலும் நிக்கக் கூடியதா காதல். இருபது கோடி நிலவுகளை அந்த முகத்தில் நான் பார்த்தேன்.

ரெண்டு பேரும் ஒரே தட்டில் சாப்பிடும் போட்டோக்கள் எல்லாம் வரத்தான் செய்யுது... காதல் இன்னும் வீரியமாய்த்தான் நகர்கிறது போல. விஜய் டிவிதான் அதைக் காட்டாமல் ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்காங்கன்னு சீனைப் போட்டுக்கிட்டு இருக்கு போல...

விரிந்த கண்களும் மலர்ந்த உதடுகளும் சிவந்த கன்னமும் மறையும் நொடிக்குள் கவினும் லாஸ்லியாவும் அருகருகே அமர்ந்து விட்டார்கள். பின்னே என்ன மரியதாஸா மரியாதையாக் கட்டி வையி... இல்லேன்னா என்னை மறந்துடுன்னு வெளிய போயி சொல்லப் போறா... ஒரு நடுத்தரக் குடும்பம் தெருவில் நிற்கப் போகிறது... அதெல்லாம் பற்றிக் கவலைப்படாதீங்க... அவ மாடர்ன் பொண்ணுன்னு கமல் தட்டிக் கொடுப்பார் என நம்புவோமாக.

அப்புறம் தர்ஷன்... பின்னே சாண்டி... வனிதா நீ போண்டின்னு வெளிய வரச் சொல்லிட்டார். எல்லாரிடமும் விடைபெற்று, சேரனின் அழுகையைத் தாயாய்த் துடைத்து, பதக்கத்தை உடைக்க மாட்டேன்... பாதை விடுன்னு சொல்ல, பிக்பாஸ் பயந்து கேட்டைத் திறக்க வனிதா என்னும் அன்னை பறந்து போனார்.

கமலிடம் பேசும்போது பெண்களுக்கு முன்னோடியாக இருப்பேன் என்றார். மகள் அறிவுரை சொன்னதைச் சொல்லிச் சிரித்தார். தன்னோட குணவார்ப்பைப் பற்றிப் பேசினார்.

கமல் தொகுப்பாளராய் இல்லாமல் கமலாய் மாறி வனிதாவுக்கு இப்படியே இருக்காதே... அன்னையாக இருந்தாயல்லவா அதுவாக இருந்து பார்... உன்னை உலகம் வாழ்த்தும் என அறிவுரை கூறினார். 

கமலுடன் ஆட வேண்டும் என்ற வனிதாவின் ஆசை 'அண்ணாத்தே ஆடுறார்...' பாடல் மூலம் நிறைவேற்றப்பட்டது. கமலின் நடன அசைவுகளை கேமாரா காதலுடன் வாங்கிக் கொண்டது. கமல் இன்னும் நடித்துக் கொண்டே இருக்கலாம்... அரசியல் ஒரு கலைஞனைக் காவு கொண்டு விட்டது. கமல் நடனத்தில் கலக்கிய ஆடிய சலங்கை ஒலி பார்க்கப் பார்க்கச் சலிக்காத படம்.

கைதட்டி பேச விடாமல் செய்தவர்கள் இப்போது உன் பேச்சைக் கேட்கிறார்கள் பார் என்ற கமல், வனிதாவின் மகள்களிடம் உங்க பிள்ளையைப் பார்த்துக்கங்க என்றார். வனிதாவை வழி அனுப்பி வைத்தார்.

ஒண்ணுமே விளையாடாத கவின் முதல் ஆளாய் காப்பாற்றப்படுகிறான்... அடித்து ஆடிய, எதிலும் பின் வாங்காத, தன் வேலையைச் சரியாகச் செய்த வனிதா வெளியேற்றப்படுகிறார்... இதுதான் விஜய் டிவியின் கேம் ஷோ. 

வரும் வாரங்களில் சேரனும் ஷெரினும் அனுப்பப்படுவார்கள்... மிஞ்சியிருப்பவர்களில் முகன் மட்டுமே பின்தங்கியிருப்பதால் அவனும் வெளியேற்றப்படுவான். கேட்டால் மக்கள் ஓட்டு... நீங்கதான் முடிவு செய்தீர்கள் என்ற தரமான வார்த்தைகள் வந்து விழும்.

கமலும் போதும்டா சாமிகளான்னு போய்விட்டார்... 

வீட்டுக்குள் எல்லாரும் மைக்கைச் சரியாப் போடுன்னு லாஸ்லியா படுத்துக்கிட்டே ஜெயலலிதாவைப் போல் கட்டளை போட்டுக்கிட்டு இருந்தார். மைக்கை கழட்டி வச்சிட்டுப் பேசுனது யாருத்தான்னு தர்ஷன் கலைஞர் மாதிரி கேள்வி கேட்டான். அது அப்போ என மழுப்பி நான்தான் இந்த வீட்டில் சட்டதிட்டங்களை மதிப்பவர் என்றார். உடனே பிக்பாஸ் லாஸ்லியா நீங்க சட்டதிட்டங்களை மதிப்பவர்தான் இப்போது மைக்கில் போர்வை உரசாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றாரே பார்க்கலாம். தர்ஷனுக்கு அம்புட்டு மகிழ்ச்சி. இந்த முறை நிகழ்ச்சி டாஸ்மார்க் தங்கங்கள் மாதிரி தள்ளாடினாலும் பிக்பாஸ் தனுஷ் மாதிரி ஆடுறார்.

அப்புறம் தர்ஷனுக்கு கேக் வந்துச்சு... எப்பவும் போல வெட்டித் தின்னானுங்க... அனுப்பியது யார் என அதனுடன் வந்த வாழ்த்து அட்டையைப் பார்த்ததில் தர்ஷனுக்கு வருத்தமே மிஞ்சியது... அதில் அவனுடைய நண்பர்கள் எல்லாருடைய பேரும் இருந்தது... அன்புக்குரிய ஒரு பெயரைத் தவிர...

அது-

சனம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.


மனசின் பக்கம்: பாலாஜி டூ பாக்யா

மீரக எழுத்தாளர்கள் குழுமத்தின் மாதாந்திர 'வாசிப்பை நேசிப்போம்' நிகழ்வில் அன்பின் அண்ணன் பாலாஜி அவர்கள் கலைஞரின் 'தென்பாண்டிச் சிங்கம்' புத்தகத்தைக் குறித்துப் பேசிவிட்டு, அந்தப் புத்தகத்தை எங்கள் மண்ணின் எழுத்தாளனுக்குக் கொடுக்கிறேன் என திடீரென அழைத்து, ஆசிப் அண்ணனிடம் கொடுத்து எனக்குக் கொடுக்கச் சொன்னார். உண்மையில் அந்தத் தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத, மகிழ்வான தருணம். 

(ஆசிப் அண்ணனிடமிருந்து புத்தகத்தை பெற்றுக் கொண்டேன், அருகில் பாலாஜி அண்ணன்)
எனது கதைகள் நிறையப் போட்டிகளில் வென்றிருக்கின்றன... ஒரு போட்டி... அதற்கு ஒரு கதை எழுதும் வாய்ப்பு... என்பதாய்த்தான் எப்போதும் கடந்து  போகிறேன்.. போயிருக்கிறேன். ரியாத் தமிழ்ச்சங்க சிறுகதைப் போட்டியைப் அப்படியே எடுத்துக் கொண்டேன். இவ்வெற்றி என் எழுத்துக்கான ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் என நினைக்கவேயில்லை. நண்பர்களின் வாழ்த்திலும் முகநூல் பகிர்விலும்தான் அதைத் தெரிந்து கொண்டேன். 

புத்தகம் கொடுத்த தங்கள் அன்புக்கு நன்றி பாலாஜி அண்ணா.

தோ ஒரு தேடுதலின் போது செப்டெம்பர்-03ம் தேதி தினமணி இளைஞர்மணியில் எனது வலைப்பூவில் இருந்து மழை குறித்து எழுதிய பகிர்வில் சில பாராக்களைப் பகிர்ந்திருப்பதைப் பார்த்தேன். வலைப்பூவின் முகவரி கொடுக்கப்பட்டிருந்தாலும் இதை உங்கள் வலைப்பூவில் இருந்து எடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கலாமே... தேடுதல் இல்லை எனின் எனக்குத் தெரியவே வாய்ப்பில்லை. என்ன நாம வேலை பார்த்த பத்திரிக்கை... பரவாயில்லைன்னு போகத்தான் சொல்லுது. 


இந்தத் தேடலில் எனது சச்சின் குறித்த கட்டுரை உள்ளிட்ட சில கட்டுரைகள் வேவ்வேறு தளங்களில் பகிரப்பட்டு வலைப்பூ முகவரி கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அதை எடுத்த யாருமே எடுத்திருக்கிறோம் எனச் சொல்லவே இல்லை என்பதே வருத்தமான விஷயம். இணையத்தில் பகிர்ந்த பின் உரிமை கொண்டாடாதே என்றாலும் அவை முழுக்க முழுக்க என் எழுத்துத்தானே... எங்கிருந்தும் காப்பி செய்யப்பட்டவை அல்லவே... எழுதியவனிடம் இந்தத் தளத்தில் பகிர்ந்திருக்கிறோம் என சொன்னால் அவனுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமல்லவா.? 

இனிமேலேனும் செய்யுங்கள் நண்பர்களே...

சிறுகதைகள்.காம் தளத்தில் எனது இரண்டாவது கதையாக 'கோட்டாமி' பகிரப்பட்டிருக்கிறது. முதலில் பதியப்பட்ட 'விழலுக்கு இரைத்த நீர்' அந்த வாரத்தில் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கதைகள் பகுதியில் பதியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சேனைத்தமிழ் உலா சிறுகதைப் போட்டி-2015ல் முதல் இடம் பிடித்தது சரியே என நிரூபித்திருக்கிறது.'கோட்டாமி' - 2011-ல் என் மனசு தளத்தில் எழுதிய கதைதான். 

கதையைப் பகிர்ந்து கொண்ட சிறுகதைகள்.காம் இணையத்துக்கு நன்றி.

வைரஸ், இஸ்க், இப்போது பாதி பார்த்திருக்கும் அம்புலி எனச் செமையான மலையாளப் படங்களைக் குறித்து எழுத வேண்டும்... இப்போது பிக்பாஸ் பதிவெழுதுவதால் வேறெதுவும் எழுத முடியாத நிலை... மேலும் பல்வேறு குழப்பமான மனநிலையும் சேர, பிக்பாஸ் மட்டுமே எழுத முடிகிறது. விரைவில் விமர்சனங்கள் வரும்.

பாக்யா மக்கள் மனசுப் பகுதியில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு மேலாக சில வாரங்கள் தவிர்த்து தொடர்ந்து எனது கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர் வாய்ப்புக் கொடுக்கும் பாக்யா ஆசிரியர் பாக்யராஜ் சாருக்கும் மக்கள் மனசு பகுதியைத் தொகுத்து வழங்கும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் என் நன்றி.

முகநூலில் குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் பாக்யராஜ் சார் அவர்களின் படங்கள் குறித்த பார்வையை 'இது நம்ம பாக்யராஜ்' என்ற பெயரில் தினமும் எழுதி வருகிறார். சுவராஸ்யமான பார்வை... இது பாக்யாவில் தொடராக வந்தால் இன்னும் சிறப்பாகும். பூங்கதிர் சார்தான் ஆவண செய்ய வேண்டும். 

வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா.

மனசின் பக்கம் வளரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019பிக்பாஸ் : சட்டியிலும் இல்லை அகப்பையிலும் வரலை

Image result for bigg boss 14th september images hd'சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்...'

'வேலையத்த அம்பட்டையன் பூனையப் போட்டுச் செரச்சானாம்...'

'அறுக்க மாட்டாதவன் கையில அம்பத்திரெண்டு கருக்கறுவாளாம்...'

'கொடுமை கொடுமையின்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை சிங்கு சிங்குன்னு ஆடிச்சாம்...'

இப்படியெல்லாம் ஊருல நிறையப் பழமொழிகள் சொல்வாங்க... அப்படித்தான் இருந்துச்சு ஒண்ணுமில்லாத கடையில கமலஹாசன் என்னும் நான் ஒரே டீயை ஒருமணி நேரமா ஆத்திக்கிட்டு இருந்தது.

ஆண்டவர் வருகை... 

பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார்...  

அவருக்கு மட்டுமே ஓளி பாய்ச்சப்பட்டது. 

மற்ற முகங்கள் ஒளியிழந்து... 

இந்த எபிசோட் பார்த்து முடித்த போது நாமும் ஒளியிழந்தே...

போட்டியாளர்களின் குடும்பங்கள் அங்கே இருந்தார்கள்...  

ஆண்டவர் போன வாரம் அடித்து ஆடினார்... யார் கண் பட்டதோ தெரியவில்லை... இந்த வாரம் ஆடாமல் தலையில் அடித்துக் கொள்ள வைத்தார். 

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீக்காக வருத்தப்பட்டார். கட்டவுட் / பேனர் கலாச்சாரத்தைச் சாடினார். அது குறித்து நிறையப் பேசினார். 

Image result for subashree death


சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் பெற்றோர் இவ்விழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்னைக்கு நீ அரசியல்வாதியாக மாறவும் இதைப் பேசுறே.. உன்னோட படத்துக்கும்தானே கட்டவுட் வச்சிப் பாலாபிஷேகம் செய்யிறாங்க என யாரும் கேட்டு விடக் கூடாது என்பதால் நீ யார் இதைப் பேசன்னு சிலர் குரல் கொடுக்கலாம். முப்பது வருசத்துக்கு முன்னால என்னோட ரசிகர் ஒருவர் கட்டவுட்டுக்குப் பால் ஊத்தப்போயி அவருக்குப் பால் ஊத்துற மாதிரி ஆயிருச்சு. அப்ப அவங்க வீட்டுக்குப் போனா எட்டுக்கு எட்டு வீட்டுல ஒரே ஒரு அம்மா மட்டும் இருந்தாங்க... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை... இப்பவாச்சும் வந்தீங்களேன்னு சொன்னாங்க... அப்பவே இனி என் ரசிகர்கள் யாரும் கட்டவுட் வைத்துப் பாலாபிஷேகம் செய்யக்கூடாதெனச் சொன்னவன் நான். இப்பவும் சின்னச் சின்னதாய் செய்கிறார்கள் என்றாலும் நான் கண்டிக்கத் தவறுவதில்லை என்றார்.

பின்னர் போட்டியாளர்களின் குடும்பத்தாரைப் பார்த்து பேசிவிட்டு அகம் டிவி வழியே அகத்துக்குள் போய் 82ம் நாளின் தொடர்ச்சியைப் பார்க்கச் சொன்னார்.

சாண்டியின் மனைவியும் கிளம்ப, சாண்டி அழ, வானம் அழ, நீ நல்லா விளையாடு என மனைவி முத்தம் கொடுக்க, சாண்டி அழ, வானம் அழ, மனைவி அழ, லாலாவும் மனைவியும் கிளம்ப, சாண்டி அழ, வானம் அழ, எல்லாரும் ஆறுதல் சொல்ல, சாண்டி அழ, வானம் அழ, என்னைய மறந்துட்டா... போச்சு எல்லாம் போச்சுன்னு சாண்டி அழ, வானம் தன் அழுகையை நிறுத்தியிருந்தது.

83ம் நாள் காலை ஒன்பது மணிக்கு ப்ரூட்டி இசை ஒலித்த பின், 'கிளம்பு கிளம்பு... அந்து போச்சு... கிளம்பு கிளம்பு...' பாட்டுப் போட நீண்ட நாளைக்குப் பின் சாண்டியுடன் ஆடினான் கவின். பார்க்க நல்லாயிருந்தது.

அப்புறம் ப்ரூட்டி பத்து ரூபாய் புதிய பாட்டிலை இந்த வாரத் தலைவர் லாஸ்லியாவை அறிமுகம் செய்யச் சொன்னாங்க... அதுக்காக ப்ரூட்டி குழுமத்தில் இருந்து மூவர் வந்திருந்தாங்க. லாஸ்லியா அறிமுகம் செய்ய நடந்து போனதைப் பார்த்து ஆஹா என்ன நடைடா இது எனச் சாண்டி சிலாகித்தார். அறிமுகம் செய்த பின் லாஸ்லியா ஒரு கெட்ட ஆட்டம் போட்டார். அதைப் பார்த்தவர்கள் சத்தியமா ப்ரூட்டி வாங்கிக் குடிக்க மாட்டார்கள். என்ன கருமம் புடிச்ச ஆட்டம்டா அது.

அடுத்து அதே ப்ரூட்டியை வைத்து ஒரு டாஸ்க்... சின்னப் புள்ளைங்க விளையாடுற மாதிரி... கயிறு கட்டி அதை பிடித்து பலகையை நிறுத்தி, பாட்டிலை அடுக்கி, ம்க்கூம் இதெல்லாம் ஒரு டாஸ்க்... சாண்டி, கவின், ஷெரின், வனிதா அணி வெற்றி... வெற்றிக்காக பீஸா அனுப்பியிருந்தானுங்க... எல்லாரும் பிச்சிப்பிச்சித் தின்னானுங்க... 

எனக்கு ரெண்டு பீசாவது பீஸா வையுங்கடா... ராத்திரிக்கி தின்னுக்கிறேன்னு ஷெரின் சொன்னுச்சு... வச்சானுங்களான்னு தெரியலை... கல்யாணக்கார வீட்டுச் சாப்பாட்டுல தனியாவர்த்தனம் பண்ணுற மாதிரி, அடுத்த கோழி இரையைத் தின்னுறுமோன்னு அடைக்கோழி வச்சி அமுக்கிற மாதிரி தர்ஷன் தின்னான். சாப்பாட்டில் என்ன வெட்கம்... தமிழனா இருந்தா பகிர்ந்துக்கங்கன்னு இந்த நேரத்துல தர்ஷனிடம் சொன்னால் எதைக் கொண்டு அடிப்பான்னு தெரியாது.

அடுத்து சொமாண்டோ சமையல் டாஸ்க்... அஞ்சு பேர் சமைக்க, மூவர் உதவி செய்யணும்... ஷெப் தாமு சமையல் படப்பிடிப்புக்கு வந்து சும்மா தூங்கிக்கிட்டு இருந்திருப்பார் போல... ஒரு சுத்து உள்ள போய் வாங்க, தூக்கம் போகும்ன்னு அனுப்பிட்டாங்க போல... சமைக்கும் போது தன் கருத்தையும் கூறிக் கொண்டிருந்தார். வனிதாவிடமே அதிக நேரம் செலவழித்தார். பதார்த்தத்தை எதார்த்தமாய் முகர்ந்து பார்த்து உப்பு இல்லை... உரைப்பு இல்லைன்னு சொன்னார். பின்னர் அசலுடன் இவர்களின் சமையலை ஒத்துப் பார்த்து ஷெரின், சேரனை வெற்றியாளர்கள் என்றார்.

சாண்டியுடன் 'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்...' பாடலுக்கு டான்ஸ் ஆடினார். மீண்டும் ஒருமுறை எஸ்.பி.பி.யைப் பார்த்தது போலிருந்தது. வந்த வேலை முடிந்து கிளம்பிப் போய்விட்டார்.

அவர் போன பின்னே பிரியாணியும் பீஸாவும் வந்து சேர, இப்பவும் எவனோ என்னமோ பண்ணுங்கடான்னு பிரியாணியைப் பிரித்து மேய ஆரம்பித்தான் தர்ஷன். அவனுக்கு மேங்கோ ஜூஸ் எடுத்துக் கொடுத்து சமத்தாப் பள்ளிக்கூடம் போகணும் என்றார் ஷெரின். சாப்பிடவே நேரம் பத்தலை இதுல படிப்புத்தான் ஒரு கேடு... இப்ப அஞ்சாப்பு எட்டாப்புக்கு எல்லாம் அரசாங்கத் தேர்வாம்... எவனும் படிக்கக்கூடாதுன்னு அவனுங்க என்ன முடிவு பண்றது... நானே போகலை... நீ இன்னொரு பிளேட் பிரியாணி எடுத்தா என்பதாய்ப் பார்த்தான்.

கமல் அகம் டிவி வழி அகத்துக்குள் சென்றார்... 

ஆமா என்ன பேசினார்..? என்னத்தை எழுதுறது..? 

பேச வந்ததை எப்படிப் பேசுறதுன்னு தெரியாம ரெண்டு கிலோ மீட்டருல போய்ச் சேர வேண்டிய ஊருக்கு இருபது கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சைக்கிள் ஓட்டினார். இடையிடையே எங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஆறுமுக ஐயா அவரே நகைச்சுவை சொல்லி, அவரே சிரிப்பது போல் இவரும் செய்தார்.

ஒரு படத்துல அதான் கூட்டம் முடிஞ்சிருச்சுல்ல... எல்லாம் கிளம்பு... கிளம்புன்னு வடிவேலு விரட்டுற மாதிரி கமலை விரட்டத் தோணியது எனக்கு மட்டும்தானா..?

வனிதா குழந்தைகளுடன் இருந்த போது பார்த்த அந்த சாந்தமான அம்மாவை எல்லாரும் புகழ்றாங்க என அன்னை வனிதா என்றழைத்தார்.

கவினிடம் லாஸ்லியாவின் அப்பா நடந்து கொண்ட விதம் குறித்துப் பேசி, அவர் நடந்து கொண்ட விதம் அருமை எனப் பாராட்டினார். அவர் தன் கணவனைப் பாராட்டும் போதெல்லாம் லாஸ்லியாவின் அம்மா பார்த்த காதல் பார்வைகள்... ஆஹா... செம க்யூட்... தன் கணவனைச் சிறந்தவன் எனச் சொன்ன தருணங்களில் அவர் சொக்கித்தான் போனார்.

கவின் திட்டிய பின்னர் அழுதுவிட்டு கக்கூஸை விட்டு வெளியே வந்தவர் அவன் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்த சாண்டி, மீண்டும் போய் அவனைக் கூட்டி வந்ததை, அந்த நட்பைப் பாராட்டினார்... கைதட்டல் அள்ளியது.

சேரனை லாஸ்லியா குடும்பம் தங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டு உறவு பாராட்டியதைச் சொல்லி வேறென்ன வேண்டும் என்ற போது ஆமாம் சார்... லாஸ்லியாவோட இங்க இருக்கேன்... ஆனா அவங்க தங்கச்சிங்க ரெண்டு பேரும் சேரப்பான்னு வந்து கட்டிக்கிட்டாங்க பாருங்க... அதுவே எனக்குப் பெரிய வெற்றி என்றார் சேரன்.

முகன் எல்லாரும் தான் செய்த கிராப்டைக் கொடுப்பதையும் சொல்லி வாழ்த்தினார்.

சென்ற சீசன்களில் விளையாட்டை விளையாடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்.. அதை இப்ப நீங்களே விளையாட்டு எனச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள் என்றார்.

லாஸ்லியா கால் மீது கால் போடுவது தவறில்லை என்றார்... அதுவே அழகு என்றும் சொல்லிக் கொடுத்தார். 

கவினை விளையாட்டை இன்னும் சிறப்பாக விளையாடுங்கள் என்றார்.

சேரனுக்குத் தனிமை அறை... கவினுக்கு வேறொரு அறை எனப் பஞ்ச் பேசினார்.

லாஸ்லியா அப்பாவிடம் இது மாடர்ன் உலகம்... இங்க இன்னமும் பக்கத்து வீட்டுக்காரன் சொல்றான்னு கட்டுப்பெட்டித்தனமா இருக்காதீங்க... புள்ள விரும்புற கவினைக் கட்டி வையுங்க... அப்பனாச் சொல்றேன்னு சுத்தி வளைத்து...புரிந்தும் புரியாமலும்... அறிந்தும் அறியாமலும்... வளவாளா கொழகொழான்னு வாய்க்குள் வார்த்தைகளை மென்று விழுங்கிப் பேசினார். 

கவினிடம் ஒரு அப்பனாய் நான் என்ன செய்வேனோ அதைவிடச்  சிறப்பாக லாஸ்லியாவின் அப்பா செய்தார் என்றார். இதே கமல்தான் சென்ற வாரத்தில் வனிதாவிடம் அது அவர்களின் சுதந்திரம் அதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்றார். சேரனிடம் சின்னஞ்சிறுகளை தனியே விடுங்க என்றார். அது வேற வாய்... இது வேற வாய்.... ஆண்டவரே அடுக்குமா..?

நடுத்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்றார்... மேட்டுக்குடி போல விவகாரங்களையும் விவகாரத்துக்களையும் விரும்பாத நடுத்தர வர்க்கத்தையும் இப்ப விவகாரங்களும் விவகாரத்துக்களும் பிடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன... அப்படிப்பட்ட சூழலில் ஒரு நடுத்தர வர்க்கம் மானத்துடன் வாழ நினைப்பது தவறல்லவே.

அப்பறம் எல்லாரும் யாரை மிஸ் பண்ணுனீங்க என்றதும் லாஸ்லியா அப்பா வந்ததே பெரிதென்றார்...வனிதா மகன் நினைவில் கண்ணைக் கசக்கினார்... ஷெரின் தன்னோட பப்பி வரலைன்னு வருந்தினார்... தர்ஷன் அப்பா வரலைன்னு வருந்தினான்... கவின் நண்பன்தான் வருவான் என்பதால் எந்த வருத்தமுமில்லை என்றான்... முகன் அப்பா வந்திருக்கலாம் என வருந்தினான். சாண்டிக்கு கொழுந்தியா வரலைன்னு வருத்தம்... சேரனுக்கு மனைவி வரலைன்னு வருத்தம்.

குரங்குக்கு புண் இருந்தா அதைப் பிய்த்துப் பிய்த்து ஆறவே விடாதாம்... அது மாதிரித்தான் நேற்று ஆண்டவர் முடிந்த விசயங்களை மீண்டும் மீண்டும் பேசினார். என்ன பேசுறதுன்னு தெரியாத அரசியல்வாதி நான் என்ன சொல்ல வர்றேன்னான்னு திரும்பத் திரும்பப் பேசுவதைப் போல் பேசினார். ஒண்ணுமே தேறலை.

பெற்றவர்களிடமும் உறவுகளிடமும் பேசும் போது அவர்கள் ரகசியமாய்ச் சொன்னவற்றை எல்லாம் மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பேசினார்... அகம் டிவியை அணைத்து வைத்திருந்தார்கள் என்பதால் போட்டியாளர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் முடிந்த விஷயங்களை.... சரி.. சரி... ஒண்ணுமே இல்லாம சாம்பார் வைக்கணுமின்னா இப்படித்தானே வளவளன்னு இருக்கும்.

சேரன் மகளிடம் லாஸ்லியாவிடம் சேரக்கூடாது சேரப்பான்னு சொன்னீங்க என்று கேட்டதும் லாஸ்லியா என்னோட சிஸ்டர்தான் ஆனால் நான் எப்பவும் எங்கப்பா எனக்கு மட்டும்தான் என்று நினைக்கும் பெண்... அக்காவுக்கே விட்டுக் கொடுக்கமாட்டேன் அதான் அப்படிச் சொன்னேன் என்றார். இதைத்தான் நான் நேற்றைய பதிவில் சொல்லியிருந்தேன். பெண் பிள்ளைகளின் பாசம் அப்படித்தான்.

பாவம் ஆண்டவர்... ரொம்பத்தான் யோசிச்சி யோசிச்சிப் பேசினாலும் உலகம் உருண்டைங்கிற மாதிரி மறுக்கா மறுக்கா அதே இடத்துல வந்து நின்னாரு... அவருக்கும் உள்ளிருப்பவர்களுக்கும் பணம்... நமக்கு இதெல்லாம் எதுக்குப் பார்க்கணும்ன்னு இருந்துச்சு... எழுதணுமேன்னு என்னைத் தேத்திக்கிட்டேன். பிரதிலிபி சகோதரிகளே கருணை காட்டுங்க... கொல்றானுங்க.

வெளியேற்றம் யாருன்னு நாளை சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஒருத்தரைக் காப்பாற்றணும் அதுவும் யாருன்னு நாளைக்குச் சொல்றேன்னு ஓடிட்டாரு... 

இவனுக சாப்பிட ஆரமபிச்சிட்டானுங்க.... 

ஊரே பத்தியெறிஞ்சாலும் நாங்க சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருப்போம்ன்னு தின்னு தீர்க்கிறானுங்க... பிக்பாஸ் இந்த முறை சாப்பாட்டுக்குத்தான் அதிகமாச் செலவு செய்வார் போல.

வாரம் பூராம் குடும்பங்களைக் கூட்டியாந்து கும்மியடிச்சா வேற என்ன தேறும்..?

ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு நிகழ்ச்சியாத்தானே இருக்கும்... 

மரண மொக்கை.... 

அதுவும் லாஸ்லியா அப்பாவுக்கு கமல் கொடுத்த அறிவுரையெல்லாம் மொக்கையிலும் மொக்கை... இதுக்கு நேரடியாக எங்க விஜய் டிவி பையன் கவினுக்கு உங்க பொண்ணைக் கட்டித் தருவீங்களான்னு வெற்றிலை பாக்கு வைத்துக் கேட்டிருக்கலாம்... சுருங்கிப் போன கவினாச்சும் விரிஞ்சி மலர்ந்திருப்பான். 

கவினும் லாஸ்லியாவும் சென்ற வாரம் வரை ஒரு இடத்தில் ஒட்டி அமர்ந்திருந்தனர். இந்த வாரம் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருந்தனர். அடுத்த வாரம்..?

லாஸ்லியா நேற்றும் இப்போதைக்கு நிப்பாட்டி வச்சிருக்கோம்... வெளிய போயிப் பாத்துக்கலாம்ன்னு வேற சொல்லி வச்சிருக்கு... எப்படியும் ரெண்டு நாள்ல சிவப்புக் கதவுக்கிட்ட ஆயிரம் சிவாஜிகளின் அதிரடி நடிப்பைக் காண முடியும்... என்ன மறுபடியும் ராத்திரியெல்லாம் இந்திதான் இந்தியாவின் ஒரே மொழின்னு சட்டம் இயற்றும் தீவிர ஆலோசனையில் இருப்பானுங்களேன்னு நினைக்கும் போதுதான் 'கதக்'குன்னு இருக்கு.

கவினின் நண்பன் அடித்தது உண்மையான அடியாகக் கூட இருக்கலாம் என்றாலும் மற்றவர்களின் பரிதாபப் பார்வையும் மக்களின் அணுக்கமான பார்வையும் கிடைக்கவே அது அந்தச் சூழலில் நிகழ்த்தப்பட்டது என எல்லாரும் அறிவோம்... அந்தப் பார்வைகளில் லாஸ்லியாவின் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. லாஸ்லியா சாய்வார்... வீழ்வார்... மாற்றமில்லை.

மொத்தத்துல இன்னைக்கு நிகழ்ச்சி... கலை நிகழ்ச்சி இல்லாத திருவிழா போல் கலையிழந்து இருந்தது.

இன்று வனிதா என்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஷெரின், சேரன், முகன் வெளியேற்றப்படுவார்கள்.

இறுதியில் இருக்கப் போகும் நால்வர் என்னைப் பொறுத்தவரை தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, கவின்.

இறுதி போட்டியில் கவினும் தர்ஷனுமே நிற்பார்கள். (தர்ஷன் தன் உழைப்பாலும் கவின் மக்கள்+விஜய் டிவி வாக்குகளாலும்).

சரியான தீர்ப்பெனில் தர்ஷன்... திருத்தப்பட்ட தீர்ப்பெனில் கவின் வெல்லக்கூடும்.

வெளியில் சேரனைக் குறித்து தகாத எழுத்துக்கள் அதிகமாய் பரப்பப்படுவதால் அவர் இறுதி நால்வருக்குள் வரும் வாய்ப்பில் 50% இழப்பு ஏற்படக்கூடும்... இல்லையேல் சாண்டி அல்லது லாஸ்லியாவுக்குப் பதில் அவர் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம். இனி வரும் இரு வாரப் போட்டிகள் சேரனுக்குப் பெரிய சவாலாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது என்றாலும் இந்த முறை அப்படியொன்றும் கடினமாக விளையாட்டுகள் இல்லை என்பதால் சவாலெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தோன்றுகிறது.

சாண்டிக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றாலும் வெளிநாட்டுக்காரனும் அடிபட்டவனும் வெல்வதால்தான் விஜய் தொலைக்காட்சிக்கு லாபமே ஒழிய, சாண்டியோ சேரனோ வெற்றி பெறுவதால் ஒரு போதும் லாபமில்லை.

என் கணக்கு உங்கள் கணக்கோடு ஒத்துப் போகுமா தெரியலை...

உங்கள் எண்ணத்தையும் சொல்லுங்க.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.