மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 ஜூலை, 2021

சினிமா விமர்சனம் : வெள்ளையானை

மீண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது... மாட்டிக்காம ஓடிடு' என்றுதான் தோன்றியது என்றாலும் விவசாயம், விவசாயி என்ற ஈர்ப்பின் காரணமாக பார்க்கலாம் என்று தோன்றியது.

சனி, 10 ஜூலை, 2021

புத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)

மாயமான்...

கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு,  சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது.

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)

ணும் பெண்ணும்...

மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம் ஒரே மாதிரியானதாய் இருக்கும் படங்கள் நிறைய வருகின்றன. அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் விசுத ராத்திரிகள் என்றொரு படம் பார்த்தேன். அதில் பேசப்பட்ட கதைகள் எல்லாமே ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியது. அதே போல் சமீபத்தில் பார்த்த படம் ஆணும் பெண்ணும்.

சனி, 3 ஜூலை, 2021

நூல் அறிமுகம் : செம்மீன்


றுத்தம்மா,
பரீக்குட்டி,
செம்பன்குஞ்சு,
சக்கி,
பழனி,

இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.