மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 நவம்பர், 2021

நூல் விமர்சனம் : மலையாளத் திரையோரம்

லையாளத் திரையோரம்...

ஆசிப் மீரான் அண்ணன் எழுதியிருக்கும் மலையாளத் திரைப்பட விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல். இதில் மொத்தம் 19 படங்கள் குறித்தான விமர்சனப் பார்வை இடம் பெற்றிருக்கிறது.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

நூல் விமர்சனம் : ஸ்னேஹி எனும் நாய்

 ஸ்னேஹி எனும் நாய்...

சகோதரர் கவிஞர் சிவமணி அவர்களைச் சிறுகதை ஆசிரியராக மாற்றியிருக்கும் சிறுகதை தொகுப்பு.

சனி, 13 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 10. ராஜூவை குறி வைக்கும் போட்டியாளர்கள்

'என்ன பிக்பாஸ் எழுதலையா..?' என்ற கேள்விகள் என்னை நோக்கிச் சிலரிடமிருந்து வந்தது. கிட்டத்தட்ட பத்து நாட்களாக எழுதவில்லை எனபதற்கான காரணம் பிக்பாஸில் விறுவிறுப்பு இல்லை என்பதைவிட கொஞ்சம் பிரச்சினைகளில் சிக்கி இருந்ததால் எழுதும் மனநிலை இல்லாமலேயே இருந்தது.

மனசு பேசுகிறது : ஷார்ஜாவில் புத்தக வெளியீடு

வியாழன் மாலையை இனிதாக்கிய நிகழ்வாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இரண்டு தமிழ் நூல்களின் வெளியீடு அமைந்தது, எப்பவுமே அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும விழா சிறப்பாகத்தான் அமையும் என்பதை நேற்றைய நிகழ்வும் எடுத்துக்காட்டியது. அதேபோல் விழாவுக்குப் பின்னான உரையாடல்கள் மன அழுத்தத்தைத் தீர்க்கும் மருந்து என்பதையும் நேற்றும் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். 

ஞாயிறு, 7 நவம்பர், 2021

பிலாலுக்கு பிரிவு உபச்சார விழா

பிரச்சினைகளுக்கு இடையே நகரும் வாழ்க்கையில் நேற்றைய நாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நாளாக அமைந்தது. சகோதரர் பிலால் அலியார் துபையிலிருந்து பஹ்ரைனுக்குப் பதவி உயர்வுடன் மாறிச் செல்வதற்காக ஆசிப் அண்ணனின் 'சத்திரத்தில்' சிறியதாய் ஒரு பிரிவு உபச்சார விழா, மனநிறைவாய் நடந்தது.

சனி, 6 நவம்பர், 2021

வேரும் விழுதுகளும் " 'உணர்வுகளை அசைத்துப் பார்த்தது' - எழுத்தாளர் பால்கரசு சசிகுமார்

நாவல் வாசிப்பின் பின் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வைத்ததில் என் எழுத்து வெற்றி பெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சி. அதேசமயம் வட்டார வழக்கு அறியாதவர்களுக்கு வாசிப்பு அயற்சியைத் தரும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். 

வட்டார வழக்கில் எழுதுவதே எனக்கு வரும் என்பதைவிட, இந்நாவல் இந்த வழக்கில் இல்லை என்றால் இதன் ஜீவன் கண்டிப்பாக இத்தனை அழுத்தமாய் எல்லார் மனதுக்குள்ளும் போய் அமர்ந்திருக்காது. சாதாரண வாழ்க்கைக் கதையாக, ஒரு குடும்பக் கதையாக, பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்திருக்கும்.

தன் கதையோடு இதனை ஒப்பிட்டு எழுதிய பால்கரசுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

----- 


வேரும்_விழுதுகளும். நாவல் விமர்சனம்.

ண்பர் நித்யாகுமார் (பரிவை சே.குமார்) எழுதிய 'வேரும் விழுதுகளும்' நாவல் விமர்சனம்.

இந்நாவலில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது தென்தமிழகத்தின் குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்றான வட்டாரப் பேச்சு வழக்கு, அந்த மொழிநடையில் சரளமாக எழுதியிருப்பது ஒரு வாசகனாய் என்னை மிகவும் கவர்ந்தது.

கிராமத்து வாழ்வியலில் வட்டாரப் பேச்சு வழக்கு மொழி மட்டுமின்றி, கிராமத்து வாழ்க்கையே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வரும் காலத்தில் மறந்தவற்றை மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவிச் செல்வது இந்நாவலின் சிறப்பாக நான் கருதுகிறேன்.

'விடிஞ்சு வெள்ளக்கோழி கூவிருச்சு'

'கருக்கல்ல'

'வாடா வடுவா'

'ஆத்துப் பூத்து வருது'

'நான் அக்காடான்னு இருக்கேன்'

'மானம் வெட்டரிச்சுருச்சு'

'பொண்டுகசட்டிப் பய'

'லாத்தலாம்'

'கட்டய நீட்டிக்கிறேன்'

'கட்டுக் கட்டுனும் திரியிற மனுசன்'

'ஏண்டி ஆளாளுக்கு என்னய ஆயிறிய'

என இதுபோன்ற வார்த்தைகளுக்கிடையில் இரட்டை அர்த்தங்கள் தரும் நகைச்சுவை வார்த்தைகளும் நாவலில் ஆங்காங்கே சிறப்பாக வந்திருக்கிறது. மதுரை வட்டார வழக்கு மொழியறியாதவர்கள் இந்நாவலை வாசிக்கையில் மொழிச்சிக்கல் அயர்ச்சியைத் தரும் என்றே நினைக்கிறேன்.

இந்நாவலின் கதைக்கரு ஒரு கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தன் பிள்ளைகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பது என்ற ஒற்றை வரிக் கதையாக இருந்தாலும், அவரை மையப்படுத்தி, அவரின் மகள்கள், மகன்களின் குடும்பங்களை வைத்துப் பிண்ணப்பட்ட கதைக்களம் உரையாடல்கள் மூலமாகவே நகர்த்தப்பட்டாலும் விறுவிறுப்பாகவே நகர்வது நாவலின் பலம்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையும், சொத்து பிரித்தல், கொடுக்கல் வாங்கல் என நகரும் கதைக்குள் கண்ணதாசன் மற்றும் கந்தசாமி என்னும் கதாபாத்திரங்கள் மூலம் கிராமத்து வாழ்வியலைச் சொன்னதுடன் விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்டத்தையும், அத்தனை கஷ்டத்திற்கும் பின்னே கிடைக்கும் ஆத்ம திருப்தியையும் மெல்லிய உணர்வுகளுடன் மயில்தோகையின் வருடலைப் போல் எழுத்தாளர் கதையில் சொல்லியிருப்பது என்னைப்போன்ற கிராமத்து அடித்தட்டிலிருந்து வந்த வாசகர்களின் உணர்வுகளை மெல்ல அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது.

தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்கள் போன்ற கிராமத்து நிகழ்வுகளில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுவதும், தங்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதும் கொடுக்கும் ஆனந்தமும் ஆத்மார்த்த அன்பும் வேறெதிலும் கிடைப்பதில்லை. இந்நாவலை வாசிக்கையில் என் கடந்த கால வாழ்க்கை ஞாபகத்தில் வந்து போனது.

எங்களுடையது மிகப் பெரிய குடும்பம் - அப்பாவின் குடும்ப உறவுகள், அம்மாவின் குடும்ப உறவுகள் என ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் - எல்லோரும் பொங்கல் திருவிழாவின் போது எங்கள் கிராமத்தில் ஒன்று கூடுவதும், குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுவதுடன் குடும்பத்தின் மூதாதையர்களை நினைவு கூறும் விதமாகப் பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வுகளை இக்கதை என் கண்முன்னே உணர்வுப்பூர்வமாய் நிறுத்தியது எனலாம்.

இன்று குடும்ப உறவுகளுக்குள் போட்டியும் பொறாமையுமே நிறைந்து இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய்விட்டதாலேயே குடும்ப உறவுகள் சிதைவடைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மனம் வருந்துகிறது.

கண்ணதாசன் தன்மானம் பார்க்காமல் குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க தன் சித்தப்பா மகளின் கணவர் சுரேஷ் காலில் விழுந்து கும்பிட்டு வீட்டிற்குக் கூப்பிடுவதும், தன் சொந்த மச்சினன் இல்லையென்றாலும் தனது சித்தப்பா மீதும் அந்தக் குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அன்பின் காரணமாக இவன் நம் காலில் விழுந்து விட்டானே என அதுவரை முறுக்கிக் கொண்டிருந்த சுரேஷ் மனம் வருந்தி, தன் பிடிவாத குணத்தைத் தூக்கியெறிவதிலிருக்கும் நெகிழ்ச்சிதான் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

மண் பாத்திரத்தில் சமைத்துக் குடும்பமே கூடியமர்ந்து கைநிறைய வாங்கிச் சாப்பிட்டு, புரையேறிக் கண்ணீர் பெருகும் அளவுக்கு வாய்நிறைந்த சோற்றோடு உறவுகளின் கேலிப்பேச்சில் மகிழ்ந்து வாழ்ந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து வீட்டுச் சுவர்களும் அந்த மகிழ்வைச் சுமந்து வாழ்ந்த வாழ்க்கை எத்தனை இனிதானது. இன்றைய பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல், அறிவியல் வளர்ச்சி போன்ற காரணத்தால் கிராமத்து வாழ்வென்பது சிட்டுக் குருவிகளைப் போன்று அரிதாகிப் போய்விட்டது.

இக்காலத்திற்கு மிகவும் தேவையான நாவல் வேரும் விழுதுகளும்.

-பால்கரசு-

12/10/2021

-'பரிவை' சே.குமார்.

வேரும் விழுதுகளும் : 'கிராமத்துக்குள் சென்ற உணர்வு' - எழுத்தாளர் நௌஷாத்கான்

தோ ஒன்று நம்மை ஆக்கிரமித்து இருக்கும் போது அதிலிருந்து மீள முடியாமல் இருக்கும் நிலையில் எப்போதேனும் ஏதோ ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அப்படித்தான் நேற்றைய இரவைச் சகோதரர நௌஷாத்தின் 'வேரும் விழுதுகளும்' விமர்சனம் கொடுத்தது.

வியாழன், 4 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 9. நமுத்துப்போன கமலின் வாரம்

 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

செவ்வாய், 2 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 8. 'இசை'யால் வசமிழந்த மது

பிக்பாஸில் போன வாரத்தில் தாமரையின் காயினை எடுத்த விதமே பேசுபொருளாக அமைந்தது. அதுவே வாரத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாமரை கோபமாகப் பேசினாலும் கிராமத்தாளாக வார்த்தைகளை விட்டாலும் மற்றவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மீண்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னப்பொண்ணு பாடிய நாட்டுப்புறப் பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் செம.