மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

திருவிழா : வாழ்வியலும் வட்டார வழக்கும் - 'மண்ணின் மைந்தர்கள்' அழகுராஜா

'திருவிழா' - நாவல் குறித்துச் சகோதரர் 'மதுரை மண்ணின் மைந்தர்கள்' திரு. அழகுராஜா அவர்கள் எழுதிய விமர்சனப் பதிவு.

நாவலை உள்வாங்கி விரிவான விமர்சனம் எழுதியதுடன் எனக்கு அனுப்பிய தனிச் செய்தியில் அவர் விமர்சனத்தில் எழுதாத நாடகக் காதல், முதல் மரியாதை குறித்த விரிவான செய்திகள் , மாமன் மச்சானின் நகைச்சுவையான கேலி கிண்டல்கள் என எல்லாவற்றையும் பேசி, இன்னும் எழுதுங்கள், தொடர்ந்து இது மாதிரிக் கதைகள் வரணும் என்றார்.

மேலும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... கதை வாசிக்கிற மாதிரி இல்லாம அந்தக் குடும்பத்தோட நானும் தேவகோட்டை - மதுரை பயணம் போன மாதிரி இருந்தது என்றும் அந்த பொட்டு வைக்கிற இடம் சான்ஸே இல்லை... செம என்றும் சொன்னதெல்லாம் ஒரு எழுத்தாளனாய் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இப்படி நிறைய நாவலைப் பற்றிப் பேசிவிட்டு இந்தக் கதையை எழுதிய உங்களுக்கு 'ராயல் சல்யூட் சார்' என்று அவர் சொன்னபோதுதான் நாம அந்தளவுக்கு என்ன செய்துவிட்டோம் என்ற வெட்கம் எனக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது. இனி எழுதும் கதைகளை இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன்.

வாசித்து, எழுதிய அழகுராஜா அவர்களுக்கு நன்றி.
----



நூலின் பெயர்: திருவிழா
ஆசிரியர்: பரிவை சே.குமார் நித்யா குமார்
வெளியீடு: கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
பக்கம்: 576
விலை: 550

இது வரை வாசித்த நூல்களில் தேனி கவிப்பேரரசு வைரமுத்து,ராமநாதபுரம் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி,செக்கானூரணி ( மதுரை to உசிலம்பட்டி மத்தியில் இருக்கும் ஊர் ) எழுத்தாளர், கவிஞர் ஏகாதசி இவர்களின் எழுத்தின் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்வியலையும்,வாட்டார பேச்சையும் வாசித்து ரசித்த நான்.
இந்த திருவிழா நூலின் மூலம் சிவகங்கை மாவட்டம் சுற்றி உள்ள மக்களின் வாழ்வியலையும், வட்டார பேச்சையும் ரசித்து உள்ளேன்.
முகநூலில் நித்யா குமார் பெயரில் பரிவை சே.குமார் நண்பராக எனக்கு முதல் அறிமுகம். வெளிநாட்டில் பணிபுரியும் தேவகாேட்டைக்காரர். எதிர்சேவை சிறுகதைத் தாெகுப்பு, வேரும் விழுதுகளும் நாவல் இது மூன்றாவது நூல்.
சென்ற வருடம் விடுமுறையில் மதுரை கள்ளழகர் திருவிழாவிற்கு மதுரை வந்தவரை சந்தித்த பாேது திருவிழா பரிசாக தந்தார்.
இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் கதை, பகை உள்ள குடும்பங்களுக்குள் ஏற்படும் காதல் காதலுக்குள் சுருக்கமாக ஊரின் கதைகள் , காேவில்களின் வரலாறு, உணவகங்களின் சிறப்புன்னு ரசிக்கும் படி எழுதி உள்ளார். இத்துடன் புத்தக வாசிப்பாளரான நாயகி புவனா தான் வாசிக்கும் புத்தகங்கள் பற்றி சிறு அறிமுகம் செய்கிறார்.
எனக்கு ராெம்ப நாள் ஒரு ஆசை எல்லா வகையான காதலையும் வாசிச்சாச்சு அத்தை மகன் மாமன் மகளுக்குள் இருக்கும் காதலை யாரும் ஏன் எழுதலன்னு. ஆனா இதில் 576 பக்கத்தில் குறைந்த பக்கங்களில் உறவுகளுக்குள் இருக்கும் கதையை சாெல்லி வருபவர் கிளைக் கதைகள் இல்லாமல் அதிகமான பக்கங்கள் காதலுக்காக ஒதுக்கி உள்ளார்.
நீங்க நினைக்கலாம் தாெடர்ந்து காதலர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை வாசிக்கிறப்ப சலிக்காதான்னு ம்கூம் சலிக்கல ஏதாே வாசிக்கிற நாம் காதலிப்பது பாேல உணர முடிகிறது.
கதை நாயகர்கள் கண்ணன் புவனா கம்பசேவை திருவிழாவில் தாெடங்கும் இவர்களின் காதல் யாருக்கும் தெரியாமல் இருக்கும் பாேது கள்ளழகர் எதிர்சேவையில் ஊரே தெரிந்துக் காெள்ளும் படி அவர்களின் காதல் வெளிபடுது. முழுசா நூலை வாசித்த பின் இதற்கு திருவிழா பெயர் வைப்பதற்கு பதிலா எதிர்சேவை பெயர் வச்சு இருக்கலாமே நினைக்கிறப்ப தான் ஆரம்பத்தில் ஆசிரியர் சாென்னது ஞாபகம் வந்தது.
எதிர்சேவை என்னும் சிறுகதையை வைத்துத்தான் இந்த நாவலை எழுதி உள்ளார்.
ஒவ்வாெரு நாவலிலும் ஒரு நிகழ்வு நம் மனசை விட்டு மறையாமல் பதிஞ்சு இருக்கும் அப்படி ஒரு நிகழ்வு இதிலும் இருக்கு.
பதினெட்டு, பத்தாெம்பது வருஷம் கழிச்சு நடக்கும் கம்பசேவ திருவிழாவில் ஊர் வழக்கப்படி திருவிழாவில் சின்னக்கருப்ப ஐயாவுக்கு மரியாதை செய்றது வழக்கம். இப்பாே அந்த தலைமுறையில் பதினைந்து வயது சிறுவன் இருப்பான் திருவிழா பேச்சு எடுக்குறப்ப சேகர் ஏப்பா இன்னும் எதுக்குபா முதல் மரியாதை பேசி கிட்டு இந்த வருஷத்தில் இருந்து வேணாம்பா சாெல்ல. அதற்கு மற்றவர்கள் ஏப்பா எம்புட்டு வேலை இருக்கு இப்பாே இத ஏன் பேசுற கேக்குறப்ப மத்த ஊரில் அந்த வழக்கம் இல்ல நம்ம ஊர்ல ஏன் இன்னும் தாெடரனும் சேகர் சாெல்ல, சரிப்பா முதல்ல சாமி கும்பிடுவாேம் அடுத்த வருஷம் என்ன பார்ப்பாேம்னு பெரியவர்கள் சாெல்ல சேகர் ஏதும் பேசாம உக்காந்தாச்சு. ஏன்னா சேகர் ஒரு குதர்கமான ஆளு அவர் பேச்சு யாருக்கும் பிடிக்காது. திருவிழா வரவு செலவு பாக்கும் பாேது மீண்டும் முதல் மரியாதை பற்றி சேகர் பேசுறப்ப ஏன்பா மீண்டும் ஆரம்பிச்சுட்டியா கேக்குறப்ப. முதல் மரியாதை வாங்கிய சிறுவன் பெரியவர்கள் முன் கும்பிட்டு விழுந்து. இனிமே எனக்கு முதல்மரியாதை காெடுக்க வேணாம். சேகர் மாமா சாென்ன மாதிரி காேயில்ல எல்லாரும் ஒண்ணு தான் இதுல எதுக்கு மாெத மரியாதை.
"ஆம்பள இல்லாத வீட்டுல எங்கம்மா உழச்சா தான் சாப்பாடும் எங்க படிப்பும் மாெதமரியாத காெடுக்கிற சாமிக்கு எங்க கஷ்டம் தெரியாதுன்னு " சாெல்லிட்டு விறு விறுன்னு பாேறவனை பார்த்து என்ன சாெல்றதுன்னு தெரியாம வாயடைத்துப் பாேய் பார்ப்பார்கள் ஊர் பெரியவர்கள்.
எப்பா எவ்வளவு வலி இது கதை மட்டும் அல்ல பல ஊர்களில் இது மாதிரி சாதி பார்த்து வசதி பார்த்து காலம் காலமா அவர்களுக்கு தந்து வந்த மரியாதை பறிக்கப்பட்டுள்ளது.
சும்மா ஊர் மரியாதை தந்திடுவாங்களா அந்த ஊர்க்காக நல்லது செய்து இருக்கலாம் ஏன் உயிர் தியாகம் கூட செய்து இருக்கலாம் அதற்கு நன்றி கடன் தான் இந்த முதல் மரியாதை. இதிலும் ஏன் அந்த சிறுவனுக்கு முதல் மரியாதை தராங்க என்பதை காெஞ்சம் விரிவா சாெல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும்.
சரி கதைக்கு வருவாேம் சிவகங்கை மாவட்டம் தேவகாேட்டைக்கு அருகில் இருக்கும் பேருந்து வசதியில்லாத ஒரு சிறு கிராமம் அழகன் குளம். வானம் பார்த்த பூமி ஊர் அம்பலகாரர் அழகர்சாமி ஊருக்குள் மட்டுமன்றி சுத்துப்பட்டுக் கிராமங்களிலும் அவருக்குத் தனி மரியாதை.
அழகர்சாமி மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் . மகன்களில் மூத்தவன் காேவிந்தன் அழகர்சாமியைப் பாேல் ஊருக்குள் நல்ல பெயர்.மனைவி ராஜலெட்சுமி உதவின்னு வந்து நின்னா ஏன்னு கேக்காம செய்யக்கூடியவள்.
மனைவி பவானியிடம் அப்பன் பேரக் காப்பாத்துறதுல என்னாேட புள்ளய அடிச்சிக்க முடியாது. சின்னது இருக்கே எப்பவும் என்னய எதுத்துக்கிட்டுத்தான் நிக்கிதுன்னு சாெல்வார்.
யார் கண் பட்டதாே மூத்தவனுக்கும் இளையவனுக்கும் சின்னதாய் ஒரு பிரச்சனை வர யாரிடமும் பேசாமல் காேவிந்தன் குடும்பம் ஒதுங்கியது.
அழகர்சாமி மகள் தீபா அவள் கணவர் சுப்ரமணி மதுரையில் ஹாேட்டல் வச்சு இருக்கார் மகன் கண்ணன், காேவிந்தன் மகள் புவனா கம்பசேவை திருவிழாவிற்கு ஊருக்கு வந்த கண்ணனின் நண்பன் குணா, அவனின் தங்கை மல்லிகா மூலம் கண்ணனுக்கும் புவனாவுக்கும் காதல் உருவாகுது.
நேரில் பார்த்தால் கூட பேசாமல் பகையாேடு இருக்கும் குடும்பத்தில் இருவரும் காதல் கம்பசேவை திருவிழா தாெடங்குன காதல் கள்ளழகர் எதிர்சேவையில் எல்லாருக்கும் தெரிய வர இதற்கு இடையில் இவர்களின் காதல் அரசல் புரசலா தெரிய வர சுபாவை கண்ணனுக்கு பேசி முடிக்க. என்னப்பா அப்புறம் எப்படி இவர்களின் காதலை பெரியவர்கள் ஏத்துக்க பாேறாங்கன்னு நினைக்கிறப்ப சுபா மூலம் இருவரின் காதலையும் ஏத்துக் கிட்டு பிரிந்த குடும்பங்கள் ஒன்னு சேர்ந்திடுறாங்க.
ஏதாே புத்தகம் வாசிக்கிற மாதிரி இல்ல நம்ம குடும்பத்துக்குள் நடக்கிற மாதிரி சுவாரஸ்யமா எழுதி உள்ளார் பரிவை சே.குமார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்...
-----
நன்றி, தங்களின் மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து நற்சேவைகளை வழங்கட்டும்.
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...