மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013வலைச்சரத்தில் அறிந்த முகங்கள்

வணக்கம் உறவுகளே...

இன்று வலைச்சரப் பங்களிப்பின் நிறைவு நாள்... ஒரு வாரகாலமாக நல்லதொரு பணி... நிறைய வாசிக்கக் கிடைத்தது. சரி வாங்க இன்றும் சிலரைப் பார்த்துட்டு வருவோம்...

பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகங்களே இவர்கள்... புதியவர்களை அறிமுகம் செய்யாமல் அறிந்தவர்களின் அறிமுகமா என்று நினைக்கலாம்... வரும் புதியவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியவர்களைத்தான் இதுவரை அறிமுகமாகக் கொடுத்தேன்.  இன்றும் சில முக்கியப் பதிவர்கள் உங்களுக்காக...

இவரைப் பற்றி முதல்பதிவிலேயே சொல்ல நினைத்தேன். சரி பின்னால் பார்க்கலாம் என்று விட்டு வைத்தேன். மனிதர் நான் சென்ற எல்லாத்தளங்களிலும் பின்னூட்டத்தில் முதலாவது ஆளாய் சிரிக்கிறார். இவருக்கும் நான்கைந்து புதியவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றி ஆளு வந்திருக்காரான்னு பார்த்து புடிக்க வேண்டியதாப் போச்சு. தொலைக்காட்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி எப்படி சின்னத்திரையினருக்கு DD’ யோ அப்படி பதிவர்களுக்கு இவர் ‘DD’. இந்த முறை ஊருக்குப் போகும்போது இவரைப் பார்க்க நினைத்திருந்தேன் வீட்டுப் பணிகளால் சந்திக்க முடியவில்லை. அடுத்தமுறை சந்திக்க வேண்டும். பிரபலம்... சந்திக்க நேரம் ஒதுக்குவாரா தெரியவில்லை....

யாரென்றுதானே கேட்கிறீர்கள்... இங்கே  சொடுக்கி அங்கே போய் பாருங்கள்...

இனி தொடர்ந்து நம் தளத்தில் எழுதுப்பணி...
-'பரிவை' சே.குமார். 

2 கருத்துகள்:

  1. ஒரு வாரம் வலைச் சரத்தில் ஆசிரியராக இருந்து பிரபலங்களையும் அல்லாதவர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.அருமை.பலரைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாரமும் அறிமுகப்படுத்திய விதமும் மிக அசத்தல்.நேரம் கிடைக்கும் பொழுது அனைவர் தளமும் சென்று பார்க்கிறேன்.

    //மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் இன்னும் நிறைவாய் செய்ய முயற்சிப்பேன்.//

    உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தம்பி குமார்.

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...