மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் ஆசிரியர்கள்

னக்கு ஒண்ணாங்கிளாஸ், ரெண்டாங்கிளாஸ்க்கு ஒரே டீச்சர்தான். அவங்க பேர் மரியம்மை... பேருக்கு ஏற்றாற்போல அன்னைதான். எங்க அம்மா ஒண்ணாப்பு முடிச்சதும் ஆளு சின்னப்பயலா இருக்கான்... அதனால மறுபடியும் இவனை ஒண்ணாப்புல போட்டுடுங்கன்னு சொன்னதுக்கு சத்தம் போட்டாங்களாம். எட்டாவது வரைக்கும் அதே பள்ளி என்பதால் என்மேல் மிகவும் பிரியமாக இருப்பார். இப்போது எனது அன்பு ஆசிரியர் மண்ணுலகில் இல்லை.

அடுத்தது எங்க தாசரதி ஐயா, கணீர்க்குரலில் பாடம் எடுப்பதாகட்டும், அழகாக பாடல் பாடுவதாகட்டும் அவருக்கு நிகர் அவர்தான்... சிறியவர்களைக்கூட வாங்கய்யா என்று வாயார அழைப்பார்... வீட்டிற்குப் போனால் அவரைப் போல் உபசரிக்க முடியாது. கலையிலக்கியப் பெருமன்றத்தில் இருக்கும் போது அவருடன் தொடர்ந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாரிடமும் என்பிள்ளைகள் என என்னையும் முருகனையும் சொல்லுவார்.

இதேபோல் பள்ளியில் படிக்கும்போது அதிகம் தொடர்பு இல்லாவிட்டாலும் கலையிலக்கியப் பெருமன்றத்தில் இணைந்தது மூலம் மிக நெருக்கமானவர்கள் முக்கியமானவர்கள் சவரிமுத்து ஐயாவும் அருள்சாமி ஐயாவும்... இன்றும் இருவரும் மிகவும் பாசமாகப் பேசுவார்கள்...

கல்லூரியில் நிறைய ஆசிரியர்களைச் சொல்லலாம்... எங்க துறைத்தலைவர் கே.வி.எஸ் சார், அமலசேவியர் சார், வெங்கடாசலம் சார், சேவியர் சார், எம்.எஸ்.சார், சந்திரமோகன் சார், விஜயன் சார், பரமசிவம் (சார்) அண்ணன், மாணிக்கம் சார், சுப்பிரமணியன் சார், பெரிய திருவடி சார், சுந்தரமூர்த்தி ஐயா, ஆறுமுக ஐயா, தேனப்பன் ஐயா, பட்சிராஜன் சார், ரபீக்ராஜா சார், ஜானகிராமன் சார்... இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம்.

என் ஆசான் குறித்து நிறைய முறை சொல்லியாச்சு. இந்நாளில் அவருக்கும் மற்ற அனைத்து நல் ஆசிரிய இதயங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அவர்களின் பாதம் பணிந்து சொல்லிக் கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்....
-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ஆசிரியர்கள் எப்போதுமே போற்றுதலுக்கு உரியவர்களே!எந்தத் துறை சார்ந்தோராக இருந்தாலும்,ஏன் நாட்டுக்கு ஜனாதிபதி ஆனாலும் கூட,உருவாக்கிய பெருமை ஆசிரியருக்கே!

கே.ஜே.அசோக்குமார் சொன்னது…

ஆரோக்கியமான எழுத்துமுறை உங்களுடையது. நன்றாக, அழ‌காக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள். கருத்தபசு சே.குமார், வம்சியில் என்னோடு சேர்ந்து வந்தவர், வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்.
அன்புடன்
கே.ஜே.அசோக்குமார்.