மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 செப்டம்பர், 2013வலைச்சரத்தில் பிரபலங்கள்

வணக்கம் உறவுகளே...

நேற்றைய பகிர்வு தாமதமாகப் பதிவு செய்ய வேண்டியதாகிவிட்டது. காரணம் எங்கள் அறையில் இருந்து உறவினர் ஒருவர் ஊருக்குப் போனதால் அவருக்கு பெட்டி கட்டி அனுப்பி வைத்துவிட்டு வந்துதான் பதிவை தயார் செய்ய முடிந்தது. அதன் பிறகு பதிவிட்டுவிட்டு படுக்கும் போது இங்கு மணி இரவு இரண்டரைக்கு மேலாகிவிட்டது. இன்று விடுமுறைதானே என்பதால் மதியம் பதிவை தயார் செய்து மாலைக்குள் பதிவிட திட்டமிட்டிருந்தேன். காலையில் எழும்போதே கழுத்தில் பிடித்துக் கொண்டு வலியிருந்தது. அது இப்போ கூடுதலாகி இருபுறமும் திரும்பினால் நெருஞ்சி முள் குத்தியது போல் வலிக்கிறது. அதனால் வழக்கமான பாணியில அறிமுகம் செய்ய நிறைய நேரம் வேண்டும் என்பதாலும் அவ்வளவு நேரம் கணினியில் அமர எனது கழுத்து இடம் கொடுக்காது என்பதாலும் வழக்கமான அறிமுகம் நாளை (இப்போ அபுதாபியில் இரவு 10:50 மணி) கழுத்து சரியாகும் பட்சத்தில் இரண்டு பதிவாக பகிர்கிறேன். இன்று சில அறிமுகங்கள் உங்களுக்காக... இவர்கள் எல்லாம் எல்லாருக்கும் பரிட்சயமான எழுத்தாளர்கள்தான்... 

தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்...
-'பரிவை' சே.குமார்

3 கருத்துகள்:

 1. பதிவிடாவிட்டால் பரவாயில்லை. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம்.

  பதிலளிநீக்கு
 2. கழுத்துவலி இப்போது எப்படி இருக்கிறது?
  கழுத்து வலி விரைவில் நலமடைந்து பதிவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. சுவர் இருந்தாத் தான் சித்திரம் எழுதலாம்,உடம்பப் பாத்துக்குக்கோங்க.பதிவு எங்க போயிடப் போவுது?

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...