மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 செப்டம்பர், 2013காதலா... காமமா...

(வலைச்சர ஆசிரியர் பணியால் கடந்த ஒருவாரமாக மனசின் மூலம் நட்புக்களின் தளங்களுக்கு வரமுடியவில்லை... உங்கள் எழுத்துக்களை இனி தொடர்ந்து வாசிப்பேன்... சென்ற வார பகிர்வுகளை முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன் - நன்றி)


தனிமையில் நாம்...
விழித்துக்கொண்ட
காமத்தை விரட்டும்
வழி தெரியாமல்...

ஏதேதோ பிதற்றியபடி
உன் கரம் பற்ற...
படக்கென்று பறிக்கிறாய்
படபடப்போடு..!

சிறிது நேர
மௌனத்தின் முடிவில்...
காற்றில் அலையும்
உன் கேசத்தால்
உயிர் பெற்றது காமம்..!

யோசனையின் முடிவில்
தோளில் கை போட்டு
இழுத்து அணைக்க...

பருந்திடம் மாட்டிய
கோழிக் குஞ்சாய்
பதறித் தள்ளினாய்...

இருவரும்
மௌனத்தோடு...
கரைந்த நிமிடங்களில்
கலைந்தது காமம்..!

காதல் காமத்தால்
அழிந்து விடுமோ
மனது யோசிக்க...
காதல் ஜெயித்தது...

பேசாமல் கிளம்பிய
என் கரம் பற்றி
நீ கொடுத்த முத்தத்தில்
கரைந்தது காமம்...
நிறைந்தது காதல்..!
-'பரிவை' சே.குமார்

(செப்டெம்பர் 2009-ல் நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கிய கவிதை... மீண்டும் உங்கள் பார்வைகாக)

15 கருத்துகள்:

 1. காதல் என்றும் ஜெயிக்கும்...

  அழகிய வரிகள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. காதல், காமம் - இரண்டுமே எப்போதும் அவஸ்தையான
  உணர்வுகள் தான். இங்கே காதல் வென்று இருப்பது மிக
  அழகு. காதலின் வெளிப்பாடாக மலர்ந்த கவிதை நன்று.

  பதிலளிநீக்கு
 3. கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்! ----- http://mytamilpeople.blogspot.in/2013/09/common-computer-problems.html

  பதிலளிநீக்கு
 4. காதல் விளைந்திடக் காமம் மலர்வது
  வாழ்தல் வழமை விளம்பு!

  2009-ல் எழுதிய கவிதை ஆனாலும் அதன் பொலிவு இன்று பூத்த புதுமலராய் உள்ளது...

  அருமை! வாழ்த்துக்கள்!

  வலைச்சரத்தில் அழகாகப் பணியாற்றி எனையும் அறிமுகஞ்செய்தமைக்கும்
  இங்கே என் நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோ!

  த ம.2

  பதிலளிநீக்கு
 5. எப்படிப்பட்ட தருணங்கள் அவை!
  அருமை குமார்

  பதிலளிநீக்கு
 6. காதலையும் காமத்தையும் விளக்கிய விதம் அருமை. காதலில் காமம் இருக்கும். காமத்தில் காதல் இருக்காது! (தத்துவம்!!!)

  பதிலளிநீக்கு
 7. மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
  செவ்வி தலைப்படு வார்.

  என்ற குறளை நினைவுபடுத்தியது தங்கள் கவிதை.
  நன்று.

  பதிலளிநீக்கு
 8. அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. மெல்லிய உணர்வு காதல்.
  அருமையான காதல் கவிதை.

  பதிலளிநீக்கு
 10. அழகான கவிதை,வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 11. வாங்க தனபாலன் சார்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சகோதரி ஸ்ரவாணி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 12. வாங்க தமிழ்மகன் சார்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க இளமதி..
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க குட்டன்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஸ்ரீராம் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க முனைவரே...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பாலன்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க கோமதி அக்கா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மேனகாக்கா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...