மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 24 ஜூலை, 2011வாழ்க்கை முழுமையானதா? - பகுதி - I
வாழ்க்கை என்பது என்ன? நாம் வாழும் இந்த சங்கிலித் தொடர் இருக்கிறதே... இதுதான் வாழ்க்கையா... இல்லை வாழ்க்கை என்னும் பக்கத்தில் இன்னும் நிறைய இருக்கிறதா..? நாம் ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் போது நிறைவுடன் செல்கிறோமா... இல்லை நிறைவில்லா வாழ்க்கையாகிப் போச்சே என்று நினைத்துச் செல்கிறோமா? எதாவது ஒரு வகையில் சாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையா... இல்லை சாதனைகளும் நிறைந்தது வாழ்க்கையா..? வாரிசுகள் வாழ வழி செய்து வைப்பது மட்டும் வாழ்க்கையா... இல்லை நாம் வாழ்ந்த வாழ்க்கை பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வாழ்க்கையா? வாழ்க்கை குறித்து இதுபோல் இன்னும் எத்தனையோ கேள்விகள் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள முடியும். கேட்டால் மட்டும் போதாது எது வாழ்க்கை என்று தெளிந்து வாழ நினைக்க வேண்டும். ஆனால் நாம் இதுவரை இப்படிப்பட்ட கேள்விகளை நமக்குள் கேட்டிருக்கிறோமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது எப்படி வாழவேண்டும் என்று நினைக்கத்தான் தோன்றுமா என்ன?

நம் மனித இனம் எப்போது தோன்றியது யாருக்கேனும் தெரியுமா? ஆதாம் ஏவாள்தான் ஆரம்பம் என்கிறோம். சரி அப்படியே இருக்கட்டும். அந்த ஆதாம் ஏவாள் தொடங்கி இன்று இந்த நொடியில் உலகின் ஏதோ ஒரு மூலையில் பிறக்கும் குழந்தை வரை வந்தவர்கள் எத்தனை பேர்... வாழ்ந்து சென்றவர்கள் எத்தனை பேர்... என்பது நம்மில் யாருக்கேனும் தெரியுமா? அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டா? ஒரு வாரம் முன்னர் என்ன சாப்பிட்டோம் என்பதே நமக்கு ஞாபகத்தில் இல்லை... இதில் வாழ்ந்தவர்கள் கணக்கு நமக்கெதுக்கு என்ற நினைப்பு வருகிறது அல்லவா?.

எத்தனையோ மனிதர்களில் நம்மால் ஞாபகத்திற்குள் வைத்துக் கொள்ள முடிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்? விவேகானந்தர், நேரு, அண்ணா, காந்தி, காமராஜர், கண்ணதாசன்... இப்படியாக நம் மனதிற்குள் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்களா? அப்படியானால் வாழ்ந்து மறைந்த மற்றவர்கள் எல்லாம் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார்கள் என்பதுதானே அர்த்தம். இதே நிலை நாளை நமக்கும்தான் என்பதை நாம் அறியாமலில்லை இருந்தும் என்ன செய்துவிட்டோம்... சொல்லுங்கள்.

ஒரு சிலர் மட்டும் மனதில் நிற்க காரணம் அவர் சார்ந்த துறைகளாலேயே தவிர அவரது ஒழுக்கத்தால் அல்ல என்பதை நாம் அறிவோம். அப்படியிருக்க இந்த உலகில் பிறந்த எல்லாரும்தான் வாழ்ந்தார்கள். தங்களுக்கும் தங்கள் சந்ததியின் வாழ்க்கைக்குமாக உழைத்தார்கள்... என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அனுபவித்து மடிந்தார்கள். ஆனாலும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நினைவில் இல்லையே?மருது பாண்டியர், கட்டப்பொம்மன் என அரசர்கள் எல்லாம் ஞாபகத்தில் நிற்கக் காரணம் பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். இன்னும் எத்தனை காலங்களுக்கு வரலாறுகள் பேசும்?

ஏன் நம் உறவுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை இந்த உலகிற்கு கொடுத்த அப்பா, அம்மாவை நமக்குத் தெரியும். அவர்கள் மூலமாக அப்பாவின் பெற்றோர், அம்மாவின் பெற்றோருடன் வாழ்ந்து இருக்கிறோம். அவர்களுக்கு முந்தைய நம் தாத்தா பாட்டி குறித்த செய்திகளை அவர்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். அவர்களுக்கும் முந்தையவர்கள் யார்? அவர்கள் சாதித்தது என்ன என்பது வெகு சிலருக்கே தெரியலாம் ஆனால் பலருக்கு?

நம் வம்சாவழியின் அடி வேரில் சிலது மட்டுமே தெரிந்த நமக்கு ஆணி வேர் எங்கே தெரியப் போகிறது. நமக்கேனும் பரவாயில்லை தாத்தா பாட்டி வரை போகிறோம். நம் குழந்தைகளான இன்றைய தலைமுறை கணிப்பொறியையும் வீடியோ கேமையும் கட்டிக் கொண்டு அறைக்குள் அடங்கிய வாழ்க்கையோடு பழகிவிட்டது. அவர்களுக்கு உறவின் விழுதுகள் தெரியாமல் போகும் காலம் தூரமில்லை.

நாம் பிறந்தோம்... வளர்ந்தோம்... வயதின் வளர்ச்சிக்கான மாற்றத்தில் காலத்துக்கு தகுந்தவாறு பச்சோந்தியாய் வாழ்கிறோம். திருமணம், குழந்தைகள் என ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லை எட்டும் நாம் அத்துடன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். நமக்கு பின்னே நம் சந்ததி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஓட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சொத்து சேர்த்தாச்சு... பிள்ளையை படிக்க வச்சி நல்ல வேலையில் அமர்த்தி கல்யாணமும் பண்ணிப் பார்த்தாச்சு... எல்லாம் அனுபவிச்சாச்சு இனி என்னய்யா இருக்கு காடு வா... வாங்குது... வீடு போ...போங்குது... சந்தோஷமா போக வேண்டியதுதான் என்று மாலை நேரத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வேப்பமரத்துக் காற்றை சுவாசித்துக் கொண்டே பேசும் முதியவர் என்ன சாதித்துவிட்டதாக கருதுகிறார்... அவர் சொல்லும் வாவா... போபோவோடு அவர் குறித்த நினைவுகளும் சமாதியாகிவிடும் என்பது தெரிந்துதானே சொல்கிறார். அப்படியானால் அவர் பெற்ற இந்தச் சந்தோஷங்களுடன் வாழ்க்கை முடிந்து விடுகிறதா?

----->தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

**** பதிவு பதிந்த பின் பார்த்தால் மிக மிக நீண்ட பதிவாகிவிட்டது எனவே இரண்டு பதிவாக பதிவிட வேண்டியதாகிவிட்டது. மீதமுள்ள பகுதி அடுத்த பதிவாக வரும்... நன்றி.

**** Thanks:  Photo from Google.

31 கருத்துகள்:

 1. //நாம் ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் போது நிறைவுடன் செல்கிறோமா... இல்லை நிறைவில்லா வாழ்க்கையாகிப் போச்சே என்று நினைத்துச் செல்கிறோமா? எதாவது ஒரு வகையில் சாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையா... இல்லை சாதனைகளும் நிறைந்தது வாழ்க்கையா..? வாரிசுகள் வாழ வழி செய்து வைப்பது மட்டும் வாழ்க்கையா... இல்லை நாம் வாழ்ந்த வாழ்க்கை பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வாழ்க்கையா? வாழ்க்கை குறித்து இதுபோல் இன்னும் எத்தனையோ கேள்விகள் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள முடியும். கேட்டால் மட்டும் போதாது எது வாழ்க்கை என்று தெளிந்து வாழ நினைக்க வேண்டும். ஆனால் நாம் இதுவரை இப்படிப்பட்ட கேள்விகளை நமக்குள் கேட்டிருக்கிறோமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது எப்படி வாழவேண்டும் என்று நினைக்கத்தான் தோன்றுமா என்ன?//

  தொடக்கமே மனதை குடைந்த கேள்விகளுடன் ஆரம்பம் ....அருமை

  பதிலளிநீக்கு
 2. வாழ்க்கையைப்பற்றி நல்லதொரு தொகுப்பு..

  நிறையப்பேரின் வாழ்க்கை இப்படித்தன் வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம்..

  பதிலளிநீக்கு
 3. ஆழ்ந்த சிந்தனைகள்..தொடர்ந்து சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்க்கையைப் பற்றி அருமையானதொரு பார்வை. நன்று குமார். அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  பதிலளிநீக்கு
 6. உங்க பதிவை படித்தவுடன், ஆம் என்ன சாதித்து விட்டோம்? என்று எண்ண தொடங்கி விட்டேன்.வாழ்க்கையை பற்றி அருமையான அலசல்.. அடுத்த பதிவிர்க்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. பரவாயில்லை குமார் வித்தியாசமான ஒரு சிந்தனை பதிவு தான் இது

  பதிலளிநீக்கு
 8. வாங்க மாய உலகம்...
  முதல் வருகை...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  நீங்களும் எழுதுங்கள் நண்பா.

  பதிலளிநீக்கு
 9. வாங்க ரியாஸ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க செங்கோவி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ராமலெஷ்மி அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க வலையுலகம்...
  உங்கள் அழைப்பிற்கு நன்றி.
  கண்டிப்பாக இணைக்கிறோம்... இணைகிறோம்....

  பதிலளிநீக்கு
 11. வாங்க ரமா அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சௌந்தர்..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. /////இன்னும் எத்தனை காலங்களுக்கு வரலாறுகள் பேசும்?///

  இந்த இடத்தில் கொஞ்சம் நின்று நகர்ந்தேன் சகோதரா...

  பதிலளிநீக்கு
 13. நிறையவே யோசிக்க வைக்கிறீங்க குமார் !

  பதிலளிநீக்கு
 14. மதிய நேர காபிக்கு கொஞ்சம் கஷ்டமாவே இருக்குங்க.
  இந்த மாதிரி தேடலில் சுலபமாகத் தொலைந்து போக முடியும். நிறைய யோசிக்க வைக்கிறீர்கள். சாதனைகள் அவரவர் செயலைப் பொறுத்து வாழ்வில் நிறைவைத் தருகின்றன. சிலருக்கு மூச்சு விடுவதும் சாதனை. கட்டில் கிழவரின் சந்தோஷங்கள் வாழ்வில் நிறைவைத் தரலாம் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. ரொம்ப சீரியஸா போகுதே.. அந்த மீன் ஃபோட்டோ கலக்கல்

  பதிலளிநீக்கு
 16. //பிறந்தோம்... வளர்ந்தோம்... வயதின் வளர்ச்சிக்கான மாற்றத்தில் காலத்துக்கு தகுந்தவாறு பச்சோந்தியாய் வாழ்கிறோம்...//

  நெற்றிப்பொட்டில் அறைகிறது.

  அடுத்த....காத்திருக்கிறோம், குமார்.

  பதிலளிநீக்கு
 17. சிந்தனையைத் தூண்டியது.. தொடருங்கள்.. குமார்.

  பதிலளிநீக்கு
 18. நம் குழந்தைகளான இன்றைய தலைமுறை கணிப்பொறியையும் வீடியோ கேமையும் கட்டிக் கொண்டு அறைக்குள் அடங்கிய வாழ்க்கையோடு பழகிவிட்டது. அவர்களுக்கு உறவின் விழுதுகள் தெரியாமல் போகும் காலம் தூரமில்லை.

  நிக‌ழ்கால‌ உண்மை இது! ஏற்க‌ன‌வே இன்றைய‌ குழந்தைக‌ளுக்கு உறவின் அருமை தெரிவதில்லை! அதற்கு கணினி, மற்ற‌ புறச்சாதன‌ங்கள் மட்டும் காரணம் இல்லை! உறவுகளைப் பற்றியும் அன்பின் மேன்மையைப்பற்றியும் சொல்லிக்கொடுத்து வள‌ர்க்காத இன்றைய பெற்றோர்கள்தான் முக்கிய காரணம்!

  நல்ல பதிவு!

  முதுமை அடையும்போது அதுவரை வாழ்ந்த அனுபவங்கள் தந்த களைப்பும் நிறைவும்தான் அந்தக் கிழவரை அப்படிப் பேசச்சொல்லுகிறது!

  பதிலளிநீக்கு
 19. நல்ல பதிவு மனசு மனசை தட்டிகேட்கும் பதிவு தொடருங்கள்........வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  பதிலளிநீக்கு
 21. //நாம் பிறந்தோம்... வளர்ந்தோம்... வயதின் வளர்ச்சிக்கான மாற்றத்தில் காலத்துக்கு தகுந்தவாறு பச்சோந்தியாய் வாழ்கிறோம். திருமணம், குழந்தைகள் என ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லை எட்டும் நாம் அத்துடன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். நமக்கு பின்னே நம் சந்ததி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஓட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன//

  அசத்தல் வரிகள் பாஸ்!
  உண்மைதான்! எல்லாரும் காலங்காலமாக ஓடிக்கொண்டே இருந்தாலும் வெகு சிலரின் தடங்களே சரித்திரத்தில்! மற்றவர்கள் எந்த அடையாளங்களும் இல்லாமல் நிறுத்திவிடுகிறோம்!

  பதிலளிநீக்கு
 22. வாங்க ம.தி.சுதா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க அப்பாத்துரை...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கருன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க சி.பி. அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சத்ரியன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க தேனம்மை அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மனோ அம்மா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க பிரகாஷ் சோனா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அமைதிச்சாரல் அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வாங்க மாய உலகம்....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஜீ...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாங்க மாய உலகம்....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஜீ...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...