மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஜூலை, 2010பயணம் எதுவரை..?


ஏதோ நினைவில் எங்கோ பயணம்...
போகுமிடம் மனதில் இல்லை...
திரும்பி வரும் எண்ணம்
இதுவரை எழவேயில்லை..!

இலக்கில்லா இந்தப் பயணம்
எதுவரை போகும்..?

வாழ்வின் எல்லை வரையிலா..?
வயதின் முதிர்ச்சி வரையிலா..?
தெரியாமலே பயணம்...

எப்படிப்பட்ட பாதை
என்பது தெரியாது..!

எங்கே போய் எங்கே முடியும்
என்பது தெரியாது...

இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...

இதுவரை பயணித்தோரின்
வழித்தடத்தில் பயணம்...

நாளைய பயணத்தில்
எத்தனை வழித்துணை....
என்பதறியா பயணம்..!

நாளை பய(ண)த்தில் நான்...?

-'பரிவை' சே.குமார்

29 கருத்துகள்:

 1. //
  இலக்கில்லா பயணத்தில்
  எதையோ தேடி...//

  அந்த "எதையோ தேடி" இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. அல்லது எதைத் தேடி அலைகிறோம் என்பதை அவர்கள் அறியவுமில்லை.

  அருமை குமார்.

  நல்ல சிந்தனை.

  பதிலளிநீக்கு
 2. வாழ்க்கைப்பயணம் என்பது ஒரு இலக்கை நோக்கியே..>>> இலக்கு தவறுமானால் பாதையும் மாறும். இவை இரண்டும் ஒன்றொடொன்று ஒத்தவை நேர்மாறல்.

  நல்ல கவிதை. அருமை..

  பதிலளிநீக்கு
 3. வாழ்வின் எல்லை வரையிலா..?
  வயதின் முதிர்ச்சி வரையிலா..?
  தெரியாமலே பயணம்...

  ..... எங்கே செல்கிறோம் - எப்படி செல்கிறோம் - யாருடன் செல்கிறோம் - எப்பொழுது செல்கிறோம்...... ம்ம்ம்ம்ம்ம்.....
  ஆனால் பயணம் நிச்சயம். செல்கிறோம்..... நல்ல சிந்தனை கவிதை. :-)

  பதிலளிநீக்கு
 4. அருமை குமார்.

  நல்ல சிந்தனை.

  பதிலளிநீக்கு
 5. /இலக்கில்லா பயணத்தில்
  எதையோ தேடி...

  இதுவரை பயணித்தோரின்
  வழித்தடத்தில் பயணம்...//

  அவர்கள்தான் சமூகம் என்பவர்கள். மாறிப் பயணித்தால்?:)))))

  பதிலளிநீக்கு
 6. முதல் முறையாக இங்கு வருகிறேன்.......
  //வாழ்வின் எல்லை வரையிலா..?
  வயதின் முதிர்ச்சி வரையிலா..?
  தெரியாமலே பயணம்...//அனைத்து வரிகளும் அழகான வரிகள்..

  பதிலளிநீக்கு
 7. வாங்க அக்பர்...
  ஆம் அக்பர் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதைவிட அறியவில்லை என்பதே உண்மை.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க ஸ்டார்ஜன்...
  கருத்துக்கு நன்றி.

  உங்கள் கூற்று சரியே.

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. நல்ல சிந்தனையுள்ள கவிதை...

  பதிலளிநீக்கு
 11. வாங்க சித்ரா...
  பயணம் நிச்சயமானது என்பதே நிதர்சனமானது.

  பதிலளிநீக்கு
 12. வாங்க பத்மா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க வானம்பாடிகள் ஐயா...
  ஆம் சமூகத்தின் பின்னேதான் நாம்... அதை விடுத்து மாறிப் பயணித்தால் இலக்கை அடைய முடியுமோ என்னவோ... ஆனால் யாரும் அந்தப் பாதையை விரும்புவதில்லையே ...

  பதிலளிநீக்கு
 14. வாங்க சிநேகிதி...
  முதல் வருகைக்கு மிக்க நன்றி...
  கருத்துக்கு இரண்டாவது நன்றி...

  தொடர்ந்து வாங்க கருத்துக்களோடு..!

  பதிலளிநீக்கு
 15. வாங்க மேனகாக்கா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 16. குமார்...எம் வாழ்வின் திருப்பம்,முடிவு,எல்லை தெரிந்திருந்தால் துன்பம்,
  கஸ்டம்ன்னு இருந்திருக்காது !

  பதிலளிநீக்கு
 17. நாளைய பயணத்தில்
  எத்தனை வழித்துணை....
  என்பதறியா பயணம்..!

  நாளை பய(ண)த்தில் நான்...?


  நாங்களும் குமார்
  நல்ல கருத்து
  நேரமிருக்கும் போது என் தளத்திற்கு வருகை தாருங்கள்

  பதிலளிநீக்கு
 18. //
  இலக்கில்லா பயணத்தில்
  எதையோ தேடி...//

  super!

  பதிலளிநீக்கு
 19. வாங்க ஹேமா...
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க சக்தி...
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க வானதி...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க சரவணன்.

  கருத்துக்கு மிக்க நன்றி.
  கண்டிப்பாக உங்கள் தளம் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. வாங்க கார்த்திக்...

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க சௌந்தர்...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...