மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 மார்ச், 2017மனசின் பக்கம் : நெருப்புக்கு அறிமுகம் வேண்டுமா..?

"நெருப்புடா...!"
வெள்ளிக்கிழமை இரவு ஊருக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது எங்கள் தளத்தில் 'தீ... தீ...' எனக் குரல்கள். அறை நண்பர் ஓடிப்போய் என்னவென பெங்காளியிடம் கேட்க, அவன் கட்டிடத்தில் தீ பிடிச்சிருக்கு... வேகமாக இறங்கி வாங்க எனக் கத்தியபடி ஓட, எல்லாரும் வேகவேகமா மொபைலை எடுத்துக் கொண்டு கிளம்ப நான் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லும் பேக்கைத் தூக்கிக் கொண்டு... மனைவியிடம் விவரம் சொல்லி... அப்புறம் கூப்பிடுறேன்னு சொல்லிட்டு நாலு மாடி படியிறங்கி கீழே வந்தா... காவல்துறை தீயணைப்பு வண்டி நிக்குது....

கட்டிடம் முழுவதும் கருகல் வாடை நிரம்பியிருந்தது... ஆஹா... இன்னைக்கு நம்ம உயிர் பிழைச்சிக்கும்... உடமைகள்...? என்று யோசித்து வாசலுக்குப் போயி, எந்தத் தளத்துல.... எதனால தீ பிடிச்சதுன்னு விசாரிச்சா... எவனோ ஒருத்தன் சிகரெட்டைப் பிடிச்சிட்டு குப்பை போடுற வழியில அதை அணைக்காமல் தூக்கிப் போட, அது நேராக சேர்ந்திருந்த குப்பைகளில் விழுந்து அதனால் தீப் பிடித்திருக்கிறது... அட நாதாரிகளான்னு திட்டிட்டு லிப்டைப் பிடித்து மேலே ஏறி வந்து மனைவிக்கு விவரம் சொல்லி.... இல்லேன்னா அவர் தூங்க மாட்டாரே...

Image result for அபுதாபி தீ விபத்தி
(துபாய் ஹோட்டலில் சில மாதங்களுக்கு முன் நெருப்புப் பிடித்த காட்சி)
வியாழன் இரவே மதுவில் நீந்த ஆரம்பிக்கும் மனிதர்கள் இங்கு அதிகம்... அவர்களாலேயே பிரச்சினைகளும் அதிகம். வார விடுமுறை என்பது மதுக் குடிப்பதற்கான நாளே என்பதை எல்லா நாட்டுக்காரனும் முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... மது விற்பனை வார விடுமுறையில் படு ஜோர்... கருப்பு கவருக்குள் பாட்டில்களைச் அள்ளிச் செல்லும் ஆண்களும் பெண்களும் அதிகம்.

'ஓடியாங்க... ஓடியாங்க'ன்னு சொன்னதும் நண்பர் ஒருவர் கைலியோடு ஓட, மற்றொரு நண்பரோ ஊருக்குப் பேசியபடி ஓட, நான் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் இருந்ததால் பேக்கை எடுத்துக் கொண்டு ஓட, போலீஸ் மேலே வந்தால் பிரச்சினை என்பதால் தண்ணிப் பாட்டிலை (ரம்) கவரில் போட்டு கட்டிலுக்கு கீழே ஒளித்து வைத்துவிட்டு..  மற்றொரு நண்பர் ஓடி வர, என ஓடித் திரும்பி அறைக்கு வந்ததும் அவசரத்தில் டீசர்டை திருப்பிப் போட்டுக் கொண்டு ஓடியதையும், அந்த ரணகளத்திலும் தண்ணிப் பாட்டிலை பாதுகாத்து வைத்ததையும்... சிகரெட்டைத் தூக்கி குப்பையில் போட்டதையும் சொல்லிச் சொல்லிச் சிரித்தோம்.

ஆம் சிரித்தோம் என்றாலும் அந்த சிகரெட் விளைவித்த சிறு நெருப்பு மிக வேகமாக பரவியிருந்தால்... எங்கள் கட்டிடம் பழுது பார்க்கப்பட்ட பழைய கட்டிடம் என்பதுடன் ஒரு தளத்தில்... நாலு வீடுகள்... ஒவ்வொன்றிலும் நாலு அறைகள்... மொத்தம் 16 அறைகள்... அறைக்கு ஒரு சிலிண்டர் என்றாலும் தோராயமாய் 16... மொத்தம் எட்டு மாடி.... கணக்குப் பண்ணுங்க.... ஆட்கள் சேதாரமில்லாமல் தப்பினாலும் பொருட்கள் எல்லாம் போகும்... அதனால்தான் நான் சான்றிதழையும் பாஸ்போர்ட்டையும் எனது பேக்கிலேயே வைத்திருப்பது... எது போனாலும் பொழப்புக்கு சான்றிதழும் ஊருக்குப் போக பாஸ்போர்ட்டும் வேணுமில்ல.

"என்னைப் பற்றி நான்"
டந்த வாரம் ஏஞ்சலின் அக்கா எழுதிய 'என்னைப் பற்றி நான்' பகிர்வில் மதுரைத் தமிழன் அண்ணா, நிஷா அக்கா,  ஆதிரா அக்கா, கீதா அக்கா  மற்றும் பலருடன் ஏஞ்சலின் அக்காவும் கருத்துக் களத்தில் கலக்க, இத்தனை வருடத்தில் முதல் முறை கருத்தில் சதம் அடித்து 195 நாட் அவுட்டாக களத்தில் நிற்கிறது பகிர்வு. அனைவருக்கும் நன்றி சொல்லிக்கிற நேரத்தில் ஒவ்வொரு பதிவரையும் இதே போல் உற்சாகப்படுத்துங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
"கதை"
தை எழுத வேண்டும் என்ற எண்ணம் இப்போது தூங்கிருச்சு.... கடந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு கதைதான் எழுதினேன். சென்ற வாரத்தில் நான் மதிக்கும் அண்ணன் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு... கதை எழுது என... முயற்சித்தால் எதுவும் தோணலை... அப்புறம் நண்பன் தமிழிடம் 'என்னடா இது சோதனை... ஒரு கதை எழுத முடியலை' என்று சொல்ல... 'போய்த் தூங்கு' என்று திட்டினான். சில கதைகளை மாற்றி அவர் கேட்டபடி கொடுக்கலாம் என்று முயற்சித்து அதுவும் சரிவராமல் மீண்டும் அவனிடம் புலம்ப, 'மூதேவி... நீ எப்பவும் எழுதுற மாதிரி எழுது... அதை மாற்றினேன்... இதை மாற்றினேன்னு... உன்னோட பாணி எழுத்துத்தான்டா நல்லாவரும்' அப்படின்னு மறுபடியும் அர்ச்சனை... வியாழனன்று அலுவகத்தில் பணியில்லை... மெல்ல ஆரம்பித்தேன்.... மெல்ல மெல்ல எழுதி... அழித்து.... மாற்றி.... இப்படியே எப்பவும் போல் கதையின் போக்கில் பயணித்து மாலைக்குள் முடித்துவிட்டேன். ரொம்ப நாளைக்குப் பிறகு மனநிறைவாய் ஒரு கதை... அது எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சர்யமில்லை.... ஏன்னா நான் எழுதும்... நானல்ல நாம் எழுதும் எதுவுமே நமக்குச் சிறப்பானதுதான் இல்லையா... என்னது கதை குறித்துச் சொல்லலையா... அது சஸ்பென்ஸ்... அந்த சஸ்பென்ஸை விரைவில் உடைப்போம்.

"அறிமுகம் தேவையா?"
ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' உங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த ஒன்றாக... இனி எழுத இருக்கும் நண்பர்கள் இன்னும் சிறப்பாக எழுத ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதால் தவறாது வாசியுங்கள்... மிக நீண்ட பகிர்வாய் வர இருக்கிறது. இனி வரும் வாரங்களில் அடுத்த வார என்னைப் பற்றி நான் குறித்து முதல் வார பகிர்வின் முடிவில் ஒரு சிறு அறிமுக விளம்பரம் கொடுத்திடலாமா... இல்லை இப்போது போல் சஸ்பென்ஸாகவே வெளிவிடலாமா.. எனக்கு சஸ்பென்ஸாக வைத்திருந்து வெளியிடுவதுதான் சரியெனத் தோன்றுகிறது... தங்கள் எண்ணம் எதுவாகினும் சொல்லுங்கள்.... செயல்படுத்துவோம்.
-'பரிவை' சே.குமார்.

58 கருத்துகள்:

 1. பெண்ணுக்கழகு முகம். எழுத்துக்கு அழகு சஸ்பென்ஸ். காத்திருக்கிறோம் நண்பரே!

  -இராய செல்லப்பா நியூஜெர்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...

   அதுவும் சரிதான்...வாராவாரம் சஸ்பென்ஸாய்ப் பார்ப்பதுதான் சுகமே....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. நீங்க நீண்ட பதிவு என்று சொல்லிவிட்டதால் அது நமது எருமை சாரி அருமை நிஷா அவர்களைப் பற்றிய பதிவாகத்தான் இருக்கும் இப்படி நீண்ட என்று சொல்லிவிட்டு சஸ்பென்ஸ் என்று சொன்னால் எப்படி அந்த சஸ்பென்ஸ்தான் உடைந்து போய்விட்டதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   நிஷா அக்கா என்று தாங்கள் நினைத்தால் ஏமாற்றமே... ஏன்னா ஹோட்டல் வேலை, உடல் நிலை பிரச்சினை என அக்கா ஜகா வாங்கியாச்சு... சோ புதன்கிழமை வரை காத்திருங்கள்...

   இனி வரும் வாரங்கள் எதிர்பாராத பதிவர்கள்தான்...

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
  2. ம்கூம் இதுக்கு பேரு சஸ்பென்ஸாம். அடப்போங்கப்பா! நான் அவளில்லை.

   நீக்கு
 3. அய்யோ அடுத்த புதன் கிழமை நிஷாவை பற்றி அல்லவா பதிவு வருகிறது என்று பட்சி சொல்லுது அவர்கள் எழுதும் கருத்தே மிகப் பெரிய பதிவா இருக்குமே இப்ப அவரை பற்றி பதிவு வந்தா கடவுழே நீதானப்பா எங்களை காப்பாற்றனும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா....
   அக்காவோட என்னைப் பற்றி நான் - தொடரும் போட்டுத்தான் எழுதணுமின்னு நினைச்சிருந்தேன்... ஆனால் ஆரம்பத்தில் கேட்ட பத்து பேரில் அக்கா உள்ளிட்ட பலர் தரவில்லை... பின்னர் கேட்டவர்கள் எல்லாம் உடனுக்குடன் தங்களைப் போல் அனுப்பித் தந்தார்கள்... இப்போ மூன்று வாரத்துக்கான பகிர்வு இருப்பதால் மூன்றாவது வார முடிவில் சிலரை அணுக எண்ணம்... வாங்கி வைத்து நாள் நீடிப்பது சரியாகத் தெரியவில்லை என்பதால் இரண்டு வாரம் முன்பு கேட்டு வாங்கிக் கொள்கிறேன்....

   அக்கா இனி ஜூன், ஜூலைதான்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. அக்கா மேல எம்பூட்டு நம்பிக்கை குமார் உங்களுக்கு. என்னை யூன் யூலைக்குள் துரத்திட்டிங்களேப்பா!

   நீக்கு
  3. அப்பாடி ஜூன் ஜூலையில் நான் வலைதளத்தில் இருந்து விலகிவிடலாம் என நினைத்து இருந்தேன் அந்த சமயதில் அக்காவின் பதிவை வெளியிடுவதால் நான் தப்பித்தேன்

   நீக்கு
 4. உங்களுக்கு சேதம் ஏதும்மில்லாமல் மீண்டு பாதுகாப்பாக வந்ததற்கு கடவுளுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   குப்பைத் தொட்டியில் பிடித்ததால் அதை வெளியில் இழுத்து அணைச்சிட்டாங்க... பிரச்சினை இல்லை...

   தங்கள் அன்புக்கு நன்றி.

   நீக்கு
  2. அண்ணா? எப்போதிருந்து இந்த பதவி உயர்யு? அபப்டின்னால் இனி நானும் அண்ணா சொல்லிக்கலாமல மதுரைத்தமிழன் அண்ணாவே

   நீக்கு
  3. குமார் இனிமேல் அண்ணா என்று அழைக்கவேண்டாம் மதுர என்றோ மதுரைத்தமிழன் என்றோ கூப்பிடலாம் பெண்கள் சகோ அண்ணா என்று கூப்பிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த சமுக கண்ணில் இருந்து தங்களை காத்து கொள்ள அப்படி அழைக்கிறார்கள் அதனால் நாம் அப்படி கூப்பிட வேண்டும் என்பதில்லை

   நீக்கு
  4. ஹாஹா நல்லாத்தான் குட்டு போடுறிங்க மதுரை சார். ஆனால் நான் அண்ணா தம்பி என அழைப்பது உண்மையில் அந்த பாசத்தை உணர்ந்த, உணர்த்தியவர்களிடம் மட்டும் தான்.இந்த தற்பாதுகாப்பெல்லாம் நமக்கு தேவையில்லை. அத்தோடு வயதில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைத்தால் சின்ன வயதில் என் அம்மா அடிப்பார். அப்படியே பழகி போனது.

   நீக்கு
  5. நான் என்றும் பதினாறுதான் அதனால் என் பெயரை சொல்லி அழைக்கலாம். என் பெயர் மறந்து போச்சுன்னு மட்டும் வந்து சொல்லாதீங்க ஹீஹீ

   நீக்கு
  6. என்னைவிட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் அண்ணா என்று அழைப்பதுடன் என்னைவிட சிறியவர்களை பெயர்சொல்லியோ அல்லது என்னய்யா, என்னப்பா என்றோ அழைத்தே பழக்கப்பட்டவன்... வாடா போடா என்று அழைத்ததில்லை... நட்பைத் தவிர....

   நம்ம துளசி அண்ணாவுக்கு நீங்க ஜூனியர்ன்னு சொன்னாங்க... அப்ப நமக்கு மூப்புத்தானேன்னு அண்ணா போட்டேன்... இனி வாங்க... போங்கவில் நிறுத்திக்கிறேன்... பெயர் சொல்லி அழைப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை....

   நீக்கு
  7. உண்மையில் நீங்க முதல் தடவை சாட் வந்தப்போ கொடுத்த உங்க் அறிமுகப்பெயரை அதான் உண்மைப்பெயரை மறந்து தான் போனேன் தெரியுமா? நினைவே வர மாட்டேங்குது மதுரை அண்ணாச்சி.

   நீக்கு
 5. சாமியோ ஏஞ்சலின் பதிவில் கருத்துகள் 200 க்கு மேல் தாண்டி இருக்கணும் இப்போது காரணம் 200 வது கருத்தை சொன்னது நாந்தான் ஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹா... 200 அடிச்சிட்டேனா.... பாருங்க இன்னைக்கு புஜேரா 500 பாலுக்கு மேல பிடிச்சித்தான் 200 தொட்டார்... நாம 400 பார்வையாளர்களுக்குள் 200 பிடிச்சிட்டோம். நன்றி தங்களுக்கும் தங்கள் குழுவுக்குமே....

   நீக்கு
 6. துபாய்க்கு என் மகனைப் பார்க்கப் போயிருந்தேன் ஒரு இரவு நெருப்புப் பற்றிய சைரென் எழுந்தது எல்லோரும் அரக்கப் பரக்கக் கீழே ஓடினோம் பிறகு தெரிந்தது அது ஒரு ஃபால்ஸ் அலார்ம் என்று பதிவைப் படித்தபோது அந்த நினைவு வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   உண்மைதான்... அதுபோல் அடிக்கடி அடிக்கும்....
   எங்க கட்டிடத்தில் அலாரமே வேலை செய்யலை.... :(

   தண்ணி போட்டால் இப்படித்தான்... கட்டிட வாட்ச் மேன் (நாத்தூர்) போலீசிடம் முழிச்சிக்கிட்டு நின்னான்... என்னாச்சுன்னு தெரியலை...

   ஒரு அறையில் மூணு பேர்தான் இருக்கணும்ன்னு ரூல்ஸ்... ஆனா அறைக்கு 5,6 இருந்தாத்தான் நமக்கு கட்டுபடியாகும்... செக்கிங் வந்தால் ஆளைக் குறைக்கணும்... செலவு அதிகரிக்கும்.

   நீக்கு
 7. குமார் நீங்கள் நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி! தீ பிடித்து எல்லோரும் தப்பித்திருக்கிறீர்களே! ஹப்பா முதலில் கொஞ்சம் பதற்றத்துடன் தான் வாசித்தோம்....இறுதியில் நல்லதே நடந்துள்ளது...கடவுளுக்கு நன்றி...

  சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்....!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் அன்புக்கு நன்றி.... நானெல்லாம் இன்னைக்கு கட்டிடம் காலி என்ற நினைவில்தான் கிளம்பினேன்...

   கடவுள் கிருபை...

   சரி சஸ்பென்ஸாகவே வைப்போம்.

   நீக்கு
 8. ஏஞ்சலின் பதிவு நாடவுட்!!!!சூப்பர்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   ஆமாம் அக்கா நின்னு ஆடிக்கிட்டு இருக்காங்க...

   நீக்கு
 9. சுவாரஸ்யமான அனுபவங்கள். சஸ்பென்ஸ் உடையக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   சஸ்பென்ஸ்... சஸ்பென்ஸாகவே இருந்து உடைவதே சிறப்பு... இதுவரை 9 பதிவுகள் அப்படியே போயிருக்கு... அதுதான் நல்லாவும் இருக்கு...

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   நீக்கு
 10. இந்தபக்கம் ஒரு பதிவு இருப்பது தெரியாமல் நான் எஞ்சலின் பதிவில் பின்னூட்டங்களை பத்து முறை தேடிகிட்டிருக்கின்றேன். ஆனால் இந்தப்பின்னூட்டங்கள் நான் இந்தப்பதிவில் பின் தொடர்வதா கிளிக் செய்யு முன் என் மெயிலுக்கு எப்படி வந்தது? அங்குமிங்குமாய் என்னை அலைய விடுறிங்களே சாமீய்.

  மதுரைத்தமிழன் என்னை கிண்டல் செய்திட்டு அவர் பொன்னியின் செல்வன் பத்து பாகம் பின்னூட்டம் போட்டு அடிச்சி விளாசிட்டிருக்கார். பேஸ்புக் வராமல் ஏஞ்சலில் செய்த மிகப்பெரிய நன்பை இது. ஹூரேக்க்க்க்க்க்க்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அதேதான் நினைச்சேன் நிஷா .நான் பார்த்தேன் இந்த பின்னூட்டங்களை ..அப்போவே யோசிச்சேன் நிஷா மாற்றி நோட்டிபிகேஷன் வைச்சிருக்காங்கன்னு ...
   ஆனாலும் புலியும் வாலும் அப்பு கமல் நடக்க தனியா படத்தில் வருமேஅதுமாதிரி கொஞ்சம் நானும் குழம்பிட்டேன் ஹாஹா ..

   ம்ம் அப்புறம் உங்க பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே எல்லார்கிட்டயும் பரவிடுச்சுப்பா உண்மையில் நாம் ஜாலியா பேசும்போது எல்லாருமே அன்னிக்கு சந்தோஷமாயிட்டாங்க ..

   நீக்கு
  2. வணக்கம் அக்காஸ்...
   கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 11. அவர்கள் உண்மைகளே!

  உங்களுக்கு இந்த பாசிடிவ் எனர்ஜி அலை, பாசிடிவ் திங்கிங்க குறித்து தெரியுமோ என்னமோ இதைக்குறித்து நான் மிகத்தெளிவாக புரிந்துள்ளேன். என் எழுத்தில் எப்போதும் பாசிடிவ் கருத்துக்கள் மட்டும் தான் இருக்கும், இருக்கணும், அது பதிவாக இருந்தாலும், பின்னூட்டமாக இருந்தாலும், படிப்பவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் உணர்வு பூர்வமாக உணர்த்தப்பட வேண்டும்.

  அவ்வகையில் ஒரு பதிவை எழுதும் படைப்பாளிக்கு நாம் கொடுக்கும் பின்னூட்டம் அவனுக்காக் ஊக்குவிப்பாக இருக்க வேண்டும், இன்னும் அதிக ஆர்வத்தினை தூண்ட வேண்டும். சும்மா அருமை, எருமை சூப்பர், நல்லது ம்ம் என இடுவதனால் எவருக்கும் பயன் இல்லை.

  என் நேரம் பொன்னானது, நான் பயன் படுத்தும் நேரம் அது பேஸ்புக்கோ, பிளாக்கோ, இணையதளங்களோ அதுவும் சமுதாய நலனுக்கு நல்லது செய்வதற்கானதாக பயன் படுத்தப்பட வேண்டும், அதனால் தான் சற்று பெரிதானாலும் பதிவை உள்வாங்கி அதனோடு ஒட்டி கருத்திடுவது.

  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது.. என் பெரிய பின்னூட்டங்களின் பின்னால் இருக்கும் பதிவர்களின் புரிதல், ஐக்கியம் அன்னியோன்யம் மேம்படலுடன் உளவியல் ரிதியான ஆரோக்கியமும் மேம்படுகின்றது.

  நாம் இப்படி மாறி மாறி பின்னூட்டம் போது நம்மை சுற்றி நம்மை அறியாமலே பாசிடிவ் அலை சுழல்கின்றது அது நம்மை சார்ந்தோரையும் சந்தோஷமாக்குகின்றதல்லவா? எனக்கு தேவை என்பதிவை படித்து கருத்திடுவதும் என் பக்கத்துக்கு இத்தனை பேர் விசிட் செய்தார்கள் , லைக் செய்தார்கள் எனும் எதுக்கும் உதவாத புகழும் அல்ல.. நான் தேடுவது... சந்தோஷம் , சமாதானம், ஆரோக்கியத்துடன் அறிவுசார்ந்த புரிதலுடனான சமுதாய கட்டமைப்பையே.. என்னால் இயன்றது இது.

  இந்த மாற்றத்தை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். என் எழுத்தின் வெற்றி அது தான். நான் கதை எழுதி, கவிதை எழுதி இலக்கிய பட்டங்களை பெற்றுக்கொள்வது எனக்கு மட்டுமே பெருமையாக இருக்கும், இவ்வகையில் என் செயல்பாடு முழு சமுதாயத்துக்குள்ளும் பாசிடிட் அலையை தரும், நம்பிக்கையை விதைக்கும், நம்மாலும் முடியும் எனும் தன்னம்பிக்கை தரும்,

  சிந்தித்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   மிகச் சிறந்த குழு அரட்டை...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

  2. அட யாருடப்பா இங்கே கலைஞர் மாதிரி காவியம் எழுதி போட்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த காவியக் கருத்து "மிக அருமை" ஹீஹீஹீ

   நீக்கு
  3. ஹா...ஹா.... அக்கா காவியம் எழுதினாலும் கருத்தா இருக்கும்ல்ல.... இல்லையா?

   நீக்கு
 12. குமார், உங்க தளத்துக்குரிய விளம்பரதாரராக மதுரைத்தமிழனை நியமித்த விடயம் எனக்கு சொல்லவே இல்லையேப்பா! மீதி எல்லாம் அக்கா அக்கான்னு ஷேர் செய்யும் தம்பிக்கு இது மட்டும் மறந்து போச்சா? ஹசஹா. ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   அவரே ரெண்டு பதிவாத்தான் தொடர்ந்து வர்றார்....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
  2. உண்மையை உரக்க சொன்னீர்கள் குமார். சபாஷ். மதுரைத்தமிழர் இனி ஓடி ஒளிய முடியாது

   நீக்கு
  3. ஹலோ குமார் உங்கள் பதிவி பல படித்து கருத்துக்கள் இட்டு இருக்கிறேன் என நினைக்கிறேன்... ஆனால் கதைகளை எழுதி பதிவிட்டு இருக்கும் பதிவுகளை அநேகமாக படித்து இருக்க மாட்டேன் இப்ப கதைகளை படிக்கும் பொறுமை எனக்கு இல்லை யாரவது மிக சிறியதாக எழுதி இருந்தாலோ அல்லது படிக்க வேற விஷயங்கள் இல்லாமல் இருக்கும் போதோதான் கதைகளை படிப்பேன்

   நீக்கு
  4. ஆமாம் தாங்கள் வாசிப்பீர்கள்... கருத்து இடுவீர்கள்... சிறுகதை வாசிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் தொடர்ந்து கருத்து அதுவும் அடித்து ஆடியது இப்போதுதானே...:)

   நீக்கு
 13. எது முக்கியமோ இல்லையோ பாஸ்போர்ட் பையில் வைத்திருப்பது நல்லது நகலும் வைச்சுக்கோங்க ..
  ரணகளத்திலும் பாட்டிலை ஒளித்த நபர்கள் :) ஹா ஹா ...ஒரு விஷயத்தை கட்டாயம் சொல்லியாகணும் ..ஒரு வயதான பெண்மணி இருக்கார் ஆலயத்தில் லைட்டர் பயன்படுத்தக்கூடாதது அதனால் தீக்குச்சி ஊதி அணைத்ததும் அதையே கொண்டு போய் தண்ணீரில் நனைச்சிதான் குப்பைத்தொட்டியில் போடுவார் .அவ்ளோ பயம் ..கவனக்குறைவினால்தானே பல தீவிபத்துகள் நடக்குது ..


  ஆமாம் தம்பி ..எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது ..இதே மாதிரி அடுத்த என்னைப்பற்றி எழுதப்போற (?)பதிவருக்கும் நாங்க பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்துவோம் .. பதிவர் யாருன்னு கொஞ்சம் தெரியற மாதிரி இருக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   ஆமாம் நான் சான்றிதழ்கள் பாஸ்போர்ட் கையில்தான் வைத்திருப்பேன்...
   இங்க என்ன நடக்கும்ன்னு தெரியாது... இருப்பது பழைய கட்டிடம்தான்...

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

   நீக்கு
  2. எனக்கு எல்லோர் பதிவுகளும் ஒன்றுதான் யாருக்கும் வித்தியாசம் பார்க்காமல் கருத்துகளை இடத்தான் முயற்சிக்கிறேன் ஆனால் கருதுக்கள் இட்டுவிட்டுவிட்டு அந்த பதிவுகளை திரும்பவும் வந்து பார்ப்பேன் நேரம் கிடைக்கும் போது அதற்கு அவர்கள் கிண்டாலாக கேலியாக பதில் அளித்து இருந்தால் திரும்பவும் பதில் அளிப்பேன் அப்படி இல்லையென்றால் அடுத்த தடவை வரும் போது நன்றாக இருந்தால் அருமை குட் நைஸ் என்று சொல்லிவிட்டு போய்விடுவேன்

   நீக்கு
  3. நானெல்லாம் அப்படித்தான் எட்டிப் பார்த்தேன்... படித்தேன்... என்பதனைச் சொல்லவே சிறு கருத்து இடுவேன்...

   என் பதிவுகளுக்கு கருத்திடுபவர்களுக்கு நன்றி சொல்வதுடன் சரி...

   நீக்கு
 14. அப்புறம் வீடு எரிஞ்சிச்சா? குப்பை எரிஞ்சிச்சா? ரம் பாட்டில் மறைஞ்சிச்சா? அந்த மனுஷன் பாஸ்வோட்டை விட ரம் பாட்டிலை தான் தேடி ஓடினாரா? எதுவோ நீங்கல்லாம் ஷேமமா இருக்கிங்கல்லப்பா. அது போதும் உடமை போனால் சம்பாதிக்கலாம். உயிர் போனால்.. அத்தோடு இப்படி எல்லாம் அங்கே வீட்டுக்காரிக்கு ஷேர் செய்திட்டே ஓடினால் அவங்க என்ன பாடு படுவாங்க என யோசிக்கணும்பா. அடுத்து நீங்க தொடர்பு கொள்ளும் வரை பதறிட்டிருப்பாங்க. அதனால் கவனமா இருக்கணும்.

  ஆமாம் அடுத்த வார என்னைப்பத்தி நான் பதிவர் யார் என எனக்கு மட்டும் காதுக்குள் வந்து ரகசியமா சொல்லிருங்க. மத்தப்படி சஸ்பென்ஸ் தான் நல்லது.

  இல்லன்னால் இந்த மதுரைத்தமிழன் மாதிரி ஆட்கள் எஸ்கேப் ஆகும் வாய்ப்பு இருக்கு முக்கியமா நிஷாக்கா பதிவு எனில் ஓடிருவினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   வெள்ளிக்கிழமை ரொம்ப ரிலாக்ஸா... மதியம் பிரியாணி செஞ்சி சாப்பிட்டு மாலை கடைகளில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து வீட்டுக்கு ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தபோது இந்த நிகழ்வு... சோ நித்யாவுக்கு தெரிஞ்சாச்சு... அதான் திரும்பி வந்ததும் அடிச்சிச் சொல்லிட்டேன்... இல்லேன்னா அது இரவெல்லாம் தூங்காது...

   இந்த வார பதிவரைச் சொல்லி சஸ்பென்சை உடைப்பதில்லை அப்படின்னு மீனாட்சி மேல சத்தியம் பண்ணியிருக்கேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

   நீக்கு
 15. நலமோடு மீண்டது அறிந்து மகிழ்கின்றேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா....
   தங்கள் அன்புக்கு நன்றி...
   தங்களைப் போன்றோரின் அன்பும் இறை அருளும் இருக்கும்மட்டும் எந்த பிரச்சினையிலும் தப்பலாம் ஐயா....

   நீக்கு
 16. நீங்கள் உங்கள் மனம் போல் தொடருங்கள்... அதுவே சஸ்பென்ஸ்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   சஸ்பென்ஸ் சஸ்பென்ஸாக இருப்பதே நலம் அல்லவா?
   அப்படியே தொடர்வோம்... நன்றி.

   நீக்கு
 17. நல்ல வேளை... சரியான சமயத்தில் தீ அணைக்கப்பட்டது. வார இறுதியும் குடியும்! இங்கே எல்லா நாட்களுமே குடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

  அடுத்த என்னைப் பற்றி நான்... யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நானும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அண்ணா...
   இங்கும் அப்படிக் கூட்டம்தான் அதிகம்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 18. அன்பின் குமார்..

  தங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்த இறைவனுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி

   நீக்கு
 19. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டது மனதிற்கு சற்றே நிறைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி

   நீக்கு
 20. நேபாள் போய் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்ட போது பாஸ்போர்ட் பையை மட்டும் எடுத்து கொண்டு கீழே இரங்க்கி ஓடி வந்தது நினைவு வந்தது.
  தீவிபத்து உடனே அணைக்கப்பட்டது அறிந்து மகிழ்ச்சி. நித்யாவும் குழந்தைகளும் எவ்வளவு பயந்து போய் இருப்பார்கள்?
  நலமாய் இருப்பது அறிந்த பின் தான் ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.
  அடுத்து யார் என்ற எதிர்பார்ப்பு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊருக்கு பேசிக்கொண்டிருந்த நேரம் என்பதால் அவர்களுக்கு சொல்ல வேண்டியதாகிவிட்டது...

   சஸ்பென்ஸாய் தொடர்வதே நலம் இல்லையா...

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி அம்மா.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...