மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 12 செப்டம்பர், 2011வாழும் வரை...மௌனங்களால் தொலைந்தவைகளில்
மரணிக்காமல் உன் நினைவுகள்...

செல்லச் சீண்டல்களும்...
சில நேரச் சண்டைகளும்...
உணர்வுக்குள் உறையாமல்
இன்னும் இம்சிக்கின்றன...

உன் கரங்களின் காமத்தால்
உடைந்த வளையல்கள்
பத்திரமாய் பறைசாற்றிக்
கொண்டிருக்கின்றன உன் அன்பை...

காக்கா கடி கடித்துக் கொடுத்தாலும்
என் வாயில் இருப்பதை எடுக்க
நீ செய்த ஜாலங்கள்...

உனக்குப் பிடித்த இனிப்பை
சாப்பிடும் போதெல்லாம்
வந்து வந்து போகின்றன...

எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
அழுது சிரித்தும்...
சிரித்து அழுதும்...
இருக்கிறோம்

இன்றோ வலியறியா
இதயத்தில் வலி சுமந்து
வாழ்கிறேன்...

நட்பா... காதலா..
யோசித்த வேளையில்
வீணான நாட்களால்
பிறக்குமுன்னே மரணித்தது
நம் காதல்...

புதிய உறவின் பாதையில்
பூக்கள் இருந்தாலும்
அரிதாய்ப் பிறக்கும் குறிஞ்சியாய்...
பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
உன் நினைவுகள்...

மரணிக்கும் காலத்தால்
நினைவுகள் மக்கிப் போனாலும்
இன்னும் பசுமையாய்
என்னுள்ளே உன் நினைவுகள்...

-'பரிவை' சே.குமார்

Thanks  - Google (Photo)

27 கருத்துகள்:

 1. நட்பா... காதலா..
  யோசித்த வேளையில்
  வீணான நாட்களால்
  பிறக்குமுன்னே மரணித்தது
  நம் காதல்...//
  நல்ல வரிகள்..

  பதிலளிநீக்கு
 2. //
  நட்பா... காதலா..
  யோசித்த வேளையில்
  வீணான நாட்களால்
  பிறக்குமுன்னே மரணித்தது
  நம் காதல்.../

  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 3. நல்லதொருக் கவிதை நட்பிற்கும் காதலுக்கும் இடையில் ஒரு பழமை போராட்டம் காதல் என்பதை சொல்கிறது படைப்பு . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. மரணிக்கும் காலத்தால்
  நினைவுகள் மக்கிப் போனாலும்
  இன்னும் பசுமையாய்
  என்னுள்ளே உன் நினைவுகள்...
  // super lines. Keep going.

  பதிலளிநீக்கு
 5. புதிய உறவின் பாதையில்
  பூக்கள் இருந்தாலும்
  அரிதாய்ப் பிறக்கும் குறிஞ்சியாய்...
  பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
  உன் நினைவுகள்...

  arumai kumar

  பதிலளிநீக்கு
 6. //நட்பா... காதலா..
  யோசித்த வேளையில்
  வீணான நாட்களால்
  பிறக்குமுன்னே மரணித்தது
  நம் காதல்...//

  மிக அழகான வரிகள்.அருமையான கவிதை குமார். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மனதை வருடும் வரிகள்..நச் நண்பா.

  பதிலளிநீக்கு
 8. நன்று...

  உங்கள் இன்ட்லி லிங்க் தவறானது... அதை கிளிக்கினால் அவரவர் இடுகைகளைத்தான் காட்டும்...

  பதிலளிநீக்கு
 9. //நட்பா... காதலா..
  யோசித்த வேளையில்
  வீணான நாட்களால்
  பிறக்குமுன்னே மரணித்தது
  நம் காதல்...

  புதிய உறவின் பாதையில்
  பூக்கள் இருந்தாலும்
  அரிதாய்ப் பிறக்கும் குறிஞ்சியாய்...
  பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
  உன் நினைவுகள்...//

  அழகிய வரிகள்

  மிகவும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் குமார்:)!

  வாழ்த்தியிருக்கிறது அதீதம் இங்கே:
  http://www.atheetham.com/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-3

  பதிலளிநீக்கு
 11. http://atheetham.com/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-3

  பதிலளிநீக்கு
 12. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. ஒரு வலைதளத்தை வைத்துக் கொண்டே பலரால் சமாளிக்க முடியல. நீங்க எப்படி குமார்? வாய்ப்பே இல்லை. தூள் தான்.

  பதிலளிநீக்கு
 14. எல்லோர் மனதிலும் இருக்கும் இழந்த காதலின் இருப்பை உணர்த்தும் மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. எனக்காக நீயும்...
  உனக்காக நானும்...
  அழுது சிரித்தும்...
  சிரித்து அழுதும்...
  இருக்கிறோம்//

  அருமையான கோர்வைகள்!
  அசத்தும் கவிதை வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. ////உன் கரங்களின் காமத்தால்
  உடைந்த வளையல்கள்
  பத்திரமாய் பறைசாற்றிக்
  கொண்டிருக்கின்றன உன் அன்பை.///

  உணர்வோடு கலந்த ஒப்பிடு மிக மிக அருமை...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

  பதிலளிநீக்கு
 17. ஆஹா இங்கேயும் காதலா என்னாச்சுய்யா பதிவுலகத்துக்கு ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 18. உங்க பதிவுகள் என் ரீடரில் தெரியமாட்டேங்குதே, பாலோவர் இணைப்பு குடுத்துருக்கீங்கதானே???

  பதிலளிநீக்கு
 19. அருமையான காதல் கவிதை மிகவும் ரசித்தேன் மக்கா...!!!

  பதிலளிநீக்கு
 20. புதிய உறவின் பாதையில்
  பூக்கள் இருந்தாலும்
  அரிதாய்ப் பிறக்கும் குறிஞ்சியாய்...
  பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
  உன் நினைவுகள்...

  அழகான வரிகள்!
  சிற‌ப்பான க‌விதை!

  பதிலளிநீக்கு
 21. மரணிக்கும் காலத்தால்
  நினைவுகள் மக்கிப் போனாலும்
  இன்னும் பசுமையாய்
  என்னுள்ளே உன் நினைவுகள்..


  எனக்குப்பிடித்த வரிகள்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...