மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 ஆகஸ்ட், 2014காதல் டைரி


காதலித்த நாட்களில்
எழுதிய டைரியில்
சில பக்கங்களை நீ
தின்றிருக்கிறாய்...
சில பக்கங்களை நான்
கொன்றிருக்கிறேன்...
சில பக்கங்களில் நாம்
வாழ்ந்திருக்கிறோம்...
சில பக்கங்களோ
நீ,,, நான்...
நாமில்லாமல்
வெறுமையாய்
மரணித்திருக்கிறது
நம் காதலைப் போல...
இருந்தும் டைரி
மட்டும் என்னோடு
வாழ்கிறது நம்
கனவுகளைப் போல....
-'பரிவை' சே.குமார். 

6 கருத்துகள்:

 1. வணக்கம்
  காதல் நினைவை சுமக்கும் கவிதை..
  நல்ல கற்பளை வளம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. டைரிகள் தான் பல நேரங்களில் நம் கடந்த காலங்களை நிகழ்காலமாக நம் கண்முன் கொண்டுவருகிறது. நல்ல கவிதை ஐயா !

  பதிலளிநீக்கு
 3. காதல் டைரி அட்டகாசம் அண்ணா!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...