மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 21 ஆகஸ்ட், 2014அவளுக்கான கவிதைகவிதை வேண்டும் என்றாள்...

கண்ணோடு கண் நோக்கினால்
கண்டிப்பாய் காதல் என்பர்
மனம் நோக்கா மாந்தர் என்றேன்...

காதலும் இருக்கு
கவிதையும் கிடக்கு
காதல் விடுத்து
சமூகம் கவிதையாகட்டும்
சொல்லிச் சிரித்தாள்
சொல்லாமல் ரசித்தேன்...

பேருக்கும் செயலுக்கும்
பொருந்தாமல் பொருந்திப் போகும் 
போக்கற்ற மாந்தர்களென
பொதுவாய் ஆரம்பித்தேன்...

மற்றவரைப் பற்றி 
நமக்கெதற்கு என்றாள்
சமூகத்தைக் கவிதையாக
வடிக்கச் சொன்னவள்...

ஊர்வம்பே பேசாதவள் நீ...
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்...

கஷ்டத்தில் எட்டி நின்று
கைகொட்டிச் சிரித்து
வெற்றியில் என்னவன்
என நெருக்கமாய்
நின்று சிரிக்கும் சிலர்...

முடிக்கவில்லை...
உனக்கு என்னாச்சு...
கவிதை கேட்டால்
கண்டபடி உளறுகிறாய்....

கண்ணே...
கண்மணியே...
கற்கண்டே...
இதுதான் உளறல் பெண்ணே...

உண்மை உரைத்தேன்...
உளரலாய்த் தெரிகிறது...
இதுதான் பெண்ணே
உலகம் என்றேன்...

சிரித்தவள்...
உன் மனநிலை
மாறட்டும் மறுபடியும்
வருகிறேன் கவிதைக்காக...
என்றபடி முகத்தில்
முத்தத்தால்
சிறுக்கிச் சென்றாள்...

விட்டுச் சென்ற 
முத்த ஈரம் 
முகத்தில் சிரிக்க
அவளுக்கான கவிதை
அருவியாய் வந்தது...
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. அருமை ஐயா கவிதை!வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அவளுக்கென வடித்ததால்
  அருமையானதோ உங்கள் கவிதை!

  சிறந்த சிந்தனை! ரசித்தேன் சகோ!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. நீ கூட இருந்தால் வேறு கவிதை எதற்குப் பெண்ணே... நீ விட்டுச் சென்றால்தான் கொட்டுகிறது கவிதை என்று எஸ் எம் எஸ் அனுப்பி விடுங்கள்!

  பதிலளிநீக்கு
 4. முத்தத்தால் கிறுக்கிச் சென்றாளா ?,இல்லை அந்தச் சிறுக்கி சென்றாளா ?
  அருவியில் குளித்தால்தான் இந்த சந்தேகம் தீருமா ?

  பதிலளிநீக்கு
 5. கைகுடுங்க அண்ணா!!!
  கலக்கீடீங்க:))

  பதிலளிநீக்கு
 6. முத்தம் கவிதை மழையாக பொழிய வைத்து விட்டதே! :)

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. பெயருக்கும்,செயலுக்கும் பொருந்தாமல் பொருந்திப் போகும்
  போக்கற்ற மாந்தர்களென.............அருமை!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...