மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 18 நவம்பர், 2013

கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி

கிராமியக் கலையை தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடையே கொண்டு சென்ற கலைஞர்களில் முக்கியமானவர் பாவலர் முத்துமாரி அவர்கள்.பாவலர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ல செவலூரில் பிறந்தவர். தனது சிறிய வயதில் பொதுவுடமைக் கட்சி மேடைகளிலும் இடது சாரி இயக்கங்களின் மேடைகளிலும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து கூத்து வடிவத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தனது கிராமியக் கலை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

Add caption

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த முத்துமாரி அவர்கள் மதுரையில் பி.ராமமூர்த்தி தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்காக வீதிவீதியாக கலை நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு சென்றவர். தனது வாழ்நாள் முழுவதும் கூத்துக் கலைக்கே அர்பணித்தவர். தனது நண்பர்களால் பாவலர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஒரு கலைஞன்.

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் கலைமாமணி விருது பெற்ற பாவலர் முத்துமாரி அவர்கள் நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்கரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி என்று பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்நாள் வரை அங்கத்தினராக இருந்தார். மேலும் தமுஎசவின் மாநிலக் குழுவிலும் திருநெல்வேலி மாவட்டக் குழுவிலும் உறுப்பினராக செயல்பட்டார்.

பாவலர் முத்துமாரி அவர்கள் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை அவர் இயற்கை எய்தினார். அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. உடல் நலம் பாதிக்கும் வரை தனது கிராமியக் கூத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் என்பது பாராட்டக்கூடிய விஷயமாகும்.  

இணையத்தில் திரு.முத்துமாரி அவர்களின் வீடியோ தேடியபோது கிடைத்தது ஒரே ஒரு வீடியோதான். அந்த இணைப்பை இங்கு வீடியோவாக பதிந்தால் வீடியோ இல்லை என்ற தகவல்தான் திரையில் வருகிறது. அதனால் இணைய முகவரியை கீழே கொடுத்துள்ளேன். அதில் போய் பாருங்கள் ஆராரோ... ஆரிராரோவுக்கும் தன்னன்னன்னே... நானனன்னேவுக்கும் அவர் நகைச்சுவையாக விளக்கம் தருவதை... முழு வீடியோப் பகிர்வு கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் இணைப்புத் தாருங்கள்.

திரு. முத்துமாரி அவர்களின் கிராமியக் கூத்து பார்க்க இணைப்பு இதோ...
http://www.youtube.com/watch?v=ZzErA5Qh3tM


கிராமியக் கலை தற்போது அழிந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கரகாட்டம், நாடகம் எல்லாம் தங்கள் இயல்பை விட்டு ஆபாசத்துக்குள் புகுந்து ரொம்ப நாளாகிவிட்டது. திரு. முத்துமாரி போன்ற ஒரு சில மூத்த கலைஞர்கள் கிராமியக் கலைகளை கட்டிக் காத்து வந்தார்கள். இந்நிலையில் பாவலர் முத்துமாரி அவர்களின் மறைவு கிராமியக் கூத்துக் கலைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. பாவலர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

(பதிவுக்கான தகவலுக்காக சில இணையத்தளங்கள் பார்த்தேன்.  அந்த இணையத்தளங்களுக்கு நன்றி.)

10 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

அமரர் பாவலர் திரு. முத்துமாரி அவர்களைப் பற்றி தங்கள் பதிவின் மூலம் தான் அறிந்து கொண்டேன். மூத்த கலைஞர் அவர்களின் ஆத்மா இறைவனடியில் சாந்தியடைய வேண்டுவோம்!..

நிலாமதி சொன்னது…

நீண்ட காலத்துக்கு பின் வந்துள்ளேன் சில குடும்ப அலுவல்கல்காரனமாக் விலகி இருந்தேன்.தற்போது மீண்டும் தொடரும்..... என் படைப்புக்கள்.

பகிர்வுக்கு நன்றி . உண்மை தான் கலை வளர்த்தத் இவர்கள் காலத்துக்கு பின் யார் வருவார் இவர்கள் இடத்துக்கு இவரது கலைப் படைப்புக்கள் பாது காக்க பட வேண்டும்.

கவியாழி சொன்னது…

பாவலர் முத்துமாரி அவர்களின் மறைவு கிராமியக் கூத்துக் கலைக்கு மிகப்பெரிய பேரிழப்பு //ஆம் வருத்தமான செய்திதான்

கவியாழி சொன்னது…

பாவலர் முத்துமாரி அவர்களின் மறைவு கிராமியக் கூத்துக் கலைக்கு மிகப்பெரிய பேரிழப்பு //ஆம் வருத்தமான செய்திதான்

ராமலக்ஷ்மி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. கலைஞரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

மதிப்பிற்குரிய நண்பர் சே.குமார் அவர்களுக்கு வணக்கம். தங்களின் இந்தப் பதிவை எனது வலைப்பக்கத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன். நம்மைப்போலும் நண்பர்கள் பாவலர் ஓம்முத்துமாரியை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம். நன்றி.
எனது வலைப்பக்க இணைப்பு -
http://valarumkavithai.blogspot.in/

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரரே.
அருமையான கிராமியக்கலைஞரை பற்றிய நினைவுகளைத் தாங்கும் பதிவு. அவரது மறைவு கிராமியக்கலைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தங்கள் பதிவை கவிஞர் ந.முத்துநிலவன் அய்யா அவர்கள் பகிர்ந்தது தங்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கும். பகிர்வுக்கு நன்றி நண்பரே..

Kasthuri Rengan சொன்னது…

வளரும்கவிதை மூலம் அறிந்தேன்...

ஒரு கலைஞரை அறிமுகம் செய்ததற்கு நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பாவலர் முத்துமாரி பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.....

காணொளியும் பார்க்கிறேன்...

த.ம. 4