மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 10 நவம்பர், 2013

பார்வையின் பயணம்


அது ஒரு பேருந்துப் பயணம்...
பின்புறம் பார்த்திருக்கும்
முன்புற இருக்கையில் நீ...
முன்புறம் பார்த்திருக்கும்
பின்புற இருக்கையில் நான்...
அடிக்கொரு தரம்
நீ பார்க்கிறாய்...
நொடிக்கொருமுறை
நானும் பார்க்கிறேன்...
பேருந்தின் பயணமாய்
பார்வையின் பயணமும்...
எங்கெங்கோ பயணிக்கும்
கண்கள் கடைசியில்
நிலைகுத்தி நிற்பது
உன்னிலும் என்னிலும்...
தொடரும் பார்வைகள்
ஆயிரம் வார்த்தைகளையும்
அவ்வப்போது புன்னகையையும்
அள்ளி வீசுவது
நமக்குள் மட்டுமே
தொடரும் நாடகமாய்...
இறங்கும் இடம் வந்ததும்
திரும்பாமல் செல்கிறாய்...
பார்ப்பாயா... மாட்டாயா...
ஆவலயாய் உன்பின்னே
இறங்குகிறது என்மனம்...
படியில் நின்று
பக்கமாய் திரும்பி
கண்கள் விரிய
உதடுகளும்தான்
புன்னகைக்கிறாய் பூவாய்...
உன் புன்னகையில்
என் புன்னகையும்
பூக்கிறது...
சன்னலில் தலை நீட்டிப்
பார்க்கிறேன்...
திரும்பிப் பார்த்து
கையசைக்கிறாய்
அன்னையின் கைபிடித்தபடி...
மனதுக்குள்
மகள் சிரிக்கிறாள்.
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

நல்ல திறன்பெற்று நற்றமிழ் மின்னிடும்
வல்ல கவிகள் வடித்திடுக! - சொல்லரிய
பாவலன் பாரதிநான் வெண்பாவில் வாழ்த்துகிறேன்!
மாவளம் காண்க மகிழ்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


தமிழ்மணம் 2

Philosophy Prabhakaran சொன்னது…

என்ன சார் நீங்க பிக்கப் பண்ணியிருக்கலாம்ல ?

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கவிதையின் கற்பனை வரிகள் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி சொன்னது…

மௌனமே மொழியாகி விழியால் மட்டும் பேசுவது தொடரும் நட்பா? மீண்டும் துளிர்விடும் காதலா?

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான கவிதை குமார்!

Unknown சொன்னது…

அருமை!!!சஸ்பென்சை கடைசியில் தான் எல்லாவற்றிலும் உடைப்பார்கள் போலிருக்கிறது,ஹ!ஹ!!ஹா!!!!

ezhil சொன்னது…

குழந்தையுடன் சென்ற உங்கள் மகளின் நினைவு ...அருமை..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரய்யா...
தாங்களது வாழ்த்துக் கிடைத்தது என் பாக்யம்...
தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகரன்.,..
அய்யா...குட்டிக் குழந்தைய்யா அது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கண்ணதாசன் சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. எழில்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சிறப்பான கவிதை.குழந்தையை பற்றியது என்பது எதிர்பாராதது

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரரே,
அருமையான சிந்தனை. நான் கண்டுகொண்டேன் குழந்தையைத் தான் சொல்வீர்கள் என்று. பிஞ்சுகளின் புன்னகையில் நம்மை நாம் மறப்பது எவ்வளவு சுகம். வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் பல படைப்புகள் தர. பகிர்வுக்கு நன்றிகள்..

Dino LA சொன்னது…

அருமையான கவிதை

Unknown சொன்னது…

பயணப் பார்வை மங்கையின் மீதோ என்று நினைத்து விட்டேன். ஹஹஹஹ கடைசியில் பேதையின் மீது இருந்திருக்கிறது அருமையான சொல்லாடல்

Unknown சொன்னது…

பயணப் பார்வை மங்கையின் மீதோ என தவறாய் எண்ணிவிட்டேன் ஹஹஹ்ஹ கடைசியில் தான் புரிந்தது பயணப்பார்வை மங்கையின் மீதல்ல பேதையின் மீதென்று ,அருமையான சொல்லாடல்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதை குமார். படிப்பவர்கள் வேறு எதையோ எதிர்பார்த்திருக்க கடைசியில் வைத்த திருப்பம் நன்று!

Unknown சொன்னது…

படித்து முடிக்கையில் அரும்பும் புன்னகையே இக்கவிதையின் அழகுக்கு சான்று

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014