மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 ஜூலை, 2013சிம்புவுடன் எப்போது திருமணம்..? - ஹன்சிகா பேட்டி

கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...


என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். 

தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. 


எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். 

திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.


மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.

செய்திக்கு நன்றி: தினமலர்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

4 கருத்துகள்:

 1. ஹன்சிகா மேடம்!அஞ்சுவருஷமா ரொம்ப நல்லது .சிம்பு அதுக்குள்ள இன்னும அஞ்சாறு பேரை லவ் பண்ணலாம்

  பதிலளிநீக்கு
 2. ஹன்சிகா மேடம்!அஞ்சுவருஷமா ரொம்ப நல்லது .சிம்பு அதுக்குள்ள இன்னும அஞ்சாறு பேரை லவ் பண்ணலாம்

  பதிலளிநீக்கு
 3. மனிதனின் வாழ்க்கையில் எதுவானாலும் நடக்கலாம் என்பதற்கு பதிலாக 5 வருட காலம் ஆகும் என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார்

  பதிலளிநீக்கு
 4. மனிதனின் வாழ்க்கையில் 5வருட காலத்தக்குள் எதுவானாலும் என்பதால்தான் இந்த நீண்ட இடைவெளி காலம்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...