மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 ஜூலை, 2013ஸ்கிரிப்ட் தான் முதல் ஹீரோ: சொல்கிறார் ஹன்சிகா


தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, அதிரடியாக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க ஒப்புக்கொண்டு கோலிவுட் ஹீரோக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ரெண்டு ஹீரோக்கள் சந்தித்துக் கொண்டால் இதுபத்திதான் பேசுறாங்க. ஆனா இதைப்பற்றி கவலையே இல்லாமல் சிவகார்த்திகேயனோட நடிக்க ஆரம்பிச்சிட்டார். இதுபற்றி அவர் அளித்த சிறப்பு பேட்டி:

என்னங்க நடக்குது இங்க... சிங்கம்-2 பிச்சுக்கிட்டு ஓடுறப்போ இப்படி அதிரடியாய் சிவகார்த்திகேயனோட நடிக்கிறீங்க...?

மற்றவங்கதான் இப்படி பேசுறாங்க. நீங்களாவது இப்படி கேக்குறத நிறுத்தலாமே... ஏன் நீங்க சிவான்னு பார்க்குறீங்க. சிவா இல்லாம வேறு யார் நடிச்சாலும் இந்தப் படத்துல நடிச்சிருப்பேன். படத்தோட ஸ்கிரிப்ட் அப்படி. என்னைப் பொறுத்த வரைக்கும் படத்தோட ஸ்கிரிப்ட்தான் ஹீரோ. இந்த ஹீரோ பிடிச்சிருந்தாலே கதை கேட்ட உடனேயே ஓகே சொல்லிட்டேன்.


அப்படி என்னதாங்க அந்த ஸ்கிரிப்ட்?

வேலை வெட்டி இல்லாம வெட்டியா திரிஞ்சிக்கிட்டிருக்குற ஒரு பையன் ரிச்சான, ஸ்டைலான பொருத்தமே இல்லாத அழகு தேவதையான ஒரு பொண்ணை காதலிக்கிறது கதை. இப்ப சொல்லுங்க அந்த ரிச்சான ஸ்டைலான கேரக்டர் எனக்கு பொருத்தமாத்தானே இருக்கும்.

எல்லாப் படத்துலேயும் அழகு காட்டிக்கிட்டே இருக்கீங்க வெள்ளந்திரியா சிரிச்சுக்கிட்டே போறீங்க எப்ப நடிக்கப் போறீங்க?

என் அழகையே கூர்ந்த கவனிக்கிறதால நடிப்பை கண்டுக்காம போயிடுறாங்க. தீயா வேலை செய்யணும், சிங்கம்-2 ஸ்கூல் ஸ்டூடண்டாவே நடிச்சிருக்கேன். அதையெல்லாம் பாராட்ட மாட்டீங்களா. இப்போ எனக்கு பப்லியான கேரக்டர்கள்தான் வருது நடிக்கிறேன். வெயிட்டான ரோல் அமையட்டும் நடிப்புல பின்னிக் காட்டுறேன்.

தெலுங்குல உங்க மார்க்கெட் இறங்கிடுச்சாமே...?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை, தமிழ்லேயே ஆறேழு படம் நடிச்சிக்கிட்டிருக்கேன். அதனால தெலுங்குல கான்ஸன்ரேட் பண்ணல. நல்ல வாய்ப்பு வரும்போது அங்கும் நடிப்பேன்.


மும்பையில அனாதை குழந்தைங்கள தத்தெடுத்து வளர்க்கிறீங்களாமே?

என் மன திருப்திக்காக செய்ற சில சர்வீஸ்களை விளம்பரப் படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா மீடியாக்கள் தான் அதை பெருசா விளம்பரப்படுத்திக்கிட்டிருக்காங்க.

ரொம்பவே வெயிட்டை குறைச்சிட்டீங்க போலிருக்கு?

பத்து கிலோ வரைக்கும் குறைச்சிருக்கேன். அப்படி இருந்தும் குண்டாத்தான் தெரியுறேனாம். ஆனா டைரக்டருங்க நீங்க இப்படி இருக்கிறதுதான் ரசிகர்களுக்கு புடிக்கும்னு சொன்னதால இத்தோட நிறுத்திக்கிட்டேன்.

தமிழ் எப்போ கத்துக்கப்போறீங்க?

கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டிருக்கேன். கொஞ்சம் டைம் கொடுங்க. முழுக்க கத்துக்கிட்டு நானே டப்பிங் பேசுறேன்.

செய்திக்கு நன்றி : தினமலர்
புகைப்படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. ஹன்சி ன்னா சும்மாவா?எட்டாம் கிளாஸ் படிக்கிற பொண்ணா கூட நீங்க நடிக்கலாம்,'மேடம்'!தப்பில்ல.

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...