மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 ஜூலை, 2013

மறக்க முடியா மழை நாள்


மழை மேகம் சூழ்ந்த மாலை
வெயிலின் உக்கிரம் கரைந்து
மழையின் வாசம் நுகர்ந்த காற்று...
கருமேகம் கண்டு பயந்தோடி
இருப்பிடம் விரையும் பறவைகள்...
காற்றோடு காதல் கொண்டு
சந்தோஷமாய் தலையாட்டும் நெல்மணிகள்...
லேசான தூறலுக்கே வீடு நோக்கிப்
பாய்ச்சலெடுக்கும் பசுக்கள்...
கனமழை வந்தாலும் மேய்ச்சலை
விடமாட்டோமென மேயும் எருமைகள்...
மழையில் நனையாமல் காத்துக்கொள்ள
கொங்காணிகளுக்கும் உடலை
மறைக்கும் மாடு மேய்க்கும் மனிதர்கள்...
தண்ணீரில் விழும் மழைத்துளியோடு
மல்லுக்கு நிற்கும் மீன்குஞ்சுகள்...
குதிக்கும் மீன்களைக் குறிவைத்து
தூறலில் தவமிருக்கும் கொக்கு...
இருண்ட ஈசானிய மூலையில்
ஒளிரும் மின்னலைத் தொடர்ந்து
இடிக்கும் இடியின் வெடியோசை...
தூறல் வருமுன்னே தூரமாய்
ஓடி ஓளியும் மின்சாரம்...
மழையின் வேகம் கூடக்கூட
பெருக்கெடுத்து ஓடும் நீரின் சலசலப்பு...
எல்லாம் பார்த்துப் பழகிப்போன
மழை வேகமெடுத்துப் பேய்மழையாய்
சோவென்று கொட்டினாலும்
சன்னலோரத்தில் அமர்ந்து சாயந்திர
மழையை ரசிக்கும் மனசுக்குள்...
ஓடும் தண்ணீரில் விட்ட கத்திக்கப்பலும்...
மழையில் நனையும் ஆசையும்...
இன்னும் மரிக்காமல் மாம்பூவின் வாசமாய்....


-'பரிவை'  சே.குமார்

13 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... கத்திக் கப்பலும் நினைவில் மூழ்கியது... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணத்தில் சேர்க்கவும், மற்றவர்கள் ஓட்டு போடுவதும் முடியாது... தொடர்பு கொள்ளவும் : dindiguldhanabalan@yahoo.com

சாய்ரோஸ் சொன்னது…

மழையைப்பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டேயிருக்கலாம்... நான் ரசித்த மழைக்கவிதைகளில் பால்யத்தை நினைவுபடுத்தும் இந்த மழைக்கவிதையையும் நிச்சயம் மறப்பதற்கில்லாமல் மனதில் இடம் பிடித்தது... மிக அருமை...

Unknown சொன்னது…

சூப்பர் கவிதை,போட்டோக்களும்!சிறு வயது நினைவுகள்,தவிர்க்க முடியவில்லை.!!!

ராஜி சொன்னது…

இன்னும் மரிக்காமல் மாம்பூவின் வாசமாய்.
>>
நிஜம்தான். இப்போது இருப்பதுலாம் வெறும் காகித பூ மட்டுமே!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கவிதையும் படங்களும் அருமை.

கோமதி அரசு சொன்னது…

மழை வேகமெடுத்துப் பேய்மழையாய்
சோவென்று கொட்டினாலும்
சன்னலோரத்தில் அமர்ந்து சாயந்திர
மழையை ரசிக்கும் மனசுக்குள்...
ஓடும் தண்ணீரில் விட்ட கத்திக்கப்பலும்...
மழையில் நனையும் ஆசையும்...
இன்னும் மரிக்காமல் மாம்பூவின் வாசமாய்....//
உண்மை, உண்மை.

மழையில் நனைந்து மகிழ்ந்த நாட்களை இப்போது சன்னலோரத்திலிருந்து அமர்ந்து மழையை ரசிக்கும் போது நினைத்து மகிழ்ந்து ஒரு பெருமூச்சு விடவைக்கும்.

கவிதையும், படங்களும் வெகு அருமை.

அருணா செல்வம் சொன்னது…

மாம்பூ வாசக்கவிதை மணக்கிறது.
வாழ்த்துக்கள் குமார்.

ஜீவன் சுப்பு சொன்னது…

Great great great ...! Excellent post Brother ...!

Photos r looking too good...!

r.v.saravanan சொன்னது…

சன்னலோரத்தில் அமர்ந்து சாயந்திர
மழையை ரசிக்கும் மனசுக்குள்...
ஓடும் தண்ணீரில் விட்ட கத்திக்கப்பலும்...
மழையில் நனையும் ஆசையும்...


சலிக்காத ஆசைகள் இவை

கவிதை தூரலில் நனைந்தேன் குமார்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

சசிகலா சொன்னது…

தொலைத்த பால்யத்தை மனம் தேடுகிறது.. தேட வைக்கிறது தங்கள் வரிகள்.

மாதேவி சொன்னது…

கிராமத்து மழையில் நனைந்து சிலிர்த்தோம்.