மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 23 ஜூலை, 2013'அஜீத் ஷாலினி மாதிரி, சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்!' - சிம்பு


எங்க அப்பா அம்மா சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன். அஜீத் - ஷாலினி மாதிரி நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம், என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். சிலம்பரசன் என்கிற சிம்புவுடன் தொடர்ந்து வேட்டை மன்னன் மற்றும் வாலு ஆகிய இரு படங்களில் ஹன்சிகா ஹீரோயினாக ஒப்பந்தமானபோதே, இருவருக்கும் காதல் என்ற செய்தி வரும் என பலரும் எதிர்ப்பார்த்தனர். எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல், சீக்கிரமே உண்மையை ஒப்புக் கொண்டனர் இருவரும். அதுமட்டுமல்ல, திருமணப் பேச்சை கூட ஆரம்பித்துள்ளனர்.

‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்'' என்று சிம்புவின் தந்தையும் பச்சைக் கொடி காட்டிவிட்டார். 

முதல் நாள் இதற்கு மறுப்பு தெரிவித்த ஹன்சிகா, அடுத்த நாள் விடியற்காலையிலேயே, சிம்புவை தான் காதலிப்பது உண்மை என்றும், இது தனிப்பட்ட விஷயம், விட்டுடுங்க என்றும் கூறிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் சிம்புவும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினார்.


இந்த நிலையில், சிம்பு விலாவாரியாக தங்கள் காதல் மற்றும் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன்.

என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அநேகமாக அடுத்த ஆண்டு நடக்கலாம்.

அஜித்-ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்,'' என்றார்.


செய்திக்கு நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
படங்களுக்கு நன்றி : இணையம்
-'பரிவை' சே.குமார்

2 கருத்துகள்:

  1. ஏன்,வேறு எந்த சினிமா நட்சத்திரங்களும் இன்று வரை இணை பிரியாமல் வாழ்ந்ததில்லையா?(அஜீத்&ஷாலினி இணை பிரியாத் தம்பதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.சொல்லப் போனால் நான் தீவிர அஜீத்(FAN)பான்!)

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...