மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 ஜூலை, 2013பெரிதாக விளம்பரமில்லாமல் ரிலீசாகும் தனுஷின் மரியான்!


இந்த மாதம் வெளியாகவிருக்கிற முக்கிய படங்களுள் ஒன்று தனுஷின் மரியான். இந்த மாதத்தின் முதல்வாரத்தில் வெளியான சிங்கம் 2 பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

இந்த வெற்றியின் காரணமாக, தொடர்ந்து வெளியாக வேண்டிய சில படங்கள் தள்ளிப் போய்விட்டன. எனவே இந்த வாரம் முழுவதும் எந்த போட்டியும் இல்லாமல் கல்லா கட்டிக் கொண்டிருக்கப் போகிறது சிங்கம் 2. 

இதற்கிடையில் இந்த வாரமா அடுத்த வாரமா என ஊசலாடிக் கொண்டிருந்த தனுஷின் மரியான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 19.. அதாவது இந்த வெள்ளிக் கிழமை மரியான் உலகமெங்கும் வெளியாகவது தியேட்டர் லிஸ்டுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "மரியான் படம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மிக அருமையான விஷுவல்ஸுக்கு உத்தரவாதம் தருவேன். ரசிகர்களுக்கு மிகவும் புதிய அனுபவமாக இந்தப் படம் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னும் மூன்று தினங்களில் வெளியாகவிருக்கும் படத்துக்கு பெரிதாக எந்த விளம்பரமும் இல்லாதது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மரியான் படத்தின் புகைப்படங்கள் சில...
செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ் இணையம்
புகைப்படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்

-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...