மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஜூலை, 2013புரிந்தும் புரியாமலும்


நீண்ட நிலா முற்றத்தில்
மூலைக்கு ஒருவராய்
நீயும் நானும்...

நேற்றுவரை நமக்குள்
நிகழ்ந்த சங்கமத்தின்
ஈரம் இன்னும்
இனிப்பாய் நெஞ்சில்..!

நீ எனக்களித்த
முத்தத்தினால் சிவந்த
என் கன்னம்
இன்று அவமானத்தால்..!

நீ காதல் பரிசாய்
எனக்களித்த சங்கிலி
என் வாயில்
பரிதவிப்போடு..!

நம்மைப் பிரிக்க
கடவுளுக்கு கூட
அதிகாரம் இல்லை...
என்றாயே..!

இதோ பிரிக்கக் கூடிய
கூட்டத்தின் எதிரே
மரப்பாச்சிகளாய் நாம்..!

வளவளவென்று
பேசியபடி அவர்கள்...
வாயடைத்து நாம்..!

எங்கே நாம் பார்த்தால்
அழுது விடுவோமோ...
என்பதால் நிலம்
பார்த்தபடி நான்...
நிலா பார்த்தபடி நீ..!

எனக்கு நீ...
உனக்கு நான்...
நமக்கேன் குழந்தை
என்ற நீ...

குழந்தையில்லா
காரணத்தைக்
கையில் ஏந்தி
பிரிக்க நினைப்போர்
முன் வாயடைத்து..!

உன்னைப் புரிந்தும்
புரியாமல் நான்..!

** இது ஒரு மீள் பதிவு
-'பரிவை' சே.குமார்

7 கருத்துகள்:

 1. //எனக்கு நீ...
  உனக்கு நான்...//

  புரிதல் அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அருமையான சாட்டையடி வரிகள்,வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. புரிந்தும் புரியாமலும் அழகான காதல் வரிகள்..

  பதிலளிநீக்கு
 4. சமூகக்கொடுமைகளில் இதுவுமொன்று.இருமனங்களின் வலிமை போதும் சமூகத்தை ஓரங்கட்ட !

  பதிலளிநீக்கு
 5. அருமையான கருப்பொருளுடனான கவிதை சகோ!

  // எனக்கு நீ...
  உனக்கு நான்...
  நமக்கேன் குழந்தை
  என்ற நீ...

  குழந்தையில்லா
  காரணத்தைக்
  கையில் ஏந்தி
  பிரிக்க நினைப்போர்
  முன் வாயடைத்து.//

  மனதை நெருடிய வரிகள்...

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.4

  பதிலளிநீக்கு
 6. நீ காதல் பரிசாய்
  எனக்களித்த சங்கிலி
  என் வாயில்
  பரிதவிப்போடு..!

  நம்மைப் பிரிக்க
  கடவுளுக்கு கூட
  அதிகாரம் இல்லை...
  என்றாயே..!

  இதோ பிரிக்கக் கூடிய
  கூட்டத்தின் எதிரே
  மரப்பாச்சிகளாய் நாம்..!

  வலி நிறைந்த காதல் வரிகள் அருமை !
  வாழ்த்துக்கள் சகோ .

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...