மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 19 ஆகஸ்ட், 2013மனசின் பக்கம்: நான் + நூறு = 400


மனசு வலைச்சரத்தில் எழுத ஆரம்பித்து இது 400வது பதிவு என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஹைக்கூ, கவிதை, கதை மற்றும் மனதில்பட்டதென முதலில் நான்கு வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்தேன். பின்னர் எல்லாவற்றையும் மனசு தளத்திற்கு கொண்டு வந்து மற்ற மூன்று தளங்களுக்கு மூடுவிழா நடத்தி ஒரு தளத்தில் தொடர்ந்தேன். சில நாட்களாக காலில் வலி வந்து சிகிச்சை பெற்ற போது தளத்தை சும்மா போட வேண்டாம் என்பதால் அதிகம் படித்தது, பிடித்தது, செய்திகள் என மற்ற இணையங்களில் இருந்து எடுத்துப் பகிர்ந்தேன். நண்பர் செங்கோவி அதற்கு மிகவும் வருத்தப்பட்டிருந்தார். இனிமேல் அது போன்ற பகிர்வுகளைத் தவிர்த்து (ஆனா அப்படிப்போட்டா படிக்கிறவங்க எண்ணிக்கை 1000க்கு மேல் அடிச்சுப் போகுது... சுயமா சிந்தித்து எழுதினா 50 தாண்டுறதுக்குள்ள மூச்சு திணற ஆரம்பிச்சிருது...) முடிந்தளவு எனது பகிர்வுகளைக் கொடுக்க நினைத்துள்ளேன். மேலும் மனசில் 400 என்றாலும் கிறுக்கல்களில் 110, நெடுங்கவிதைகள் 65, சிறுகதைகள்  20 என மொத்தமாக 595 பதிவுகள் எழுதியாச்சு... இது எல்லாம் உங்களால்தான் சாத்தியமானது... அனைவருக்கும் நன்றி.

விஷால் முதல்முறையாக பள்ளியில் மேடையேறி 'அச்சமில்லை... அச்சமில்லை...' என்று பாரதியார் வேடத்தில் பாடி, எல்லாரிடமும் வாழ்த்துக்களைப் பெற்றானாம். முதல் முறையாக மேடை ஏறியிருக்கிறான். தொடர்ந்து அவனை ஊக்குவித்து இன்னும் நிறைய விழாக்களில் கலந்து கொள்ளச் செய்து மேடைப் பயத்தைப் போக்க வேண்டும். (எனக்கு மேடையென்றாலே உதறல்தான்).

ஒரு வலைத்தளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். இறுதிச் சுற்றுக்குத் தேர்வான கதைகளில் எனது கதையும் ஒன்று. ஆனால் பரிசுக்குரிய கதைகளை தேர்ந்தெடுக்கும் போது எனது கதைக்கு மதிப்பெண் இல்லை. என்னவென்று கேட்டபோது உங்களது பெயரை நண்பர்கள் பின்னூட்டத்தில் போட்டுவிட்டார்கள்... போட்டி விதிகளை மீறியதால் பரிசுக்குரிய கதைத் தேர்வில் உங்கள் கதையை சேர்க்க முடியவில்லை என்று சொன்னார்கள். பரவாயில்லை... இது நமது தவறுதான்... நண்பர்களிடம் வாக்களிக்கும்படி சொன்னபோது பின்னூட்டம் இடவேண்டாம் என்று சொல்லவில்லை. நமக்கு விதிச்சது அம்புட்டுத்தான்... கதை சரியில்லை என்றால் அதைச் சொல்லவும் அதனை பற்றி அலசவும் நடுவருக்கு உரிமை உண்டு... நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் நடுவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் போல... சொந்தமாக எழுதிய கதைக்கு அவர் மதிப்பெண் போடவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு படம் அவர் பார்த்தாராம்... அதனை ஒத்து இருக்கிறதாம்.. படம் பார்க்காதவர்கள் முழு மதிப்பெண் கொடுப்பார்கள் என்னால் மதிப்பெண் அளிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே... நான் அந்தப்படத்தைப் பார்க்கவும் இல்லை... காப்பியடித்து கதை எழுதும் பழக்கமும் எனக்கு இல்லை... அந்தக் கதையை மனசில் பதிந்து நண்பர்களிடம் அவர் சொன்ன படத்தின் கதையை ஒத்திருக்கிறதா என்று கேட்க எண்ணமிருந்தது. அதை ஒரு பத்திரிக்கை நண்பன் கேட்டிருக்கிறான். அதனால் சில நாட்களுக்குப் பிறகு பதிகிறேன்.

நண்பர் சங்கவி இதழில் எழுதிய கவிதைகள் என்ற தலைப்பில் தனது முதல் கவிதைப் புத்தகத்தை வாசுதேவன் அண்ணா அவர்களின் அகவொளிப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகிறார். புத்தக வெளியீடு சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள் நண்பா.

தலைவா படப்பிரச்சினையில் என்ன நடக்குது... யாரால் பிரச்சினை என்று தெரியவில்லை... விஜய் பேசாமல் இருக்கிறார்.. அம்மாவும் எதுவும் சொல்லவில்லை... ஏன் கமல்கூட ஒரு வார்த்தை பேசவில்லை என்று எல்லாரும் வருந்தினார்கள். எங்கள் அறையிலும் தீவிர விவாதம்...விஜய் எதனால் பிரச்சினை என்று சொல்லத் தேவையில்லை... வருந்தவும் தேவையில்லை காரணம் படத்தில் நடிக்க கோடிகளை வாங்கியாச்சு அவருக்கு நஷ்டமில்லை என்றார் ஒரு நண்பர். அம்மா பின்னணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவா வந்தால் என்ன வராவிட்டால் என்ன  அரசுக்கு வேறு வேலையிருக்கு என்று அவர் வேலையை பார்க்கிறார் என்றார் அம்மா விசுவாசி, கமல் பேசவில்லை என்றால் விஸ்வரூபம் பிரச்சினைக்கு யார் காரணம் என்பதை சொல்லி மீடியாவில் நீதிமன்றத்திலும் தன்னிலையை விளக்கினார் கமல் என்று தன்பங்குக்கு பேசினார் கமல் ரசிகர்... படபிரச்சினைக்கு என்ன காரணம்ன்னு விஜய் எதாவது சொன்னாரா... அப்பாவுடன் கொடநாட்டுக்கு எதுக்குப் போகணும் என்று சுருக்கென்று கேட்டார் மற்றொரு நண்பர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னாலும் பணம் போட்ட தயாரிப்பாளர் பாவம்தான்.. எப்படியோ 20ம் தேதி படம் வெளியாவதாகக் செய்தி படித்தேன். பிரச்சினைகளைத் தாண்டி வெற்றி பெறட்டுங்கண்ணா... இருந்தாலும் படம் பூராம் சத்தியராஜை அண்ணா.. அண்ணான்னு கூப்பிட வச்சிருக்கீங்களேண்ணா... அப்ப தயாரிப்பாளருக்கு பிரச்சினை வரும்ன்னு தோணலையா... கடைசியில் 'Time to Lead' அப்படின்னு போடுறீங்களே அப்பவும் யோசிக்கலையா... சரி என்ன இருந்தாலும் சினிமாவை தடுக்கும் அளவுக்கு அரசியல் நடத்துவது தேவையில்லாததுதான்... என்ன மாதிரி சூழலில் தமிழகம் இருக்கிறது?

காயத்ரி அக்கா, சக்கரகட்டி மற்றும் ஸ்கூல் பையன் என தொடர்ந்து மூன்றாவது வாரமாக வலைச்சர அறிமுகம்... ஹை...; நானும் ஹாட்ரிக் அடிச்சிட்டேன்... என்னை இதுவரை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. 

சொல்வனத்தில் எனது மழைக்காளன் சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-மீண்டும் சந்திப்போம்....
-'பரிவை' சே.குமார்..

40 கருத்துகள்:

 1. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ...

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்... சென்னையில் சந்திப்போம்...

  பதிலளிநீக்கு
 3. நானூறுக்கும், ஹாட்ரிக்கும் வாழ்த்துக்கள்/ ட்ரீட் எங்க?!

  பதிலளிநீக்கு
 4. நாலு வார்த்தை

  நீங்க ஆயிரம் பதிவு எழுத வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. உங்களது எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. பிற தளங்களில் இருந்து நீங்கள் காப்பி பேஸ்ட் செய்து போடுவது எனக்கும் வருத்தமே உங்கள் சுயம் மற்றவர்கள் முன் மறைய வாய்ப்பு உள்ளது...

  தொடர்ந்து உற்சாகமாக எழுதி 400 கடந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  போட்டியில் இறுதிவரை முன்னேறியமைக்கும் வாழ்த்துக்கள்.. கலந்து கொண்டதே பெரிய விஷயம் அதை எண்ணி பெருமை கொள்ளுங்கள்...

  பதிலளிநீக்கு
 7. நான் நூறென்று நாநூறினைக் கண்ட
  தேன் ஊறும் பதிவுகளு(உ)ம் திறமை
  வான் ஏறிவலம் வரும் தாரகைகள்
  தான் கோடியானாலும் தனியழகே காண்!

  சகோதரரே!
  மேலும் பலநூறுகளைக் கடந்து
  ஆயிரங்காண அன்பான நல் வாழ்த்துக்கள்!

  த ம.5

  பதிலளிநீக்கு
 8. நான் + நூறு = 400!!!வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 9. //நண்பர் செங்கோவி அதற்கு மிகவும் வருத்தப்பட்டிருந்தார். இனிமேல் அது போன்ற பகிர்வுகளைத் தவிர்த்து (ஆனா அப்படிப்போட்டா படிக்கிறவங்க எண்ணிக்கை 1000க்கு மேல் அடிச்சுப் போகுது... சுயமா சிந்தித்து எழுதினா 50 தாண்டுறதுக்குள்ள மூச்சு திணற ஆரம்பிச்சிருது...) முடிந்தளவு எனது பகிர்வுகளைக் கொடுக்க நினைத்துள்ளேன்//

  பொதுவாக காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு வெளியில் நல்ல மரியாதை இல்லை குமார். நல்ல படைப்புகளைத் தரும் ஆற்றல் இருந்தும், அந்த அவப்பெயர் நீங்கள் பெற வேண்டுமா என்பதே என் ஆதங்கம்.

  மேலும், வேறு யாராவது நம் படைப்புகளை எடுத்து, அவர்கள் பெயரில் போட்டால்கூட தார்மீகரீதியில் நாம் ஒன்றும் கேட்க முடியாது.

  புரிதலுக்கு நன்றி குமார். உங்கள் இலக்கியப்பணி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் சகோதரரே மேலும் மேலும் தங்கள் ஆக்கங்கள் பல்கிப்
  பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 11. உண்மை தான் நானும் படிச்சு இணையத்தில் முகநூலில் சேகுவேரா பற்றி தகவல் சேர்த்து பதிவூ போட்டு இருந்தேன் படிச்சவங்க 130 பேர் தான் ஒரு சினிமா ந்யூஸ் படிச்சு அத பத்தி பதிவூ எழுதி இருந்தேன்
  1500 பேரு இதுவரைக்குமே என்ன செய்ய இனி சினிமா வ பத்தி மட்டும் எழுதலாமா என்று யோசனையாய் இருக்கேன் ///////////

  400 பதிவூ வாழ்த்துக்ள் தல நான் இன்னும் 100 தொடல கலக்குங்க

  பதிலளிநீக்கு
 12. வாங்க செந்தில் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க தனபாலன் சார்...
  சுற்றுலா முடிந்ததா?
  எனக்கும் பதிவர் விழாவுக்கு வர ஆசைதான்... அபுதாபியில் அல்லவா இருக்கிறேன்...
  அடுத்த முறை ஊருக்கு வரும்போது சந்திப்போம்,
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 14. வாங்க ராஜி அக்கா...
  ட்ரீட்தானே கண்டிப்பாக கொடுத்துடுவோம்...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க ஜோதிஜி அண்ணா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க சாய்ரோஸ்..
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு 16. வாங்க சீனு...
  உண்மைதான்... கொஞ்ச நாளா எழுதும் நிலையில் இல்லாததால் அப்படி செய்தேன். இனி மாற்றிக் கொள்கிறேன்...

  கலந்து கொண்டு இறுதி வரை சென்றது சந்தோஷமே....

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க இளமதி...
  கவியில் வாழ்த்தா... அது சரி... சந்தோஷம்...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க யோகராஜா அண்ணா....
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
  வாங்க அம்பாள் அடியாள் அக்கா....
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க செங்கோவி...
  உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிந்தது செங்கோவி....
  இனிமேல் எனது பதிவுகளையே அதிகம் தருகிறேன்...

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 21. வாங்க சக்கரகட்டி...
  உண்மைதான்.... சினிமா பதிவுக்களுக்கு இருக்கும் மரியாதை சிந்தித்து எழுதுபவற்றிற்கு இல்லை என்பது எனக்கும் வருத்தம்தான்...

  நீங்களும் தொடர்ந்து கலக்கிட்டுத்தான் இருக்கீங்க நண்பரே....

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. 400 ஆவது பதிவிற்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  வார இதழ்களிலிருந்து செய்திகளை தொடர்ந்து இணைத்து எழுதிய போது,உங்களின் தனித்தன்மைக்கும் திறமைக்கும் என்ன ஆயிற்று என்று நானும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உங்கள் வலைப்பக்கமே தன் சுயம் இழந்து பொலிவிழந்திருந்தது உண்மை! கால் வலி காரணம் என்று அறிந்த போது வருத்தமாக இருந்தது. இப்போது வலி முழுவதும் சரியாகி விட்டதா?

  கிராமாங்களின் ஈரத்தையும் அழகையும் எளிமையையும் சுவாசிக்கவும் ரசிக்கவும் வைத்தவர் நீங்கள். தொடர்ந்து எழுதுங்கள்!!

  பதிலளிநீக்கு
 23. 400 வது பதிவுக்கு வாழ்த்துகள். கதம்பம் போல பல்வேறு விஷயங்கள் பேசியிருப்பது சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 24. வாங்க அம்மா..
  எழுதணுங்கிற ஆர்வமெல்லாம் இருக்கு அம்மா... யூரிக் ஆசிட் பிரச்சினையால் ரொம்ப சிரமப்பட்டுட்டேன்... நடக்க முடியாமல் முழங்காலில், கட்டைவிரலுக்கு அருகில் வலி... இப்போ மாத்திரை சாப்பிடுகிறேன். உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருக்கிறேன்... இன்னும் வலி பூரணமாக குணமடையவில்லை...

  சரி நம்மை நட்புக்கள் மறக்காமல் இருக்க எதாவது பண்ணனுமேன்னு இணைய இதழ்களில் இருந்து பகிர்ந்தால் நல்ல ரெஸ்பான்ஸ்.. கொஞ்சம் தொடர்ந்தேன்.... இனி எனது பதிவுகள் மட்டுமே இடுகிறேன் அம்மா....

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஸ்ரீராம் அண்ணா...

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நானூறுக்கு இனிய வாழ்த்துகள் குமார்!

  பதிலளிநீக்கு
 27. வலைச்சர வாரத்தைப் பொறுத்தவரை அது ஒரு கோ-இன்சிடென்ஸ் என்று சொல்லலாம்...

  சொந்தக் கருத்து மற்றும் சொந்தக் கற்பனைகளை மட்டும் எழுதுங்கள்... நான் அப்படித்தான் செய்கிறேன்... மனதுக்கு திருப்தியளிக்கிறது...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 28. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அண்ணாச்சி.

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் நண்பரே. தமிழ் வலையுலகில் தாங்கள் மறக்கமுடியாத நபர். தங்கள் படைப்புகள் தனித்துவமானவை. மேலும் பல்லாயிரம் படைப்புகள் தர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. வாங்க ராமலக்ஷ்மி அக்கா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வாங்க ஸ்கூல் பையன்...
  கண்டிப்பாக மனதில் தோன்றுவதைத்தான் எழுதுவேன்...
  ஆமா... வலைச்சரத்தில் பலர் அறிமுகம் செய்திருந்தாலும் தொடர்ந்து மூன்று வாரம் என்பது சந்தோஷத்தின் உச்சம்...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. வாங்க தனிமரம் அண்ணாச்சி...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வாங்க முனைவரே...
  எதோ கிறுக்குகிறேன்... தனித்துவம் என்பதெல்லாம் பெரிய வார்த்தைங்க.... மிக்க நன்றி
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வாங்க குட்டன் அவர்களே...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வாங்க கருண்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


  வாங்க அக்கா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. நானூறுக்கு வாழ்த்துக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 37. வாழ்த்துகள்.
  தொடரட்டும் வெற்றிகள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...