மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 14 ஏப்ரல், 2016வாக்காளர் அலப்பறை...7

றைக்குள் நுழைந்தவன் "இன்னைக்கு கொஞ்சம் வெயில் ஆரம்பிச்சிருக்கு... காத்தடிச்சாலும் மேலெல்லாம் கசகசன்னு இருக்கு..." என்றபடி சட்டையைக் கழட்டினான். "சொல்ல மறந்துட்டேன்... எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... காலையில நான் எந்திருக்குமுன்னே எல்லாரும் ஓடிட்டீங்க... அதான் சொல்ல முடியலை... " என்றான் சிரித்தபடி.

"நீங்களாச்சும் இப்ப வந்து சொல்றீங்க... முகநூல்ல ஆங்கிலப் புத்தாண்டுக்கு மாஞ்சு மாஞ்சு சொல்றவனுங்களை எல்லாம் இன்னைக்குக் காணோம்... ஏதோ கொஞ்சப் பேர் மட்டும் போட்டிருந்தானுங்க... அதிலும் சிலர் பாத்தீங்கன்னா ஆங்கிலத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கானுங்க..." என்றார் அவர்.

"எல்லாரும் இப்ப அரசியலுக்குள்ளயும் நடிகர்கள் கிரிக்கெட் பின்னாலயும் சுத்திக்கிட்டு இருக்கானுங்க... இங்கிலீஸோ தமிழோ வாழ்த்துச் சொன்னானுங்கதானே... அதுக்கு சந்தோஷப்பட்டுக்கலாம்... ஏன்னா நாமதான் சித்திரையா... தையான்னு குழம்பிப் போயிக் கிடக்கோமே...  ஆமா இப்ப யாரும் ஐ.பி.எல். பார்க்கிறதில்லையா?" என்றான் அவன்.


"மஞ்சச் சட்டை இல்லாம பாக்கப் பிடிக்கலை... ஐ.பி.,எல்லை விட அரசியல் கிரிக்கெட் ரொம்ப நல்லாயிருக்கு..." சிரித்தார் கனகசபை.

"மஞ்சத் துண்டுதான் கட்சிகளைப் பிரித்து அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கு போலவே... தொண்ணுறுக்கு மேல போயும் நாட் அவுட்டாமே..." சிரித்தபடி தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.

"ஆமா ஆரம்பிச்சிட்டாரு... அறைக்குள்ள அரசியல் வேணான்னு சொல்வாரு... அப்புறம் இவரே ஆரம்பிப்பாரு.... நாம எதாச்சும் சொன்னா அதுக்கு நையாண்டி பண்ணுவாரு..." என்றபடி அரசியல் விவாதம் பார்க்க ஆரம்பித்தார் அவர்.

"ஏங்க பேசுனா பம்முறது... அப்புறம்.. வேண்டாம் விடுங்க... நான் எதாவது சொல்லப்போக நீங்க எதாவது சொல்லி வருத்தம்தான் மிஞ்சும்... அம்மாவை எதிர்த்து குஷ்பு நிக்கிறேன்னு சொன்னுச்சு நிக்கலை போலவே... "

"ஆமா நின்னுட்டாலும்..." என்றார் கனகசபை.

"எதுக்கு இழுக்குறீங்க...? அதான் குஷ்புக்கு பதிலா கண்ணழகியை நிப்பாட்டியிருக்காரு போல... தலைவர் எப்படிப்பட்ட ஆளு..."

"யாரு மீனாவா... அதோட புள்ள தெறியில நடிச்சிருக்காம்... மீனா ரஜினி அங்கிள்ன்னு கூப்பிட்டுட்டு ஜோடியா நடிச்ச மாதிரி இதுவும் இன்னும் பதினைஞ்சு வருசத்துல விஜய்க்கு ஜோடியா நடிக்கும்ன்னு பேசுறானுங்க... இந்த நேரத்துல கண்ணழகிக்கு எதுக்குய்யா வேண்டாத வேலை" என்றான் நடராஜன்.

"ஏய்... இருப்பா....கண்ணழகின்னா மீனாதானா... உங்களை சினிமா ரொம்பக் கெடுத்து வச்சிருக்கப்பு... இது ஏதோ சிம்லா சோழ இளவரசியாம்... சும்மா குஷ்புவை விட சூப்பரா இருக்கு... கண்ணால கலக்கிடும்ன்னு நினைக்கிறேன்... வயசான அம்மாவுக்கு ஓட்டுப் போடுறதைவிட இந்த சோழச்சிக்குப் போடலாம்...ம்...." என்றார் சத்தியமூர்த்தி.

"ஏய் அது முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மருமகப்பா... பாக்க நல்லாத்தான் இருக்கு... குஷ்புக்கு மாற்றுத்தான்... சரி... அது எதுக்கு... இந்தாளுக்கு இந்த வயசுல புத்தி எங்க போகுது பாரு..." என்றார் கனகசபை.

"குஷ்பு, விஜயதாரணியின்னு பேச்சு போகும் போல... இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி ஒண்ணும் பேசலை... தமிழகத்தை தலை நிமிர வைக்க வந்த தலைவன்னு சொல்லுவாரே..." இடைபுகுந்தார் அவர்.


"நான் எதாச்சும் சொன்னேனா... உங்களுக்கு எங்கிட்டயிருந்து விஜயகாந்தைப் பற்றி பேச்சு வரணும்... அப்புறம் நான் அதைச் சொன்னேன்... இதைச் சொன்னேன்னு... பேசுவீங்க..." சிரித்தான் அவன்.

"எப்பவும் சப்போர்ட்தானே... அப்படி இப்படி சாஞ்சு நடந்தாக்கூட செய்தி ஆக்குவீங்களே... அதான் கேட்டேன்." அவரும் விடாமல் வம்புக்கு இழுத்தார்.

"ஆமாங்க... மக்கள் மீது அக்கறை கொண்டவர்தாங்க அவர்... இல்லைன்னு சொல்லமுடியுமா.. மாமண்டூர் கூட்டத்துல பேசும்போது அங்க வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மணி ஆச்சி... போகும்போது ரோட்டுல பாத்துப் போகணும்... எந்தப் பிரச்சினையும் இல்லாம வீடு போய் சேருங்க... எனக்கு போன் பண்ணுங்கன்னு...  சொன்னாரா இல்லையா... எந்த அரசியல்வாதிங்க சொல்றான்... பிரியாணிக்கு கூட்டி வந்து செத்தாக்கூட கண்டுக்கமாட்டானுங்க... வெகுளி மனுசனுங்க அவரு.... அவருக்கு உடம்பு முடியலை... அதை காமெடி ஆக்குறீங்க... இந்தா இந்தம்மா போயி இறங்க நாப்பது ஏக்கரு விவசாய நிலத்தை நாஸ்தி பண்ணியிருக்கானுங்க... அன்னாடங்காச்சிகளைக் கொண்டாந்து வெயில்ல போட்டு சுட்டுப்புட்டானுங்க...எரநூறு ஓவாய்க்கு ஆசைப்பட்டு செத்துப் போயிருக்கானுங்க மானமுள்ள தமிழனுங்க... அந்தம்மா என்ன சொல்லுது... உடம்பு முடியாமத்தான் செத்தானுங்கன்னு சொல்லுது... உடம்பு முடியாதவனை ஏன்ய்யா கூட்டியாறீங்க... விஜயகாந்த் கூட்டத்துக்கு... அவருன்னு இல்லை.... மற்ற கட்சி கூட்டத்துக்கு போலீஸ் போறதே இல்லை... அம்மா கூட்டத்துல மக்களை அடைச்சி வச்சி பாதுகாப்பா நிக்குது... டாஸ்மாக்ல நின்னது மாதிரி... போலீஸை வைச்சி டாஸ்மாக் நடத்தி கோடியில லாபம் பார்த்துட்டு படிப்படியா குறைப்போம்ன்னு சொல்லுது... கேக்குறவன் கேணையனா இருந்தா கே.பி. சுந்தரம்பாள்தான் தெறி படத்து ஹீரோயின்னுன்னு சொல்லுவானுங்க...." சற்றே காட்டமாய் பேசினான் அவன்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான்... அதென்னா சுந்தராம்பாளுக்கு பொயிட்டீங்க... கேக்குறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில கேடிவி தெரியுதுன்னு சொல்லுவானுங்கன்னுதானே நான் கேள்விப்பட்டிருக்கேன்..." என்றார் கனகசபை.

"சும்மா தெறிக்க விடலாமேன்னுதான்...."

"ஆமா... பா,ம.கவுல அன்புமணிக்கு எந்தத் தொகுதின்னு சொல்லாம வச்சிருக்காங்களே.... எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்னு கால் நூற்றாண்டுக்கு முன்னால தலைவர் சொன்ன மாதிரி.... இவரு நிப்பாரா... மாட்டாரா...?" கேட்டு விட்டுச் சிரித்தான் நடராசன்.

"ஏங்க அவருதான் முதல்வர் வேட்பாளர்... அப்புறம் நிக்காம... கண்டிப்பா நிப்பாருங்க... இறுதிப் பட்டியல் வரும்போது பாருங்க..."


"பாப்போம்... நியமன எம்பியானது மாதிரி  முதல்வராகலாம்ன்னு நினைச்சிராம இருந்தாச் சரி... எங்க பக்கமெல்லாம் மாவட்டச் செயலாளர்ன்னு சொல்லி தேர்தல்ல வேட்பாளரை நிறுத்தியிருக்காங்க... ஊர்ல கேட்டா அவன் எப்ப மாவட்டச் செயலாளர் ஆனான்னு தெரியலைன்னு சொல்றானுங்க..."

"வேற பேசுங்கங்க... எப்பப் பார்த்தாலும் அவங்கதான் உங்க டார்கெட்..." கடுப்பானார் அவர்.

"சரி விடுங்க... தந்திரக்குமார் கட்சிக்கு மூணு சீட்டாம்... தாலியை வித்து கட்சி வளர்த்து நடுத்தெருவுல நிக்கிறேன்... நான் எப்ப சம்பாரிக்கிறது... சம்பாதிக்கணுமின்னா ஐயா கால்ல விழுகணும்... அதுவும் இருபத்தி நாலு மணி நேரத்துல விழுகணும்ன்னு சொன்ன ஆளு.... கட்சி ஆரம்பிக்க எங்க இருந்துய்யா பணம் வந்துச்சு..." கேட்டார் சத்யமூர்த்தி.

"எல்லாம் ஜி வழியாத்தான்.... அரசியல்ல இருக்கவனெல்லாம் கோடிக்கு ஆசைப்பட்டு நம்மள தெருக்கோடியில விடுறானுங்க... இது தெரியாம கொடிப் பிடிச்சி  உயிரை விடுறோம்... இது சாக்கடைங்க... இந்த சாக்கடை தமிழகம் எங்கும் ஓடிக் கிடக்கு... இதை சுத்தம் செய்யணும்ன்னா இப்ப ஆகுற காரியமில்லைங்க... ஆனா இப்பவே ஆரம்பிச்சா இன்னும் பத்து வருசத்துல சுத்தமான தமிழகத்தை நம்மால கொண்டு வர முடியும்... அதுக்காகவாவது மாற்று அவசியம்... இல்லேன்னா மக்களுக்காக நான்... உங்கள் அம்மான்னு சொல்லிக்கிட்டு விளை நிலமெல்லாம் ஹெலிபேடா மாத்திருவாங்க... விஜயகாந்த் சொல்ற மாதிரி இதையெல்லாம் நியூஸ்ல படிக்கும் போது இவ்வளவு கேவலப்பட்டுப் போயிட்டோமேன்னு வருத்தமா இருக்குங்க..." என்றார் கனகசபாபதி.

"இந்த நடிகர்கள் கிரிக்கெட்....?" மெல்ல இழுத்தான் அவன்.

"அடுத்து அதுக்கா...?" ,முணங்கினார் அவர்.

"ஏங்க அரசியல் பேசினா திட்டுறீங்க... கிரிக்கெட் பேசினாலுமா...?"

"கோடீஸ்வர பிச்சைக்காரங்களைப் பற்றி எதுக்குங்க பேசுறீங்க... இதுல கமல் வேற ராமர்... அணில்ன்னு பேசிக்கிட்டு இருக்காரு... அஜீத் சொன்னது தப்புன்னு பேசுறானுங்க... இவனுக பின்னாடி கொடிப் பிடிக்க நம்மள சிலதுங்க இருக்குக... அறிவுகெட்ட மூதேவிங்க... மொத்தத்துல நாம திருந்தமாட்டோம்ங்க... எத்தனை வெள்ளம் வந்தாலும் நாம அவனுக காலை நக்குறதை விட்டுட்டு வெளிய வரமாட்டோம்... இன்னைக்கு பாத்தீங்கதானே... தெறி ஆட்டத்தை... அதான் அவனுக நம்மளை சரியா கணக்குப் பண்ணி வச்சிருக்கானுங்க.... விடுங்க..." என்றான் நடராஜன்.


"எல்லாத்துக்கும் மாற்று அவரு வரணுங்க..." என்றார் அவர். அவரின் அவர் யாரென்பதை எல்லாரும் அறிவார்கள் என்பதால் ஆளாளுக்கு முகத்தை திருப்பிக் கொண்டனர்.

கடுப்பான அவன் மட்டும் யாரு விஜயகாந்தா என்று கேட்டால் பிரச்சினை வரும் என்பதால் "யாரு அஜீத்தா?" என்றதும் எல்லாரும் சிரிக்க, சத்திய மூர்த்தி மட்டும் சிரிக்காம "விஜயகாந்தும் இல்ல... அன்புமணியும் இல்ல... குஷ்பு வந்தா எல்லாம் சரியாகும்... நீங்க வேணும்னா பாருங்களேன்... குஷ்புக்கு பிரதமர் ஆகிற தகுதியே இருக்கு... ஒரு நாள் அது நடக்கும்..." என்றார்.

"அதான் தமிழகம் இன்னும் அப்படியே இருக்கு... வெளங்கிடும்..." என்றபடி சோப்பை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான் அவன்.

படங்களுக்கு நன்றி... இணையம்

-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. ரசித்தேன். ஆனாலும் நீங்கள் சொல்லும் கன்னழகியை விட குஷ்பூ அழகுதான்!

  பதிலளிநீக்கு
 2. இன்றைய அரசியல் ஒரு காமெடி சீரியல் மாதிரி தான் இருக்கிறது.

  விமர்சனம் தேவை தான்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பதிவு

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. அலப்றை வழக்கபோல் நன்று புகைப்படம் ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்தாலும் ஔவையாரோடு யாரை இணை வைப்பது என்ற வேதனையும் வருகின்றது நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. அலப்பறை வழக்கம் போல ரசிக்க வைத்தது. கண்ணழகி என்றதும் என் செல்லம் கண்ணழகியா? தேர்தல்லியா?!!! என்னடா இது நம்ம பேட்டைல தேர்தல் வருதுனு இப்பத்தான் பதிவு எழுத ஆரம்பித்து இன்னும் முடிக்கலை அதுக்குள்ள குமாருக்கு எப்படி நம்ம பேட்டை நியூஸ் போச்சு ஹஹஹ என்று பார்த்தால் இது திமுகவில....சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்...குஷ்பு வின் தில் பெட்டிக்கடையில் தொங்கும் பேப்பரில் பார்த்தேனே...அம்மா நிற்கும் தொகுதியில் அம்மாவுக்குப் போட்டியாக நிற்கத் தயார்னு சொல்லியிருக்கும் நியூஸ்....உங்களுக்கும் தெர்ஞ்சுருக்குமே...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. சும்மா குஷ்புவை விட சூப்பரா இருக்கு... கண்ணால கலக்கிடும்ன்னு நினைக்கிறேன்...//

  அமைச்சரே...அந்தக்கண்கள்...

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...