மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 ஏப்ரல், 2016மனசின் பக்கம் : வைகறையும் வைகைக் கரையும்


விஞர் வைகறை அவர்களின் மறைவுச் செய்தியை நேற்றிரவு மது சார், துளசி சார், செல்வா அண்ணா ஆகியோரின் வலைத்தளம், முகநூல் பகிர்வுகள் மூலம் அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். வைகறை அவர்களைச் சந்தித்ததில்லை... பேசியதில்லை...  புதுகை  வலைப்பதிவர் விழா நிகழ்வுகள் குறித்த பகிர்வுகளில் அனைவரும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்.  வலைத்தள உறவுகள் மூலமாகவே இவரை அறிவேன். இவரின் இறப்பு யாராலும் எளிதில் சீரணிக்க்க முடியாத இழப்பு... மறையும் வயதா இது...?  நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய கவியை சாவு தழுவிக் கொண்டு விட்டதே... அவரை நம்பி இருந்த மனைவியும் குழந்தையும்... ? நினைத்தாலே மனசு கனக்கிறது.  தேவதா தமிழ் கீதா அக்கா 'உனக்கு நாங்க இருக்கோம்மா' என கவிஞரின் மனைவியிடம் சொன்னபோது கவிஞரின் மனைவியோ 'நீங்க இருப்பீங்க அக்கா... இனி அவர் இருக்கமாட்டாரே...' என்று அழுததாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம்பெண்ணின் வலியை யாரால் போக்க முடியும் சொல்லுங்கள்.  வயிறு வலி என்று மேம்போக்காக விட்டதே மிகப்பெரிய ஆளாக உயர வேண்டிய ஒருவரின் உயிரைப் பறித்திருக்கிறது என்பதை பலரின் பகிர்வுகள் மூலம் அறிய முடியும் போது... எல்லாருமே சாவை நோக்கித்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்... சேரும் நாளும்... இடமும்தான் நாம் அறியாமல் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் இருக்கும் வரை உடல் நலம் பார்ப்போம் நட்புக்களே... இந்த இழப்பு மிகப்பெரிய இழப்பு... அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் நாம் இல்லை என்றாலும் கவிஞர் வைகறை அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

*****
வெட்டிபிளாக்கர்ஸில் சிறுகதைப் போட்டி அறிவித்திருப்பது குறித்து தனிப்பதிவில் தெரிவித்திருந்தேன்... நிறையப் பேர் கலந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இப்போ கல்கியில் சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறார்கள். அதிலும் கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே... வெற்றி உங்களுக்குத்தான்.


*****
டிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் ஒன்பது கோடி கிடைத்ததென ஒருவரும் பதிமூணு கோடி கிடைத்ததென ஒருவரும் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் விஷாலோ சங்க கடனை அடைத்து விட்டோம் என சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். ராதிகா 'ஜசரி' வேலனின் கடனை அடைத்ததற்கு வாழ்த்துக்கள் என்கிறார். சிம்பு நடிகர் சங்கம் ஜோக்கராகிவிட்டது என் பிரச்சினையில் தலையிடவில்லை... என நடிகர் சங்கம் தேவையில்லை என்கிறார். அஜீத் பாடலை நான்  போடக்கூடாது என்று சொன்னேனா...? என்று டுவிட்டுகிறார் விஷால். நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி நடத்தினால் என்ன தவறு... எங்களுக்கு பணம் கொடுத்தால் என்ன கெட்டுப் போய் விடுவீர்கள்... நடிகர் சிவக்குமார் குடும்பம் ஒரு கட்டிடம் கட்டித் தருகிறது. நாங்கள் நலிந்த கலைஞர்களுக்குத்தான் கட்டிடம் கட்டுகிறோம். அஜீத் எதுவுமே பேசலை... சும்மா கிளப்பி விடப்படுகிறது. நான் எவ்வளவு உதவிகள் செய்கிறேன் தெரியுமா...? நடிகன் வீட்டில் பிரச்சினை என்றால் யாரும் வரமாட்டீர்கள். அவன் இறந்தால் கூட அது வேடிக்கைதான்... என சகட்டுமேனிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் கட்சி மாறி எஸ்.வி,சேகர் அவர்கள். 


நீச்சல் குளமும், தங்க தனி அறைகளும், பேட்டி கொடுக்க வசதியான ஹாலும் நலிந்த கலைஞர்களுக்கானது என்றால் கிரிக்கெட் நடத்துவதில் தவறில்லைதான்... ஆனாலும் நாமளே பணம் போடலாம் என சிலர் சொன்னதற்கு எல்லாரிடமும் பணம் இருக்குமா... ஆய்டா... ஊய்டா... என்று குதிக்கிறீரே.. இருக்கவன் பணம் போட்டுத்தான் இல்லாதவனுக்குச் செய்யணும்... எங்கள்ல ஒருத்தனுக்கு வலியின்னா நாங்கதான் மருந்தா நிப்போமே தவிர உங்ககிட்ட மருந்து வாங்க காசு கேட்டு கிரிக்கெட் போட்டியெல்லாம் வைக்கமாட்டோம்... நீங்க சொகுசு வாழ்க்கை வாழ மக்கள் பணங்கொடுக்கலைன்னு வேதனைப்படணும்... வெட்கப்படணும்... பொறுப்பேற்கணும்.. உங்ககிட்ட கேட்டா என்ன தப்பு... இப்படி வீர வசனமெல்லாம் இனியும் பேசாதீங்கப்பா... போதும்... அரசியல்வாதிகளோட ஆணவப் பேச்சையே கேட்க முடியாத எங்களால உங்களை பேச்சை எல்லாம் தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கு... இனியும் ஓவராப் பேசினீங்க அசிங்கம் அசிங்கமாத் திட்டுவோம்... இப்பவே கழுவி ஊத்திட்டோம்... இன்னும் அடங்கலை... கேரவான் பாய்ஸ்... கேவலப்பட்டு போயிடாதீங்க... இழந்தை மரியாதையை... மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லிக்கிட்டு  மறைச்சி அடுத்த படத்தை ஓட்டப் பாருங்க.... இந்தப் படம் பிளாப் ஆயிடுச்சு.

*****

ழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக முடிந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் அழகர் கோவிலில் இருந்து கிளம்புவதை கோவிலுக்குள் நின்று பார்த்து ரசித்து.... அதன் பின் தல்லாகுள எதிர்சேவை... ஆற்றில் இறங்கி மண்டபத்தில் இருக்கும் போது... அண்ணா நகரில் என தேடித்தேடிச் சென்று பார்த்தோம்... தங்கக் குதிரையை திட்டு வணங்கி அழகரை தரிசித்து... லட்சோப லட்சம் சனங்களின் ஊடே பயணித்து... ஆஹா அற்புதமான தரிசனத்தை அனுபவித்தோம். இந்த முறை எங்கள் குடும்பத்தில் பாப்பாவுக்கு மட்டுமே அந்த ஆனந்த தரிசனம் கிடைத்திருக்கிறது. மதுரையில் ஐயா வீட்டில் இருப்பதால் நேற்று... இன்று... என அழகரை விடாமல் தரிசித்து இருக்கிறார். நான் எப்பவும் போல வீடியோக்களில் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

சித்திரை திருவிழா குறித்த பகிர்வுகளை ஒரே இடத்தில் விளக்கமாய் அழகிய புகைப்படங்களுடன் படிக்க நம்ம துரை. செல்வராஜூ ஐயா அவர்களின் 'தஞ்சையம்பதி' தளத்திற்குச் செல்லுங்கள். சித்திரைத் திருவிழாவை நேரில் கண்டு ரசித்த பேரின்பத்தை அடையலாம்.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

 1. இளம் வயதில்இயற்கை எய்திவிட்ட கவிஞர் வைகறையின் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள்.இந்த துயர செய்தியை முதல் பாராவில் படித்தவுடன், அதன்பின் நீங்கள் பதிவிட்ட ஏனைய விஷயங்கள் மனதில் பதியவில்லை குமார்.

  பதிலளிநீக்கு
 2. நண்பரின் பிரிவிற்கு
  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
 3. கவிஞர் வைகறையின் ஆன்மா சாந்தியடையட்டும்

  பதிலளிநீக்கு
 4. வைகறை அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை தர பிராத்திக்கிறேன். சின்ன வயதில் மரணம் கொடுமை.

  பதிலளிநீக்கு
 5. நல்ல நண்பரை இழந்துவிட்டோம். ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 6. பாவலர் (கவிஞர்) எவரும்
  சாவடைந்ததாய் வரலாறில்லை
  வைகறை - நீ என்றும்
  வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

  ஓ! பாவலனே (கவிஞனே)!
  வைகறை என்னும் பெயரில்
  பாக்களால் அறிவை ஊட்டினாய்
  படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
  கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
  எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
  வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
  துயர் பகிருகின்றோம்!

  பதிலளிநீக்கு
 7. அவரைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை..
  ஆனாலும் மனம் கனக்கின்றது..

  கவிஞர் வைகறை அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 8. கவிஞர் நண்பர் வைகறை அவர்களின் மரணம் இன்னும் மனது ஏற்க மறுக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தார்க்கு...பிரார்த்தனைகளுடன்...

  பதிலளிநீக்கு
 9. கவிஞர் வைகறையின் மரணம் பதிவுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 10. கவிஞரின் மரணம் அதிர்ச்சியான ஒன்று. நடிகர்களின் கிரிக்கெட் தேவையில்லா ஒன்று. நன்றி!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...