மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் பாஹே வரை

ன்மீகப் பகிர்வு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் அது ஒரு மின்னிதழுக்காக எழுதியதுதான்... அதற்காக துரை.செல்வராஜூ ஐயா போல் ஆன்மீகத்தில் திளைத்திட வாழ்த்துக்கள் என்று அன்பு அண்ணன் கில்லர்ஜி சொல்லியிருந்தார். ஆத்தாடி... ஆன்மீகத்தில் ஐயா கடல்... அவர் ஒவ்வொன்றையும் விரிவாக எழுதும் திறன் என்னை வியப்பில் ஆழ்த்தும்... அதில் அவ்வளவு தேடல் இருக்கும்... நாமெல்லாம் ஆன்மீகத்தை ஊறுகாய் போல் எப்போதாவதுதான் தொட்டுப் பார்க்க முடியும். நமக்கு சும்மா கிறுக்குவதே சாலச் சிறந்தது. ஆன்மீகத் தேடல் என்பது ரொம்ப... ரொம்பக் கஷ்டம். அதேபோல் கில்லர்ஜி அண்ணா மேலும் சில விவரங்களை எழுதியிருக்கலாமே என்று சொல்லியிருந்தார். நாலு பக்கத்துக்குள் ஆன்மீகம் பதியும் நண்பர் எனக்கு எட்டுப் பக்கம் கொடுத்தார். அதுவே பெரிய விஷயம் அல்லவா..? ஒரு மின்னிதழில் நமக்காக கூடுதல் பக்கங்கள் கொடுப்பது என்பது நம் எழுத்தின் மீதான நம்பிக்கைதானே... எழுதுவோம் அண்ணா... இன்னும் விரிவாய் வரலாற்றை... குயிலி, உடையாள், நம்ம சங்கரப்பதி கோட்டை என விவரித்து அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாய் எழுதலாம்... அனைவரின் ஊக்கத்துக்கும் நன்றி.

*****


ளையராஜா இசை என்பதால் 'ஓய்' அப்படின்னு ஒரு படம் பார்த்தேன்... கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்த பெண் அக்கா கல்யாணத்துக்காக பரோலில் வெளியில் வருகிறாள். அவளைக் கொல்லத் துடிக்கும் வில்லன் கூட்டம் வீடு வரை வந்து மிரட்டுகிறது. அவளோ சின்னாளபட்டிக்கு போய் விடுகிறாள். அங்கு பண்ணையார் வீட்டில் வாழ்கிறாள். கடைசி வரைக்கும் அவள் எதற்காக கொலை செய்தாள்ன்னும் சொல்லலை... வீடு வரை வந்த வில்லன் எங்கே போனான்னும் காட்டலை... ஆரம்பித்த கதை வேறு... கதை பயணித்து முடிந்ததும் வேறு.... எழுதும் போது நம்மள மாதிரி அப்ப அப்ப எழுதிப் படமெடுத்தார் போல... ஜி.எம்.பி. ஐயாவோட கதை கதையாம் காரணமாம் கதையில் வேதாளத்தின் போக்கில் எழுத ஆரம்பித்து மிகச் சிறப்பாக முடித்திருப்பார். இவர்களோ... சரி விடுங்க...ஆரம்பித்த கதைக்கு எப்ப வருவாங்கன்னு காத்திருந்தே படம் முடிந்த போது இரவு 2 மணி. பின்னணி இசையில் ராஜா கலக்கல்... பாடல்களில் கோவில் பாடல் ராஜா ரகம்... மற்றதெல்லாம்... ம்க்கும்.... கிராமத்துப் பின்னணி என்பதால் சோர்வில்லாமல் போவது போல் தெரிந்தது.

*****


தெறி குறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் வருது... பூவிழி வாசலிலே, சத்ரியன், என்னை அறிந்தால், வேதாளம் என எல்லாப் படங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு குலுக்கி... கலக்கி... அதைக் குடித்து ஒரு கதை ஆக்கியிருக்கிறார் அட்லீ என்றார் நண்பர் சிரிக்காமல்... விஜய் படங்களை பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதால் அது குறித்தான விமர்சனம் இல்லை இது... மீனாவோட பொண்ணு நல்லா நடிச்சிருக்காம்... ஒரு தடவை பார்க்கலாம் என பாஸிட்டிவ்வாகத்தான் சொல்கிறார்கள். இயக்குநர் அட்லீ சொந்தச் சரக்கை இறக்கி களம் கண்டால் நல்லாயிருக்கும். மௌனராகத்தை கலக்கி ராஜாராணி ஆக்கினார். இப்போ நாலு படக் கலவை... அடுத்து...? கொஞ்சம் சுயமாய் சிந்தியுங்கள். பதிவைத் திருடி என் பதிவெனப் போட்டு பரிசு வாங்குவதைப் போல் இதுவும் கேவலமான செயல்தான்... இதில் நான் வென்றேன் என்று சொல்வது கேலிக்கூத்துத்தானே... சொந்தச் சரக்கில் வெல்ல வேண்டும்... அதுதான் திறமை... உங்கள் திறமையை அடுத்த படத்திலாவது காட்டுங்கள். தெறி குறித்து இதற்கு மேல் பேசினால் அஜீத் பிடிக்கும் என்பதால் விஜய் குறித்து எதாவது எழுதாதே என்பார்கள்... சுறா போன்ற படங்களைக் கொடுத்த விஜய் இதில் நல்லா நடித்திருக்கிறார் என்றார்கள். இந்தப் படம் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன்.
*****
கிராமத்து நினைவுகள், வெள்ளந்தி மனிதர்கள் என்ற சில வாழ்க்கைப் பதிவுகள் இன்னும் தொடரலாம் என்ற நிலையில்தான் தொக்கி நிற்கின்றன. வேலைப்பளூவின் காரணமாகவும் சோர்வின் காரணமாகவும் (அதெல்லாம் வரக்கூடாது என்று திட்டாதீர்கள்... வேலையின் காரணமான சோர்வு இது) பதிவெழுதுவதும் வாசிப்பதும் குறைந்துவிட்டது. இந்த நிலையில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் போல் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்கள் அன்றும் இன்றும் என இருக்கும் வாழ்க்கையை வைத்து ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்ற ஆசை இப்போ மனசுக்குள் துள்ளிக் குதிக்குது. தொடர்கதை வேறு... தொடர்வோமா... நிறுத்துவோமா... என பயணிக்கிறது... வேரும் விழுதுகளும் போல் விறுவிறுப்பாய் வாழ்க்கையைப் பேசி நகரவில்லை என்பதாய் நண்பர்களின் கருத்தும் வருகிறது... அது வேறு களம்... இது வேறு களம் என்றாலும் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்றி எழுதலாமா... இல்லை அப்படியே நிறுத்திப் பயணிக்கலாமான்னு எண்ணங்கள் மாறி மாறி மனசுக்குள் சுத்துது.... ஆஹா... என்ன இது விஜயகாந்த் பேசுவது போல் கோர்வையாக இல்லாமல் இருக்கிறதே... சரி விடுங்க... புதிய தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் மனசுக்குள் மத்தாப்பாய்... விரைவில் ஆரம்பிக்கலாம்.
*****
தொடர்ந்து சில வாரங்களாக வெள்ளிக்கிழமை மழை பெய்கிறது. இன்றும் காலை எழும்போதே மழை பெய்து கொண்டிருந்தது. மதியம் வெயில் சற்றே கூடுதலாய் இருந்தது. இப்போது குளிர்கிறது. ஊரில் வெயில் வாட்டி எடுப்பதாகச் சொன்னார்கள். கால மாற்றம் இன்னும் இங்கு வரவில்லை.
*****

வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. 2014-ல் அவர்கள் நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதையான 'நினைவின் ஆணி வேர்' முதல் பரிசான 5000 ரூபாய் பெற்றது.... ஆனால் இதுவரை பரிசுத் தொகை வரவில்லை என்பதும்... அனுப்பிட்டோம் என்ற அவர்களின் பதிலும்... சரி விடுங்க.... மிகச் சிறப்பாக நடத்துவார்கள்... நல்ல நடுவர்கள்... நம்ம குடந்தை சரவணன் அண்ணன் கூட நடுவர் குழுவில் இருக்கிறார். இந்த முறை பரிசுத் தொகை அதிகம்... தலைப்பு கூட அப்பா தொடர்பானதுதான்... எழுதுங்கள் மக்களே... பரிசை வெல்லுங்கள். போட்டி குறித்து அறிய கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.


*****

(எழுத்தாளர். பாஹே)

ஸ்ரீராம் அண்ணாவின் எங்கள் பிளாக்கில் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் அவரின் அப்பா பாஹே (பாலசுப்ரமணியம் ஹேமலதா) அவர்களின் கதையான 'நிமிஷங்கள்... விநாடிகள்...' வாசித்தேன்... சத்தியமாய்ச் சொல்றேங்க... அந்த ராமசாமியின் பின்னால நானும் நடந்தேன்... ஓடினேன்... அவரின் நினைகளை நானும் நினைத்தேன்... என்ன ஒரு எழுத்து நடை... ஒரு மனிதனின் மனசும் அவனைச் சுற்றி நடக்கும் சாதரண நிகழ்வுகளும் கதையினை நமக்குள் இறுத்திச் செல்கிறது... எப்படியான எழுத்து... ஒவ்வொரு பாரா படித்த போது ஐயாவை மனசுக்குள் பாராட்டிக் கொண்டேன்... எனக்கும் இது போல் எழுதத்தான் ஆசை... பேச்சு வழக்கில் எழுதுவதைவிட இப்படி எழுதினால் சுவராஸ்யம் கூடும்... இன்னும் அந்தக் கதையின் பாதிப்பு இருக்குங்க... மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லும் எழுத்து... ஐயாவை வாழ்த்தும் வயது நமக்கு இல்லை... அவரோட அந்த எழுத்துல கொஞ்சமாச்சும் நமக்குள்ளும் வரட்டும்ன்னு நம்மை ஆசீர்வதித்தால் போதும்... நீங்களும் வாசிங்க... ராமசாமியோடு பயணிப்பீர்கள்... அப்புறம் இங்கே ஐயாவின் படத்தை திட்டமாட்டார் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணாவிடம் 'கேட்காமல்' போட்டிருக்கிறேன் 

நிமிஷங்கள்... வினாடிகள்...


-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கடந்த ஆன்மீகப் பதிவினை படித்தேன். ரசித்தேன். ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். அப்பதிவில் தாங்கள் வித்தியாசமான அனுபவம் பெற்றிருப்பீர்கள் என்பது என் எண்ணம். பாஹே அறிமுகத்திற்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

ஆன்மீகப் பதிவுகள் தொடர்ந்து எழுத்துங்கள். எழுத எழுதத்தானே அதுவும் உங்கள் வசமாகும்.

அப்பாவைப் பற்றி எழுதி, சொல்லி என்னை நெகிழச் செய்து விட்டீர்கள். நன்றி குமார். நண்பர்களின் பாராட்டு நெகிழச் செய்கிறது.அதே கதையில் அவரின் எழுத்துகளிலேனக்குப் பிடித்த வரி //தர்ம தொரையும் எசமானுமான ராமசாமி சட்டைப்பைக்குள் கைவிட்டுத் துழாவுகிறார்.//

அவரையும் உயர் நிலையில் இருக்க வைத்த அந்த கணங்களை இந்த வரிகள் சொல்கின்றன.

மறுபடியும் நன்றி குமார்.

KILLERGEE Devakottai சொன்னது…

நமது சங்கரபதி கோட்டையின் வரலாறுகள் வரட்டும்.... அப்படியே வெள்ளந்தி மனிதர்களில் வெள்ளையபுரம், வெள்ளந்தி வெள்ளையம்மாளையும் சேர்த்துக் கொ'ல்ல'வும்

துரை செல்வராஜூ சொன்னது…

நானெல்லாம் சாதாரணன்.. எனக்கொன்றும் தெரியாது..
என் போக்கில் எழுதுகின்றேன்..
சில சமயங்களில் வித்தியாசமாகத் தெரிகின்றது..
ஆனாலும் எப்படி என்று புரியவில்லை..

புதிதாக வருகின்ற திரைப்படங்களின் மீது விருப்பம் இல்லை..

தாங்கள் குறிப்பிட்டுள்ள - எங்கள் பிளாக் - கதையை வாசிக்கின்றேன்..

வாழ்க நலம்..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் ஆன்மீகத் தொடர் நன்றாகவே வந்திருக்கிறது.

தெறி பற்றி பலரும் அட்லீ இளைஞரின் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் போலும் நல்லதாகவே சொல்லியிருக்கிறார்கள். கஸ்தூரி/மது அவர்களும் விமர்சனம் எழுதியிருந்தார்.

பாஹே! அப்பா. அவரது எண்ணங்கள் பதியப்பட்ட தூறல்கள் எனும் புத்தகத்தை ஸ்ரீராம் என்னிடம் கொடுத்தார். அதைப் பற்றிய எங்கள் கருத்துகளையும் பதிவாக எழுதினோம். ஒவ்வொரு கருத்தும் நறுக், தெறி!! சில அப்படியே நம் பொட்டில் அறைவது போல் இருக்கும். இப்போது இந்தக் கதை இன்னும் ஒட்டிக் கொண்டு ராமசாமியாய் நம்மையும் நினைக்கத் தோன்றியது. அத்தனை அசாத்தியமான எழுத்து. அப்பா 8 அடி அல்ல பல அடிகள் பாய்ந்திருக்கிறார்...பிள்ளையும் இப்போது பாய்ந்து கொண்டிருக்கிறார்!!

தொடருங்கள் தொடர்களை. தொடர்கின்றோம் நாங்களும். அருமையாக எழுதி வருகின்றீர்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கீதா

Yarlpavanan சொன்னது…

சிறந்த படைப்பு
பயன்மிக்க பதிவு