மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க...

"ஏட்டி... எப்பப் பார்த்தாலும் பேஸ்புக்லயே கெடக்கியே... முக்கியமான ஒரு சேதியச் சொன்னியா நீயி..." கோபமாக் கேட்டபடி வந்தமர்ந்தாள் கனகா.

"அப்புடி என்னத்த நா சொல்லலை... எல்லாத்தயுந்தான் சொல்லுறேனே..." சிரித்தபடிக் கேட்டாள் சுகன்யா.

"என்னத்த சொன்னே... சினிமா நடிகருங்க... கிரிக்கெட்டு வச்சாங்களே... அதுக்கு  இன்னிக்கு கூட்டம் கூடலையாமே.."

"ஏட்டி...அதான் இன்னக்கி நமுத்துப் போச்சேடி... எப்ப வந்து கேக்குறே... நமக்கிட்ட காசு வாங்கி அவனுகளுக்கு எல்லாம் கட்டிப்பானுங்களாம்... கேட்டா நலிஞ்ச கலைஞருகளுக்குன்னு சப்பைக் கட்டு கட்டுறானுங்க.... அதுல நமக்கு என்ன செய்வானுங்க... நாங்கூட எதிர்த்து ரெண்டு மூணு டேட்டசு போட்டேந் தெரியுமா..."  அந்த வெற்றியில் தனக்கும் பங்கிருக்கு என்பது போல் கண்களை விரித்துப் பேசினாள் சுகன்யா.

"ஆத்தாடி... பவுசுதான்டி... அஜீத்து படம் வந்தா... மொத ஆளா தேட்டருல நிப்பே... நீ எதுத்து டேட்டசு போடுறியாக்கும்..."

"மக்ககிட்ட காசு வாங்காதே... நாம சம்பாதிச்சதுலதான் கட்டணுமின்னு மொதல்ல சொன்னது அவுகதான்... இப்பனு இல்ல இதுக்கு முன்னால வெஜயகாந்து கடன அடக்க சிங்கப்பூருக்கு ஆடப் போனப்போ கூட அவரு எதுக்கத்தான் செஞ்சாரு தெரியுமா..."

"அவரு மட்டுந்தான் எதுத்தாராக்கும்...? வேற ஆரும் எதுக்கலையாக்கும்...?"

"கோடிக்கோடியா மக்களுக்குச் செய்யிற லாரன்சு அண்ணாச்சி, பீப் பாட்டு பாடி நாசமாப் போன நம்ம சிம்பு... இப்புடி நிறையப் பேரு... இன்னைக்கு கூட விஜயும் தனுசும் வரலியாம்..."

"இவுக செரி...  கமலு... ரெஜினி... இதுக்கு எதுப்பு தெரிவிக்கலையா...?"

"ஏட்டி அவுக பெரியவுக... கருத்துச் சொல்லுவாக... காசுன்னா... செரி நமக்கெதுக்கு அந்தப் பேச்சு... என்னவோ சொல்லலைன்னு வந்தியே அதை விட்டுட்டு இதைப் பேசுறே...?"

"பேச்சு அந்தப் பக்கமாப் போயிருச்சு பாரு... ஏதோ வெட்டிப் பிளாக்கராமே... அதுல கத எழுவுற போட்டி வச்சிருக்காவளாம்..."

"ஆமா... நானுந்தேன் பார்த்தேன்... அதுக்கு என்ன இப்போ...?"

"அதப்பத்தி கொஞ்ச வெவரஞ் சொல்லேன்..."

"ஏட்டி... நீ எழுவப் போறியா...? அட ஆமா நீயி கூட அப்ப அப்ப கதயின்னு கிறுக்கிவியே..."

"அதான்டி... சும்மா கிறுக்கலாமேன்னு.... பரிசு கெடச்சா அதிட்டந்தானே..."

"ஓ... அப்ப களத்துல எறங்குறதுன்னு முடிவே பண்ணிட்டே... செரி... செரி ஆரு கண்டா...போனவாட்டி நம்ம குமாரு வாங்குன மாதிரி  உனக்குக் கூட கெடைக்கலாம்..."

"அடிப்போடி... வெவரஞ் சொல்லுடி... நா எழுவிக்கிட்டு வாறே... நீ அதை பட்டி பாத்து அனுப்பி வையி..."

"ம்... எழுவு... எழுவு... கில்லர்ஜி அண்ணன், செல்வராஜூ ஐயாவெல்லாம் எதுக்கு இருக்காவ... அவுககிட்ட கொடுத்து திருத்தி வாங்கி அனுப்பிடலாம். நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணே விவரமா எழுதியிருக்கு... இரு வாறேன் தேடி எடுத்துச் சொல்றேன்..."

"சொல்லு.... சொல்லு... அப்புடியே அந்த வாத்தியாருக ஜெயக்குமாரு ஐயா, முத்து நிலவன் ஐயாக்ககிட்ட எல்லாம் காட்டி... திருத்திக்கலாம்..."

"ஆனாலும் ரொம்பத்தாண்டி... அவுக இருக்க பரபரப்புல ஒனக்கு திருத்திக்கிட்டு இருந்தாத்தான் வாழும்... ஏந் தனபாலன் அண்ணனை விட்டுட்டே...  அப்புறம் நிஷா அக்கா, காயத்ரி அக்காவெல்லாம் விட்டுட்டே... எழுவுனதை திருத்த அண்ணனுக்கிட்டயும் ஐயாக்கிட்டயும் கேக்கலாம்ன்னா... நீ அம்புட்டுப் பேரையும் இழுக்கிறே... அதெல்லாம் புக்கு போடும்போது பாத்துக்கலாம்... செரியா... ஆனா நீயெல்லாம் கத எழுவி... இருந்தாலும் உன்னோட ஆர்வத்தை பாராட்டுறேன்டி..." என்றபடி தேடி எடுத்துக் கொடுத்தாள்.

"ஏட்டி... இதப்பத்தி விவரமா வெட்டி பிளாக்கர்ஸ்ல போட்டிருக்காங்க... பாரு... பொறுமையா வாசி... நா போயி நறுக்குன்னு காபி போட்டுக்கிட்டு வாறேன்..."

கனகா வாசித்து பேப்பரில் குறித்துக் கொள்ள, சிறிது நேரத்தில் காபியோடு வந்தாள் சுகன்யா.

"ஏட்டி வாசிச்சியா... வெவரம் புரிஞ்சதா...?"

"ஆத்தாடி எட்டாயிரமாமே...? வெவரமெல்லாம் எழுவிக்கிட்டேன்..." வாயைப் பிளந்தாள்.

"ஈ போயிறாம..."

"பாத்தியா பாக்யாவுல தொடர்கதை எழுதப்போற சரவணன் அண்ணாச்சி, பாலகணேஷ் அண்ணாச்சி, அண்ணாச்சிங்க செங்கோவி, தமிழ்வாசி பிரகாஷூ, சதீஷ், ஆவி, அரசன்,  ரஹூம், சிவக்குமார்ன்னு தெரிஞ்சவங்களா மொதச் சுத்து நடுவரா இருக்காங்க... அப்ப நமக்கு அப்படிக்கா மார்க் போட்டுருவாங்கதானே..."

"ஆளையும் மூஞ்சியையும் பாரு... ஆரு எழுவுனான்னே தெரியாமத்தான் அவுக வாசிப்பாக... மார்க் போடுவாக... அதுபோக மொத ரவுண்டுலயே இமய மலைங்க... ரெண்டாவது மூணாவது ரவுண்டெல்லாம் கேக்க வேண்டாம்..."

"அடி ஆத்தி... அம்புட்டு சிக்குரெட்டா...? அப்ப செரமந்தானோ...?"

"இங்கேரு எழுவணுமின்னு ஆச வந்திருச்சுல... எதாச்சும் எழுவு... காசா பணமா... எழுவு...  ஒரு ஆளு மூணு கத எழுவலாமாம்... உங்கூட்டுக் கத, நாத்துனாவூட்டுக் கத, பங்காளிவூட்டுக் கதயின்னு எல்லாம் கிறுக்கியா... அனுப்புவோம்... ஆனா அப்பாரைச் சுத்தி எழுவணும்... அதமட்டும் மறக்காதே... செரியா... அப்புறம் எட்டாயிரங் கெடச்சா எனக்குப் பாதி கொடுத்துறணும்... என்ன டீலு ஓகேயா..."

"செரிடி... நாளைக்கே கிறுக்கி எடுத்தாறேன்... பரிசு கெடச்சா நாராயண விலாசுல தோச வாங்கித் தாறேன்... இல்லேன்னா கீர்த்திகாவுல பிரியாணி... லெட்சுமியில சினிமா ஓகேவா..."

"ஓகேட்டி.... இங்கேரு இது சாணி அள்ளி தலயில வச்சிக்கிட்டு வயலுக்குப் போற மாரியில்ல... பொறுமையா ரோசிச்சி... ரோசிச்சி எழுவு... ஆறாவது மாசம் ஒண்ணாந்தேதி வரைக்கும் டயமிருக்கு.... பொறுமயா யோசி... செரியா... படிக்கிறவுக கண்ணுல தண்ணி வரவைக்கிற மாரி... "

"ம் அடிச்சு தூள் கெளப்பிடுறேண்டி... நீயும் எழுவலாமே..."

"எனக்கு அதெல்லாம் செரி வராது... எங்கதயே பெரிய கத... ம்... அது எதுக்கு...நானும் இதப்பத்தி ஒரு டேட்டசு போடோணும்... தமிழ்வாசி அண்ணாத்தே போடச் சொல்லி கேட்டாப்புடி... போடலைன்னா மதுரக்காரருக்கு கோவம் வந்தாலும் வந்திரும்..." என்றபடி சுகன்யா கீ போர்டில் எழுத்துக்களைத் தட்ட ஆரம்பித்தாள்.

'எல்லாரும் கலந்துக்கங்க... வெட்டிப் பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில....' என எழுத்துக்கள் ஒவ்வொன்றாய் ஸ்கீரினில் வர ஆரம்பித்தன.

என்னங்க நீங்க எல்லாரும் கலந்துக்க...  சொல்லிப்புட்டேன்... செரியா...

-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. பாக்யாவுல அத்தனை பேரும் தொடர்கதை எழுதப்போறாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அப்பாதுரை சார்....
   தங்கள் கருத்துக்கு நன்றி.
   பாக்யாவுல எழுதப் போற சரவணன் அண்ணாச்சி... அதுக்கு அப்புறம் கமா போட்டு எழுதியிருக்கேன்... பாருங்க...

   நீக்கு
 2. அடடே.. கனகாவும் சுகன்யாவும் கதை எழுதக் கிளம்பிட்டாங்களா!...

  நடக்கட்டும்.. நடக்கட்டும்!..

  பதிலளிநீக்கு
 3. அட! சுப்பர்! குமார்! மண்ணின் வாசத்துடன் கூடிய உரையாடலுடன் அழகான அறிமுகம் போட்டியைப் பற்றி. ஆமாம் சரவணன் அவர்களின் தொடர்கதை பாக்யாவில் வர இருக்கிறது...

  போட்டியில் பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற இருக்கும் அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. அட! சுப்பர்! குமார்! மண்ணின் வாசத்துடன் கூடிய உரையாடலுடன் அழகான அறிமுகம் போட்டியைப் பற்றி. ஆமாம் சரவணன் அவர்களின் தொடர்கதை பாக்யாவில் வர இருக்கிறது...

  போட்டியில் பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற இருக்கும் அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. எழுவுங்க எழுவுங்க பரிசை வெல்லுங்க...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. செய்திக்கு மிக நன்றி பரிவை சே.குமார்.

  பதிலளிநீக்கு
 7. அதுசெரி ந்நான் திருத்தித் தந்து கத பெரைஸ் வேங்கவாக்கும் க்கும்.... செரிதான்....
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 8. பார்க்கலாம்.... ஆறாம் மாதத்திற்கும் கதைக்கரு ஏதேனும் கிடைக்குதான்னு... கதை எழுத ஆரம்பித்துவிட்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 9. கலந்துக்குங்க.... எழுதுங்க... ஜெயிங்க... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  2016 கல்கி சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கலந்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...