மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 3 ஜனவரி, 2014சிறுபூக்கள் : கவிதைகள் மூன்று

புத்தகத்துக்குள் பொத்தி வைத்த
மயிலிறகு குட்டிபோட்டதோ
இல்லையோ - உன்
கைபட்டு வந்ததால்
என்னை கட்டிப்போட்டது.!

********

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!

********

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

(கிறுக்கல்கள் தளத்தில் பகிர்ந்த சிறுகவிதைகளில் சில)
-'பரிவை. சே.குமார்.

8 கருத்துகள்:

 1. \\
  குடைக்குள் நாம்
  உரசும் உடம்பும்...
  மருகும் கண்களுமாய்...
  மனசுக்குள் இதுவரை
  சொல்லாத காதல்
  மழைக்கால காளானாய்...!//

  அருமை, பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. கண்ணீர் விட்டது மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. கடுகு(கவிதைகள்)சிறிதானாலும்,காரம் அமோகம்!

  பதிலளிநீக்கு
 4. பூக்களைப் பறிக்காதீர்கள்
  உடைந்த போர்டுக்கு கீழே
  உயிருள்ள ரோஜா
  பறிக்கப்பட்ட் போது
  கண்ணீர் விட்டது காம்பு..!
  ....அருமையான குறீயீடு கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. மூன்றுமே அருமை...

  மூன்றாம் கவிதை ரொம்ப பிடித்தது!

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 6. மூன்றுமே முத்துக்கள் நண்பரே
  வாழ்த்துக்கள்
  த.ம.6

  பதிலளிநீக்கு
 7. மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...