மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 ஜனவரி, 2014வீடியோ: ரஹ்மானின் ராகங்கள்

தனது இசையில் மூலம் ரோஜாவாய் மலர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ராஜாவின் சங்கீதச் சாரலில் நனைந்து கொண்டிருந்த இசை ரசிகர்களுக்கு புதுவெள்ளை மழையாய் இசை மழையை பொழிய வைத்தவர் இவர். இவரது இசையில் வரும் பாடல்கள் எல்லாம் மிகவும் வித்தியாசமாய் மலர்ந்தன. இவரது மெலோடியில் எத்தனையோ ரோஜாக்கள் மலர்ந்தன. இன்று இவரது இசையில் வசீகரமாய் வந்தமர்ந்த காதல் பாடல்கள் சில இங்கே உங்கள் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய்...

படம் : ரோஜா
பாடல் : புது வெள்ளை மழை...படம் : தாஜ்மஹால்
பாடல் : சொட்டச் சொட்ட நனையுது...படம் : உயிரே
பாடல் : நெஞ்சினிலே நெஞ்சினிலே...படம் : சில்லுன்னு ஒரு காதல்
பாடல் : முன்பே வா என் அன்பே...
படம் : ஜோடி
பாடல் : வெள்ளி மலரே...படம் : ஜென்டில்மேன்
பாடல் : ஒட்டகத்தைக் கட்டிக்கோ...படம் : காதலன்
பாடல் : என்னவளே அடி என்னவளே...என்ன உறவுகளே... பாடல்களை ரசீத்தீர்களா? மீண்டும் நல்ல பாடல்களுடன் மற்றுகொரு பகிர்வில் சந்திப்போம்... 
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

 1. பாடல் தேர்வுகள் அருமை!///அன்று போல் இன்றும் அவரது அடக்கம் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  குமார் (அண்ணா)
  காலைப்பொழுதில் மிக அருமையான பாடல்கள்...சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே நானும் ரசிக்கும் பாடல்கள். :)))

  பதிலளிநீக்கு
 4. ஒரு சிறு திருத்தம். நேருக்கு நேர் படத்திற்கு இசை ரஹ்மான் அல்ல. தேவா.

  பதிலளிநீக்கு
 5. எல்லாப் பாடல்களுமே ரசனைக்கு விருந்து பிரதர்...! ஒரு உபரி தகவல்.... ‘நேருக்கு நேர்’ படத்துக்கு இசை ரஹ்மான் அல்ல, தேனிசைத் தென்றல் தேவா!

  பதிலளிநீக்கு
 6. நானும் ரசிக்கும் அருமையான பாடல்கள் !
  நேருக்கு நேர் படத்தை எடுத்து விடுங்கள் ..அந்த படத்திற்கு இசை திரு ,தேவா அவர்கள் !
  +4

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் ரசிக்க வைக்கும் பாடல்கள்... தொகுப்பிற்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் பதிவு செய்திருக்கும் அனைத்தும் என்னுடைய விருப்ப பாடல்கள்....கேட்க கேட்க இனிமையான பாடல்கள்,நன்றி!!

  பதிலளிநீக்கு
 9. நேருக்கு நேர் பட பாடல் தேவா விற்குறியது.

  பதிலளிநீக்கு
 10. கருத்திட்ட உறவுகளுக்கும் தவறைச் சுட்டிக் காட்டிய உறவுகளுக்கும் மிக்க் நன்றி...


  நேருக்கு நேர் பாடலை எடுத்துவிட்டு ஜில்லுன்னு ஒரு காதல் பாடல் போட்டிருக்கிறேன்...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் அருமையான பாடல்கள்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...