மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 2 டிசம்பர், 2010

121/100


என்னடா இவன் நூற்றுக்கு நூறு வாங்கினவனை பார்த்திருக்கோம்... நூற்றுக்கு 121-ன்னு தலைப்ப போட்டிருக்கான்னு பார்க்கிறீங்களா... ஒண்ணுமில்லேங்க... நம்ம மனசு வலைப்பூவுல் இது நூறாவது பதிவு... சொந்தங்கள் 121... அதான் இந்த 121/100.

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பது போல் எனது இந்த வெற்றிக்கு வித்திட்டவர்கள் அறிந்த மற்றும் அறியாத நட்புக்கள்தான். எனவே முதலில் நன்றி உங்களுக்குத்தான் சொந்தங்களே.

இதுவரை நான்...

முதல் வலைப்பூ கிறுக்கல்களில் நான் கிறுக்கிய கவிதையை போட்டோவில் இணைத்து பதிவிட்டிருந்தேன். அதில் சில வரிகள் உங்கள் பார்வைக்கு...

//உன்னை அறிந்தவனாய் நான்.......என்னை அறியாதவளாய் நீ.......எனக்குள் மட்டும் இதயக் குடைச்சலாய்...//

இந்த கவிதைக்கு மட்டுமல்ல என் வலைப்பூ வாழ்க்கைக்கு முதல் பின்னூட்டமிட்டு ஆசிர்வதித்தவர் வலையுலகில் எனக்கு கிடைத்த சகோதரியும் 'நிலாமதியின் பக்கங்கள்' வலைப்பூ ஆசிரியருமான நிலாமதி. அவரது பின்னூட்டத்தில்

//அருமையான வரிகள். சில ஞாபங்கள் தீ மூட்டும் சில ஞாபங்கள் தாலாட்டும். பாராட்டுக்கள்.// என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை கிறுக்கல்களில் நான் கிறுக்கிய ஹைக்கூக்கள் எண்ணிக்கை... 110 :::: கிறுக்கல்களை தொடர்ந்த நல்ல உள்ளங்கள்... 29.

இரண்டாவதாக நான் ஆரம்பித்த வலைப்பூ நெடுங்கவிதைகள்.... தலைப்பைப் போல சற்றே பெரிய கவிதைகளுக்கான தளமாக இது அமைந்தது. இதில் நான் முதலில் எழுதிய கவிதையில் சில வரிகள் கீழே...

//நமக்குள் நடந்த
சண்டையின் சாரலால்
அமைதியானது வீடு...!

ஆளுக்கொரு மூலையில்...
நடந்ததை மென்றபடி..!
இது முதலல்ல
தொடரும் கதைதான்..!
......//

இப்படியாக விரியும் கவிதைக்கு முதலில் பின்னூட்டமிட்டவர் எனது பத்திரிக்கை நண்பரும் 'தமிழ்க்கவிதைகள்' வலைப்பூவில் காதல் கவிதைகள் வடிக்கும் கவிஞருமான திரு. மோகனன். அவர் சொன்னது..

//அருமை தோழா // - ஒரு வரியானாலும் முதல் வரியல்லவா...

எனது கவிதைப் பயணத்தில் நெடுங்கவிதைகளில் பிரசவித்தவை...65 :::: நெடுங்கவிதைகளை தொடர்ந்த நல்ல உள்ளங்கள்... 29.

ஆர்வக் கோளாறு என்று சொல்வார்களே அது நமக்குள்ளயும் நுழைந்து ஆட்டம் போட கவிதைகளுக்கு வலைப்பூ ஆரம்பித்தது போல கதைக்கென ஒரு தளம் ஆரம்பிப்போமே என்று மூன்றாவதாய் ஆரம்பித்தது சிறுகதைகள் வலைப்பூ...

இதில் எழுதிய கதைகளில் பல பத்திரிக்கைகளில் வந்திருந்தாலும் நண்பர்களின் பின்னூட்டமே மகிழ்வைத் தந்தது என்றால் மிகையாகாது. இந்த தளத்தில் நான் முதல் முதலாய் எழுதிய 'கடைசி வரை காணாமல்... 'என்ற கதையிலிருந்து சில வரிகள்...

//அதிகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.

''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.

''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...?''

''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.//

இந்த கதைக்கு முதல் பின்னூட்டமிட்டவர் நண்பர் சசி. அவரது பின்னூட்டம் கீழே....

//realy the people in gulf country they can feel it. we don't know this stroy or real. ur correct. its makes us to cry // - என்று எழுதியிருந்தார்.

சிறுகதைகள் தளத்தில் நான் எழுதிய கதைகள் மொத்தம்... 20 :::: சிறுகதைகளை தொடர்ந்த நல்ல உள்ளங்கள்... 35.

மூணு ஆரம்பிச்சும் ஆர்வக் கோளாறு அடங்கலை... அப்படியே நாலாவதா மனசில பட்டதை எழுதலாமுன்னு நானும் என் நண்பர்களும் கல்லூரியில் படிக்கும்போது நடத்திய 'மனசு' என்ற கையெழுத்துப் பிரதியின் பெயரையே வைத்து ஆரம்பித்தாச்சு... அதில் மனதில்பட்டதை மட்டுமல்ல மனதில் உள்ளதையும் பகிரலாம் என்ற நினைப்பில் பள்ளிப் பருவத்து தாலாட்டும் நினைவுகளை முதலில் எழுதினேன்... அந்த பதிவுக்குப் பெயர் 'பள்ளிப்பருவம் - I ' அதிலிருந்து சில வரிகள்...

//பள்ளிப்பருவம்... என்றும் மனதுக்குள் மழைக்கால காளானாய் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்தப் பருவத்து வசந்த காலத்தை அசை போட்டுப் பார்ப்பதே பள்ளிப்பருவம் - I.

நான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும்.//என்று விரியும் என் பள்ளிப்பருவம்.

இந்த பதிவில் நான் அசை போட்டதை 'அசைபோடுவது' வலைப்பூவின் உரிமையாளரும் வலைச்சரத்தில் வாரம் ஒருவரை சரம் தொடுக்க வைக்கும் நல் உள்ளத்துக்கு சொந்தக்காரருமான நம் ஐயா... திரு. சீனா அவர்களிடம் இருந்து பின்னூட்டம். இது மனசு தளத்துக்கான முதல் பின்னூட்டம் அல்ல என்றாலும் முதல் பகிர்வுக்கான பின்னூட்டம் . ஐயா அதில்...

//அன்பின் குமார்

மலரும் நினைவுகளாக - பள்ளிப் பருவத்தினைப் பகுதி பகுதியாக அலசி ஆய்ந்து - அசை போட்டு மகிழ்ந்தமை நன்று நன்று. நல்வாழ்த்துகள் குமார்// - என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தப் பதிவுக்கு முன்பு வரை மனசில் சிம்மாசனமிட்டவை 99.

நான்கு வலைப்பூவிலும் என்னை (சு)வாசித்து ஊக்க மூட்டிய நண்பர்கள் பலர் பலமுறை வலைச்சரத்திலும் தங்கள் பகிர்விலும் எனக்கான அடையாளத்தை அளித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்த உள்ளங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள். நான்கை ஒன்றாக்குங்கள் என்று நண்பர்கள் கேட்டதன் பேரில் எதாவது ஒன்றில் எழுதலாம் என்ற எண்ணம் வந்த போது 'மனசு' வென்றது.

கதை, கவிதை, சினிமா, மனசில் பட்டது என கலந்து கட்டி ஆடியதில் எனக்கு நட்பாகிய உறவுகள் 121. இடையிடையே மூன்று, நான்கு நாட்கள் ஓய்வு எடுத்தாலும் தொடரும் ஆட்டத்தில் நான் பதியும் 100வது முத்து இது...

எனக்கு பின்னூட்டம் டானிக் என்றால் நண்பர்கள் வழங்கிய விருதுகள் பூஸ்ட் என்றுதான் சொல்லோனும்... அந்த வகையில் விருதுகள் அளித்த பத்மாக்கா (முதல் விருது), சிநேகிதன் அக்பர், பாரா சித்தப்பா (இருவரும் முக்கனிகளாய் மூன்று மூன்று விருதுகள்), நண்பர் ஸ்டார்ஜன், சகோதரி ஆனந்தி, அம்மா மனோ சாமிநாதன் அனைவருக்கும் என் நன்றிகள்.

இதுவரை மனசில் நான் பகிர்ந்தவை எல்லாமே என் மனசு சொன்னவை மட்டுமே... நோ காப்பி... நோ பேஸ்ட்... எனவே எனக்கு இதில் எது பிடித்தவை என்றால் எல்லாமே என்றுதான் சொல்ல நினைக்கும் மனசு... அப்படி எல்லாமேயில் சில தூக்கல்கள் இருக்கும் அல்லவா... அவை இங்கே உங்கள் பார்வைக்காக...

வெற்றுடம்புடன் விளைநிலம் (விவசாயம் பொய்த்து வறண்ட விளைநிலங்கள் பற்றியது)
நிகழ்காலங்கள் - மு.பழனி இராகுலதாசன் (எனது கல்வித்தந்தையின் எனக்குப் பிடித்த கதை)

அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே (இதற்கு திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது மறக்க முடியாது)

கண்ணதாசன் கவிதை - (கவியரசின் கவிதைப் பகிர்வு... பல நண்பர்களுக்கு பிடித்த கவிதை)

பந்தயம் - சிறுகதை (கிராமத்துக்கதை... கதையின் வேகம் பந்தயம் போலவே இருப்பதால் பிடிக்கும்)

மன்னாதி மன்னன்-மருதிருவர் (நண்பர் வெறும்பய அவர்களின் அழைப்பை ஏற்று எழுதிய தொடர்பதிவு)

முதுமை போற்றுவோம் (சில நாட்களுக்கு முன்னர் நண்பர் அஹமதுஇர்ஷாத் இது குறித்து வலைச்சரத்தில் பகிர்ந்திருந்தார்)

அண்ணே பிளாக்கு வேணும் (ஜாலியாக எழுதியிருந்தாலும் பதிவுலகின் பாதையில் மனசுக்கு பட்டவை என்பதே உண்மை.)

சில சினிமாவும்... சில வரி விமர்சனமும்... (படத்தின் கதையை எழுதாமல் சற்றே வித்தியாசமான முயற்சிக்கு நண்பர்களின் பாராட்டுக்கள் அதிகம்)

பஞ்சாத்தா (எழுதும்போது ஏற்படுத்தாத பாதிப்பை படிக்கும் போது ஏற்படுத்திய கதை)
இன்னும் நிறைய இருக்கு....இப்படி சொல்லிக்கிட்டே போனா 100க்கும் சொல்ல வேண்டியிருக்கும் அதனால மனசுக்குள்ள வந்து நாலு நாளு தங்கி எல்லாத்தையும் படிச்சுக்கங்க...

அப்புறம் நம்ம நண்பர் அருண் பிரசாத் இந்த வார வலைச்சர ஆசிரியராய் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரது கதம்பம் இரண்டில் கதை சொல்லும் காந்தாள் என்று பஞ்சாத்தாவை பற்றி சில வரிகள் சொல்லியுள்ளார். அவருக்கு நன்றி... அவர் மூலம் என் மனசு தளத்தை பின் தொடரும் நண்பர்களையும் வரவேற்கிறேன்.

கடந்த வாரம் முதல் மீண்டும் அலுவலகப் பணி கூடுதலாயாச்சு... காலையில் சைட் ஆபிஸில் சற்று வேலைப்பளு குறைவாக இருப்பதால் பதிவை எப்படியாவது தட்டி விட்டுவிடுவேன். காலை 6 மணிக்கு கிளம்பி இரவு 9,10 மணிக்கு திரும்புவதால் உங்கள் இடுகைகளை படிக்க முடிவதில்லை... இனி மூன்று தினங்கள் விடுமுறைதான்... கண்டிப்பாக வாசிக்க வருகிறேன்.

இன்று அமீரகத்தின் சுதந்திர தினம் (National Day).... சில நாட்களாகவே அபுதாபி மின்னொளியில் ஜொலிக்கிறது.... அதுவும் கார்னிச் ரோட்டில் அழகான மின்னொளி அலங்காரங்கள்... அபுதாபி, துபாய், சார்ஜா, அல் ஐனில் இருக்கும் நம் நட்புக்கள் எல்லாரும் நமக்கு வாழ்வளிக்கும் நாட்டின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக களியுங்கள்.

மக்கா, மறுக்கா ஒரு தடவை மறக்காம சொல்லிக்கிறேன்  நன்றி. அப்புறம் ஒண்ணு சொல்ல விட்டாச்சு எல்லா வலையிலும் சேர்த்து இது 295வது இடுகை... மொத்த நண்பர்கள் 214.

நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

போட்டோவை சுட்ட தளங்கள்...ananyathinks.blogspot.com & cablesankar.blogspot.com
நன்றிகள் பல..!.

25 எண்ணங்கள்:

மோகனன் சொன்னது…

அன்பின் நண்பா...

உனக்குள் ஊறிய உணர்வுகளின் ஊற்றை கொணர்ந்தது, இன்று ஒரு மைல் கல்லை எட்டியிருக்கிறது...
இதில் என்னுடைய பங்களிப்பு ஒன்றுமில்லை... எல்லாம் உன் திறனே...

இது பல மைல் கல்களை தாண்ட வேண்டும் என்பதே எனது அவா...

தொடரட்டும் உமது வெற்றிப்பயணம்... உன்னோடிணைந்து நானும்...

என்றென்றும் அன்புடன்

மோகனன்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் குமார் ...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் குமார் ...

எல் கே சொன்னது…

வாழ்த்துக்கள்

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள்:)

மனோ சாமிநாதன் சொன்னது…

100 பதிவுகள் என்பது பெரிய விஷயம்! எல்லா பதிவுகளையும் சுவைபட எழுதுவது இன்னும் பெரிய விஷயம். அந்த வகையில் 'மனசின்' உண‌ர்வுகள் எல்லாமே அருமை! 100 ஆவது பதிவிற்கும் விரைவில் 200, 300 என்று பல சிகரங்கள் தொடவும் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

r.v.saravanan சொன்னது…

100 பதிவுகள் வாழ்த்துக்கள் நண்பா இன்னும் பல 100 எட்ட வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்வாழ்த்துக்கள் குமார். தொடருங்கள்.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

சுசி சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்.. தொடருங்க :))

எஸ்.கே சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

ponraj சொன்னது…

வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள்!!!!

Menaga Sathia சொன்னது…

வாழ்த்துக்கள்!!

vanathy சொன்னது…

வாழ்த்துக்கள்!!

அம்பிகா சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்.

Chitra சொன்னது…

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! தொடர்ந்து மென்மேலும் சிறந்த படைப்புகளுடன் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

எல்லாத்துக்கும்.....
எனது மனங்கனிந்த
இனிய நல்வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்.

தமிழ்க்காதலன் சொன்னது…

எனதினிய தோழமைக்கு அன்பில் தமிழ்க்காதலன்... வணக்கம். பெற்றத்தாயின் பெரும் ஆசிகள், தந்தையின் அன்பு வழிநடத்தல், யாவும் கிடைக்கவும்..., படிப்பவர் மனதில் கதையின் களம் விரிந்து, காட்சியை நிறுத்தும் தங்கள் எழுத்து மேலும், மெருகேறி... தமிழில் ஒரு நதியாய்... வாசகனின் இதயத்தில் கலக்க... என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விரைவில் 1000 மும் கைக்கூடட்டும்.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்! நூறாவது பதிவை ஒரு பின்னோக்கிய பார்வையாக விவரித்தமை நன்று :)

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

அன்பு குமார் வாழ்த்துக்கள் விரைவில் 500 ,1000 என்று சிகரங்களை தொடுங்கள் .

மாதேவி சொன்னது…

வாழ்த்துக்கள் தொடரட்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பு உள்ளங்கள்

மோகனன்...
கே.ஆர்.பி.செந்தில் அண்ணா...
எல்.கே...
வானம்பாடிகள் ஐயா...
அம்மா மனோ சாமிநாதன்...
சரவணன்,,,
ராமலெஷ்மி அக்கா...
ஆர்.கே.சதீஷ்குமார்...
சுசிக்கா...
எஸ்.கே...
புவனேஸ்வரி ராமநாதன் அக்கா...
பொன்ராஜ்...
மேனகாக்கா...
வானதி...
அம்பிகாக்கா...
சித்ராக்கா...
நிஜாமுதீன்...
ராதாகிருஷ்ணன் சார்...
தமிழ்காதலன்...
பாலாஜி சரவணா...
ஜி.ராஜ்மோகன்...
மாதேவி அக்கா...

அனைவரின் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க.

ஹேமா சொன்னது…

பிந்தினாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.
இன்னும் இன்னும் எழுதுங்க !