மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 7 டிசம்பர், 2010சில சினிமாவும்... சிலவரி விமர்சனமும்...(டிச.07)

நந்தலாலா
மலர்ந்தது:

-> தாயை தேடி பயணப்படும் இருவேறுபட்ட குணமுடைய கதாபாத்திரங்கள். பாஸ்கர் மணி என்ற கதாபாத்திரத்தில் மிஷ்கின்.

-> தன்னை மெண்டல் என்றவனை புரட்டி எடுப்பதாகட்டும், காரில் பயணம் செய்யும் பெண்ணை கேலி செய்தவர்களை அவர்களிடமிருக்கும் பீர் பாட்டிலை வாங்கி தலையில் அடிப்பதாகட்டும், உடலை விற்கும் பெண் தான் அழுக்கானவள் என்றதும் மழையில் நிறுத்தி அழுக்கெல்லாம் போயிடும் என்பதாகட்டும் மிஷ்கின் நிறைவாய் செய்திருக்கிறார்.

-> கால்களை வைத்து கதை சொல்லும் மிஷ்கினின் பாணி இந்தப் படத்தில் அதிக இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

-> படத்தின் பிண்ணனி இசையில் இளையராஜா தான் என்றும் ராஜாதான் என்பதை மீண்டும் ஒருமுறை ஆழமாகப் பதிந்துள்ளார்.

-> எங்கே செல்லும் இந்தப் பாதைக்கு நிகராக... தாலாட்டுக் கேட்க நானும்... மனதுக்குள் எழும் சோகத்தை கண்களில் நீராக்கி தாலாட்டுகிறது.

-> சிறுவன் அகியாக வரும் பையன் நிறைவாய் செய்திருக்கிறான். தங்களை சந்தேகப்படும் போலீஸிடன் ஆங்கிலத்தில் பேசும் காட்சிகள் நகைச்சுவை.

-> பணத்தை பறி கொடுத்ததால் பேருந்தில் போக முடியாமல் நடந்தே தாயைத் தேடித் செல்லும் போது வழிநெடுகிலும் நடக்கும் சம்பவங்கள் சிரிப்பையும் சோகத்தையும் மாறி மாறித் தருகின்றன.

-> காசுக்காக தனது உடல்குறையை பொருட்படுத்தாது வழிகாட்டும் இளைஞன் இடையில் நடக்கும் ஒரு பிரச்சினையில் தனது ஊன்றுகோலை இழக்கும்போது 'என் கால்... என் கால்...' என்று கதறுவது நெஞ்சைத் தொட்டது.

வாடியது:

-> மென்டல் என்றவனை அடிக்கும் நாயகன் தானே மென்டல் என்று சொல்லிக் கொள்வது ஏற்கும்படியாக இல்லை.

-> கொலை செய்துவிட்டு தப்பித்துச் செல்லும் ஒரு மனநோயாளியை போலீஸ் தேடியதா இல்லையா கதைக்குள் அது குறித்து எதுவும் இல்லை.

-> என்னதான் தாய் மனநிலை பாதிக்கப்பட்டாலும் வீட்டின் பின்புறம், ஒரு குப்பை போல அதுவும் பெர்முடாஸ் ஒன்றை மாட்டி கட்டி வைக்கும் அளவுக்கு பிள்ளைகளுக்கு மனம் வராது என்பதே என் எண்ணம்.

-> தான் வேறு ஓருவனுடன் வாழ வேண்டிய சூழலை சிறுவனின் தாய் கண்ணீருடன் சொல்லும் போது மற்றவர்களுக்கு உதவும் நாயகன் ஏனோ அவரை மட்டும் அறைந்துவிட்டு வருகிறான்.

-> சிறுவனின் தாயை நல்லவள் இல்லை என்பவன் உடம்பை விற்கும் பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். இது முரண்பாடக தெரிகிறது.

-> பாலாவுக்கு நாயகன் கஞ்சா அடிக்க வேண்டும் என்றால் மிஷ்கினுக்கு நாயகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கொள்கைபோலும்.

-> தந்தை ஓடிப்போனதை பெரிதாக எடுத்துக் கொள்ளத கதாபாத்திரம் தாயை மட்டும் 'சிறுக்கி... அவ... இவ...' என்று விளிப்பது ஆணாதிக்கத்தின் கொடி பறப்பதைக் காட்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எண்ணம்: குறைகளையும் அப்பட்டமான காப்பியையும் நினைக்காமல் நிறைகளை மட்டும் வைத்து படம் பார்த்தால் நிறைவான படம் நந்தலாலா.

குறிப்பு: 1999ல் வெளியான சீன மொழிப்படம் படத்தின் காப்பிதான் இது. ஒரிஜினல் பார்த்தேன்... கதையோட்டத்தில் நந்தலாலாவை பின்னுக்கு தள்ளிவிட்டது.

மந்திரப்புன்னகைமலர்ந்து... வாடியது :

-> படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பனே நாயகனாக. அவருடன் இன்சினியராய் சந்தானம்.

-> படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள். பிரிவோம் சந்திப்போம் கொடுத்த இயக்குநரா இதுபோன்ற வசனங்கள் எழுதியது என்ற எண்ணம் வருகிறது.

-> இருந்தாலும் பல இடங்களில் வசனங்கள் கை தட்ட வைக்கின்றன.

-> வசனங்கள் அருமையாக இருந்தும் கதாபாத்திரம் உணர்ச்சி அற்று நடித்திருப்பது படத்தின் போக்கை தடைசெய்கிறது.

-> ஸ்ரீகாந்த் ஒரு இடத்தில் வந்து போகிறார்... தம்பி ராமையா படம் முழுவதும் வருகிறார்.

-> பாடல்களில் சட்டச் சடசடவென... தாளம் போட வைக்கிறது.

-> முதல் பாதியில் சிரிப்புடன் செல்லும் படம் இரண்டாம் பாதியில் நகர மறுக்கிறது.

எண்ணம்: அடுத்த படத்தில் நாயகனாகும் ஆசையை விட்டுவிட்டு திரைக்குப் பின்னால் பழனியப்பன் நின்றால் ஜெயிக்கலாம்.

குறிப்பு: மந்திரப்புன்னகையில் புன்னகை மிஸ்ஸிங்... இருந்தும் பதிவர்களுக்காக முதன்முதலில் பிரிவியூ காட்டியதற்காக பழனியப்பனுக்கு ஒரு புன்னகை பூச்செண்டு.

மருதாணிமலர்ந்து... வாடியது:

-> தெலுங்கில் இருந்து தமிழ் வந்திருக்கு அண்ணன் தங்கை கதை.

-> அண்ணனாக ராஜசேகர்... அடிதடிகள் இல்லாமல் பாசமழை பொழிகிறார். தங்கையாக மீராஜாஸ்மின் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்.

-> அதிகமான பாசமழையில் நனைய விடுகிறார்கள் பார்க்கத்தான் நம்மால் முடியவில்லை.

-> தெலுங்குப் படம் என்பதால் மயில்சாமி, ஆர்த்தி, பயில்வானை வைத்து தனி காமடி டிராக்கை எடுத்து சேர்த்திருக்கிறார்கள் படத்துடன் ஓட்டவில்லை.

-> படத்துக்கான கருவை நல்லதங்காள் கதையில் இருந்து சுட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

-> பாடல்கள் எல்லாமே சுமார் ரகம்தான்.

எண்ணம்: எத்தனை பாசமலர்கள் வந்தாலும் நடிகர்திலகமும் சாவித்திரியும் வாழ்ந்த அந்த வாழ்க்கையை மாற்ற முடியாது என்பதே உண்மை.

குறிப்பு: டாக்டர் ராஜசேகர் 'டேய்... ஓய்...' என மீண்டும் அடிதடிக்கே போகலாம்.

நிறைவாய்...

நான் கேட்ட புதிய பாடல்களில் அதிகம் கவர்ந்தவை மன்மதன் அம்பு படத்தில் கமல் - திரிஷா வாசிக்கும் கவிதை மற்றும் ஈசன் படத்தில் வரும் உடம்பை விற்கும் பெண் பாடும் 'வந்தனமாம் வந்தனம்...' என்ற பாடல்... இந்தப் பாடல் தஞ்சை தமிழ்செல்வியின் குரலில் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்...

-'பரிவை' சே.குமார்
 படங்களுக்கு நன்றி - கூகிள்

16 கருத்துகள்:

 1. நந்தலாலா பார்த்தாயிற்று மீதி இரண்டும் பார்த்து விட்டு சொல்கிறேன். நல்ல விமர்சனம்...

  பதிலளிநீக்கு
 2. அட 3 in 1 ஆஆஆ

  நல்ல பார்வையுங்கோ.. மூன்று படத்தினதும் ஆழத்தை தெரிய வைத்துவிட்டடீர்கள்..

  பதிலளிநீக்கு
 3. இன்னும் நந்தலாலா பார்க்கவில்லை...
  மந்திரப்புன்னகையும் பார்க்கவில்லை
  மருதாணி பார்க்கப்போவதில்லை... ;)))

  பதிலளிநீக்கு
 4. எளிமையாக சிறப்பான விமர்சனம்..

  பாடல்கள் உங்களை கவர்ந்தது போன்றே என்னையும் மிகவும் கவர்ந்தவை..

  பதிலளிநீக்கு
 5. 3ஒரே சமயத்துல மூணு பட விமர்சனமா கலக்குங்க

  பதிலளிநீக்கு
 6. தந்தை ஓடிப்போனதை பெரிதாக எடுத்துக் கொள்ளத கதாபாத்திரம் தாயை மட்டும் 'சிறுக்கி... அவ... இவ...' என்று விளிப்பது ஆணாதிக்கத்தின் கொடி பறப்பதைக் காட்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.


  .....ம்ம்ம்ம்...... இப்படித்தானே படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.... :-(

  பதிலளிநீக்கு
 7. நந்தலாலா பார்த்தாச்சு.

  மற்ற இரண்டும் இன்னும் பார்க்கவில்லை. இனிமேலும் பார்ப்பேன் எனத் தோணவில்லை.

  விமர்சனங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 8. வாங்க சக்தி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ம.தி.சுதா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பிரபு.எம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சதீஷ்குமார்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க சித்ராக்கா...
  உண்மைதான்... தமிழ் சினிமாவில் இன்னும் இதே நிலைதான்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வித்யாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. .ஆணாதிக்கம் கொண்ட இடங்களில் திரைப்படம் மூகமையனது . அங்கெல்லாம் சமத்துவத்தை காண முடியாது

  பதிலளிநீக்கு
 12. மூன்று பட விமர்சனமும் வாசித்தாயிற்று,இனி படம் பார்க்கனுமே!

  பதிலளிநீக்கு
 13. நல்ல விமர்சனம் குமார்

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் பத்திரிக்கைகளில் விமரிசனம் எழுதலாம்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...