மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 26 டிசம்பர், 2010ஏய் கடலே...
கடலம்மா...

இப்போதெல்லாம் உன்னை

இப்படி அழைக்க மறுக்கிறது மனசு..!மணல் வீடு கட்டிய மழலைகளை

மண்ணுக்குள் புதைத்த

நீ எப்படி அன்னையாவாய்..?'அம்மா' என்ற ஓலங்கள் மத்தியில்

உற்சாகமாய் உயர்ந்து

உயிர்ப்பலி கொண்டவளல்லவா நீ..!பசிக்கு உணவு கொடுப்பளே தாய்...

கோரப்பசிக்காக உயிர்களை எடுத்தவளான

நீ எப்படி எங்கள் தாயாவாய்..?நீ பறித்த் உயிர்களின்

உறவுகள் இன்னும் அலைகின்றன

உறவுடன் உயிரையும் இழந்து

கட்டை மரங்களாக..!உயிர்களைத் தின்ற...

உறவுகளைக் கொன்ற...

நீ அன்னையாக இருக்கமுடியாது...


அரவணைப்பவளே அன்னை...

அடித்துக் கொல்பவள் அல்ல...(சுனாமியில் உயிர்களை இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் உறவுகளை இழந்த மனங்களின் சோகம் குறையவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.)

-'பரிவை' சே.குமார்.

படம் அருளிய கூகிளாருக்கு நன்றி

16 கருத்துகள்:

 1. உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாங்க அப்துல்..
  விருதுக்கு ரொம்ப நன்றி சகோதரா..
  எடுத்து என் அறையில் மாட்டிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. வாங்க இளம்தூயவன்...
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வாங்க பிரபாகரன்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. மனதை கசக்கி பிழிகிறது கவிதை.

  பதிலளிநீக்கு
 7. எனது பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 8. சுனாமி தந்த வலி மறைய இன்னும் நாளாகும். மனதில் பாரத்தை ஏற்றுகிறது கவிதை.

  பதிலளிநீக்கு
 9. அணைப்பவளும் அன்னைதான். அடிப்பவளும் அன்னைதான்.அடிக்கிற கைதான் அணைக்கும். மகன்கள் இயற்கையை பாதுகாக்காமல் இருந்தால் எந்த அன்னைக்குக்தான் கோபம் வராது. இனியாது இயற்கையை பாதுகாப்போம். அன்னைக்கு கோபப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க அக்பர்...
  வருத்தமான விஷயந்தான்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆசியாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க சகோதரி சுசி...
  உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

  வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. படத்தைவிட படபடக்க வைத்த நிகழ்வல்லவா அது.

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஸ்ரீஅகிலா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வேலன்...
  கண்டிப்பாக உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. உங்களின் உணர்வுக்கு நன்றி நண்பரே, ஆனாலும் நாம் அளவுக்கு மீறி ஆடிகொண்டிருக்கிறோம். அதை நாம் நிறுத்த வேண்டும். இயற்கை எவ்வளவு காலம் பொறுமையோடு இருக்கும் என்பது தெரியாது. ஆனால் சரியான சமயத்தில் சாட்டை சொடுக்கும் என்பது நிச்சயம்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...