மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 டிசம்பர், 2010மாகாகவிக்கு....


எங்களைக் கவியால்

கவர்ந்த ஏழைக்கவிஞனே...

சுதந்திர நெருப்பை

ஊட்டிய மீசைக்காரனே...

பெண்ணடிமைக்கு குரல்

கொடுத்த முண்டாசுக் கவியே...

கவிதைக் காதலி

கண்ணம்மாவுக்கு நீ

தொடுத்த கவிதைகளின்

காதலர்கள் நாங்கள்...

நடிகனாக நீயிருந்தால்

உன் பிறந்தநாளை

நாடே கொண்டாடியிருக்கும்

ஏழைக் கவிஞனாக

அல்லவா வாழ்ந்துவிட்டாய்...

இருப்பினும் சந்தோஷமே

எங்கள் தமிழ் இருக்கும்வரை

நீயும் வாழ்வாய்

எங்கள் எட்டய்புரத்துக் கவியே..!

******************

** எனது நான்கு வலைப்பூவிலுமாக இந்த 300வது பதிவை எம் கவி பாரதிக்கு சமர்ப்பிக்கிறேன்.

** சில பிரச்சினைகளால் சில நாட்களாக பதிவு பக்கமே வராமல் இருந்த என்னை நேற்றிரவு தொடர்பு கொண்டு மகாகவிக்கு பிறந்த தினப் பதிவு போடும்படி சொன்ன நண்பர், கவிஞர் 'இதயச்சாரல்' தமிழுக்கு என் நன்றிகள்.

-'பரிவை' சே.குமார்.

17 கருத்துகள்:

 1. நல்லா இருக்குங்க.. பாரதிக்கு மகாலக்ஷ்மியின் அருள் இல்லாவிட்டாலும் சரஸ்வதி கடாக்ஷம் நிறைய இருந்தது.. ;-)

  பதிலளிநீக்கு
 2. அருமை. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மகா கவி பற்றி அமைந்தது சிறப்பே!

  பதிலளிநீக்கு
 3. ஒரு உலக கவிஞனை நினைவு கூர்வோமாக...

  மதி.சுதா.

  நனைவோமா ?

  பதிலளிநீக்கு
 4. தமிழ் கடவுள் மகாகவி பாரதியை நினைவு கூர்ந்து என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சமர்பிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. முன்னூறாவது எழுத்துக்கும் முண்டாசுக் கவிக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. கவியின் நினைவோடு கவி.அருமை குமார்.நினைவு கொள்வோம்
  கவிதந்த வள்ளலை !

  பதிலளிநீக்கு
 7. முன்னூறுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. ///எங்கள் தமிழ் இருக்கும்வரை

  நீயும் வாழ்வாய்

  எங்கள் எட்டய்புரத்துக் கவியே..!//

  அருமையான வரிகள்...

  மகாகவியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  சிறப்பாக பதிவிட்ட உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.....

  தொடரடும் உங்கள் பொன்னான பணி

  பதிலளிநீக்கு
 9. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. என் அன்பு நண்ப, பிரியமான என் வேண்டுகோள் ஏற்றமைக்கு மிக்க நன்றி.... மிக அருமையாய் வந்திருக்கிறது கவிதை..... பாராட்டுக்கள்....

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஆர்விஎஸ்...
  உண்மைதான்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சித்ராக்கா..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ம.தி.சுதா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க தினேஷ்குமார்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வானம்பாடிகள் ஐயா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பிரபாகரன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க மாணவன் சார்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க தமிழ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...