மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 டிசம்பர், 2010கதை சொன்ன நாளைய இயக்குநர்கள்...

நம்ம நண்பர்கள் சில நடிகர்களை அணுகி கதை சொன்னால் எப்படியிருக்கும் என்ற சின்ன கற்பனையே... கதை சொன்னவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான். படிக்கும் போது யாரென்று கண்டு கொள்ளுங்கள்.

'வணக்கம் தளபதி... படத்தோட கதை என்னன்னா வழக்கமான வெட்டுக்குத்துத்தான். நீங்க கெட்டப்ப மாத்தி ரெண்டு கதாபாத்திரத்துல வாறீங்க..'

'அட்ரா சக்க... அட்ரா சக்க... எப்பவும் போல தலைமுடியில கெட்டப் சேஞ் பண்ணினா போதுங்களாண்ணா...'

'நான் ஒண்ணுதான் வச்சிருக்கேன்... நீங்க ரெண்டு தடவை சொல்றீங்க...'

'நீங்க தானே டபுள் ரோல்ன்னு சொன்னீங்கண்ணா'

'அட்ரா சக்க... அட்ரா சக்க...'

'நீங்களும் ரெண்டு தடவை சொல்றீங்கண்ணா'

'இது சந்தோஷம். கதைக்கு வருவோம்'

'என்னய வச்சு படம் எடுங்கண்ணா... சுத்தமா போயிடும்'

'என்னது சந்தோஷமா...'

'ஐயோ... இல்லீங்கண்ணா... உங்க தோஷம்ன்னு சொன்னேன்..'

'ஓபனிங்ல நீங்க கடலுக்குள்ள இருந்து எந்திரிச்சு வாறீங்க...அப்ப...'

'சாங்காண்ணா... முன்னாடியே பண்ணியாச்சிண்ணா... கொஞ்சம் மாத்துங்கண்ணா...'

'அந்தக் கண்றாவிய பாத்துட்டுத்தான் பல நாள் தூக்கமில்ல... இது வேற... அப்ப கரையில உங்கம்மா சோகத்துல உக்காந்து இருக்காங்க... அப்படியே கதைய மலேசியா கொண்டு போறோம்.'

'சாந்தோம் பீச்ல அம்மா செண்டிமென்ட்ட ஆரம்பிச்சி மலேசியாவுக்கு எதுக்கு போகணும்... புரியலீங்களேண்ணா...'

'இப்ப வார உம்படம் எது புரியுது... விடு... சென்னையில அன்னைக்கிட்ட இருக்க உம் பேரு கண்ணன்... மலேசியாவில மல்டி மில்லினரா வாற உன்னோட இன்னொரு கேரக்டர் பேரு ராசா... அவருக்கு ஜோடி மணிமொழியா த்ரிஷா'

'மல்டி மில்லினருக்கு வேற பேரு வைக்கலாமே... இந்த பேரு வேண்டாம்...'

'அதை அப்புறம் பாத்துக்கலாம்... கதைக்கு வருவோம்...'

'அம்மா வீட்டு வரைக்கும் போக வேண்டியிருக்கு... கண்டிப்பா பண்ணுவோம்... கதையில நான் சொல்ற மாதிரி மாத்திக்கிட்டு நாளைக்கு வாங்கண்ணா...'

'சுத்தம் உனக்கு கதை சொல்ல வந்ததுக்கு ரெண்டு பதிவு போட்டிருந்த குத்து வாங்கி நம்பர் ஒண்ண தக்க வச்சிருக்கலாம். சரி... நாளைக்கும் வாரேன்... ஆனா முதல்ல இருந்து கதை கேக்கக்கூடாது.'

'நான் கதை கேக்கலை... உங்க படத்துக்கு நீங்களே விரிவான விமர்சனம் கவுண்டரை வச்சி எழுதக்கூடாது... சரியா? இனி கவுண்டரை கூப்பிட்டிங்க பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணாகிட்ட சொல்லிடுவேன்.
***

'படத்தோட டைட்டிலே மதியோடையில் நனைவோமா... ஒரு அழகான கிராமத்துக் காதல் கதை... அருமையான ஸ்கிரிப்ட்... எனக்குள்ள பீறிட்டுக்கிட்டிருக்க கதையை உங்களை வச்சு பண்ணனும்ன்னுதான் வெயிட்டிங்...'

'கிராமமா... அங்க நான் கார் ஓட்ட முடியாதே... ஓபனிங்ல ரெண்டு வீல்ல காரை ஓட்டிக்கிட்டு நான் வர்ற மாதிரி சீனை வச்சி பேக்ரவுண்ட்ல தலக்கிணை யாருங்கிற மாதிரி சாங்க் வச்சா...'

'தறுதலை... '

'என்ன சொன்னீங்க... இப்ப என்னமோ சொன்னீங்க...'

'ஒண்ணுமில்ல கார் ஓட்ற சீனெல்லாம் நீங்க பட்டணத்துக்கு வந்தப்புறம் வச்சிக்கலாம்... கிராமத்துல கிட்டிப்புள்ளு விளையாடுற நீங்க இன்டர்வெல்லுக்கு அப்புறம் பட்டணத்துல அறுவாவால தலையெடுத்து விளையாடுறீங்க... இடையில அஞ்சலி கூட டான்செல்லாம் ஆடுறீங்க'

'ம்... நல்லாயிருக்கே... டபுள் ஆக்ட் விட்டா நல்லாயிருக்கும்...'

'நீ எப்பவும் ரெண்டு ஆக்ட்தான் விடுவே... அப்பத்தானே கதைய ஈசியா நகர்த்தலாம். இதுல ஒத்தக் காரெக்டர்தான்... மத்த காரெக்டரையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி அமச்சிருக்கோம்...'

'எனக்கு வரலாறு மாதிரி மறுபடிக்கும் பண்ணனும்... அதுமாதிரி ஸ்கிரிப்ட் இருக்கா..'

'இந்தப் படம் பண்ணுங்க... இதுவே உங்களுக்கு ஒரு வரலாறுதான்'

'அப்படியா... சந்தோஷமாயிருக்கு...இருங்க பிரியாணி போடுறேன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'

'பிரியாணி போட்டுத்தான் மங்காத்தா ஆடுவோமா வேண்டாமான்னு யோசிக்க வச்சிட்டே.. எனக்கும் பிரியாணியா நான் நனைவோமாவுல்ல தீவிரமா இருக்கேன். பிரியாணிய நீயே சாப்பிட்டுட்டு பிரியா இருக்கும் போது சொல்லு... இப்ப நான் கிளம்புறேன்.'

***


'இந்தக் கதையில கிராமத்து விவசாயி, அரசாங்கத்தை எதிர்க்கிற கலெக்டர்ன்னு ரெண்டு காரெக்டர்...'

'கலெக்டரை போலீஸா மாத்திட்டிங்கன்னா நல்லாயிருக்கும்.'

'நீதான் ஸ்காட்லாந்து போலீஸ் வரைக்கும் போட்டுத் தாக்கிட்டியே... இன்னும் ஆசை அடங்கலையா... இதுல கலெக்டர்தான்...'

'சரி வசனங்களெல்லான் சும்மா பச்சக் பச்சக்குன்னு மனசில பதியணும் ஆங்க்...'

'அதெல்லாம் நான் தத்துப்பித்துவங்களை அள்ளிவிட்டாலும் கேப்டனுக்கு கதை பண்றப்போ சும்மா புகுந்து விளையாடமாட்டேன்.'

'ஓபனிங் சாங்கல பின்னால ஆடுறவங்களுக்கெல்லாம் நம்ம கம்பெனி டிரஸ்தான் போட்டு விடணும்.'

'அப்புடியே முரசு கொட்டணுமின்னு வேற சொல்லுவியே...'

'டேய் பிரபாகரா...'

'என்ன மரியாதை தேயுது... கதைதானே சொல்ல வந்தேன்... புடிக்கலைன்னா போகச் சொல்ல வேண்டியதுதானே...'

'ஐய்யோ... தப்பாயிடுச்சு... மூத்தவனைக் கூப்பிட்டேன்...' அப்போது மகன் வர, 'தம்பி இவருகிட்ட கதைய கேளு... அப்பாவுக்கு தகுந்த மாதிரி கதையான்னு பாரு... நான் கட்சி விசயமா வெளிய போறேன்... நாயகிக்கு ஓவியா சரிவருமான்னு பாருங்க'

'ம்க்கும் உனக்கு கதை சொல்ல வந்தா இவங்கிட்ட சொல்லணுமா... வெளங்கிடும் கனவுக்கன்னிகளை பாத்து கதை சொல்லியிருக்கலாம்.'

***


'யாரங்கே தரைதப்பட்டைகள் முழங்கட்டும்...'

'இன்னும் நீங்க அதுல இருந்து வெளிய வரலையா...'

'அடடே வாங்க அமைச்சரே... உங்க பிரண்டோட தீப்பெட்டிய கொடுக்காம என்ன சின்னப்பிள்ளத்தனமா இருக்கு...'

'ஐய்யோ அது வேற கதை நான் இப்ப உங்ககிட்ட கதை சொல்ல வந்திருக்கேன்.'

'கதையா... அடங்கொய்யாலே... என்ன மாதிரி கதை... '

'படத்துல நீங்கதான் ஹீரோ... இதுல ரெண்டு பெரிய ஹீரோங்க சைடுல வந்திட்டுப் போறாங்க... உங்களுக்கு ஜோடி தமன்னா...'

'அட அந்த சிவத்தப்புள்ளயா... அது சரி... வ்வ்வ்வ்வ்... கதையே கேக்க வேணாம் படத்தை ஆரம்பிங்க...'

'இருங்க... கதைய சொன்னா அதுக்கு நீங்க பிரிப்பேராக கரெக்டா இருக்குமில்லையா...'

'என்ன பிரிப்பேரு... பிரிப்பேரு பண்ண என்ன இருக்கு... கழுத சும்மா நடிக்க வேண்டியதுதானே...'

'நீங்க கிராமத்துல இருந்து நகரத்து வாறீங்க...'

'வந்து கண்டவன்கிட்டயும் ஏமாறேனாக்கும்... பத்தாததுக்கு பயபுள்ளைங்க சின்னபிள்ளைங்கிட்டயெல்லாம் ஏமாந்து அடி வாங்கிறமாதிரியெல்லாம் வச்சி... முடியலை... வேற மாதிரி கதை வையி... சும்மா... பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக்குனெல்லாம் வைக்கப்படாது...'

'இதுல நீங்க மனுசங்ககிட்ட அடி வாங்கலை... படம் பூராம் ஆடு, மாடு, கோழின்னு உங்களை ஏமாத்துற விதமே வித்தியாசமான கதையா சொல்றோம்...'

'அடப்பாவி புள்ளங்க அடிச்சி... இப்ப நாம அடிச்சு சாப்பிடுறதெல்லாம் நம்மளை அடிக்கிதா... என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..'

'நீங்க காமெடிப் பீசுதானே உங்களை வச்சு காமெடி பண்ணாம எந்திரனா பண்ண முடியும்... கதைக்கு வாங்க...'

'சரி வராது தம்பி... நீங்க சிவகெங்கை கருப்ப போயி பாருங்க... நான் இனி அடிவாங்க திராணியில்ல... போங்க சாமி... நல்லாயிருப்பீங்க... கதையோட வாங்கடான்னா.. அடிவாங்க வைக்கிற கதையாவே கொன்டு வாராங்க... என்ன ஒரு கொலை வெறி...'

***

'ம்... சொல்லுங்க... அப்புறம்...'

'கஜினி மாதிரி படையெடுத்து ஐசை பிடிச்சாச்சு... இதுல அதைவிட ஜில்லுன்னு அனுஷ்காவை ஜோடியா போடுறோம். நீங்க இதுல ரேடியோ 'ஜாக்கி'யா வாறீங்க...'

'யூத்புல்லான்னா கதை ... ஓகே... பென்டாஸ்டிக்... இதுல நான் நடிக்கிறதைவிட தல மட்டும் நடிச்சா இன்னும் நல்லாயிருக்கும்.'

'உங்க தலைய மட்டும் நடிக்க வைக்க முடியாது. முழு உடம்பும் நடிச்சாத்தான் நல்லாயிருக்கும். கதைப்படி உங்களுக்கு இருபத்தைந்சு வயசு... சும்மா சில்லுன்னு இருக்கீங்க... ஒரு பங்ஷன்ல வச்சி அனுஷ்காவை மீட் பண்றீங்க... அப்ப பேக்ரவுண்ட்ல ஒரு பழைய பாட்டை ரீ மிக்ஸ் பண்றோம்...'

'என்ன பாட்டு... நல்லா இருக்குமா?'

'ம்... பிருந்தாவனமும் நொந்த... சாரி நந்தகுமாரனும்...'

'என்ன நீங்க பாட்டுக்கும் சிச்சுவேசனுக்கும் சரியா வரலையே... நல்ல யூத்புல்லான பாட்டா போட்டா நல்லாயிருக்குமே...'

'எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதனாலதான்..'

'கதை நல்லாயிருக்கு... பாட்டெல்லாம் மாத்திக்கலாம்... சூப்பரா பண்ணிடலாம்... இந்தாங்க சாண்ட்விச் சாப்பிடுங்க... '

'இல்ல சார் நான் ஞாயித்துக்கிழமையும் புதங்கிழமையும்தான் சாப்பிடுவேன்... மத்த நாள் சாண்ட்விச் எனக்கு சாப்பிடப்பிடிக்காது. '

'சரி அதுல அம்மா கதாபாத்திரம் வருதுன்னு சொன்னீங்கள்ல... நம்ம மீனாவ கேட்டுப்பாருங்க...'

'அடங்கொன்னியா... மகளா, மருமகளா, காதலியா, மனைவியா நடிச்சு... இப்ப அம்மாவா... ஆத்தாடியோவ்'

'என்ன தம்பி சொல்றீங்க...'

'ஒண்ணுமில்லைங்க'

'சரி... தம்பி பாக்கலாம்... பேரங்களோட ஆனை ஆனை விளையாடணும்... கிளம்புறீங்களா?'

***

'நம்மளோட அம்பு எப்படி பாயுதுன்னு ஒங்களைக் கேட்டாத்தான் தெரியும்... '

'அதுக்கென்ன... நல்லாத்தான் போகுது... அடுத்த படத்தையும் ரவிக்குமாருக்கே பண்ணாம எனக்கு ஒரு படம் பண்ணனும்.'

'நான் கொஞ்சம் காஸ்ட்லி... உங்களுக்கு ஒத்து வருமா?'

'நானும் ஒரு பெரிய புரடியூசரை கையில வச்சிருக்கேன்... அவருக்கு கேபிள் போட்டு ஸ்ட்ராங்கா பிடிச்சு வச்சிருக்கேன்.'

'சங்கரா... '

'நான் பக்கத்துலதான் இருக்கேன்.'

'ஐயோ நான் உங்களை சொல்லலை... அவனை...' மேலே கை காட்டுகிறார்.

'கண்ணோடு கண் கலந்ததென்றால்..'

'அதெல்லாம் கலந்து ரொம்ப நாளாச்சு... கதைக்கு வாங்க... இதுல நீங்க புரபஸரா நடிக்கிறீங்க...'

'கெட்டப் சேஞ் இருக்கா?'

'புரபஸ்ருக்கு என்ன கெட்டப் வேண்டியிருக்கு... வேணுமின்னா பங்க் வச்சு... தாடி வையுங்க... இல்ல மொட்டயடிச்சி மீசை வையுங்க... அதுவா முக்கியம். கதைப்படி நீங்க பிஸிக்ஸ் புரபஸர். உங்க மாணவியா ஐஸ் வாராங்க... லேப்ல எக்ஸ்பரிமண்ட் பண்ற உங்க திறமையப் பாத்து அவங்க ஒரு காதல் கவிதையை லெமன் ட்ரீக்கு முன்னால உக்காந்து எழுதுறாங்க... அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் ஒரு சாங்க் வருது...'

'வாவ் சூப்பர்... ஐஸ் கூட சாங்கா... முத்தம் இருக்கா...'

'அவங்க ஒத்துக்கிட்டா வச்சிக்கலாம்... அப்புறம் வில்லன் என்ட்ரி... உங்க பிரதான் ஹீரோக்கள் ரமேஷ் அரவிந்த், மாதவன் ரெண்டு பேரும் உங்க கூட புரபஸரா வாராங்க... ஐஸ் வர்ற சீன்ல எல்லாம் அவங்களை திட்டமிட்டே உள்ள வராம பாத்துக்கிறோம்... இதுல சலங்கை ஒலி மாதிரி நல்ல டான்ஸ் பண்றீங்க....'

'சூப்பர்... நல்லாயிருக்கு... கதையில சின்ன மாற்றம் பண்ணுங்க... அப்புறம் ஐந்து பாட்டு வைக்கலாம் நால நானே எழுதித்தாரேன்... முடிஞ்சா எல்லாத்தையும் நானே பாடுறேன்... இல்லேன்னா ரெண்டாவது பாடணும் இதுக்கெல்லாம் நீங்க ஓகேன்னா நான் ரெடி...'

'அதுக்கென்ன... நல்லா பண்ணலாம்...'


கதை சொல்லிய களைப்பில் பனகல் பார்க்கில் கூடிய நாளைய இயக்குநர்கள் பேசாம மைனா, அங்காடி தெரு மாதிரி புதுக் ஹீரோக்களை போட்டு படமெடுத்தால் நம்மளோட ஒரிஜினாலிட்டிய நிரூபிக்கலாம். பெரிய ஹீரோவுக்காக கதைய மாத்தி கவுந்து போகாம இருக்கலாம்.

'அண்ணே... புதுமுகங்களை வச்சி படம் எடுக்கப் போறீங்களா?'

'ஆமா... யாரு நீயி.. தேவையில்லாம ஆஜராகிறே... உன்னய இந்தப் பக்கம் பாத்ததில்லையே... நீயும் கதை வச்சிருக்கியா...'

'ஐய்யோ... நமக்கு அதெல்லாம் தெரியாது மனசுல பட்டதை எழுதுவேன்... சும்மா கிறுக்கிக்கிட்டு இருக்கவன்... அம்புட்டுத்தான்... நீங்க பேசுறதைக் கேட்டேன்... அதான்...'

'வெத்துப்பீஸா...'

'இல்லண்ணே... டைம்பீஸ்...'

'என்னது... எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல்ல வந்தேன். நம்ம மனசுக்குப் பட்டதை சொல்லலாமுன்னுதான்... உங்க படத்துக்கு பாட்டெழுத...'

'நீ பாட்டெழுதுவியா...'

'ஆரம்பத்துலயே சொன்னேன்... நம்மளை அந்த மாதிரி எல்லாம் நினைக்காதீங்க... நம்ம நண்பர்கள் தமிழ்காதலன், தமிழ்க்கவிதைகள் மோகனன் ரெண்டு பேரும் நல்லா கவிதை எழுதுவாங்க உங்க படத்துல வாய்ப்பு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.'

'அது சரி... உனக்கு எதாவது வாய்ப்பு கேட்காம...'

'நாங்கள்ளாம் திறமைக்கு மதிப்பு கொடுக்குறவங்க...'

'ஐயா... படம் எடுக்கும்போது பார்ப்போம். இப்ப போ..'


டிஸ்கி 1: இங்கு கதை சொன்னவர்கள் எல்லாருமே நாளைய இயக்குநர்கள்தான்... பதிவர்கள் என்று நினைத்து படித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல...

டிஸ்கி 2: யாருமே முழுசா கதை சொல்லலைன்னு கேக்கக்கூடாது... அதெல்லாம் சினிமா ரகசியம் வெளிய சொல்ல முடியாது.

டிஸ்கி 3: நாயகர்கள் கதை கேக்க மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கம்பெனி விளம்பரத்துக்காக நாயகிகள் போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் கொந்தளித்தால் போலீஸ் கொண்டு அடக்கப்படுவார்கள் என்பது மன தைரியத்துடன் தெரிவிக்கப்படுகிறது.

டிஸ்கி 4: தமிழ் நாட்டில் இருந்து கல் எறிய முடியாது என்பதால் தைரியமாக கதை சொல்லியிருக்கிறோம். இன்னும் சிலர் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தொடரலாம். ஆதரவைவிட அடி அதிகமாக விழுந்தால் முன்னறிவிப்பு இன்றி கதை சொல்லும் கதை மூடப்படும். எல்லாம் உங்க கையிலதான் இருக்கு.

டிஸ்கி 5: என்ன அட்ரா சக்க அட்ரா சக்கன்னு எத்தனை டிஸ்கி, நாங்களும் போடுவோமுல்ல... ஹா... ஹா...ஹா... (ஈரோட்டுல ரகசிய ஆலோசனை நடக்குதாம்... நம்ம மேல தாக்குதல் நடத்த... வாங்க பேசிக்கலாம்... நோ பேட் வேர்ட்ஸ்.. நோ வன்முறை...)

டிஸ்கி 6: அட அரடஜன் டிஸ்கி போடலாமுன்னுதான்... என் பகிர்வுக்காக கதை சொன்ன நாளைய இயக்குநர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்..


சகோதரர் எம். அப்துல் காதர் கொடுத்த விருதுகளை வீட்டில் மாட்டி அவருக்கு தனிப்பட்ட வகையில் நன்றி சொல்லியிருந்தாலும் பெரிய மனசுக்கு மனசில் நன்றி சொல்லவிட்டுப் போய்விட்டது. விருதுக்கும் விருது கொடுத்த சகோதரருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.-'பரிவை' சே.குமார்.

போட்டோக்கள் கொடுத்து உதவியது கூகிள்.

34 கருத்துகள்:

 1. அண்ணே நான் இந்த பதிவை படிச்சேன்.. நம்புங்கன்னே சத்தியமா படிச்சேன்...

  டிஸ்கி ரொம்ப கம்மியா இருக்கு.. ஏன் பதிவும் ரொம்ப சின்னதா இருக்கு...

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப நல்லா இருந்துச்சி.. நான் ரசிச்சி படிச்சேன்

  பதிலளிநீக்கு
 3. நன்றாக இருக்கிறது தோழா...

  இந்த அமளி துமளியில என்னை ஏன்யா இழுத்து விடுற... எம்மேல கல்லெறிஞ்சிடப் போறாங்க...

  அருமை நண்பா... நீ அசத்து..!

  பதிலளிநீக்கு
 4. நண்பரே, உங்க கைய குடுங்க. எப்படி ... இப்படி...? கலக்குறீங்க...போங்க. உங்களின் எளிமையான நடையில் மிக அருமையா சமயோசிதமா யோசித்து எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பேசாம நீங்களே ஒரு கதாசிரியரா ஆயிடுங்க... யப்பா யாரப்ப அது தயாரிப்பாளரா...? வாங்க இப்படி... இங்க ஒரு கதை சொல்லி இருக்கார்.

  பயன்படுத்தி நாலு காசுப் பாருங்கப்பா.....
  டைட்டில் போடும் போது கண்டிப்பா... "தமிழ்த்திரை உலகில் முதன்முறையாக வெளிவரும் கதை" அப்படின்னு கண்டிப்பா போடுங்க.....

  பதிலளிநீக்கு
 5. ஹ..ஹ...ஹ..ஹ...

  இப்படியெல்லாம் கதை சொல்லலாமோ.. இவங்களை வச்சு படம் எடுக்கிற காசை வச்சு 2 ஏக்கர் வயல் விதைக்கலாம்....

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 6. நிச்சயமாக உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும்.நல்லா எழுதறீங்க.

  பதிலளிநீக்கு
 7. உங்களிடம் இருந்து ஒரு புதிய முயற்சி... இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்... என்னையும் எனது கல்லூரி நிறுவனரையும் நீங்கள் சரியாக இணைத்திருக்கிறீர்கள்... மேலும் அவரது மூத்த மகன் பிரபாகரன் என்பதையும் சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்... இருந்தாலும் அட்ராசக்க செந்தில்குமாரை செமையா கலாய்ச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. \\'என்ன பிரிப்பேரு... பிரிப்பேரு பண்ண என்ன இருக்கு... கழுத சும்மா நடிக்க வேண்டியதுதானே.///
  .'
  சிவாஜியும் கமலும் ஆண்ட சினிமா பூமியிது.
  ...ம் என்ன சொல்றது.
  அப்புறம் பதிவை படிக்கும் போது ஒரு சில பதிவர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள். நான் புதுசு அதிலும் கொஞ்சம் மக்கு.

  பதிலளிநீக்கு
 9. kumaar குமார் கை குடுங்க .அட திருப்பி குடுத்துடறேன்

  செம கலக்கு

  வழக்கமா உங்க கிட்டே கவிதை கட்டுரைதான் படிப்பேன் முத் முத காமெடி ,பின்னீட்டீங்க.என்னை செமயா இறக்கி இருந்தாலும் ரசிக்கறமாதிரி இருக்கு .கலக்குங்க

  பதிலளிநீக்கு
 10. இந்தப்பதிவு சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. கலக்கல் சூப்பர் பதிவு சிரிச்சு மாலல நண்பரே

  பதிலளிநீக்கு
 12. தமிழ் நாட்டில் இருந்து கல் எறிய முடியாது என்பதால் தைரியமாக கதை சொல்லியிருக்கிறோம்.


  நான் உங்களுக்கு பக்கத்துலதான் இருக்கேன் இருந்தாலும் நான் எரியமாட்டேன் பயப்படாதிங்க தொடர்ந்து கதை சொல்லுங்க கேட்கறோம்

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான சிரிப்புப் பதிவு என்பதில் சந்தேகமே
  இல்லை. நகைச்சுவையில் வாரு, வாருன்னு
  வாரி கொட்டிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 14. //'என்னது... எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல்ல வந்தேன். //

  இதை.....

  ''என்னது...???''

  '' எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல்ல வந்தேன்.''


  -என்று பிரித்துப் போட்டால் சரியாயிருக்குமே?

  எனது வலைப்பூவிற்கு உங்கள் வருகையை
  எதிர்பார்(நோ)க்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க ஜெயந்த் அண்ணா...
  சத்தியமா படிச்சீங்களா...
  ரொம்ப நன்றி.
  இதுவரைக்கும் டிஸ்கி போட்டதில்லை. இனி போடுவேனான்னு தெரியலை. அதனாலதான். போட்டோக்களால் பதிவு பெரிசா தெரியுது அம்புட்டுத்தான்.

  பதிலளிநீக்கு
 16. வாங்க ஜி.ராஜ்மோகன்...
  எல்லாம் அப்புடித்தான்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க ஜாக்கி அண்ணா...
  ரசிச்சிங்களா.. அடிக்கப்போறீங்கன்னு நினைச்சேன்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க மோகனன்...
  அட விடுமய்யா... எல்லாரும் நல்லாத்தான் சொல்லியிருக்காங்க.
  அடிக்கடி வந்துட்டுப் போப்பா....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க சங்கர் அண்ணா...
  இது சின்ன முயற்சிதான்... கோபமில்லையே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தமிழ்...
  சரி.... சரி.... இது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லையே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க ம.தி.சுதா...
  வயலெல்லாம் கருவை மட்டும்தான் வளருது.
  சரி... கோபமில்லையில்ல... அது போதும்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க ஆசியாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பிரபாகரன்...
  ஏங்க அவரு அட்ரா சக்கன்னு அடிக்க வரப்போறாரு.... கோப்பபடாம பின்னூட்டம் ரொம்ப நன்றிங்க.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க சிவகுமாரன்...
  ஆமாங்க... இப்பவும் நல்ல நடிகர்கள் வரத்தான் செய்கிறார்கள்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செந்தில் அண்ணா...
  மரியாதை கொடுத்து அழைச்சிருக்கேன்... உங்களை அப்படியெல்லாம் க்லாய்க்கலைங்க...
  ரொம்ப நன்றிங்க...

  பதிலளிநீக்கு
 22. வாங்க தினேஷ்...
  நீங்க எங்க இருக்கீங்க?
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கலையன்பன்...
  உங்க இடத்துக்கும் வந்துட்டு வந்துட்டோம்.
  உங்க எழுத்தும் நல்லா இருக்கு.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 24. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  சகோதரரே!

  பதிலளிநீக்கு
 25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 26. புத்தாண்டு வாழ்த்துகள் குமார்.

  கோடம்பாக்கத்து கனவு வருது போல தெரியுதே!

  பதிலளிநீக்கு
 27. கதை சொன்னதெல்லாம் சரி தான்.. கடைசி வரை கதை என்னன்னு சொல்லலியே-ன்னு கேக்க வந்தேன்.. அதுக்கு தான் உஷாரா ஒரு டிஸ்கி போட்டுடீங்களே... :-))

  Nice write up..

  பதிலளிநீக்கு
 28. வாங்க செங்கோவி...
  வாழ்த்துக்கு நன்றி.

  வாங்க நிஜாமுதீன்...
  வாழ்த்துக்கு நன்றி.

  வாங்க நேசமித்ரன் அண்ணா...
  வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வாங்க சத்ரியன்...
  வாழ்த்துக்கு நன்றி.

  வாங்க சகோதரி. ஆனந்தி...
  இப்படியெல்லாம் கேக்க நீங்க இன்னும் வரலையேன்னு பாத்தேன்... எங்களுக்கும் முன்னெச்சரிக்கை மணி அடிச்சிக்கத் தெரியுமில்ல...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 30. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
 31. ரொம்ப நேரம் படிச்சு...சிரிச்சு...வயிறு வலிக்குது...அண்ணேன்...உங்க மேல நஷ்ட ஈடு கேஸ் போடப் போகிறேன்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...