மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

எனக்கு நிறைய வாத்தியார்கள்: கமல்


தொலைக்காட்சிகளில் பார்க்கும் சில நிகழ்ச்சிகள் சுவையானதாக இருக்கும். சில நிகழ்ச்சிகள் தலைவலியை ஏற்படுத்தி ரிமோட் தேடத் தோன்றும். விஜய் டிவியில் நேற்று ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது நிறைய விசயங்களை, தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சியாக இருந்தது. 

பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதுநாள்வரை பொதுமக்கள்தான் பங்கேற்பாளர்களாக இருந்தனர். நேற்றைய பங்கேற்பாளர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஒட்டகக்கதையை சொல்லி ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். 

நிகழ்ச்சிக்கு வந்த கமலிடம் வழக்கம் போல ஹாட் சீட் பற்றி கேட்டார் அதற்கு பதில் கூறிய கமல், ஒவ்வொரு சீட்டில் உட்காரும் போது இது நமக்கு தகுதியானதுதானா என்று கேட்டுக்கொள்வேன் என்றார். பிரகாஷ் ராஜ் கேட்ட கேள்விகள் என்னவோ சாதாரணமானதுதான். 


அம்புலிமாமா கதையில் வரும் அம்புலி யார்? 

சென்னை பாஷையில் பேமானி என்ற சொல் எதைக்குறிக்கும்? 

இப்படி ஒவ்வொரு கேள்விகளும் சாதாரணமானதுதான். ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் அதற்கு கமல் சொன்ன விளக்கங்கள் ஆச்சரியப்படத்தக்கவை. 

தன்னுடைய வாழ்நாளில் பள்ளி ஆசிரியர் தவிர வேறு யாரெல்லாம் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசான்கள் என்று நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார். தமிழ் கற்றுக் கொடுத்த கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன், நடிப்பு கற்றுக் கொடுத்த எம்.ஜி.ஆர், சிவாஜி, தன்னுடைய படங்களில் சிறப்பு பகுதி பாஷைகளைப் பேசி நடிக்கும் போது கூடவே இருந்த லூஸ்மோகன், கோவை சரளா, மகள் ஸ்ருதி என அனைவருமே தனக்கு ஆசான்கள்தான் என்று அடக்கத்தோடு பதிவு செய்தார் கமல். 


நிகழ்ச்சியில் பேசும் போது, வேலை இல்லாத சமயத்தில் தான் முகச்சவரம் செய்ய கற்றுக் கொண்டதாக கூறிய கமல், தன்னுடைய தேவர் மகன், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் வைத்திருந்த மீசை ஸ்டைல் தன் கையால் தானே வடிவமைத்தது என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். 

இதுநாள் வரை பங்கேற்பாளர்களுக்கு கதைகள் சொல்லி விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கூறிய விளக்கங்கள், அனுபவங்களை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது.

-நன்றி : தமிழ் இணைய இதழ்கள்

-'பரிவை' சே.குமார்

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நிகழ்ச்சி நன்றாக இருந்தது...

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!இன்னுமின்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது,ஆசான்கள்(எவ்வயதினராயினும்)நினைவு கூரப்படுவது அபூர்வம்!கலைஞனுக்கோ/மாணவனுக்கோ தன்னடக்கம் முக்கியம்!(கமல் சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படுவது?!)

vels-erode சொன்னது…

அது சரிதான்...........ஆனால் எம்.ஜி.ஆர். நடிப்பு சொல்லிக் கொடுத்தாரா? சிரிப்பா இல்ல?

Jayadev Das சொன்னது…

good