மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 ஏப்ரல், 2013'சரஸ்வதி சபதம்' தலைப்பு - சிவாஜி ரசிகர்கள் எச்சரிக்கை

சிவாஜிகணேசன் நடித்த முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் சரஸ்வதி சபதமும் ஒன்று. 1966-ல் வெளியான இப்படத்தில் தெய்வம் இருப்பது எங்கே, கல்வியா செல்வமா வீரமா, கோமாதா எங்கள் குலமாதா, அகரமுதல எழுத்தெல்லாம், தாய் தந்த பிச்சையிலே போன்ற காலத்தால் அழியாத பாடல்களும் உண்டு.


சிவாஜி கணேசன் நடித்த சரஸ்வதி சபதம் படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்த சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் சத்யன், ஜெய் உள்ளிட்ட அனைவரது வீடுகளையும் முற்றுகையிடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர். 

சிவாஜி கணேசன், பத்மினி, தேவிகா நடித்து 1966-ல் ரிலீசான பக்தி படம் ‘சரஸ்வதி சபதம்'. மிகப்பெரிய வெற்றிப் படம். பட்டி தொட்டியெல்லாம் இந்தப் படத்தின் கதை வசனம் ஒலிபரப்பானது அன்றைக்கு.

இன்றைக்கு ‘சரஸ்வதி சபதம்' பெயரில் தற்போது புதுபடம் தயாராகிறது. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர். கே.சந்துரு இப்படத்தை இயக்குகிறார். 

‘சரஸ்வதி சபதம்' தலைப்பை ஜெய் படத்துக்கு வைத்து இருப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

சிவாஜி நடித்த காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்பு ‘சரஸ்வதி சபதம்'. அந்த தலைப்பில் புதுப்படம் எடுப்பது அதில் நடித்த கலைஞர்களை அவமதிப்பதாகும். ஏற்கனவே விவேக் சிவாஜியின் அப்பர் வேடத்தில் நடித்ததை எதிர்த்தோம். அவர் திருத்தி கொண்டார். 

புது படத்துக்கு சரஸ்வதி சபதம் பெயர் வைக்ககூடாது மீறி வைத்தால் அதில் நடிக்கும் ஜெய், சத்யன் உள்ளிட்டோர் வீடுகளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று கூறப்பட்டுள்ளது. 

சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சிவாஜி நடித்த புராண இதிகாச படங்களின் தலைப்புகளை புதுப்படங்களுக்கு சூட்டக்கூடாது. உத்தமபுத்திரன், கவுரவம், இருவர் உள்ளம் போன்ற தலைப்புகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை."


" ‘திருவிளையாடல்' தலைப்பு வைக்க எதிர்த்தோம். அதை திருவிளையாடல் ஆரம்பம் என மாற்றினர். இப்போது ‘சரஸ்வதி சபதம்' தலைப்பு புதுப்படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது."

"கோவில் திருவிழாக்களில் இன்றைக்கும் ஒலித்து வருகிறது சரஸ்வதி சபதம் படத்தில் வசனங்கள். அப்படிப்பட்ட படத்தலைப்பில் இப்போது காதல் காமெடி கதைகளில் படமெடுப்பது சிவாஜியையும், இந்து மதத்தினையும் அவமதிக்கும் செயலாகும். அதனால் இந்த தலைப்பினை மாற்ற வேண்டி சம்பந்தப்பட்ட நடிகர்களின் வீடுகளுக்கு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். அப்போதும் தலைப்பு மாற்றப்படவில்லை என்றால், கோர்ட்டுக்கு செல்வோம்" என்று தெரிவித்துள்ளனர்.நன்றி : தமிழ் இணைய இதழ்கள்
-'பரிவை' சே.குமார்

2 கருத்துகள்:

 1. இது ஒரு நியாயமான கோபமே .சரஸ்வதி சபதம் என்ற பெயரில்
  இப்படி படம் எடுக்கப் போவதாக உணர்வதற்கே மிகவும் கஸ்ரமாக
  உள்ளது .சினிமாவை யார் வெறுத்தாலும் அதனை ஆதரிப்பதற்க்கென
  சில காரணங்கள் உண்டென்றால் அதற்க்கு காரணம் வீர பாண்டிய
  கட்டப் பொம்மன் ,திருவிளையாடல் ,சரஸ்வதி சபதம் ,சிலப்பதிகாரம் ,
  பொன்னியின் செல்வன் ,போன்ற அரிய படங்களேயாகும் .சில பாடல்கள்
  கூட இந்த மாதிரி புதிதாய் சிந்திப்பவர்களால் சிரளிக்கப் பாட்டுள்ளது என்பதும் வருத்ததம் தரும் செயலாகும் .சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும் .

  பதிலளிநீக்கு
 2. இன்றும் பலமுறை கேட்பதால் படத்தின் வசனம் அத்துபடி...

  வேறு பெயர் இவர்களுக்கு கிடைக்காதா...?

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...