மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 23 ஏப்ரல், 2013அஞ்சலி படப்பிடிப்பில் உறவினர்களுக்கு தடை


நடிகை அஞ்சலி நடிக்கும், தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. காமெடி காட்சியில் நடித்தார். "படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, அஞ்சலி அனுமதியின்றி, உறவினர்கள் வரக்கூடாது என, தடை போடப்பட்டுள்ளது. 


சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற அஞ்சலி, கடந்த, 8ம் தேதி திடீரென மாயமானார். சென்னையில் உள்ள, சித்தி பாரதிதேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீதும் குறை கூறியிருந்தார். மாயமான அஞ்சலியை மீட்டுத்தரக் கோரி, சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனால், ஐந்து நாட்களுக்கு பிறகு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அஞ்சலிஆஜரானார். "என்னை யாரும் கடத்தவில்லை. மன வேதனையால் ஓட்டலை விட்டு வெளியேறினேன். இனி நான் என் இஷ்டத்திற்கு செயல்படுவேன். எனது வாழ்க்கையை நானே முடிவு செய்வேன் என, தெரிவித்திருந்தார். அதற்காக தனது குடுபத்தாருடன் சமாதானம் பேசியுள்ளார்.
இதையொட்டி, அவர் நடிக்கும், "போல் பச்சன் போல் தெலுங்கு "ரீ மேக் படத்தின் படப்பிடிப்பில், மூன்று நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள, பஞ்சாக்னி என்ற இடத்தில் நடந்து வருகிறது. காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஞ்சலிக்கு, தனி கேரவன் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கி, படப்பிடிப்பிற்கு சென்று வருகிறார்.அஞ்சலி விரும்பினால் அன்றி, அவரை யாரும் தனியாக சந்தித்து பேச, படப்பிடிப்பு நிர்வாகி அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு முடியும் வரை, அஞ்சலியை, உறவினர், நண்பர்கள் என சொல்லிக்கொண்டு யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அஞ்சலியின் சம்மதத்துடன் தான் எடுக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படப்பிடிப்பு, நாளை, 24ம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு படப்பிடிப்பு நிர்வாகியின், அடுத்த முடிவையொட்டி, அஞ்சலி சென்னை வந்து, கோர்ட்டில் ஆஜராகலாம் என கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து அஞ்சலி தரப்பில், இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.


நன்றி: தினமலர்
-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...