மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஏப்ரல், 2013சிறு பூக்கள்...

ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

*****தாலாட்டு..!
சந்தோஷ தூக்கம்
குழந்தைக்கு...
பழைய நினைவுகளை
திரும்பிப் பார்த்த
சோகத்தில் தாய்..!

*****நேற்று முதல்   
காணவில்லை காற்றை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

*****
உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..! 

- கிறுக்கலில் கிறுக்கியது மீள்பதிவாக மீண்டும்....

-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...