மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இரு தினங்களில் வெளி உலகத்துக்கு வருகிறார் அஞ்சலி...!!!


நடிகை அஞ்சலி மாயமாகியுள்ள செய்தி பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்னும் இரு தினங்களில் தான் வந்துவிடுவதாக தனது சகோதரரிடம் கூறியிருக்கிறார் நடிகர் அஞ்சலி. படப்பிடிப்புக்காக தனது சித்தப்பாவுடன் ஐதராபாத் சென்ற நடிகை அஞ்சலி, அங்கிருந்து மாயமானார். அவரை காணவில்லை, அவரை யாரோ கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று அஞ்சலியின் அண்ணன் ரவி சங்கர் ஆந்திராவிலும், சித்தி பாரதி தேவி சென்னையிலும் ‌போலீசிடம் புகார் தெரிவித்தனர். முன்னதாக நடிகை அஞ்சலி தனது சித்தி பாரதி தேவி மீதும், டைரக்டர் களஞ்சியம் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.


களஞ்சியம் மறுப்பு: 

தன்னுடைய ஊர் சுற்றி புரணாத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்து அடுத்த கட்ட ஷூட்டிங்கில் ஏப்-24ம் தேதி பங்கேற்க இருந்த அஞ்சலி, எதற்கா‌க தன் மீது இப்படி குற்றம் சாட்டினார் என தெரியவில்லை. அஞ்சலி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்று சென்னை கமிஷனரிடம் நேரில் விளக்கம் அளித்தார்.

கடத்தி விட்டதாக சித்தி புகார்: 

இதுநாள் வரை அஞ்சலியின் அம்மா என்று சொல்லி வந்த சித்தி பாரதி தேவியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினார். அஞ்சலியை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களின் தூண்டுதல் பேரில் இப்படி பேசுகிறார் என்றும் தனது புகாரில் கூறினார்.

ஐகோர்ட்டில் வழக்கு: 

போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்த அன்று மாலையே அஞ்சலியை விரைவாக கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார் பாரதி தேவி.


போலீஸ் வழக்கை வாபஸ் பெற மறுப்பு: 

இந்நிலையில் அஞ்சலி காணாமல் போய் நான்கு நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே நடிகை அஞ்சலி அவ்வப்போது கத்தாரில் உள்ள தனது தாயார் பார்வதி தேவியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது தான் நலமாக இருப்பதாகவும், அண்ணன் ரவி சங்கர் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்லியும் தனது தாயாரிடம் விலியுறுத்தியுள்ளார். இத்தகவலை ரவி சங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அஞ்சலியின் பேச்சை கேட்டு ரவி சங்கர் தனது புகாரை வாபஸ் பெற ‌போலீசிடம் சென்றார், ஆனால் போலீசார் மறுத்துவிட்டனர். அஞ்சலியை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற முடியும் என்று கூறிவிட்டனர். 

இரு தினங்களில் வருகிறார் : 

இதனையடுத்து அஞ்சலி தன்னிடம் போனில் பேசியதாகவும், இன்னும் இரு தினங்களில் தான் வெளி உலகத்துக்கு வந்துவிடுவேன் என்றும், குடும்ப சூழல் காரணமாக தான் மறைந்து இருப்பதாக தன்னிடம் கூறியதாக போலீசில் தெரிவித்துள்ளார் ரவி சங்கர். அப்போது போனில் அஞ்சலி பேசியதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ள‌தாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், அஞ்சலியை தன்னிடம் கண்டுபிடித்து தரச்சொல்லி சென்னை ஐகோர்ட்டிலும் சித்தி பாரதி தேவி ஆட்கொணர்வு மனு கொடுத்திருப்பதால், இன்னும் இரு தினங்களில் அவரே கோர்ட்டில் ஆஜராகி தான் எதற்காக தலைமறைவாக இருந்தேன் என்று நேரில் விளக்கம் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

பாரதி தேவியிடம் விசாரிக்க முடிவு : 

தற்போது உள்ள சூழலில் அஞ்சலியை, சித்தி பாரதி தேவி ஏதும் கொடுமைப்படுத்தினாரா, பாலியல் தொந்தரவுகளுக்கு ஏதும் ஆளாக்கினாரா...? போன்ற கோணத்தில் விசாரிக்க போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். அதேப்போல் டைரக்டர் களஞ்சியத்திடமும் விசாரணை செய்ய உள்ளனர்.


சென்னையில் அஞ்சலி...: 

ஐதராபாத்தில் மாயமான அஞ்சலி, பெங்களூரு சென்றுவிட்டார், வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டார் என பல செய்திகள் வெளியான நிலையில், அவர் சென்னையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத் ஓட்டலில் இருந்து வெளியே வந்த அஞ்சலி, காரில் ஏறி நேராக ஏர்போர்ட் சென்றதாகவும், அங்கிருந்து அந்த நேரம் சென்னை மற்றும் பெங்களூருக்கு தான் விமானம் சென்றதாகவும், தற்போது பெங்களூரில் அஞ்சலி இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் தான் யாருடைய வீட்டிலோ அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 


அஞ்சலி இன்னும் ஓரிரு நாளில் வெளி உலகத்துக்கு வந்துவிடுவார் என தெரிகிறது; அவர் வந்த உடன், ஏன் தான் வீட்டை ஓடி மாயமானார்; களஞ்சியம் மற்றும் சித்தி பாரதி தேவி மீது புகார் கூற காரணம் என்ன? அவர்கள் எதுவும் கொடுமைப்படுத்தினார்களா...? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தெரிய வரும். 

நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்: