மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 ஏப்ரல், 2013பிரிவு தாகம்மார்கழிக் காலை...
மயக்கும் மாலை...
சுட்டெரிக்கும் பகல்...
சுகமான இரவு...
எல்லா நேரத்திலும்
என் அருகே நீ..!

எட்டிப் பிடிப்பது
கட்டிப் பிடிப்பதுமாய்...
இழுத்து அணைப்பதும்
இறுக அணைப்பதுமாய்...

எத்தனை முறை உன்
அணைப்புக்குள் சிக்கிக்
கொண்டாலும் மீண்டும்
கேட்கும் உன் கதகதப்பு..!

சிணுங்கலாய் கோபித்தாலும்
சில நேரமே விலகியிருப்பாய்...
தனித்திருக்க நினைத்தாலும்
தழுவலை நாடும் என் இதயம்...
நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்...

இன்று நம் காதல்
செல்பேசி வழி சிணுங்கலும்
கணிப்பொறி வழி
முகம் பார்த்தலுமாய்...

உன் வரவு குறிஞ்சிப் பூவாய்...
என் வாழ்க்கை விட்டில் பூச்சியாய்...

(நெடுங்கவிதைகளில் கிறுக்கியது மீள்பதிவாக...)
-'பரியவை' சே.குமார்

3 கருத்துகள்:

 1. நல்லாருக்கு,மீள்-பதிவென்றாலும்!

  பதிலளிநீக்கு
 2. வலைச்சரமூலம் தங்கள் பதிவுகள் சில வாசித்தேன்.
  பிடித்துள்ளது.
  இனிய நல் வாழ்த்து தங்கள் பயணம் தொடர.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...