மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஏப்ரல், 2013

'என் மகனைத் திரும்பக் கொடுங்கள்'- பேரறிவாளனின் தாய்


“எனக்கு கண் பார்வை இருப்பதற்குள், என் உடம்பில் சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்” என ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அந்த தாயின் கண்ணீரோடு கலந்த வார்த்தைகள் சில...

“எனக்கு பேரறிவாளன் ஒரே மகன். இரண்டு பெண்கள். மூவரும் நல்லா படிப்பாங்க. மற்றவர்கள் முகம் சுளிக்கக் கூடாது என்ற மன நிலைதான் எனது மகனுக்கு சிறிய வயதிலிருந்து இருந்தது.

1991 ஜுன் 10ம் திகதி இரவு எங்க வீட்டுக் கதவை சிபிஐ எல்லாம் வந்து தட்டினாங்கள். ஏதேதோ தேடினாங்க.

முதல்ல வந்தவர்களில் ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டி மேல இருந்த தம்பி பிரபாகரனின் போட்டோவை எடுத்து இன்னுமொருவரிடம் காட்டினார். கூட வந்த கங்காதரன் என்ற சிபிஐ அதிகாரி அதை அப்படியே வைக்குமாறு கூறினார்.

அதுக்கு பின்னர் குடும்ப விபரம் எல்லாவற்றையும் விசாரித்தார்கள். மகனைப் பற்றி கேள்வி கேட்டார்கள். மேல் படிப்பிற்றகாக சென்னையில் தங்கியிருக்கார் என்று கூறினேன். அவரையும் விசாரிக்க வேண்டும் பின்னர் மல்லிகை என்ற இடத்திற்கு மகனை அழைத்து வரச் செல்லியிருந்தார்கள்.


நானும் அழைத்துப் போனேன். விசாரித்து விட்டு விடுவதாக அனுப்புவதைக் சொன்னார்கள். நானும் மறுநாள் மகனைப் பார்க்கச் சென்றேன். மகனை பார்க்க விடவில்லை. வக்கீலை பார்க்க சொன்னார்கள். நான் கொண்டு சென்ற துணியை மட்டும் வாங்கி எடுத்தார்கள்.

பின்னர் 8 நாளைக்கு பின்னர் பேரறிவாளனை தேடி வலை வீசிப் பிடித்ததாக செய்தித்தாளில் வந்திருந்தது. எங்களுக்கு பயமாக இருந்தது.

எப்போது விசாரித்து அனுப்புவதாக அழைத்துச் சென்றார்களோ அன்றிலிருந்த கண்ணீரோ அலைந்து திரிகின்றேன். தனியாக எங்குமே போகாத நான். இப்போது எனது பையனுக்காக.... என்று வாய் விட்டு கதறியழுகிறார்...


-மின்னஞ்சலில் வந்தது...

-எழுதியவருக்கு நன்றி...

-'பரிவை' சே.குமார்

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் வருத்தப்பட வைக்கிறது....

Actress Videos சொன்னது…

தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்

இளமதி சொன்னது…

சுருக்கென நெஞ்சில் கூரான ஆயுதம் இறங்கிய வலி.....
அந்தத்தாய்க்கு எப்படி யாரால் ஆறுதல் கொடுக்கமுடியும்...:’(