மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வனிதாவின் பேயாட்டம்

Related image
73ம் நாளின் தொடர்ச்சியாய்  தன்னையும் தர்ஷனையும் சேர்த்து வைத்து வனிதா பேசியது தொடர்பாக தர்ஷனுடன் பேசிக் கொண்டிருந்தார். மிகத் தெளிவான பேச்சு இருவரிடமும்... இருவருக்குள்ளும் காதல் என்னும் ஒன்று மெல்ல இடையோடியதையும் சேரன் முன்பே சொன்னதைப் போல் காதலுக்கும் நட்புக்கும் இடையிலான மெல்லிய ஒரு கோட்டில் பயணிக்கும் அழகான நட்பாய் சூழல் கருதி மாற்றிக் கொண்டதையும் பேசினார்கள்.

ராத்திரி ரெண்டு மணிக்கெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு என கமல் ஒரு முறை சொன்னபோது எல்லாரும் கவின் லாஸ்லியா என்று நினைத்திருக்க, அந்த இடத்தில் தாங்களும் இருந்ததை... அதன் பின் தங்களுக்குள் இடைவெளி அமைத்துக் கொண்டு நட்பைத் தொடர்வதையும் பேச்சின் ஊடே சொல்லிக் கொண்டார்கள். மேலே சொன்னதைப் போல் மிகத் தெளிவான பார்வை தங்கள் நட்புக் குறித்து இருவருக்குள்ளும் இருக்கிறது. இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை..?

பேசிக் கொண்டிருக்கும் போது சாக்லெட் பேப்பரைக் கடித்துக் கொண்டிருந்த தர்ஷனிடம் பேப்பரைத் தின்னுறாதே... உனக்கு வேணும்ன்னா நான் வேற சாக்லெட் கொண்டு தாரேன் என ஷெரின் சொன்னது கவிதை... இந்த நட்பையா அப்படி ஒரு வார்த்தை சொல்லி கொச்சைப் படுத்துகிறீர்கள்... இவர்களின் நட்பு விவகாரமான (AFFAIR) காதல் என எப்படி உங்களால் யோசிக்க முடிகிறது..?

மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சியாய் மாரி படப்பாடல்...

'தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு
சரியான பயலா கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு' 

வீட்டுக்குள்ள சிரிப்பாச் சிரிச்சா பிக்பாஸ் சிச்சுவேசன் பாடல் போட மட்டும் மறக்கமாட்டாரு... ஷெரின் - தர்ஷன் நட்புக் குறித்த தவறான பார்வை வீட்டுக்குள் விரவிக் கிடக்கும் நிலையில் இந்தப் பாடல்... சாக்சிக்கிட்ட நீ விருந்தாளியாத்தான் வந்திருக்கே ஆடலைன்னா பிக்பாஸ் கோவிச்சிக்க மாட்டாருன்னு யாராச்சும் சொன்னா நல்லாயிருக்கும்.

காலையில் டிபன் ஷெரின் செய்யணும் அவங்க வரவில்லை என்பதால் மோகன் செய்திருப்பார் போல, மேலும் முதல் நாள் மதியம் செய்ய வேண்டிய சாப்பாட்டையும் அவர் நேரத்துக்கு செய்து முடிக்கலை போல  இதை ஒரு பெரிய குற்றமாக வனிதா பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில் பாத்திரம் கழுவுறது யாரு லாஸ்லியாதானேன்னு அழைக்க, என்னைச் சமையல்ல இருந்து பாத்திரம் கழுவ மாத்தியிருக்கீங்களான்னு வந்த லாஸ்லியாவிடம் விவரம் சொல்லியபடி ஷெரினைக் கட்டம் கட்டினார் வனிதா.  

முந்தின நாள் தர்ஷனையும் தன்னையும் சம்பந்தப்படுத்திய பேச்சில் கடுப்பில் இருந்த ஷெரின் சற்றே கோபமாய் குரலை உயர்த்த, சேரன் கூட அவ சொன்னப் புரிஞ்சிப்பா வனிதா என பேசினார். ஆனால் வனிதா வசம்பு தேய்த்த வான்கோழிக் குஞ்சு மாதிரி கியாக் கியான்னு கத்திக்கிட்டே இருக்க, எதிர்க்குரல் எதுவும் ஒலிக்காத வண்ணம் அடக்கியாள, ஒரு கட்டத்தில் ஷெரின் அதீத கோபத்தில் வெளியேறினார். 

சாக்சி அவர் பின்னே ஓடினார். இங்க யாரும் சின்னப்பிள்ளை இல்லை... உடனே பின்னால போயி சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்த வேண்டாம்... கொஞ்சம் விட்டா சரியாயிருவாங்க... என்னாச்சுப்பா... ஏதாச்சுப்பான்னு போயி ஏத்தி விடுற வேலையை முதல்ல விடுங்கன்னு வனிதா கத்திக்கிட்டு இருந்தார். சாக்சி உள்ளே வந்தது கவினையும் லாஸ்லியாவையும் வச்சிச் செய்வார் எனப் பார்த்தால் இவருக்குக் கொடுக்கப்பட்ட பணி வேற போல.

மீண்டும் ஒரு வட்ட மேசை மாநாடு... வனிதாவே நடுவர்... வனிதா பேச்சாளர்.. வனிதா எதிரணியும்... ஷெரினைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே வைத்து ஒரு பேச்சு... யார் எது சொன்னாலும் 'டூ பி ஹானஸ்ட்', 'நானே தலைவர்' எனச் சொல்லி பேச விடவில்லை. தர்ஷன் கூட பேசுறவங்களைப் பேச விடு... நீயே பேசிக்கிட்டுன்னு சத்தம் போட்டான். தர்ஷனுடைய குரல் ஒலிக்க ஆரம்பித்தாலே வனிதாவுக்கு பேதியாயிரும்... நீ பேசாதே... நான் உன்னைச் சொல்லலைன்னு ஜகா வாங்கிரும்.

சாண்டி கூட இதை நீங்களே பேசி முடிவு பண்ணியிருக்கலாம்... இல்லை இதை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்... அதை விட்டுட்டு எதுக்கு சுற்றி வளைத்துப் பேசுறேன்னு வனிதாவைக் கேக்க, உடனே அக்கா குரலை உயர்த்துச்சு. சேரன் இடைபுக, வனிதா அடித்து அடக்க, அந்தாளு வெடிக்க ஆரம்பித்தார். இப்ப என்ன நீயே பேசிக்கிட்டு இருக்கே... எம்புட்டு நேரம் நாங்க இங்க இருக்கது... முட்டாளா நாங்கன்னு கத்திய போது சாண்டி, சேரன் பேசுவது சரியென நின்றார்.

சேரனின் குரல் உயர்ந்தவுடன் வனிதா அடங்க, சேரன் சற்றே வேகமாக, குரலை உயர்த்தி வனிதா என்ன சொல்ல வர்றான்னான்னு விபரமாச் சொன்னார். அந்த நேரத்தில் கேமரா 'காதல்' கவினுக்குப் போக தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சேரன் பேசினாலோ... சேரனுடன் லாஸ்லியா பேசினாலோ... கவினுக்கு கடுப்பாயிரும்... அப்புறம் லாஸ்லியாக்கிட்ட சோகமா எதாவது நடிப்பைப் போடணும்... ஆனா இந்தச் சுழல் வேற ஒரு பக்கமா நகர்வதால் நடிக்க முடியாமப் போயிருச்சு... அது கூட அவனுக்கு வருத்தமாயிருக்கலாம்.

ஷெரின் மிகவும் கோபமாகி, என்னையும் தர்ஷனையும் பற்றிப் பேச இங்க யாருக்கும் உரிமையில்லை என்றபடி , மோசமான பேச்சுக்கள் கொடுத்த வலியில் உடைந்து அழுதபடி வெளியேற, சாக்சி பின்னே போனார்... என்னோட பிரண்டா இருந்துக்கிட்டு அவகிட்ட பேசியதை இப்படி பொதுவில் வைத்து என்னைத் தாக்குறான்னு அழ, சாக்சியோ வனிதா சொல்வதைக் கேளு... அவகிட்ட மன்னிப்புக் கேளு... அவ உனக்காகத்தான் பேசுறா... நான் வெளியில பாத்துட்டு வந்திருக்கேன்... என்றெல்லாம் கேனத்தனமாக சமாதானம் பேசிக்கிட்டு இருந்துச்சு. அப்ப வந்த சேரன் ஷெரினிடம் நீ ரொம்பத் தன்மையான பொண்ணு... உன்னால அவகிட்ட பேசிச் சரி பண்ண முடியும்.. அழாதே எனச் சொல்லி ஆறுதல் படுத்த, சேரனிடமே அதிகமாக எதையும் பேசக்கூடிய ஷெரின் என்னால முடியல சார்... என்னென்னவோ பேசுறாங்க... உங்களுக்கு என்னைப் பற்றி தெரியும்தானேன்னு சின்னக் குழந்தை போல அழுதார்... பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அந்த நேரத்தில் வனிதா அங்கு வர, சாக்சி அவரை உக்கார வைத்து இருவரும் பேசுங்க என்று சொன்ன போது வனிதா வேற மாதிரி ஆரம்பிக்க, ஷெரின் எதிர்த்து நிற்க, சேரன் எழுந்து செல்ல, சாக்சி அண்ணா வாங்க நீங்க இருந்தாத்தான் சிக்குவீங்கன்னு அழைக்க, நம்மால பேச முடியாதும்மான்னு அடுப்படிக்குப் போய் சமையலுக்கு உதவ ஆரம்பித்தார். அதே நேரம் வெளியே பிரச்சினை மிகப் பெரிதாகி, வனிதாவின் வாயில் தர்ஷனுக்கும் ஷெரினுக்குமான உறவு கள்ளத்தனமானது... ஏன்னா அவனுக்கு வெளியில ஒருத்தி இருக்கா... நீ அவளுக்குத் துரோகம் பண்ணுறேன்னு பேச, என்னைப் பார்த்து எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்வேன்னு ஷெரின் அடித்து ஆட, தர்ஷன் சற்றே தள்ளி நின்று கேள்வி கேட்டான். 

நேரா அவனிடம் போன ஷெரின் நம்ம நட்பைக் கொச்சைப்படுத்துறா... உனக்கு நான் என்னடா பண்ணுனே... வெளியில இருக்க அந்தப் பொண்ணுக்கு துரோகம் பண்ணினேனா... இனி நான் யார் கூடவும் பேசலை... உன் கூடவும் என சொல்லவும் தர்ஷன் வனிதாவை மீண்டும் கேள்வி கேட்டதும், உன்னைப் பேசலை தர்ஷன் இது வேற மேட்டர் என வின்னர் வடிவேலு கணக்காய் நானும் கோட்டைத் தாண்டி வரலை... நீயும் வராதேன்னு கேட்டைப் போட, என்னைப் பற்றித்தானே பேசுறேன்னு கேட்டதும் உன்னையில்லைன்னு சொல்லிட்டேன்... இது யாரோ அவ பக்கத்து வீட்டு தர்ஷனாம் அப்படின்னு ஜகா வாங்க, என்னைத்தான் சொன்னேன்னு பய நிற்க, சரி உக்காந்து பேசுறதுன்னா இங்க வான்னு வனிதா கூப்பிட்டுப் பேசிச்சு.

தர்ஷனிடம் வனிதா விளக்கிக் கொண்டிருக்க, கக்கூஸ்க்குள்ள தீரைச்சீலைக்குப் பின்னே ஷெரின் புலம்பி அழுது கொண்டிருக்க, சாக்சி சமாதானம் செய்வதைப் போல் சகுனி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வனிதாக்கா தெய்வம்... வனிதாக்கா தேவதூதர்... வனிதாக்கா செம்மனச் செம்மல்... வனிதாக்கா புண்ணியவதி... வனிதாக்கா புரட்சித் தலைவி... வனிதாக்கா வரலாற்று நாயகி... வனிதாக்கா தெய்வத் திருமகள்... அப்படின்னு வனிதாக்கா புகழ்பாடி அவ கால்ல போயி விழுன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு... இந்தப் பேச்சுல மக்களை நாய்யின்னு சொல்லிருச்சு சாக்சி... ஷெரின் மக்களை ஏன் சொல்றேன்னு கேட்க, அவங்க அப்படித்தான் நடந்துக்கிறாங்கன்னு வேற சொன்னுச்சு... இந்த நிகழ்ச்சியை பார்த்து இவங்களுக்கு ஓட்டு வேற குத்தி... ஆர்மி எல்லாம் வச்சிக்கிட்டு கவினைத் திட்டாதே... லாஸ்லியாவைத் திட்டாதேன்னு போராட்டமெல்லாம் பண்ணிக்கிட்டு சின்சியரா வேலை பார்க்கிற மக்கள் நாயாம்... பணத்துக்காக நாயா அடிச்சிக்கிற அவங்க நல்லவங்க... நாம நாய்... கமல் இந்த நாய் விவகாரத்தை கையில் எடுப்பாரா... இல்ல  நயமாப் பேசி முடிச்சிடுவாரா...?

வனிதாவைப் பொறுத்தவரை கொடுத்த காசுக்கு அதிகமாக் குரைக்கிற... சாக்சியைப் பொறுத்தவரை கடிக்க வேண்டிய இடத்தில் கடிக்க முடியாமல் கத்துற... மோகனைப் பொறுத்தவரை வாசல்ல நின்னு கத்துற... கவினைப் பொறுத்தவரை கார்த்திகை மாசத்து... லாஸ்லியாவைப் பொறுத்தவரை இணையுடன் குலாவும்... சாண்டியைப் பொறுத்தவரை கார்த்திகை மாசத்து... காவல் இருக்கும்... இப்படி பல நாய்கள் இருக்கையில் மக்கள் நாய்களாம்... என்னத்தைச் சொல்ல.

வனிதா ஷெரின் பிரச்சினையில் கவின் பேசவே இல்லை... நேற்று கவின் லாஸ்லியாவின் குரல் இல்லாமல் நகர்ந்தது சிறப்பு... இப்படியே தொடர்ந்தால் நல்லது... இப்பவும் சொல்றேன் சேரன் சார் உங்க நிறுத்தம் வந்தாச்சு... இறங்கிருங்க... அதான் நல்லது... இல்லைன்னா வனிதாவின் அடுத்த டார்க்கெட் நீங்கதான்... 

ஷெரினை அந்த வார்த்தை ரொம்பவே தாக்கிருச்சு... தன் வேலையுண்டு தானுண்டுன்னு இருந்தவரை அழ வைத்து வேடிக்கை பார்த்துட்டாங்க... இந்த அழுகை ஷெரினுக்கான ஓட்டுக்களை இன்னும் அதிகமாக்கும் என்றாலு சின்னப் பிள்ளை போல் அழதது மனசுக்கு வலியாய்த்தான் இருந்தது.

வனிதாவெல்லாம் பெத்தாங்களா இல்லை சொர்ணாக்காகளின் குணாதிசயங்களை எல்லாம் பொறுக்கி எடுத்து செஞ்சாங்களா... ஆத்தாடி என்ன பொம்பள இது..? நல்லவேளை விஜயகுமார் விரட்டி விட்டுத் தப்பிச்சிட்டாரு... ஆனா பிக்பாஸ் மறுபடியும் கூட்டியாந்து மாட்டிக்கிட்டாரு... இன்னும் செய்ய வேண்டியது மிஷன் சேரன், மிஷன் கமல், மிஷன் பிக்பாஸ் மட்டுமே... அதையும் செஞ்சிருச்சுன்னா அக்கா ரொம்ப நிம்மதியா வீட்டுக்குப் போகும்... ஆமா இதைப் பார்க்கிற அக்காவோட பிள்ளைங்க வீட்டில் இருக்குங்களா..?

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயங்கரம்... ஐயோ முடியல...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமா...
வனிதாவினால் ஷெரின் காப்பாற்றப்படலாம்