மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வனிதாவின் மிஷன் ஷெரின் உண்மையானதா..?

Image result for biggboss 04 september 2019 images hd
முதல் நாளின் தொடர்ச்சியாய் தேர்தல் முடிவுக்கு காத்திருக்கும் தொண்டர்கள் போல ஆங்காங்கே குழுவாய் அமர்ந்து பேசினார்கள். 

வனிதாவும் சாக்சியும் கவினைப் பற்றிப் பேசினார்கள். சாக்சியைப் பொறுத்தவரை உன்னைக் காதலிக்கலை ஆனா லாஸ் என்னோட பிரண்ட் என்ற வார்த்தைதான் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் 'காதல்' கவின் அப்போதே ஆமா அவதான் என்னோட லவ்வர்ன்னு சொல்லியிருந்தாலோ... நான் அவனை லவ் பண்றேன்னு லாஸ்லியா தைரியமாச் சொல்லியிருந்தாலோ சாக்சி இதைப் பத்தோடு பதினொன்றாய்க் கடந்து போயிருப்பார் என்றே தோன்றுகிறது. இவர்களின் இந்த நம்பிக்கைத் துரோகத்தைத்தான் அவரால் தாங்கமுடியவில்லை... அதுவே அவ்வப்போது வெடிக்கிறது.

உள்ளே வந்திருக்கும் மூவரில் அபிராமி நான் உங்களோட ஜாலியாக இருக்கத்தான் வந்தேன்... ஆனா அவங்க முன் முடிவுகளுடன் வந்திருக்காங்க... எனக்கு அதெல்லாம் தெரியாதென ஐவர் குழுவுடன் ஆட்டம் போடுகிறார். 

பிக்பாஸ் விதிகளே வெளியில் இருப்பதைச் சொல்லக் கூடாது என்பதுதான் என்றாலும் மூவரும் வெளியில் நடப்பதை... பிக்பாஸில் நடப்பதைப் பார்த்ததைச் சொல்லி, எட்டுப் பேருக்குள் முரட்டுப் புயல் அடிக்கும்படியாக காய் நகர்த்துகிறார்கள். ஒருவேளை மொக்கை போடுறானுங்கய்யா... நீங்க கொஞ்சம் போட்டுக் கொடுத்துட்டு வாங்கய்யான்னு பிக்பாஸே மீட்டருக்கு மேல போட்டுக் கொடுத்து அனுப்பியிருப்பாரு போல.

நைனா வரணும்ன்னு ஐயனாரு கோவிலுக்கு கிடா வெடடுறோமுன்னு வேண்டிக்கிட்ட ஐவர் குழுவுக்கு நைனாவின் வரவே நம்மளை வெட்டத்தான் என்பது புரிந்து புலம்பிக்கிட்டுத் திரிய ஆரம்பிச்சிட்டானுங்க.... அதிலும் கவின் சேரன் மன்னிப்புக் கேக்கணும்ன்னு சொன்ன மாதிரி, தங்களை கட்டியணைத்து விடைபெறாத நைனா அதுக்காக மன்னிப்புக் கேட்காட்டியும் வருத்தமாச்சும் படணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இதுவரை இவன் யாரிடமாவது செய்த செயலுக்கு வருத்தமோ மன்னிப்போ கேட்டிருக்கிறானா... செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்... ஆனா அடுத்தவர்கள் சார்க்கிட்ட மன்னிப்புக் கேட்கணும்... என்ன சார் நியாயம் இது...?

விளக்கணைத்த பின் வனிதா, சாக்சி, ஷெரின், சேரன் பேசிக்கிட்டு இருந்தாங்க... சாக்சியும் வனிதாவும் வெளியில் காட்டுவதை... மக்கள் பேசுவதை வைத்துப் பேசிக் கொண்டிருக்க, சாக்சியோ ஷெரின் வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்றதும் வனிதா அவளை முதலில் விளையாடச் சொல்லு... அப்புறம் வெற்றியைப் பற்றி யோசிக்கலாம் எனச் சொன்னதுடன் தர்ஷனுடன் இணைத்துப் பேச ஆரம்பித்தார். இதை ஷெரின் தீவிரமாக எதிர்க்க, சண்டை வலுத்தது. இனிமே இப்படிப் பேசாதேயென சொல்லியபடி ஷெரின் வெளியே போனார். ஆமா சேரன் அங்கெதுக்கு உட்கார்ந்திருந்தார்..? 

வெளியில் போன ஷெரினைச் சமாதானப்படுத்த பின்னால் சென்ற சாக்சியிடம் வனிதா என்னோட தோழிதான்.... ஆனாலும் எதைப் பேசணும்ன்னு இருக்குதானே... தர்ஷன் என்னோட பிரண்ட்... எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு... அதைக் காதல்... காதல்ன்னு சொல்றா... எதுக்கு அப்படிச் சொன்றான்னு ஒரு பாடு அழுதார் ஷெரின். 

ஷெரின், அடுத்தவங்ககிட்ட செல்வாக்குப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்... அதுக்கு மத்தவங்க எப்படி நமக்கிட்ட நடந்துக்கணும் என்றெல்லாம் பேசினார். சாக்சியும் ஒத்துப் போனார். ஷெரினைப் பொறுத்தவரை தேவையானதை சேமித்துக் கொள்வேன்... தேவையில்லாததை வெளியே தள்ளிடுவேன் என முன்பே கமலிடம் சொல்லியிருக்கிறார்... அதன்படிதான் அவரின் செயல்பாடு இருந்தது.

மொத்தத்தில் என்னையும் தர்ஷனையும் சேர்த்து கவின், லாஸ்லியா அளவுக்கு ஒரு கதையை உண்டு பண்ணீடாதீங்க... அது உருப்படாத கேசு... நானும் தர்ஷனும் விளையாட்டை விளையாட்டாய் பார்த்துக் கொண்டு நட்பாய் நகரும் உருப்பட்ட கேசு... இங்கயிருந்து பொயிட்டா யாரும் யாருக்கும் சொந்தமுமில்லை பந்தமுமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார் ஷெரின்.

வெளியில நைனா கூட கவின், சாண்டி, தர்ஷன், சாக்சி பேசிக்கிட்டு இருந்தாங்க.... அப்பத்தான் அதுவரை ஞாபகத்தில் வராத கவின் தாவி விழுந்தது ஞாபகத்தில் வந்து, அதைப் பார்த்து அழுதுட்டேன் தெரியுமான்னு நைனா நைசா திரியைக் கிள்ளி பத்த வச்சாரு... உடனே சாக்சி வெடி வெடிக்க ஆரம்பிச்சிருச்சு... சாண்டி யாரையும் நான் தள்ளி விடலை... அப்படியொரு கேவலமான புத்தி அந்த யாருக்கோ மாதிரி எனக்கில்லைன்னு சொல்ல, கவினுக்கு உச்சி மண்டையில நச்சுன்னு போட்ட மாதிரி ஆயிருச்சு... சாண்டிண்ணே இன்னைக்கு கொசு அதிகமாயிருக்கு.... வா படுக்கப் போவோம்ன்னு கூப்பிட்டான். சாக்சியை கொசு எனச் சொன்னதும் சாக்சி கொசு இதுகளைக் கடிச்சா நாமதான் சாவோம்ன்னு பறந்து போயிருச்சு.

கவினும் சாண்டியும் நடந்துக்கிட்டே பேசிக்கிட்டு போனாங்க... அண்ணே அவளைப் பார்த்தாலே எனக்கு கடுப்பாகுது. இந்த மூஞ்சியை இங்க வந்ததால லவ் பண்ணினேன் வெளிய இருந்திருந்தா நிமிர்ந்து  கூட பாத்திருக்க மாட்டேன்னு வனிதாக்காக்கிட்ட சொல்லியிருக்கா... அடிச்சி மூஞ்சி கீஞ்சி எல்லாம் உடைக்கப் போறேன்... எங்கிட்ட கிராஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்லி வையின்னு சொல்ல, எப்பா டேய் அடிக்கிறேன் உதைக்கிறேன்னு கிளம்பிடாதேடா... உன்னால என்னையும் திட்டுவானுங்க... அடக்கி வாசி.... அவ போயிருவா... நம்மளைக் காக்க கமல் சார் வந்திருவாரு... அது வரை சும்மா இருடான்னு சாண்டி சொல்லிட்டார். கவினுக்கு சாக்சி வந்தது வயிற்றில் புளியை இல்லை புளிய மரத்தையே கரைச்சிக்கிட்டு இருக்கு. அதனாலயே முதல் நாள் ஊடல் கொண்ட லாஸ்லியாவிடம் இப்போது தீராக் காதல் கொண்டவனாய் நடிக்கிறான்.

ஒரு வழியாக அன்றைய இரவு மெல்லக் கழிந்து மறுநாள் விடியல் எப்பவும் போல் எட்டுமணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது. 'சில்லாக்ஸ்...' பாட்டுக்கு குதித்தோடி வந்து தன்னோட இடியாப்பச் சிக்கல் டிரேட் மார்க் ஆட்டத்தைப் போட்டார் சாக்சி... கூடவே முகனும் சாண்டியும்.... சக்களத்தி ஆடுவதால் ஆட்டத்துக்கு டாட்டா சொல்லியிருந்தார் லாஸ்லியா . கவினார் நைட் டூட்டி பார்த்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். சேரனும் தூங்கினார்... ஒருவேளை மகளின் பாதுகாப்புக்காக விழுந்திருந்திருப்பாரோ..?

காலையிலேயே இன்னைக்கு டார்க்கெட் சேரனென முடிவு செய்து விட்டார்கள் போல, வனிதா, சாக்சி, மோகன் மூவரும் அவருக்கு வேப்பிலையடித்துக் கொண்டிருந்தாரகள். 

இதுவரைக்கும் எதையும் ஆராய்ந்து அதிலிருக்கும் நல்லது கெட்டது என எல்லாம் பார்த்து தன்னோட விளையாட்டை அழகாய் விளையாண்டு பத்துநாள் தாங்க மாட்டார்ன்னு நினைச்ச சேரன் எழுபத்தைந்தாவது நாளை நெருங்கிக்கிட்டு இருக்கார். இப்ப வனிதா மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக எங்கே பகுப்பாய்வை தூக்கிப் போட்டுட்டு படுத்துருவாரோன்னு தோணுச்சு... ஆனா மனுசன் எப்பவும் போல் நாம நாமளா இருப்போம்ன்னு சொல்லிட்டார்.

மறுபடியும் சாக்சி, ஷெரினைத் தூக்கி சிம்மாசனத்துல அமர வைக்கணும்ன்னு சொல்ல, வனிதாவுக்குள்ள ஆயிரம் காளிகள் ஆட்டம் போட, சும்மா சும்மா அவளுக்கு கேடயத்தைக் கொடுக்கணும்ன்னு கேனத்தனமாச் சொல்லிக்கிட்டு இருக்காதே... அவனுக கூட சேத்துக்கலைன்னு புலம்புறவதான் வெற்றியை நோக்கி வேகமாப் போப்போறாளாக்கும்... பேனு பாருன்னு சொன்னா பெருமத்தா சரியில்லைன்னு சொல்றவளா இருக்காடி அவ... என சாக்சியின் வாயை சாக்கை வைத்து அடைத்தார்.

அதே நேரம் படுக்கை அறையில் லாஸ்லியாவை நீ ஏய்யா மகமகன்னு சொல்லி சரிகமபதநிச போடுறே... அவ உங்கிட்ட அன்பாய் பேசிட்டு அடுத்த நொடியே அவனுக்கிட்ட போயி பண்பாச் சொல்லிடுறா... அவனும் வம்பா உன்னை வச்சிச் செய்யிறான்... இந்த மக பாசத்தை மடிச்சி கட்டிலுக்கு கீழே போட்டுட்டு கவனமா விளையாடுயான்னு மோகன் தீவிரமாக இரண்டாம் கட்ட வைத்தியத்தை சேரனுக்கு ஆரம்பித்தார். 

அப்படியா சொன்னுச்சு... அவங்க காதலிக்கிறாங்க அதான் பேசுறாங்க என்ற சேரன், இப்பவும் நாம நாமளாவே இருப்போம்ன்னு சொல்லிட்டார். மோகனுக்கு அணுகுண்டு அளவுக்கு இல்லேன்னாலும் குருவி வெடி அளவுக்காச்சும் வெடிக்கும்ன்னு நெனச்சா இது புஸ்வானமாயிருச்சேன்னே முகம் கலையிழந்து போச்சு.

சரி எங்கிட்டுப் பத்த வச்சாலும் பத்த மாட்டேங்கிது... இனிக் காத்திருக்கிறது வேலைக்காகாதுன்னு நினைச்ச பிக்பாஸ் பட்ஜெட் டாஸ்க் விளையாடப் போங்கன்னு சொல்லி, இதுல ஜெயிக்கிற அணியினர் எதிர் அணியில் இருந்து ஒருவரை நேரடியாக நாமினேட் பண்ணலாம்ன்னு சொல்லி,  அப்பத்தான்டா கைகால் உடையிற மாதிரி அடிச்சிப்பீங்கன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, பஸ்ஸர் அடிச்சதும் விளையாடுங்கன்னு சொல்லிட்டு திரும்பிப் படுத்துக்கிட்டார்.

இதுக்கு அப்புறம் கார்த்திகை மாசத்துக் காதல் ஜோடிக்குள்ள ஒரு பிணக்கு... நேரடி நாமினேசன்னு சொன்னதுமே கவினுக்குள்ள 'கதக்', எப்படியிருந்தாலும் தர்ஷனைத் தவிர மூணும் நம்மளைத்தான் சொல்லும்ங்கிற எண்ணம் ஓட, சோகமாய் படுத்துட்டார்... உடனே லாஸ்லியா போய் என்னாச்சுன்னு கேட்க, ஏம்ப்பா எல்லார்க்கிட்டயும் வெளியே போறேன்னு சொல்றேன்னு பிட்டைப் போட்டு, அப்படியே திட்டி, அழ வச்சி செம பெர்ப்பார்மன்ஸ்... ஆயிரம் சிவாஜி, எழனூறு கமல்,  ஐநூறு விக்ரம், இருநூறு விஜய் சேதுபதி, நூறு தனுஷ் கலந்த கலவை இவன். இதெல்லாம் ஒரு காட்சியின்னு பிக்பாஸ் வேற காட்டிக்கிட்டு இருக்கார்ன்னா பாத்துக்கங்க.

சங்கடித்ததும் கன்வேயர் பெல்ட்க்கிட்ட ஓடினாங்க முகனும் தர்ஷனும்... இன்று இருவருக்குள்ளும் ஒரு வேகம்... இருவருமே எடுக்க ஆரம்பித்தார்கள்... இந்த வாரத்தில் நல்லா விளையாண்டவர்கள் என்றால் இருவரையும் சொல்லணும்... ஆனா வனிதாக்கா வழி விடுமா..?

தர்ஷனுக்கு கையில் காயம்... லாஸ்லியாதான் மருந்து போட்டார்... காயத்துக்கு கட்டுக்கட்டியும் தர்ஷன் தன்னுடைய விளையாட்டில் பின்னடையவில்லை... அதே வேகம்... 

தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சண்டையிடாமல் தங்கள் வேலையைப் பார்த்தார்கள்... லாஸ்லியா இன்று எல்லாத்தையும் நல்லாயில்லைன்னு ஒதுக்கலை... ஒருவேளை தர்ஷன் காயம்பட்டதால் கூட இருக்கலாம்.. இந்தப் புள்ளைக்கிட்ட பாசம் கொஞ்சம் அப்பப்ப எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. அதை எழ விடாமல் அடிப்பதில் கவனமாய் இருக்கிறான் கவின். எழவிட்டால் அவன் கதி அதோகதி என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறான்.

அப்புறம் பிக்பாஸ்க்கிட்ட முடிவைச் சொன்னாங்க... வனிதா அணிக்கே வெற்றி... மேலதீக வெற்றித் தகவலுக்காக பிக்பாஸ்க்கிட்ட அனுப்பியிருக்காங்க... அவரு லேஸ் வச்சித் தச்சதையெல்லாம் ஆராய்ந்து இறுதி முடிவை இன்று அறிவிப்பார்.

அடுத்தது வந்த மூவரும் நடுவாராக இருக்க, பட்ஜெட் டாஸ்க்கில் ஆடிய அதே அணிகளாய் பட்டி மன்றத்தில் பேச வேண்டும். எந்த அணி வெல்கிறது என்பது மூவரின் தீர்ப்பில் என்றபோதும் வனிதா, சேரன், ஷெரின், தர்சன் என விவரமான ஆழ்ந்து யோசிக்கக் கூடிய ஆட்களை எதிர்த்து பேச வேண்டும் என்றபோதும் சாண்டி அணி போண்டிதான் என்பது தெளிவாய்த் தெரிந்தது.

1. போட்டியும் திறமையும் (வனிதா அணி) - விட்டுக் கொடுத்தலும் தியாகமும் (சாண்டி அணி)

இந்தத் தலைப்பில் சேரன் விட்டுக் கொடுத்து வருவது வெற்றியல்ல என்று ஆதாரங்களுடன் பேச, யார் விட்டுக் கொடுத்தும் வெற்றியைச் சுவைக்கக் கூடாது... நானெல்லாம் ஆரம்பத்திலிருந்தே என்னோட உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். எதிலும் என்னால் முடியாதுன்னு உக்காரலை... நீங்க விட்டுக் கொடுத்துத்தான் நான் ஜெயிக்கணும்ன்னு இல்லை... என்னால் கிடைத்தால்தான் அந்த வெற்றிக்கு மரியாதைன்னு தர்ஷன் சொல்ல, சாண்டி அணி பப்பப்பே... பெப்பரப்பேன்னு விளக்கம் கொடுக்க, 'பலமான' விளக்கம் இல்லாததால் நடுவர்கள் வனிதா அணியே 'வளமான' அணியின்னு சொல்லிட்டாங்க.

தர்ஷனின் பேச்சு யாருக்கு எப்படியோ தெரியலை... ஆனா கவினுக்கு மனசுக்குள்ள முள்ளாய் குத்தியிருக்கும் போல கண்ணில் தெரிந்தது அந்தக் காட்சி... பட்டிமன்றம் முடிந்தபின் கவின் பாடிய போது அடுத்த கெட்ச் உனக்குத்தான்டி என்பது போல்தான் தோன்றியது. 

2. தனியா விளையாடணும் (வனிதா அணி) - அணியா விளையாடணும் (சாண்டி அணி)

இப்பவும் ஒரு குழுவா இருந்துக்கிட்டு ஒருத்தரை வெளியேற்ற நினைப்பது தவறு என சேரன் தன் வாதத்தை வைக்க, குழு மனப்பான்மை இருந்தாலும் நாங்க அந்த வாரத்தில் யார் சரியில்லையோ அவரைத்தான் நாமினேட் பண்ணுவோம்ன்னு வனிதாவும் எங்க விளையாட்டை நாங்கதான் விளையாடுறோம்.. யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை என ஷெரினும் பேச, இப்பவும் விளக்கம் கொடுக்கிறேன்னு கவினும் லாஸ்லியாவும் எரியாத விறகை ஊதிக்கிட்டு இருந்தாங்க.

லாஸ்லியா கையை ஆட்டி ஆட்டி பேசும் போது சேரன், வனிதா எல்லாம் குறுக்கிட்டுப் பேச, அம்மணிக்கு என்ன பேசுறதுன்னு மறந்து போச்சு போல, கோபமா பேசலைன்னு உக்கார்ந்திருச்சு.

நடுவர் குழு 'நச்'சின்னு சொன்னது வனிதா அணியேன்னு 'பட்'டுன்னு சொல்லிட்டாங்க.

இடையில் சாக்சிக்கும் கவினுக்கும் ஒரு மோதல்... கவின் நீ எனக்கு ஊட்டி விட்டது போதும் இப்ப வகுப்பெடுக்க வேண்டாம்... அதான் கக்கூஸ்ல வச்சி வகுப்பெடுத்துட்டு தொடுப்பு வந்ததும் நமக்குள்ள தடுப்புப் போட்டுட்டேல்லன்னு சாக்சி கத்த, கவினும் கத்த சண்டை சில நிமிடங்களில் முடிந்தது.

3. சாரிக்கு இங்க மதிப்பு இல்லை (வனிதா) - மதிப்பு இங்க இருக்கு (சாண்டி)

இங்க சாரி அவசியமில்லை... அதுக்கு மரியாதையும் இல்லை... தர்ஷனுக்குப் போட்ட ஹார்ட்டின் சப்பாத்தியை கத்தியால் குத்திட்டு சேரனால் கேட்க வைக்கப்பட்ட சாரி என்னை கேவலப்படுத்துவதாய் அமைந்தது என ஷெரின் பேசினார். இப்பவும் சாண்டி அணிக்கு சரியாய் விளக்கம் கொடுக்க ஆளில்லாததால் நடுவர் அணி அவர்களுக்கு 'சாரி' சொல்லிவிட்டு வனிதா அணியே வெற்றி என 'பூரி'ப்பாய் சொன்னார்கள். சொன்னது சாக்சி.

வெளியே வந்ததும் லாஸ்லியா முறையிடல்... உடனே கவின் இங்க மட்டுமில்ல உலகத்துக்கே அவங்க நல்லவங்க நாம கெட்டவங்கன்னு சொல்லிட்டு  வா கண்மணி லவ்வலாமெனக் கூட்டிப் போய்விட்டார்.

இதுல என்ன ப்யூட்டின்னா... தலைப்பைத் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்காங்க பாருங்க... செம.. அடிச்சி ஆடக்கூடிய தலைப்பு... செமையாப் பேசியது வனிதா அணிதான்... கவினுக்கு இன்னும் கொஞ்சம் கண்ணுல பயத்தைக் காட்டியிருக்கலாம். இனி தர்ஷனை ஒதுக்க கவின் தீவிரமாய் முயல்வான். வலி நிறைந்தவன் என்ற வரிகளை கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டு தன்னோட வேலையை ஆரம்பிப்பான் என்றும் நம்பலாம்.

ஐவர் அணியுடன் அபியும் ஜோடி போட, சமைத்துக் கொண்டே வனிதா ஏதோ காரசாரமாகப் பேச, மோகனும் சாக்சியும் கேட்டுக் கொண்டிருப்பதை சாண்டி அன் கோ சிகப்புக் கதவுக்கிட்ட உக்கார்ந்துக்கிட்டு டப்பிங் பேசி கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். 

இது புளிச்சிப் போன கஞ்சி என்றாலும் இதில் ஏதோ சுவை இருப்பது போல் பிக்பாஸ் காட்டிக் கொண்டிருப்பதுதான் கொடுமை. 

சாண்டி செய்யிறதெல்லாம் அயோக்கியத்தனம்... ஆனா கமல் நீங்க நகைச்சுவையில எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்கன்னு வாராவாரம் சொல்லவும் செய்யிறதெல்லாம் நகைச்சுவையின்னு சுவையே இல்லாமப் பண்ணிக்கிட்டு இருக்கார். 

லாஸ்லியாவுக்கு சாண்டியின் பேச்சால் ஒரே சிரிப்பு... முன்னெல்லாம் இந்தச் சிரிப்பும் கை ஆட்டுதலும் ரசிக்க வைத்தது... இப்போது வெறுப்பாகத்தான் இருக்கிறது. கவின் - லாஸ்லியா காட்சி என்றால் எப்போது மாறும்ன்னு தோணுது.

சந்தடிசாக்கில் அபி முகனாயிசம் பாடிக் கொண்டிருந்தார்... நான் போனபின் உடைத்துப் போட்ட பதக்கத்தை பார்த்து அழுது எடுத்து வச்சிக்கிட்டியே என்னடா பண்ணுறே.... என்னைக் காதலிக்கிறியான்னு கேட்டிருப்பாரா.. இல்லையா.. கேப்பாரு... கேப்பாரு....

சாக்சி வந்த பின் வனிதாவின் ஆட்டமெல்லாம் ஷெரின் மீதாய் இருக்கிறது. இன்றைய ப்ரோமோ கூட அதையே காட்டுகிறது. இதுவரை எடுக்க நினைத்து முடியாமல் போன தர்ஷன் காதலை இப்போது இன்னும் தீவிரமாக்குவதில் ஏதோ காரணம் இருக்கிறது. ஒருவேளை ஷெரினுக்குத்தான் குறைவான ஓட்டுக்கள் எனச் சாக்சி சொல்லியிருக்கக் கூடும். இந்த வேளையில் இப்படியொரு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தால் பிக்பாஸே ஷெரினை உள் நிறுத்த நினைக்கலாம்... கவின் - லாஸ்லியா காதல் மக்களிடம் வரவேற்ப்பை பெறாத நிலையில் இந்தப் புதிய ஆட்டம் இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸை வீழாமல் தாங்குமே எனக்கூட நினைக்கலாம் அல்லவா...? வனிதாவின் விளையாட்டுக்கள் வனிதாவுக்கே தெரியும்.

வனிதாவின் பேச்சு இப்படியானதா அல்லது உண்மையிலேயே தாக்குதல்தானா என்பது இன்றை எபிசோட் முழுவதும் பார்த்தால்தான் தெரியும். 

இந்த வாரம் சேரனை வெளியேற்றி, கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் லீலைகளை இன்னும் அதிகமாக்கி, ஷெரின் - வனிதா - தர்ஷன் காதல் அடிதடி ஒரு பக்கமும் கவின் - லாஸ்லியா காதல் கட்டிப்பிடி ஒரு பக்கமும் என விஜய் டிவி கல்லாக் கட்டப் பார்க்கும். 

மொத்தத்தில் சீசன்-3 மொக்கையாய்த்தான் போகிறது.

என்னோட ஆசையும் சேரன் போதும் என்று சொல்லுமளவுக்கு இருந்தாச்சு.. இனி பெட்டியைக் கட்டிட்டா நம்மளும் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தி விடலாம் என்பதே.... நடக்குமா?

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரண்டாவது முறையாக மைக்கைக் கழற்றி வைக்கலாம்... அதற்கு ‘குறும்படம்’ கிடையாது.... ஏனெனில் கலகம் வேண்டும், அதுவே பிக்பாஸ் ஆயுதம் வனிதா...

என்ன கொடுமை குமார் இது...? ஹா... ஹா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மை அண்ணா...
பிக்பாஸ் இப்போ வனிதாவை நம்பி மட்டுமே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது...